சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++ Khan11

+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++

2 posters

Go down

+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++ Empty +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++

Post by யுவராஜா Sat 1 Dec 2012 - 7:14

சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்துஅடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை. உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளவை. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன்,கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன். நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும்இந்த வகை பாம்பு மேல்புறம்பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்டஇந்த பாம்பிம் விஷம் இதயத்திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லதுமணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின்விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாகபாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.விஷமற்றபாம்புகள்: சென்னை மற்றும்புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.பாம்புகள்பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலிஅலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்புகடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாககொண்டு செல்ல வேண்டும்.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++ Empty Re: +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++

Post by ahmad78 Sat 1 Dec 2012 - 8:39

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum