சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Khan11

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

2 posters

Go down

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Empty மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:38

இந்தியாவில் அசூஸ்

தன்னுடைய பிரபலமான பி.டி.ஏ. மொபைல் போனை அசூஸ் நிறுவனம் இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. பி–320 என அழைக்கப்படும் இந்த பி.டி.ஏ.போன் மிக ஸ்டைலாக மொபைல் போனைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஏற்றதாகும். இதில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், எட்ஜ் / ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் வை–பி

வசதிகள் தரப்பட்டுள்ளன. 2.6 அங்குல டச் ஸ்கிரீன், 128 எம்பி பிளாஷ் மெமரி, 64 எம்பி டி.டி.ஆர். ராம் மற்றும் 2 எம்பி கேமரா உள்ளன. இதில் ஒரு ஆர்.எஸ்.எஸ். ரீடரும் தரப்பட்டுள்ளது.

இந்த போனில் உள்ள யுவர் டைம் என்ற வசதியைப் பயன்படுத்தி நான்கு நாடுகளின் வெவ் வேறு நேரத்தினை டெஸ்க் டாப்பில் செட் செய்திடலாம். பி.டி.ஏ. போன்களிலேயே இது மிகவும் சிறிய போன் என அசூஸ் அறிவித்துள்ளது. ஸ்டைல் மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கான கவர்ச்சியான போன் இது என்று மார்க்கட்டில் பேசப்படுகிறது. இந்தியன் டிஜிட்டல் லைப் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழி இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.12,900.


மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Mobilemalar-1

சாம்சங் எல்-700

தன்னுடைய சோல் சிரீஸ் Soul (Spirit of Ultra) வரிசையில் சோல்–பி என்ற போனை அறிமுகப்படுத்திய சாம்சங் அண்மையில் எல்–700 என்ற போனைக் காட்சிக்கு வைத்துள்ளது.

2.1 அங்குல வண்ணத்திரை, பெரிய அளவிலான கீ பேட், ஐந்து திசையில் இயங்கி மெனுக்களைத் தரக்கூடிய நேவிகேஷன் பேட் என புதிய அம்சங்களைக் கொண்டுள்ள இந்த போனில் 2 எம்பி கேமரா தரப்படுகிறது. ஆபீஸ் டாகுமெண்ட் வியூவர், புளுடூத்

மற்றும் மீடியா பிளேயர் இணைக்கப்பட்டுள்ளது. இதனை 3 ஜி நெட்வொர்க்குகளில் பயன்படுத்த இயலும். அதற் காகவே முன்பக்கமாக இன்னொரு வீடியோ கேமரா பொருத்தப்பட்டு வீடியோ கான்பரன்சிங் வசதியை எளிதாக்குகிறது. இந்த போன் மூலம் ஸ்லிம்மான ஸ்டைலான போனைத் தருவதில் தான் எப்போதும் முதல் என்று சாம்சங் நிரூபித்துள்ளது. வரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு, என வரும்போது இதன் விலை தெரியவரும்.

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Mobilemalar-2-1

நோக்கியாவின் இரு புதிய இ-சீரிஸ் போன்கள்

அண்மையில் சிங்கப்பூரில் நடந்த நோக்கியா கனெக்ஷன் 2008 என்ற கண்காட்சியில் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைத்த இரு மொபைல் போன்களை நோக்கியா அறிமுகப்படுத்தியது. நோக்கியா இ–71 மற்றும் நோக்கியா இ–66 என இவை பெயரிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதத்தில் அனைத்து நாடுகளிலும் இவை விற்பனைக்கு வரும். உடனுடக்குடன் தங்களுக்கு வரும் இமெயில்களைப் பெற்று முடிவெடுத்து மற்றவருடன் தொடர்பு கொள்ள விரும்பும் உயர்நிலை அலுவலர்களுக்கு ஏற்ற போனாக இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் ஏறத்தாழ 150 கோடி பேர் நோக்கியா போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Empty Re: மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:44

எனவே இந்தப் பிரிவிலும் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் இந்த போன்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று இந்நிறுவன துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இமெயில் தொடர்புகளை எளிதாகப் பெற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நோக்கியா 71 ஸ்லைடர் போனாக புதிய கீ பேடினைக் கொண்டுள்ளது. நோக்கியா 66 மெசேஜ் தருவதற்கான புதிய பல வசதிகளைக் கொண்டுள்ளது


மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட்

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Mobilemalar-3
இந்திய சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய வெப்கேமரா ஒன்றையும் ஹெட் செட் ஒன்றையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. லைப்கேம் வி.எக்ஸ்–500 (Life Cam VX500) மற்றும் லைப் சேட் எல்.எக்ஸ் 2000 (LifeChat LX2000) என இவை பெயரிடப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணையம் வழியே அரட்டை அடிக்கையிலும் இன்ஸ்ட ண்ட் செய்திகள் அனுப்புகையிலும் ஒருவருக் கொருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

வி எக்ஸ் 500 மூலம் வி.ஜி.ஏ. வீடியோ கிடைக்கிறது. இதன் மூலம் சிறந்த நல்ல ஆழமான வீடியோ படங்கள் உருவாகிக் கிடைக்கின்றன. மிகச் சிறியதாக இது இருப்பதனால் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுடன் இணைத்து எளிதாக இயக்கலாம். எல்.எக்ஸ் 2000 ஹெட்செட் மூலம் மியூசிக் மற்றும் கேம்ஸ் விளையாடுகையில் ஏற்படும் திரில்லான சுகத்தை அனுபவிக்கலாம். இந்த இரண்டையும் இன்ஸ்டால் செய்து இயக்க கூடுதலாக எந்த சாப்ட்வேர் தொகுப்பும் தேவையில்லை. பிளக் இன் பிளே சாதனங்கள் போல இவற்றைப் பயன்படுத்தலாம். வெப்கேம் வி.எக்ஸ் 500 ரூ. 850 மற்றும் லைப்சேட் எல்.எக்ஸ் 2000 ஹெட்செட் ரூ.999க்கும் விலையிடப்பட்டுள்ளன.


ஸ்பைஸ் தரும் டூயல் சிம் பி.டி.ஏ. டி–1100

இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை ஒரே போனில் வைத்து இயக்கக் கூடிய வகையிலான மொபைல் போன் ஒன்றை ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு வழங்கியுள்ளது. டி–1100 என்று அழைக்கப்படும் இதனை ஸ்பைஸ் ஒரு பி.டி.ஏ. போன் என்றே அழைக்க விரும்புகிறது. இந்த பி.டி.ஏ.வில் விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 இயங்குகிறது. இதே போன்ற மற்ற இரண்டு சிம் போனுக்கும் இதற்கும் வேறுபாடு ஒன்று உள்ளது.

இந்த போனில் இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும். இதில் 2 எம்.பி.கேமரா, ஸ்டீரியோ புளுடூத், விண்டோஸ் மீடியா பிளேயர் ஆகியவை உள்ளன. இதனுடைய மெமரியை 2 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதில் கூகுள் தேடுதல் வசதி ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இதில் டச் பேனல், ஸ்டைலஸ் மற்றும் எண்களும் எழுத்துக்களும் அடங்கிய கீ பேட் ஆகியவை தரப்படுகின்றன. இதன் விலை ரூ.16,999.


.. சீனாவின் மொபைல் மக்கள் 59 கோடியே 20 லட்சம்
மக்கள் தொகையில் மட்டுமின்றி மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையிலும் சீனா தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற மாதக் கணக்கின் படி சீனாவில் 59 கோடி யே 20 லட்சம் பேர் மொ பைல் பயன்படுத்துபவர் களாக அறியப்பட்டுள் ளது. அங்கும் லேண்ட் லைன் பயன்படுத்துவோர்


மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Mobilemalar-4

எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதனாலேயே சீனாவில் மொபைல் போன் தயாரிப்பில் எண்ணிக்கையிலடங்கா வகையில் பல்வேறு மாடல்களில் போன்கள் தயாரிக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்தில் இருக்கின்றன.

பெயர் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் மாடல்களின் அடிப் படையில் அவற்றின் விலையி 40 சதவிகிதத்தில் அதே வசதிகளுடன், சில வேளைகளில் கூடுதல் வசதிகளுடன், மொபைல் போன்கள் கிடைக்கின்றன. இந்த போன்கள் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சிறிய ஊர்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Empty Re: மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:49

விர்ஜின் மொபைல் வழங்கும் வி–ட்ரென்டி

மிக மெல்லியதான வடிவில் 65 கிராம் எடையில் வண்ணத்திரையும் எப்.எம். ரேடியோவும் இணைந்த மொபைல் போன் ஒன்றை விர்ஜின் மொபைல் நிறுவனம் வி–ட்ரென்டி என்ற பெயரில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஸ்பீக்கர் போன் , ஆர்கனைசர், 500 முகவரிகள் போட்டு வைக்கும் அட்ரஸ் புக், ஸ்டீரியோ ஹெட்செட் ஆகியன இதில் உள்ளன. இத்துடன் நாளொன்றுக்கு ரூ.5 செலுத்தினால் விர்ஜின் மொபைல் நிறுவனத்தின் வி.ஏ.எஸ். டேட்டா போர்டல் சென்று தேவையான தகவல்களையும் புரோகிராம்களையும் பெறலாம்.

இது ஒரு சி.டி.எம்.ஏ. மொபைல் போனாகும். பொதுவாக ரூ.1,500க்குக் குறைந்த விலையில் பல வசதிகளுடன் கூடிய சி.டி.எம்.ஏ. போன் கிடைப்பது அரிது. ஜி.எஸ்.எம். வகையிலும் இது போல வசதிகளையும் இணைக்கும்போது தரப்படும் ஹேண்ட் செட் அழகாக இருக்காது. ஆனால் வி–ட்ரென்டி இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் எண்ணத்துடன் அழகாக ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டு பலவித வசதிகள் இணைக்கப்பட்டு ரூ.1,499க்குக் கிடைக்கிறது.

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Mobilemalar-5

ரூ.1,499க்கு இந்த போனை வாங்கும்போது ஸ்டார்ட்டர் கிட் ஒன்று தரப்படுகிறது. ரீசார்ஜ் ஒன்று ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்படி தரப்படுகிறது. இந்த செட் ஏறத்தாழ நாடு முழுவதும் 15 ஆயிரம் கடைகளிலும் சில சிறப்பான மொபைல் ஷாப்களிலும் கிடைக்கிறது. மேலும் விபரங்கள் அறிய உங்கள் பி.எஸ்.என்.எல். போனில் இலவச அழைப்பு எண் 1–800–209–4444 என்ற எண்ணுக்கும் விர்ஜின் மொபைல் என்றால் இலவச எண்ணான 125999 என்று எண்ணுக்கும் டயல் செய்திடுங்கள்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Empty Re: மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

Post by mini Tue 25 Jan 2011 - 21:31

:”@:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் . Empty Re: மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum