சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Khan11

தினம் ஒரு ஹதீஸ்

+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 26 Jan 2013 - 18:16

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 10 Jun 2013 - 22:31

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1779


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 11 Jun 2013 - 20:34

அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1734


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 18:59

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)

நூல்: அல்முஃஜமுல் கபீர் தப்ரானீ 16916


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 18:59

இமாம், (தொழுகையில்) ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள். (வானவர்களும் இவ்வாறு கூறுவார்கள்.) அப்படி நீங்கள் சொல்லும் கூற்று, வானவர்களின் கூற்றோடு (ஒரே வேளையில்) பொருந்தி விட்டால் உங்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 688


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 19:00

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்-குத்ரி (ரலி)

நூல்: அஹ்மத் 10749


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 19:00

இமாம், (தொழுகையில்) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து' என்று கூறுங்கள். (வானவர்களும் இவ்வாறு கூறுவார்கள்.) அப்படி நீங்கள் சொல்லும் கூற்று, வானவர்களின் கூற்றோடு (ஒரே வேளையில்) பொருந்தி விட்டால் உங்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 617


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 19:00

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6405


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 23 Jun 2013 - 10:23

எனது ஹதீஸிலிருந்து ஒன்று கூறப்படும் போது, ‘எங்களுக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) இருக்கிறது, அதில் ஏதேனும் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதை நாம் அனுமதிக்கப்பட்டதாக கொள்வோம். அதில் தடை செய்யப்பட்டவைகளை நாம் தடை செய்யப்பட்டதாகக் கொள்வோம்’ என்று தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு சிலர் கூற முற்படுவார்கள். எச்சரிக்கிறேன்! அல்லாஹ்வின் தூதர் தடுத்தவைகளும் அல்லாஹ் தடுத்தவை போன்றது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் அல்கின்தி (ரலி)
நூல்: அஹ்மத் 16863


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by kalainilaa Sun 23 Jun 2013 - 17:20

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 23 Jun 2013 - 18:52

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் உறங்கி விட்டார். சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார்” என்று கூறினார்கள். “ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரலி)
நூல்: அஹ்மத் 22555


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 23 Jun 2013 - 18:53

தொழுகையின் (இருப்பில் இருக்கும்) போது ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அருள்வளமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்) என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 1202


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 23 Jun 2013 - 18:57

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 03
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، ثنا عُبَيْدُ بْنُ شَرِيكٍ الْبَزَّارُ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : فَذَكَرْنَا صَلاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ ‏أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ ، اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ ، وَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ ، وَلا قَابِضِهِمَا ، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ‏‎‏ ‏وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ قَدَّمَ رِجْلَيْهِ ، ثُمَّ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى ، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ ، قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَجَلَسَ عَلَى مَقْعَدَتِهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 828


நான் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும் போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால்விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும் போது இடது காலை (வலப்புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்‘ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு அம்ர் (ரஹ்)
நூல்: புகாரி 828


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 13:21

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by gud boy Mon 24 Jun 2013 - 13:23

ahmad78 wrote:தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

!_!_
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 24 Jun 2013 - 16:05

ahmad78 wrote:தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்
மறுமொழிக்கு நன்றி தோழரே)(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 11:39

ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பாதையில் முட்கிளை கிடப்பதைக் கண்டு, (அதன் மூலம் எவருக்கும் பாதிப்பு வரக் கூடாது என்ற நோக்கில்) அதை அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தினார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவர் செய்த பாவங்களை மன்னித்தான்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1958


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 11:44

ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி (குத்தி விடுவேன் என்பது போல்) சைகை செய்தால், அவர் அதைக் கைவிடும் வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5103


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by jafuras Tue 9 Jul 2013 - 13:59

*சம்ஸ் wrote:தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்

 எனக்கும் அதுதான் பிடிக்கும் ^)
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 11 Jul 2013 - 11:06

நோன்பும், குர்ஆனும், மறுமைநாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யகூடியவைகளாகும். 


நோன்பு கூறும் ‘ ”இறைவா நான் இந்த அடியானை பகல்நேரத்தில் சாப்பிடவிடாமலும், மனோஇச்சைகளின்படி நடக்கவிடாமலும் தடுத்துவைத்திருந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!

” இன்னும் குர்ஆன் ”இறைவா இரவு நேரங்களில் இந்த அடியானை என்னை ஓதுவதற்காக இவனை தூங்கவிடாது தடுத்துவந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக” என கூறும். அவ்விரண்டின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் 

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : அஹ்மத்


 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by jafuras Thu 11 Jul 2013 - 13:42

:/ :”@:
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Wed 17 Jul 2013 - 17:09

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமாளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 396


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Wed 17 Jul 2013 - 17:11

மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, (அவை:) நோன்பாளி (நோன்பு வைக்கும் நேரத்திலிருந்து) நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை, நீதியான அரசனின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (ஆகியனவாகும்.) அவற்றை, அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி, அவற்றிற்காக வானத்தின் வாசல்களையும் திறக்கிறான். (மேலும் அவர்களுக்காக,) “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இப்போது இல்லாவிட்டாலும் பிறகாவது நிச்சயம் நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று இறைவன் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3598


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 18 Jul 2013 - 16:22

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 7443


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 18 Jul 2013 - 16:22

ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி (குத்தி விடுவேன் என்பது போல்) சைகை செய்தால், அவர் அதைக் கைவிடும் வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5103


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 18 Jul 2013 - 16:23

ரமளான் (மாதத்தின்) இரவில் நம்பிக்கையுடனும், அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2008


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 13 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum