by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 13 of 37 • 1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதல் தடவையாகக் கண்டார்.
1903: அமெரிக்காவின் தூண்டுதலோடு கொலம்பியாவிலிருந்து பனாமா தனிநாடாகப் பிரிந்தது.
1913: அமெரிக்காவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1918: ரஷ்யாவிலிருந்து போலந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1957: ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைகா எனும் நாயை சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது.
1978: பிரிட்டனிடமிருந்து டொமினிக்கா சுதந்திரம் பெற்றது.
1982: ஆப்கானிஸ்தான் சுரங்க தீவிபத்தில் 2000 பேர் பலி.
1988: மாலைதீவில் ஜனாதிபதி அப்துல் கையூமின் அரசாங்கத்தைக் கவிழ்க்க இலங்கை தமிழ் ஆயுதபாணிகள் முயற்சி. இச்சதிமுயற்சி இந்திய படைகளின் உதவியுடன்; முறியடிக்கப்பட்டது.
2007: பாகிஸ்தானில் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரவ் அரசியலமைப்பை இரத்துச்செய்து பிரதம நீதியரசரை நீக்கி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1918: முதலாம் உலக யுத்தத்தில் இத்தாலியிடம் ஆஸ்திரியா - ஹங்கேரி சரணடைந்தது.
1921: ஜப்பானிய பிரதமர் ஹரா தகாஷி டோக்கியோவில் படுகொலை செய்யப்பட்டார்.
1956: ஹங்கேரியில் சோவியத் எதிர்ப்புப் புரட்சியை முறியடிப்பதற்காக சோவியத் யூனியன் துருப்புகள் படையெடுத்தன.
1979: ஈரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம்மீது ஈரானிய மாணவர்கள் குழுவொன்று முற்றுகையிட்டது.
1992: பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.
1995: இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபின் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2008: அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவானார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
1605 – ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1757 – புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1861 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
1862 – மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1895 – தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.
1911 – செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1913 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1917 – அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.
1935 – மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1967 – லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1987 – தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.
பிறப்புக்கள்
1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
1948 – பாப் பார்,அமெரிக்க அரசியல்வாதி
இறப்புகள்
1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
1879 – ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (பி. 1831)
1975 – எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1789: அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக அருட்தந்தை ஜோன் கரோலை பாப்பரசர் 6 ஆம் பயஸ் நியமித்தார்.
1913: தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் பேரணிக்குத் தலைமை தாங்கிய மகாத்மாக காந்தி கைது செய்யப்பட்டார்.
1941: சோவியத் யூனியன் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் தனது 3 தசாப்தகால ஆட்சியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலால் 350,000 படையினர் உயிரிழந்ததாகவும் ஆனால், 45 லட்சம் ஜேர்மன் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெற்றி நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
1943: சோவியத் யூனியன் படைகள் கீவ் (உக்ரேன்) நகரை மீண்டும் கைப்பற்றின.
1944: அமெரிக்காவின் ஹன்பார்ட் அணுஉலையில் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இப்புளுட்டோனியம் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1962: தென்னாபிரிக்க நிற வெறி ஆட்சியைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
1965: அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் கியூப நாட்டவர்களை விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கு இரு நாடுகளும் இணங்கின. 1971 ஆம் ஆண்டளவில் 250,000 கியூப நாட்டவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்திருந்தனர்.
1986: பிரிட்டனில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தொன்றில் 45 பேர் பலியாகினர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
- 1492 -உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.
- 1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.
- 1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.
- 1783 - இங்கிலாந்தில் பொது இடத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டது.
- 1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1917 - அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது)
- 1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
- 1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
- 1956 - சூயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து உடனடியாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படைகளை வெளியேறுமாறு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்டது.
- 1962 -ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு பிரிட்டோரியா சிறையில் வைக்கப்பட்டார்.
- 1966 - பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் டெல்லியில் அ.இ.கா. தலைவர் திரு. காமராசர் வசித்த வீட்டில், இந்து சமய வெறியர்கள் தீ வைத்துக் காமராசரைக் கொலை செய்ய முயன்ற நாள்
- 1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
- 1989 - பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது.
- 1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.
- 2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.
http://senthilkumarvision.blogspot.com/2012/11/7.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
- 1793 - பாரிசின் புகழ் பெற்ற Louvre அரும்பொருளகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
- 1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- 1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
- 1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
- 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
- 1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
- 1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
- 1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
- 1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
- 1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
- 1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1988 - சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் எனும் நூலுக்கு 1988 ல் கற்பனைக் கதைக் கான விட்பிரட் விருதுவழங்கப்பட்டது
- 2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
http://senthilkumarvision.blogspot.com/2012/11/8.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1905: பிரான்ஸில் அரசாங்கத்தையும் தேவாலயத்தையும் பிரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1906: தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் நிர்மாணப்புப் பணிகளை பார்வையிடச் சென்றதன் மூலம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
1913: அமெரிக்க கனேடிய மத்திய பகுதியிலுள்ள ஏரிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 19 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 250 இற்கும் அதிகமானோர் பலியாகினர். ஏரிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அழிவு இதுவாகும்.
1921: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1937: சீனாவின் ஷாங்கை பிராந்தியத்தை ஜப்பானிய துருப்புகள் கைப்பற்றின.
1953: பிரான்ஸிடமிருந்து கம்போடியா சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 43 வயதான ஜோன் எவ். கென்னடி வெற்றி பெற்று, அமெரிக்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட மிக இளம் ஜனாதிபதியானார்.
1963: ஜப்பானிய நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 458 பேர் பலியாகியதுடன் 839 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
1989: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டது.
1985: சோவியத் யூனியனைச் சேர்ந்த கெரி கஸ்பரோவ் 22 ஆவது வயதில் சக நாட்டவரான அனடோலி கார்போவை தோற்கடித்து உலகின் மிக இளம் செஸ் சம்பியனானார்.
2005: ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1659: இந்தியாவில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி பாஜ்பூரி படைத்தளபதி அப்ஸால் கானை, பிரதாப்கார் சமரின்போது கொன்றார்.
1847: அயர்லாந்துக்கு அருகில் ஸ்டீபன் வைட்னி எனும் கப்பல் மூழ்கியதால் அதிலிருந்த 100 பேரில் 92 பேர் பலியாகினர்.
1969: அமெரிக்காவில் தேசிய சிறுவர் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1971: கம்போடியாவில் கெமரூஜ் படையினர் பினோம்பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 9 விமானங்களை அழித்ததுடன் 44 பேரை கொன்றனர்.
2006: யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.
1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.
1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.
1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.
1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.
2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.
2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.
2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1847: பிரித்தானிய மருத்துவர் சேர் ஜேம்ஸ் யங் சிம்ஸன் முதல் தடவையாக குளொரோபோமை மயக்க மருந்தாகப் பயன்படுத்தினார்.
1927: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து லினோன் ட்ரொஸ்கி வெளியேற்றப்பட்டதையடுத்து சோவியத் யூனியனின் முழமையான அதிகாரம் ஜோசப் ஸ்டாலினிடம் வந்ததது.
1956 மொராக்கோ, சூடான் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.
1969: வியட்னாமின் மை லாய் கிராமத்தில் 16.03.1968ஆம் திகதி 347-504 பொதுமக்கள் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை 12.11.1969ஆம் திகதி சுயாதீன ஊடவியலாளர் சிமோர் ஹேர்ஸ் உலகிற்கு அம்பலமாக்கினார்.
1970: கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஏற்பட்ட போலா சூறாவளியினால் சுமார் 5 லட்சம் பேர் பலி. இதுவே வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாகும்.
1982: சோவியத் யூனியனில் பிரெஸ்னேவைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக யூரி அண்டேரொபோவ் பதவியேற்றார்.
1996: புதுடில்லியில் சவூதி அரேபிய பயணிகள் விமானமொன்றும் கஸகஸ்தான் சரக்கு விமானமொன்றும் நடுவானில் மோதிக்கொண்டதால் 349 பேர் பலி.
1980: நாசாவின் வொயேஜர் -1 விண்கலம் மூலம் சனிக்கிரகத்தின் வளையங்கள் முதல் தடவையாக படம் பிடிக்கப்பட்டது.
1981: மனிதர்களுடன் இரு தடவை விண்ணுக்கு ஏவப்பட்ட முதல் விண்கலம் எனும் பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றது.
1990: ஜப்பானில் முடிக்குரிய இளவரசர் அகிஹிட்டோ அந்நாட்டின் 125 ஆவது மன்னரானார்.
2001: அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் 260 பேர் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1916: அவுஸ்திரேலியா பிரதமர் பில்லி ஹியூஜ்ஸ் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் தொழிற்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
1947: உலகில் அதிகம் விற்பனைசெய்யப்பட்ட துப்பாக்கியான ஏ.கே.47 உருவாக்கப் பணிகளை ரஷ்யா நிறைவுசெய்தது.
1950: வெனிசூலா ஜனாதிபதி ஜெனரல் கார்லோஸ் டெல்காடோ சல்போட் படுகொலை செய்யப்பட்டார்.
1954: உலகின் முதலாவது றக்பி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை பிரிட்டன் தோற்கடித்தது.
1965: பஹாமஸுக்கு அருகில் எஸ்.எஸ். யார்மௌத் எனும் நீராவிக் கப்பல் மூழ்கியதால் 90 பேர் பலி.
1971: அமெரிக்காவின் மரைனர் 9 எனும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்ததன் மூலம், மற்றொரு கிரகத்தை சுற்றிவந்த முதல் விண்கலமாகியது.
1982: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த குத்துச்சண்டைப் பொட்டியில் ரே மான்சினி என்பவர் டுக் கூ கிம் என்பவரை தோற்கடித்தார். 4 நாட்களின் பின்னர் கூ கிம் இறந்ததையடுத்து இவ்விளையாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
1985: கொலம்பியா நாட்டில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 23,000 பேர் பலியாகினர்.
1989: இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர கொல்லப்பட்டார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
- இந்தியா: குழந்தைகள் நாள்.
- உலக நீரிழிவு நோய் நாள்
- 1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
- 1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
- 1922 - BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தின் தினசரி ஒலிபரப்பு ஆரம்பானது.
- 1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
- 1960 - OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சங்கம் வியன்னாவைத் தலைநகராகக் கொண்டு தொடங்கப்பட்டது.
- 1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
- 1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
- 1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
- 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
- 1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
- 1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
- 1995 - இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நகரிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறின.
- 1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1889: பிரேஸில் மன்னர் இரண்டாம் பெட்ரோ இராணுவப் புரட்சியின் மூலம் நீக்கப்பட்டு பிரேஸில் குடியரசாக்கப்பட்டது.
1920: லீக் ஒவ் நேசன்ஸின் முதலாவது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.
1945: ஐ.நாவில் வெனிசூலா இணைந்துகொண்டது.
1949: மகாத்மா காந்தியை கொன்ற குற்றச்சாட்டில் நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1969: பனிப்போர் காலத்தில் சோவியத் நீர்மூழ்கியொன்றும் அமெரிக்க நீர்மூழ்கியொன்றும் பாரென்ட்ஸ் கடலில் மோதிக்கொண்டன.
1969: அமெரிக்காவின் வாஷிங்டனில் வியட்னாம் யுத்தத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் 250,000 - 500,000 பேர் பங்குபற்றினர்.
1978: மக்காவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு யாத்திரிகளை ஏற்றிச்சென்ற விமானமொன்று கட்டுநாயக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 183 பேர் பலியாகினர்.
1988: பலஸ்தீன தேசிய கவுன்ஸில் சுதந்திர பலஸ்தீன பிரகடனம் செய்தது.
1989: சச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.
2007:; பங்களாதேஷில் ஏற்பட்ட புயலினால் 5,000 பேர் பலியாகினர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹுவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.
1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.
1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.
1988: பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.
1997: சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18 வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.
2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன.
1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார்.
1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது.
1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன.
1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கப்பட்டது.
1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் பிரிந்தது.
1922: ஒட்டோமான் இராஜ்ஜியத்தின் முன்னாள் மன்னர் சுல்தான் 6ஆம் மெஷ்மெத் இத்தாலியில் தஞ்சம் புகுந்தார்.
1933: சோவியத் யூனியனை அமெரிக்கா அங்கீகரித்து.
1969: ஆயுதக்குறைப்பு தொடர்பாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஹெல்சிங்கியில் பேச்சுவார்த்தை நடத்தின.
1970: சோவியத் யூனியனின் லூனாகோட் -1 எனும் ரோபோ சந்திரனின் தரையில் இறங்கியது. மற்றொரு கோளில் அல்லது உபகோளில் தரையிறங்கிய முதலாவது ரோபோ இதுவாகும்.
1970: டக்ளஸ் ஏங்கல்பர்ட் என்பவர் முதலாவது கணினி மௌஸுக்கு காப்புரிமை பெற்றார்.
1997: எகிப்தில் யாத்திரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 62 பேர் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார்.
1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர்புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி.
1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார்.
1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள் தோற்கடித்தன.
1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த நேர வலயங்களுக்குப் பதிலாக 5 நேர வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1905: டென்மார்க் இளவரசர் கார்ல், நோர்வேயின் 7 ஆம் ஹக்கோன் மன்னரானார்.
1918: ரஷ்யாவிலிருந்து லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1926: ஜோர்ஜ் பேர்னாட்ஸா தனத நோபல் பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தார்.
1943: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் நகர் மீது பிரிட்டனின் 440 விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 9 pமானங்களையும் 53 படையினரையும் இழந்தது.
1945: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார்.
1947: நியூஸிலாந்தில் கடைத்தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் 41 பேர் பலி.
1961: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 18 ஆயிரம் இராணுவ ஆலோசகர்களை வியட்நாமுக்கு அனுப்பினார்.
1963: பொத்தான் இலக்கங்களை கொண்ட தொலைபேசிகள் சேவைக்கு வந்தன.
1978: கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை.
1987: லண்டனில் பாதாள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1941: இரண்டாம் உலக யுத்தத்தில் அவுஸ்திரேலிய கப்பலொன்றும் ஜேர்மனிய கப்பலொன்றும் ஒன்றையொன்று மூழ்கடித்ததால் 645 அவுஸ்திரேலியர்களும் 77 ஜேர்மனியர்களும் பலி.
1943: மேற்கு உக்ரேனில் நாஸி தடுப்பு முகாமிலிருந்து யூதர்கள் தப்பியோடும் முயற்சி தோல்வியுற்றபின் 6000 இற்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946: ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஐ.நாவில் இணைந்தன.
1969: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலம் (அப்பலோ 12 பயணம்) சந்திரனில் தரையிறங்கியது.
1969: பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் பேலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்.
1977: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததன் மூலம் அங்கு சென்று முதலாவது அரபு தலைவரானார்.
1977: போர்த்துக்கல் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 500 பேர் பலி.
1984: மெக்ஸிகோவில் எரிபொருள் களஞ்சியமொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் சுமார் 500 பேர் பலி.
1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் முதல் தடவையாக சந்தித்தனர்.
1988: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனிடம் மோனிகா லூவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குற்றவியல் விசாரணை ஆரம்பம்.
2005: மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.
1917: உக்ரைன் குடியரசாகியது.
1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.
1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும் (தற்போதைய ராணியார்) லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.
1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்தரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.
1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.
1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.
1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.
1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.
1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 13 of 37 • 1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37
» (மிக அரிய வீடியோக்கள்)வரலாற்றில் இன்றைய தினம்...
» வரலாற்றில் இன்று ( மே 17 )
» வரலாற்றில் இன்று: மே 01
» வரலாற்றில் இன்று: ஏப்ரல் 12
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு