சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

போதுமென்ற மனம் Khan11

போதுமென்ற மனம்

Go down

போதுமென்ற மனம் Empty போதுமென்ற மனம்

Post by gud boy Thu 28 Jun 2012 - 21:30

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் நினைத்துப் பார்க்கட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். நூல்: முஸ்லிம்: 5670.

படிப்பினைகள்:

1. மனிதன் எந்த விடயத்தையும் நல்ல எண்ணத்துடனும், அல்லாஹ் தனக்கு வழங்கியுள்ள அருட் கொடைகளில் போதுமென்ற மனநிலையுடனும் பார்க்கின்ற போது மன நிம்மதி அடைகின்றான், போதுமென்ற மனநிலையும், அல்லஹ்வின் அருட் கொடைகளின் தாற்பரியத்தை உணர்கின்ற நிலையும் வந்துவிட்டால் மனம் ஆறுதல் அடைகின்றது அப்போது தனக்கு அவன் அருளியுள்ளவைகளில் திருப்தி அடைவான், அதன் பின் அவனது உள்ளம் உலக விவகாரங்களில் தன்னைவிட மேலானவர்களை நாடவோ, அவனது கண்கள் தன்னைவிட மேலானவர்களைப் பார்க்கவோ மாட்டா. அதன் மூலம் அவனுக்கு மன நிம்மதி, சந்தோசம் வாழ்க்கையில் திருப்தி போன்றன கிடைக்கும்.

இல்லாவிட்டால், எவ்வளவு செல்வத்தை ஈட்டினாலும் உலகமே காலடியில் குமிந்தாலும் தன்னைவிட அதிகமான செலவம் வழங்கப் பெற்ற ஒருவரைக் காண்கின்ற போது மனம் நிம்மதியை இழந்து விடும்; சஞ்சலப்பட ஆரம்பித்து விடும்; இதன் காரணமாக மனிதன் பல உள நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும், ஆளாகிறான். அவ்வாறே நிரந்தரமான இன்பங்கள் நிறைந்த மறுமைக்காகவும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடி அடைந்து கொள்வதற்காகவும் கையாளவேண்டிய வழிமுறைகளில் இருந்து தன்னை அறியாமலேயே தூரமாகிவிடுகின்றான்.

2. ஒவ்வொரு மனிதனும் தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு திருப்தியடைவது இறைவன் நிர்ணயித்த விதியை நம்புவதைச் சார்ந்ததாகும். இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் (மேற்படி ஹதீஸின் மூலம்) போதுமென்ற மனநிலையை ஏற்படுத்திக் கொள்வதன்பால் மனிதனுக்கு வழிகாட்டுகிறார்கள். எனவே, உலக விவகாரங்களில் தனக்குக் கீழிருப்பவர்களையும், தன்னைவிடக்குறைந்த அருட்கொடைகள் வழங்கப்பட்டவர்களையும் பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தருகின்றார்கள். ஏனெனில், ஒரு மனிதன் எவ்வளவு பெரிய நோயாளியாக இருந்தாலும் தன்னை விட அதிக நோய்களால் பீடிக்கப்பட்டு, அவஸ்தைப் படுவோரைக் காணலாம் அவ்வாறே தான் எவ்வளவு வறியவனாக இருந்தாலும், தன்னை விட வறியவர்களை உலகில் காணலாம், மேலும், எவ்வளவு சோதனைக்குள்ளான ஒரு மனிதனும் தன்னைவிடப் பலமடங்கு சோதிக்கப்பட்டுள்ளோரைக் காணலாம். கூர்ந்து கவனித்தால், அல்லாஹ்வின் படைப்புக்களில் அதிகமானோரைவிட தான் அதிக சிறப்புக்களும், அருடைகொடைகளும் வழஙகப்பட்டுள்ளேன் என்பதை அழகாக கண்டுகொள்வான்.

எனவே ஒரு மனிதன் சிந்தித்து தான் அருள்பெற்றவன் என்று உணரும் போது இன்னும் அதிக நிம்மதியும் சந்தோசமும் அடைகின்றான். இந்த நிலை அவனிடம் கீழ்வரும் தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
அவை:
A. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அதிகரித்தல்.
B. அவனுடைய அருட்கொடைகளுக்கு அதிகம் நன்றி செலுத்தல்.
C. தனக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளைச் சகித்துக்கொள்ளுதல்.
D. அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை ஆதரவுவைத்தல்.
E. பொறாமை, குரோதம் போன்ற உளநோய்களிலிருந்து மனதைப் பாதுகாத்துக் கொள்ளுதல்.

3. இபாத்துக்கள் வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரை தன்னைவிட மேலாலுள்ளவர்களையே பார்க்க வேண்டும், தன்னை எப்போதும் பொடுபோக்கானவனாகவே கருதவேண்டும். எனவே, இபாத்துக்களில் அவர்களை மிகைத்துவிட அல்லது அவர்களுடைய நிலையை அடைந்துவிட முயற்சி எடுக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள மன்னிப்பின் பக்கமும், வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவர்க்கத்தின் பக்கமும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. (ஆல இம்ரான்: 133).

மேலும் அவன் கூறுகின்றான்:
أُولَـٰئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
இத்தகையோர்தாம் நன்மைகளில் விரைவோராவர். மேலும் அவர்களே அதற்காக முந்திக்கொள்வோரும் ஆவர். (அல்முஃமினூன்: 61).

மேலும் அவன் கூறுகின்றான்:
وَفِي ذَ‌ٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
இதை அடைவதில் போட்டியிடுவோர் போட்டியிட்டுக் கொள்வர். (அல் முதப்பிபீன்: 26)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர் பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். ஆயினும் அனைவரிடமும் நன்மையுள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு; இறைவனிடம் உதவிதோடு; நீ தளர்ந்து விடாதே; (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்: 5178

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சுவர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. புகாரி: (6487) முஸ்லிம்: (5436)

ஆகவே, இறைவனுடைய அருட்கொடைகளில் மனநிறைவு அடைவதன் மூலமும், அவனை வழங்கி வழிபடுவதில் போட்டி போட்டு முந்திக்கொள்வதன் மூலமும் உலகில் நிம்மதி மற்றும் சந்தோசத்தையும், ஈருலகிலும் இறைவனின் திருப்தியையும் அடைய முயற்சி செய்வோமாக!
நன்றி: மணாருத் தஃவா
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum