Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினம் ஒரு ஹதீஸ்
+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 14 of 18
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
தினம் ஒரு ஹதீஸ்
First topic message reminder :
தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
நன்றி தினம் ஒரு ஹதீஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்அத்தமா” என மக்கள் அழைக்கும் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் ஸலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். வைகறை வெளிச்சம் படர்ந்து, தொழுகை அழைப்பாளர் ஃபஜ்ருத் தொழுகைக்கு அழைத்து முடித்ததும் எழுந்து, சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக(த் தம்மை அழைக்க) முஅத்தின் வரும் வரை வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
எண்ணத்தைப் பொறுத்தே செயல்(களுக்கான கூலி) அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியபடி தான் (அதற்கான பலனும்) கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றுள்ளதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
நூல்: புகாரி 1
நூல்: புகாரி 1
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
இரவில் உறக்கம் கலைந்தவர், “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை) என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 1154
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 1154
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
பிலால், (கடைசி) இரவில் (ஸஹருக்காக) தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, (ஃபஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1991
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1991
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நோன்பானது அல்லாஹ்விற்காக, அவனிடம் மட்டும் அதற்கான நன்மை கிடைக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தோடு வைக்கப்பட வேண்டும், மாறாக உடல் மெலிய வேண்டுமென்றோ, ஆரோக்கியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வைத்தால் அந்நோக்கம் நிறைவேறுமே தவிர, அல்லாஹ்விடம் அதனால் எவ்வித நன்மையும் கிடைக்காது. நோன்பு மட்டுமல்ல தொழுகை உட்பட அனைத்து அமல்களுமே அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தோடு மட்டுமே செய்யப்பட வேண்டும், அவ்வெண்ணத்தில் வேறு காரணங்களையும் கலந்தால் மறுமையில் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நோன்பு திறக்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் உணவை விட்டு விட்டு தொழப் போகிறேன் என்று பாதி பசியுடன் சென்று விடக் கூடாது, முதலில் பசியாறும் அளவு உணவை உண்ண வேண்டும், பின்னர் தான் தொழ செல்ல வேண்டும். (நோன்பு நேரம் என்பதால் அதற்கேற்றவாறு இப்பதிவு, நோன்பு திறக்கையில் மட்டுமல்ல எக்காலத்திற்கும், எப்போதைக்குமான சட்டமும் இதுவே…)
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا قُرِّبَ الْعَشَاءُ وَحَضَرَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ الْمَغْرِبِ وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 967
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا قُرِّبَ الْعَشَاءُ وَحَضَرَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ الْمَغْرِبِ وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 967
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நீங்கள் மஃக்ரிப் தொழுவதற்கு முன்னர் (உங்கள் முன்) இரவு உணவு வைக்கப்பட்(டு, அத்தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்)டால் முதலில் உணவை உண்ணத் தொடங்குங்கள். உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 967
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 967
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா? என்று கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் நோன்பு நோற்காமல் விட்டு விடு என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 2307
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 2307
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
jafuras kaseem wrote::”@: :”@: ஜஸாகல்லாஹ்
)(
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு (மக்களின் அப்போதைய உணவுப் பொருட்களான) பேரீச்சம் பழம் அல்லது தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நோன்பாளி வீணான காரியங்கள், பேச்சுக்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளு(ம் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்)களுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டும் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாதுல் பித்ர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1817
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1817
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபுஅன்னீ ” (இறைவா! நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!) என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 25168
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 25168
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டு. நீ யாருக்கு இடர்களை களைந்தாயோ அவர்களுடன் எனது இடர்களையும் களைவாயாக! நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்கு வழங்கியதில் பரகத் செய்வாயாக! நீ செய்த முடிவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக! நீ தான் முடிவு எடுப்பவன். உன் விஷயத்தில் யாரும் முடிவு எடுக்க முடியாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயோ அவர் இழிவடைவதில்லை. எங்கள் இறைவா! நீ உயர்ந்தவன், பாக்கியமிக்கவன்.
நூல்: திர்மிதி
நூல்: திர்மிதி
Re: தினம் ஒரு ஹதீஸ்
முகமன் கூறுதல். (ஸலாம்) 1396. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6234 அபூஹுரைரா (ரலி).
Re: தினம் ஒரு ஹதீஸ்
***** உளுவை அழகிய முறையில் செய்வோம்..! *****
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அழகிய முறையில் உளு செய்கிறாரோ, அவரது நகக்கண் உட்பட அவருடைய உடலில் இருந்து பாவங்கள் வெளியேறும்.
நூல் : முஸ்லிம்,361

பதுக்கல் செய்பவன் பாவியாவான்...
கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்...
பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
ஒரு மனிதன் தன் பெற்றோரை ஏசுதல்,
பெரும் பாவமாகும்.....
புறம் பேசுவது,
விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்..
தன் பெற்றோரை நிந்திப்பவன்,
தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.....
மிதமிஞ்சிய உணவு
அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
-நபி மொழி....

1.உங்களில் இறந்தவர்களின்
நற்செயல் பற்றியே கூறுங்கள்...
2.தன் நாவையும், வெட்கத்தலத்தையும்
தான் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால்,
அவருக்கு சுவனம் (சொர்க்கம்) கிடைத்திட
நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்....
3.அடைக்கலப் பொருளை (அமானிதத்தை)
பேணிக் காக்காதவனிடம்
நம்பிக்கை (ஈமான்) இல்லை.
வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம்
இறைநெறி (தீன்) இல்லை....
-நபி மொழி.....

மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
தீமைக்கு பின்,
அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
நாவை அடக்கு,
உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
ஒரு வினாடி நேர சிந்தனை,
ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச்சிறந்தது.
-நபி மொழி.......

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை. (திருக்குர்ஆன் 5:72) & அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக்குர்ஆன் 6:88) & அல்லாஹ், அவனுக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான்.(திருக்குர்ஆன் 4:116)
அல்லாஹ்விற்கு இணை கற்பித்தால், செய்த நற்செயல்களுக்கு எதற்கும் கூலி கிடைக்காது. எனவே ஒருவர் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டுமானால் முதல் & முக்கிய விஷயம், அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத நிலையில் இறந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருந்தால் மட்டும் போதும், மற்ற விஷயங்களில் ஏனோ தானோவென்று இருக்கலாம் என்றும் எவரும் எண்ணிவிடக்கூடாது. மற்ற பாவங்களை அல்லாஹ் தான் நாடியோருக்குத் தான் மன்னிப்பான், அவன் யாருக்கு நாடுகிறான் என்பது நமக்குத் தெரியாது. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பதோடு மார்க்கம் ஏவிய, தடுத்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும், (தாங்கள் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காதவர்கள் என்று சிலர் கூறிக் கொண்டு புறம் பேசி, பிறர் மானம் விஷயத்தில் விளையாடுவதையும், அசிங்கமாகப் பேசுவதையும் வலைதளங்களில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாக உள்ளது.) அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் தான் கிடையாது, மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்தால் நரகம் செல்லாமல் தப்பலாம், அவன் மன்னிக்காவிடில் நரகம் சென்று தான் சொர்க்கம் செல்ல முடியும், அதுவும் அல்லாஹ் எவ்வளவு காலம் நரகில் வேதனை தர நாடுவான் என்றும் தெரியாது, இவ்வுலக நெருப்பை விட நரக நெருப்பு 69 மடங்கு கொடியது, (புகாரி 3265) அத்தகைய நரக நெருப்பின் சிறு கங்கை உள்ளங்காலின் கீழ் வைத்தாலே அதன் தாக்கத்தால் மூளையே கொதிக்கும், (இது தான் நரக தண்டணையில் சிறியது) [முஸ்லிம் 363] அந்த நரக நெருப்பு உடலில் பட்டால் உடல் கரிக்கட்டை ஆகி விடும், வேதனையை உணர புது தோல்கள் மாற்றப்பட்டு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும், (திருக்குர்ஆன் 4:56) எனவே ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதோடு, அல்லாஹ்விற்கு செய்யும் மற்ற வணக்கங்கள் விஷயத்திலும், பிற மனிதர்களின் உரிமை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ, قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبُ نَاسٌ مِنْ أَهْلِ التَّوْحِيدِ فِي النَّارِ حَتَّى يَكُونُوا حُمَمًا فِيهَا, ثُمَّ تُدْرِكُهُمُ الرَّحْمَةُ, فَيَخْرُجُونَ فَيُلْقَوْنَ عَلَى بَابِ الْجَنَّةِ ، فَيَرُشُّ عَلَيْهِمْ أَهْلُ الْجَنَّةِ الْمَاءَ, فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْغُثَاءُ فِي حِمَالَةِ السَّيْلِ, ثُمَّ يَدْخُلُونَ الْجَنَّةَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 14901

Permissions in this forum:
You cannot reply to topics in this forum