Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை: மேலும் தடைகளை விதிக்க திட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

அமெரிக்காவின் மறைமுக தேவையை நிறைவேற்றுவதாக ஈரான் குற்றச்சாட்டு
ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. ஈரான் அணு ஆயுத செயற்பாட்டில் ஈடுபடுவதாக கூறியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் மறைமுக தேவைக்கு துணைபோவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தடை இவ்வார மத்தியில் இருந்து நடைமுறைக்கு வரும். அதில் இருந்து ஈரானுடன் எண்ணெய் இறக்குமதிக்குப் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வரும் ஜூலை 1ம் திகதியோடு காலாவதியாகி விடும். இதன் மூலம் ஈரானுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியம் வாங்குகிறது.
எனினும் பெரும்பாலான ஏற்றுமதி ஆசிய நாடுகளைச் சார்ந்தே உள்ளது. சீனா 20 சதவீதமும், ஜப்பான் 17 சதவீதமும், இந்தியா 16 சதவீதமும், இத்தாலி 10 சதவீதமும், தென்கொரியா 9 சதவீதமும் பிற நாடுகள் 8 சதவீதமும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
இந்த எண்ணெய்த் தடை மூலம், ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும் பெருமளவிலான தாக்கம் இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான கிaஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளே ஈரானிடம் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுகின்றன. இந்த தடையின் மூலம் மேற்படி நாடுகள் சிக்கலை எதிர்நோக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஈரானின் மத்திய வங்கி மற் றும் தங்கத் திற்கும் தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் தடையைத் தொடர்ந்து சவூதி அரேபியா தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடும் சவூதி அரேபியா இம்மாதம் தொடக்கம் தனது நாளொன்றுக்கான எண் ணெய் ஏற்றுமதியில் 2 மில்லியன் பீப்பாய்களை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரான் மீதான எண்ணெய் தடையை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுத செயற்பாடுகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க முடியும் என அது கூறியுள்ளது.
அத்துடன் ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். இதன்படி சர்வதேச சந்தையில் செயற்பட்டு வரும் ஈரான் அரச வங்கிகளான தெஜாரா வங்கி மற்றும் டிரேட் கபிடல் வங்கி ஆகியவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
எனினும் இது ஞாயமற்ற செயற்பாடு என இந்த எண்ணெய் தடை குறித்து ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தடை மூலம் ஈரான் தனது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரமின் மெஹ்மன் பரஸ் கூறும்போது;
அமெரிக்காவின் செயற்திட்டங்களுக்கு கீழே ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் ஏனைய நாடுகள் செயற்படுகின்றன. இவர்கள் தமது சொந்த நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அமெரிக்காவின் மறைமுக தேவைகளுக்கு உதவக் கூடாது என்றார்.
ஈரானின் அணு சக்தி திட்டங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
ஆனால் தனது அணு சக்தி ஆக்கபூர்வ செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறி வருகிறது.
இந்நிலையில் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகள் குறித்து ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் உயர் குழுவொன்று எதிர்வரும் 29, 31 ஆம் திகதிகளில் ஈரான் செல்லவுள்ளதாக ஐ.நா. உறுதி செய்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விலங்கு சோதனை அழகுசாதனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
» சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
» இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» ஈரான் யுரேனிய செறிவூட்டலால் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும்
» சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
» இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» ஈரான் யுரேனிய செறிவூட்டலால் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum