Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
தினம் ஒரு ஹதீஸ்
+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 8 of 18
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
தினம் ஒரு ஹதீஸ்
First topic message reminder :
தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
நன்றி தினம் ஒரு ஹதீஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
"மூவருக்கெதிராக கியாமத் (மறுமை) நாளில் நான் வழக்குரைப்பேன்..
என் (அல்லாஹ்) பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்.
சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.
கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.
(ஆகிய இவர்கள் தான் அந்த மூவர்)' என்று அல்லாஹ் கூறினான்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹிஹ் புகாரி. 2270.

கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் “காதிசிய்யா’ எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், “இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?” என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், “இது யூதரின் பிரேதம்’ எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் ஓர் மனிதரில்லையா?‘ என்று (திருப்பிக்) கேட்டார்கள்” என்றனர்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)
நூல்: நஸாயீ 1921
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)
நூல்: நஸாயீ 1921
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி:2078.

"முஅத்தின் (பாங்கு சொல்பவர்) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 629
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 629
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
அல்குர்ஆன்=(16: 14 )
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
அல்குர்ஆன்=(21: 30 )
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்
அல்குர்ஆன்=.(11: 7 )

@. சிறந்த ஹதீஸ் பகிர்வுக்கு :] ஜஸாகல்லாஹ்.....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தினம் ஒரு ஹதீஸ்
"ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் 5030
//இழந்ததை விட சிறந்தது கிடைக்க...//
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப (2:156) "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், "அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா' (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அ(வர் துன்பத்தை பொறுத்துக் கொண்ட)தற்கு ஈடாக அ(வர் இழந்த)தை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1674

“உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” (ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1858
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1858
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
எந்தவொரு முஸ்லிமான அடியார், தம் சகோதரர்களுக்காக மறைவில் தூஆச் செய்கிறாரோ, அப்பொழுது அவருக்கு ஒரு மலக்கு, நீர் அவருக்காகக் கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறியதை தாம் செவிமடுத்த்தாகக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
(முஸ்லிம்)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
:”@: :”@:*சம்ஸ் wrote:எந்தவொரு முஸ்லிமான அடியார், தம் சகோதரர்களுக்காக மறைவில் தூஆச் செய்கிறாரோ, அப்பொழுது அவருக்கு ஒரு மலக்கு, நீர் அவருக்காகக் கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறியதை தாம் செவிமடுத்த்தாகக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினம் ஒரு ஹதீஸ்
:”@: :”@:*சம்ஸ் wrote:“உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” (ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1858
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினம் ஒரு ஹதீஸ்
@. பகிர்வுக்கு ஜசாகல்லாஹ் ...
"நபி அவர்கள் கூறினார்கள்: " உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தோரே!'' (நூல் : ஜாமிவுத் திர்மிதி)
"நபி அவர்கள் கூறினார்கள்: " உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தோரே!'' (நூல் : ஜாமிவுத் திர்மிதி)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தினம் ஒரு ஹதீஸ்
தூங்கும் முன் (ஓத வேண்டியதில்) கடைசியாக, “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” (ஸூரத்துல் காஃபிரூன் (109 வது அத்தியாயம்) எனத் தொடங்கும் அத்தியாயத்தை ஓதிக் கொள்வீராக! அதில் ஷிர்க்கை விட்டும் நீங்கியதற்கான உறுதிமொழி உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்பல் (ரலி)
நூல்: அபூதாவூத் 4398
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
“தொழுகைக்காக (பாங்கு கூறி) அழைக்கப்பட்டுவிட்டால், பாங்கோசையை செவியுறாதிருக்குமளவிற்கு பின்துவாரத்தின் வழியாக பெரும் சப்தத்துடன் காற்றைவிட்டவனாக ஷைத்தான் பின்னால் செல்லுகிறான். பாங்கு கூறி முடிக்கப்பட்டுவிட்டால் (மீண்டும்) முன்னால் வருகிறான். தொழுகைக்கு ‘இகாமத்து‘ கூறப்பட்டு விட்டால் பின்னால் செல்லுகிறான். இகாமத்து கூறப்பட்டு முடிந்ததும் (மீண்டும் முன்னால்) வந்து, மனிதரின் மனத்திற்கும் அவருக்குமிடையில் (அவர் மனதில் பல எண்ணங்களை உண்டாக்கி) நடந்து முடிந்துவிட்ட இன்னவைகளை நினைத்துபார்: இன்னவைகளை நினைத்துபார் எனவும் அதற்கு முன்பு அவர் நினைத்து பார்க்காதவற்றையெல்லாம் நினைவு கூறுமாறு கூறுகிறான் இறுதியாக அம்மனிதர் எத்தனை (ரக்அத்துகள்) தொழுதார் என தெரியாதவாறு ஆகிவிடுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
முஸ்லிம் ஹதீஸ் எண் : 196
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
முஸ்லிம் ஹதீஸ் எண் : 196
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
சைத்தானின் தீங்கை விட்டும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினம் ஒரு ஹதீஸ்
“வல்லமையும், மாண்பும் மிக்க, அல்லாஹ்வைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 5517
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 5517
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாத வரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை'' என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டு விடுவதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5285
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5285
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
மனைவி இறைவனை தொழுவதை பார்க்கும் ஒவ்வொரு இறைநம்பிக்கையுள்ள கணவனின் மனமும் மகிழ்கிறது என் மனைவியும் நானும் இறைவனை தொழும் அடிமைகள் என்று.
(அனுபவம் :skypயில் பேச போனேன் தொழுக போகிறார் அடுத்த வாரத்திலிருந்து அந்த skyp க்கும் சவூதியில் தடை)
(அனுபவம் :skypயில் பேச போனேன் தொழுக போகிறார் அடுத்த வாரத்திலிருந்து அந்த skyp க்கும் சவூதியில் தடை)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
'நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்"
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி183.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி183.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் 'ம்ஸாஸ்' (உலகில் சக மனிதனுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குரிய தண்டனை) உண்டு! (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் (தண்டனையாக) அதைப் போன்றதுதான் உண்டு. அதையும் அல்லாஹ் அவருக்கு மன்னித்து விட்டால் அதுவும் கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி 41.
........................................................................................
'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி 42.
ஸஹீஹுல் புகாரி 41.
........................................................................................
'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி 42.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
@. பகிர்வுக்கு :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 8 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum