சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க Khan11

மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க

Go down

மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க Empty மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க

Post by gud boy Sat 15 Sep 2012 - 18:10

மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்கள் – மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை!

11 Sep 2012
சென்னை:எந்தவொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சில அமைப்புக்கள் அச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தியை வெளியிடுகின்றன. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகள் போன்று சித்திரிக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறையின் சார்பில் “தனியார் தொலைக்காட்சிகளின் சுயக் கட்டுப்பாடு” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உரை நிகழ்த்தினார்.
அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
“இந்தியாவில் வறட்சி, வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.
கிரிக்கெட், சினிமா, பேஷன் ஷோ போன்ற பொழுதுபோக்கு செய்திகள்தான் 90 சதவீதம் ஒளிபரப்பப்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற செய்திகள் வெறும் 10 சதவீதம்தான் இடம்பிடிக்கின்றன.
டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக ஜோதிடம், அரைகுறை ஆடையுடன் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேய்க் கதைகள், தொடர் கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சிகள் தாங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றன. சுயக்கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடே அல்ல; எந்தவொரு சுதந்திரமும் வரையறைக்கு உள்பட்டதுதான். எனவே, காட்சி ஊடகங்களையும் பத்திரிகைக் கவுன்சிலின் கீழ் கொண்டுவர வேண்டும்.
அதன்பிறகு, இதன் பெயரை வேண்டுமானால் ஊடக கவுன்சில் என்று மாற்றிக்கொள்ளலாம். அதில் காட்சி ஊடகங்களுக்கும் பிரதிநிதித்துவத்தை வழங்கலாம். ஆனால், ஊடகங்கள் தவறு செய்தால் அவற்றைத் தண்டிக்கும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதற்காக, பத்திரிகைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஊடக நிறுவனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை.
எந்தவொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்திய முஜாஹிதீன் அமைப்போ, ஜெய்ஷ் -இ-முஹம்மது போன்ற அமைப்புகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இ-மெயில் வந்துள்ளதாகவும், எஸ்.எம்.எஸ். வந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
இது, இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகள் போன்று சித்திரிப்பது ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும், நாட்டில் மதச்சார்பற்ற நிலையைப் பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தைப் பேணவும் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும்.
சமூகக் கொடுமைகளான ஜாதிப் பிரச்னைகள், மூட நம்பிக்கைகள், ஏழ்மை போன்றவற்றுக்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும். மக்களிடம் அறிவியல் பூர்வமாக சிந்திக்கத் தூண்ட வேண்டும்; மக்களின் மூட நம்பிக்கைகளைக் காட்டி அவர்களை ஏமாற்றக் கூடாது.
பீகாரில் பத்திரிகை சுதந்திரம் கிடையாது. அங்கு நிரூபர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதில்லை; ஆனால், மாநில அரசுக்கு எதிராக எழுதும் நிரூபர்கள் டிஸ்மிஸ் செய்யப்படவும், இடமாற்றம் செய்யப்படவும் பத்திரிகை நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இதுதொடர்பாக, ஒரு உண்மையறியும் குழுவை நியமித்துள்ளேன். இந்த மாத இறுதிக்குள் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.
கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை கைது செய்துள்ளது மிகப்பெரிய தவறு. ஜனநாயகத்தில் கார்ட்டூன் மூலம் கருத்துகளை விமர்சிக்கவோ, முன்வைக்கவோ செய்யலாம். இதற்காக கார்ட்டூனிஸ்டை கைது செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் அவரைக் கைது செய்த போலீஸார் மீதே வழக்குத் தொடரலாம்.” இவ்வாறு கட்ஜு கூறினார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum