சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 12 of 37 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 14 Oct 2012 - 15:22

ஒக்டோபர் 12
1492: ஆசியாவை அடைவதற்காக ஐரோப்பாவிலிருந்து மேற்குத்திசையில் பயணம் செய்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், மேற்கிந்திய தீவுகளை (பஹாமஸ்) அடைந்தார். தான் தென்னாசியாவை அடைந்துவிட்டதாக அவர் நம்பினார்.

1775: அமெரிக்க கடற்படை நிறுவப்பட்டது.

1792: முதலாவது கொலம்பஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1901: எக்ஸிகியூட்டிவ் மான்ஸன் என அழைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக பெயரிட்டார்.

1918: அமெரிக்காவின் மினசோட்டோ மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயினால் 453 பேர் பலி.

1957: கனடாவின் பிரதம மந்திரி லெஸ்டர் பொவ்லெஸ் - சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றார்.

1968: ஸ்பெயினிடமிருந்து கினியா சுதந்திரம் பெற்றது.

1976: காலஞ்சென்ற மாவோ சேதுங்கிற்குப் பின், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஹுவா குவோபெங் தலைமை தாங்குவார் என சீனா அறிவித்தது.

1983: ஜப்பானிய முன்னாள் பிரதமர் டனாகா ககுய் 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு காரணமாக 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1984: பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தச்சரையும் அமைச்சர்களையும் கொல்வதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் இருவர் பலியாகினர்.

1999: பாகிஸ்தானில் ஜெனரல் பர்வேஸ் முஷாரப், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

2000: அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.எஸ். கோல், யேமனின் ஏடன் துறைமுகத்தில் வைத்து தற்கொலைத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 17 பேர் பலி; 40 பேர் காயம்.

2002: இந்தோனேசியாவின் பாலி தீவில் இரவுவிடுதியொன்றில் குண்டுவெடிப்பு; 202 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 14 Oct 2012 - 15:22

ஒக்டோபர் 13
54: ரோமில் நீரோ மன்னனுக்கு முடிசூட்டப்பட்டது.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 600px-US-DeptOfNavy-Seal_svg1775: அமெரிக்க கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1923: இஸ்தான்புல்லுக்குப் பதிலாக அங்காரா துருக்கியின் தலைநகராக மாற்றப்பட்டது.

1943: இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிக்கு ஆதரவாக விளங்கிய இத்தாலி நேசநாடுக்கு சார்பானதாக மாறி ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.

1970: ஐ.நாவில் பிஜி இணைந்தது.

1972: மொஸ்கோவில் விமான விமான விபத்தில் 176 பேர் பலி.

1972: உருகுவே விமானப்படை விமானமொன்று விபத்துக்குள்ளானது. 46 பயணிகளில் 16 பேர் டிசெம்பர் 23 ஆம் திகதி உயிருடன் மீட்கப்பட்டனர்.

1976: பொலிவியாவின் போயிங் 707 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகி 100 பேர் பலி.

1977: லுப்தான்ஸா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று பலஸ்தீன தீவிரவாதிகளால் சோமாலியாவுக்கு கடத்தப்பட்டது.

1983: அம்ரிடெக் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் (AT&T) செல்லிடத் தொலைபேசி வலையமைப்பு அமெரிக்காவின் சிகாகோவில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே அமெரிக்காவின் முதல் செலூலர் வலையமைப்பாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 14 Oct 2012 - 15:23

ஒக்டோபர் 14
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 PEACE21066: பிரான்ஸை சேர்ந்த வில்லியமின் படைகள் இங்கிலாந்தைக் கைப்பற்றின.இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹரோல்ட்டைக் கொலை செய்தன.

1322: ஸ்கொட்லாந்தின் ரொபர்ட் புரூஸ், இங்கிலாந்து மன்னன் இரண்டாம் எட்வர்ட்டை பேலாண்ட் ;எனும் இடத்தில் தோற்கடித்தார். இதனால் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை இரண்டாம் எட்வர்ட் ஏற்றுக்கொள்ள நேரிட்டது.

1912: அமெரிக்க ஜனாதிபதி உட்ரோல் வில்ஸன், விஸ்கொன்ஸின் மாநிலத்தில் பிரச்சாரமொன்றில் பங்குபற்றியபோது ஜோன் ஷ்ராங்க் என்பவரால் சுடப்பட்டார். உட்ரோ வில்ஸனின் மார்பில் குண்டுபாய்ந்து காயமேற்பட்டது.

1933: ஹிட்லர் தலைமையிலான நாஸி ஜேர்மனிஇ லீக் ஒவ் நேஷனிலிருந்து விலகியது.

1944: ஜேர்மனியின் நாஸிப் படைகளிடமிருந்து கிறீஸின் ஏதென்ஸ் நகரத்தை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.

1947: அமெரிக்க விமானப்படையின் கப்டன் சக் யீகர், சோதனை விமானமொன்றை முதல் தடவையாக ஒலியைவிட வேகமாக செலுத்தினார்.

1956: இந்திய சட்டமேதை கலாநிதி பி.ஆர். அம்பேத்கார் தன்னை பின்பற்றும் 385000 பேரை பௌத்த மதத்திற்கு மாற்றினார்.

1981: எகிப்தில் ஜனாதிபதி அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரத்தின்பின் உப ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஜனாதிபதியாக பதவியேற்றார். இப்போதும் அவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார்.

1994:பலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யஸீர் அரபாத்திற்கும் இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ரபின் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சிமோன் பெரோஸ் ஆகியோருக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 9:58

ஒக்டோபர் 15
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Neps1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனுக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தின் சென் ஹெலினா தீவில் சிறைவாசம் அனுபவிக்க ஆரம்பித்தார்.

1878: எடிசன் எலெக்ரிக் லைட் கம்பனி செயற்படத் தொடங்கியது.

1964:சோவியத் யூனியனின் தலைவர் பதவியிலிருந்து நிகிட்டா குருசேவ் ஓய்வுபெற்றார்.

1969: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோர் பேரணி.

1971: பேர்சியா உருவாக்கப்பட்டதன் 2500 ஆண்டுநிறைவு கொண்டாட்டங்கள் ஈரானில் இடம்பெற்றன.

1990: பனிப்போர் பதற்றத்தை குறைக்கவும் சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியமைக்காக சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1997: சனிக்கிரகத்தை நோக்கி நாசாவினால் காசினி விண்கலம் ஏவப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 9:58

ஒக்டோபர் 16
1905: இந்தியாவில் வங்காள மாநிலம் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டது.


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Liayagh1951: பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ராவல்பிண்டி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

1962: அமெரிக்கா, கியூபாவுக்கிடையில் ஏவுகணை சர்ச்சை ஆரம்பமாகியது.

1978: போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொஜ்டிலா புதிய பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக தெரிவானார். 400 வருடகாலத்தில் இத்தாலியைச் சாராத முதல் பாப்பரசர் இவர்.

1996: எகிப்தில் கால்பந்தாட்ட அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெருக்கடியில் சிக்கி 180 பேர் பலி, சுமார் 47,000 பேர் காயம்.

1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 9:59

ஒக்டோபர் 17
1610: பிரான்ஸில் 13 ஆம் லூயி மன்னனுக்கு முடிசூடப்பட்டது.

1888: தோமஸ் அல்வா எடிசன் முதலாவது திரைப்படத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

1907: மார்கோணியின் நிறுவனம் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையிலான முதலாவது வயர்லெஸ் சேவையை ஆரம்பித்தது.

1912: பல்கேரியா, கிறீஸ், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தன.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Smith

1917: முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தியயது.


1933: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்ரைன் நாஸி ஜேர்மனியிடமிருந்து தப்பி அமெரிக்காவுக்குச் சென்றார்.

1941: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலொன்று முதல் தடவையாக அமெரிக்க கப்பலொன்றைத் தாக்கியது.

1941: கிறீஸின் சேரெஸ் நகரிலுள்ள ஆண்கள் அனைவரையும் ஜேர்மன் படைகள் கொலை செய்து வீடுகளுக்குத் தீ வைத்தன.

1966: பொட்ஸ்வானா, லெசத்தோ ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1968: மெக்ஸிகோ ஒலிம்பிக் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இரு தொமி ஸ்மித், வெண்கலம் வென்ற ஜோன் கார்லோஸ் ஆகிய அமெரிக்க கறுப்பின வீரர்கள் இருவரும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பரிசளிப்பின்போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படுகையில் தலைகுணிந்தவாறு, கறுப்பு நிற கையுறை அணிந்த கையை உயர்த்திக்காட்டி மௌனமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

1973: சிரியா மீதான இஸ்ரேலின் யுத்ததிற்கு ஆதரவாக விளங்கிய மேற்கு நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்கு ஒபெக் அமைப்பு தடைவிதித்தது.

1979: அன்னை தெரேசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1980: பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் வத்திகானுக்கு விஜயம். வத்திகானுக்கு விஜயம் செய்த முதலாவது பிரிட்டிஸ் அரசகுடும்பத் தலைவர் இவர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 10:00

செப்டெம்பர் 18


1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.

1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Sweedan

1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

1943: பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.

1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.

1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.

1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.

1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.

1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.

2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 10:01

ஒக்டோபர் 19
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.

1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.

1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.

1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Ship

1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.

1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,

1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.

1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.

2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Fri 19 Oct 2012 - 17:51

தகவலுக்கு நன்றி உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா Sat 20 Oct 2012 - 11:27

தகவலுக்கு நன்றி வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 22 Oct 2012 - 20:28

ஒக். 20
1818: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் '1818 ஆம் ஆண்டு ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது. கனேடிய- அமெரிக்க எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டது.


1827: நவோரினோ யுத்தத்தில் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்ய படைகளால் துருக்கி, எகிப்து படைகள் தோற்கடிக்கப்பட்டன.


1910: டைட்டானிக்கின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.ஒலிம்பிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Opera-house
1935: சீனாவில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் 'நீண்ட பவனி' முடிவடைந்தது.


1944: அமெரிக்க ஜெனரல் மெக் ஆர்தர் மீண்டும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதன் மூலம், 'நான் மீண்டும் வருவேன்' என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.


1968: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியின் மனைவி ஜாக்குலின், எகிப்திய கோடீஸ்வரர் ஒனாசிஸை திருமணம் செய்தார்.


1973:சிட்னி நகரின் புகழ்பெற்ற கட்டிடமான ஒபாரா ஹவுஸ் திறக்கப்பட்டது.


1982: மொஸ்கோ நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது சனநெரிசலில் சிக்கி 66 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 22 Oct 2012 - 20:29

ஒக்டோபர் 21
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.

1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.

1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.

1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.

1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.

1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.

1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.

1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.

1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458 பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.

1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 22 Oct 2012 - 20:31

ஒக். 22
1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.

1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.

1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.

1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து) அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.

1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.

1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.

1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Anuradhapura

1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.

1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.

1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.

1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.

2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.

2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:55

ஒக். 23
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Leninகி.மு.42: ரோமன் குடியரசின் சிவில் யுத்தத்தில் மார்க் அன்டனி, ஒகஸ்டஸ் சீசர் ஆகியோர் புரூட்டஸின் படைகளை தோற்கடித்தனர். புரூட்டஸ் தற்கொலை செய்துகொண்டார்.

1915: நியூயோர்க்கில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 25000 – 33000 பெண்கள் இணைந்து பேரணியொன்றை நடத்தினர்.

1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.

1929: நியூயோர்க் நகரிலிருந்து லொஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமான சேவை ஆரம்பம். அமெரிக்கக் கண்டத்தை கடக்கும் விதமான முதலாவது விமான சேவை இது.

1983: லொபனானின் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற வாகன குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கப் படையினர் பலி. அன்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 58 பிரெஞ்சு படையினரும் பலியாகினர்.

1992: ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ சீனாவுக்கு விஜயம். சீன மண்ணில் காலடி வைத்த முதலாவது ஜப்பானிய மன்னர் இவர்.

1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.

2002: ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் திரையரங்கொன்றில் 700 பேர் செச்னிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:56

ஒக். 24
1795: போலந்து நாட்டை ரஷ்யா, ஆஸ்திரியா , பிரஷ்யா ஆகியன தமக்கிடையில் பிரித்துக்கொண்டன.

1945: ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 United-nations
1946: அமெரிக்காவின் வி-2 ரொக்கட் மூலம் விண்வெளியிலிருந்து பூமி முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டது.

1948: பனிப்போர் என்ற சொற்பதம் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. யுத்தம் குறித்த அமெரிக்க செனட் விசாரணைக்குழுவின் முன் பேசுகையில் பேர்னார்ட் புரூச் என்பவர் இதைப் பயன்படுத்தினார்.

1949: நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1990: இத்தாலியப் பிரதமர் கியூலியோ அன்ட்ரியோட்டி தமது நாட்டில் நேட்டோவின் கிளாடியோ எனும் இரகசிய படையினர் இருப்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2003: கொண்கோர்ட் பயணிகள் விமானத்தின் கடைசிப் பயணம் -நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:57

ஒக்டோபர் 25
1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.

1920;: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.

1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Biggrenada

1962: ஐ.நா.வில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.

1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1964: பிரிட்டனிடமிருந்து ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.

1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.

1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர் மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.

1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.

1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:58

ஒக்டோபர் 26
1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.

1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 PARK

1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.

1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.

1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.

1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:58

ஒக்டோபர் 27



1275: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரம் உருவாக்கப்பட்டது.
1806: பிரெஞ்சு இராணுவம் ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நுழைந்தது.

1904 நியூயோர்க் பாதாள ரயில் சேவை சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1922: தென்னாபிரிக்க ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை ரொடீஸியா வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிராகரித்தது.

1936: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் 8 ஆம் எட்வர்ட் இளவரசரை மணப்பதற்காக திருமதி வல்லிஸ் சிம்ஸன் தனது கணவரை விவகாரத்துக்கு செய்வதற்கு விண்ணப்பித்தார்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Ayub-khan

1958: பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்ஸா, ஜெனரல் அயூப்கான் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தானின் முதலாவது இராணுவப் புரட்சியாகும்.

1961: மௌரிட்டானியா, மொங்கோலியா ஐ.நா.வில் இணைந்தன.

1971: கொங்கோ ஜனநாயக குடியரசின் பெயர் ஸயர் என மாற்றப்பட்டது. (1997 இல் அந்நாட்டிற்கு மீண்டும் கொங்கோ எனப் பெயரிடப்பட்டது).

1991: சோவியத் யூனியனிடமிருந்து துருக்மேனிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1999: ஆர்மேனிய நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி, பிரதமர் வஸ்ஜென் சார்ஜிஸ்யான் உட்பட 6 பேரை கொன்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 15:59

ஒக்டோபர் 28
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Liberty1707 ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5000 பேர் பலி.

1886: நியூயோர்க் துறைமுகத்தில் அமெரிக்க சுதந்திரச் சிலை ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்டினால் திறந்துவைப்பு.

1891 ஜப்பானிய வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பமான (8.0 ரிக்டர்) மினோ ஒவாரி பூகம்பம் ஏற்பட்டது. 7273 பேர் பலி.

1918: ஆஸ்திரியா-ஹங்கேரியிடமிருந்து செக்கஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றது.

1954: நவீன நெதர்லாந்து இராஜ்ஜியம் சமஷ்டி முடியாட்சி இராஜ்ஜியமாக ஸ்தாபிக்கப்பட்டது.

1962: கியூபாவிலிருந்து தனது அணுவாயுதங்களை அகற்ற சோவியத் யூனியன் சம்மதித்தது.

2007: ஆர்ஜென்டீனாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் தெரிவானார்.

2009: பாகிஸ்தானில் பெஷாவரில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் 117 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 29 Oct 2012 - 16:00

ஒக்டோபர் 29
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 WA18575261422: பிரான்ஸில் 7 ஆம் சார்ள்ஸ், மன்னராக முடிசூடினார்.

1859: மொராக்கோவுக்கு எதிராக ஸ்பெய்ன் யுத்தப் பிரகடனம்.

1863: 18 நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அமைப்பதற்கு இணங்கின.

1922: இத்தாலிய மன்னர் 3 ஆம் விக்டர் இமானுவல், பெனிட்டோ முஸோலினியை பிரதமராக நியமித்தார்.

1923: ஒட்டோமான் இராஜ்ஜியம் கலைக்கப்பட்டபின் துருக்கி குடியரசாகியது.

1941: லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1960: பின்னாளில், முஹம்மட் அலி என அறியப்பட்ட, கஸியஸ் கிளே தனது முதலாவது தொழிற்சார் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார்.

1961: ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து சிரியா வெளியேறியது.

1964: தான்கானீய்காவும் ஸான்ஸிபாரும் இணைந்து தான்ஸானியா குடியரசு உருவாக்கப்பட்டது.

1969: கணினிகளுக்கிடையிலான முதலாவது இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1998: தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சிக்காலம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' அறிக்கை வெளியிடப்பட்டது.

1998: ஜோன் கிளென் என்பவர் 77 ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.

1999: இந்தியாவின் ஒரிசாவில் பாரிய சூறாவளி தாக்கியது. 10 ஆயிரம் பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

2002: வியட்நாமின் ஹோசிமின் சிட்டி கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இற்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.

2004: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒஸாமா பின்லேடன் நேரடி பொறுப்பேற்பதாகக் கூறும் வீடியோவை அல் ஜெஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

2004: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரோமில் சந்தித்து ஐரோப்பிய அரசியலமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2005: இந்தியாவின் டெல்லியில் நடந்த குண்டுத்தாக்குதலில் 60 பேர் பலி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 31 Oct 2012 - 13:27

ஒக்டோபர் 30
701: கிரேக்கத்தில் 6ஆம் ஜோன் தனது கத்தோலிக்க பாப்பரசர் வாழ்வை ஆரம்பித்தார்.

1137: அபுலியாவின் ரானூஃப் இற்கும் சிசிலியாவின் 2ஆம் ரொஜெருக்குமிடையில் “றிக்னனோ“ யுத்தம்.

1270: 8ஆவதும் இறுதியுமான சிலுவைப்போர் தொடங்கப்பட்டது.

1340: றியோ சலாடோ யுத்தம்

1389: பிரான்ஸ் மன்னன் 6ஆவது சார்ளெஸ் - பாப்பரசர் 7ஆவது கிளமென்ஸை சந்தித்தார்.

1485: இங்கிலாந்தின் மன்னனாக 7ஆவது ஹென்றி முடிசூடினார்.

1502: வஸ்கொட காமா 2ஆவது தடவையாக இந்தியாவின் கேரளைாவிலுள்ள கோழிக்காட்டுக்கு வருகை தந்தார்.

1894: டானியல் கூப்பர் - மணிக்கூட்டுக்கு காப்புரிமை பெற்றார்.

1922: பெனிட்டோ முஸோலினி - இத்தாலியில் அரசொன்றை நிறுவினார்.

1957: ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் செல்லும் நாயின் பெயர் “லைக்கா“ என சோவியத் யூனியன் அறிவித்தது.

1979: எஸ்-203 என்னும் விண்வெளி வாகனத்தை நாசா அறிமுகம் செய்தது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Laika1


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 31 Oct 2012 - 13:28

ஒக்டோபர் 31
1876: இந்தியாவில் வீசிய கடும் சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பலியாகினர்.

1941: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரெயூபன் ஜேம்ஸ் எனும் கப்பல் ஜேர்மன் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியினால் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Indira-gandhi

1956: சுயஸ் கால்வாயை திறக்க நிர்ப்பந்திப்பதற்காக, எகிப்தின் மீது பிரித்தானிய பிரெஞ்சு படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

1984: இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

2000: சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமொன்று நிர்மாணக் கருவியொன்றுடன் மோதியதால் பயணிகள் சிப்பந்திகள் உட்பட 79 பேர் பலி.

2000: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக மனிதர்கள் தங்குவதற்கு அனுப்பப்பட்டனர்.

2003: மலேஷியாவில் 22 வருடங்கள் பிரதமராக பதவி வகித்த மஹதிர் மொஹமட் இராஜினாமாச் செய்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 1 Nov 2012 - 9:24

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Muthumohamed Thu 1 Nov 2012 - 12:41

Thanks 4 this gk
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 1 Nov 2012 - 22:19

நவம்பர் 02



வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Saud1570: வடகடலில் ஏற்பட்ட பாரிய அலைகளினால் ஹொலண்ட் மற்றும் ஜுட்லன்ட் தீவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.


1895: அமெரிக்காவில் பெற்றோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கிடையிலான முதலாவது பந்தயம் நடைபெற்றது. (முதல் பரிசு : 2000 டொலர்கள்).


1898: விளையாட்டுப் போட்டிகளின்போது அணிகளை உற்சாகமூட்டும் சியர்லீடிங் கலை அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.


1914: ஒட்டோமான் இராஜ்ஜியம் மீது ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.


1953: பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.


1963: தெற்கு வியட்னாம் ஜனாதிபதி என்கோ டின் டியெம், இராணுவப் புரட்சியொன்றின் பின் கொல்லப்பட்டார்.


1964: சவூதி அரேபிய மன்னர் சௌத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத், குடும்பப் புரட்சியொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவரின் சகோதரர் பைஸால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.


1964: தென்கொரிய சியோல் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 78 பேர் பலி.


1995: தென்னாபிரிக்காவில் நிறவெற கால ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் மக்னஸ் மலன் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 10 பேர் 1987 ஆம் ஆண்டு 13 பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


2007: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-09-24-11-20-03/30246.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 12 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 37 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum