Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினம் ஒரு ஹதீஸ்
+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 15 of 18
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
தினம் ஒரு ஹதீஸ்
First topic message reminder :
தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
நன்றி தினம் ஒரு ஹதீஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
தவ்ஹீத்வாதிகளில் சிலர் (அவர்கள் செய்த வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்பட்டு (நரக நெருப்பின் தாக்கத்தால்) கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 14901
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 14901
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
“மனிதர்கள், பெருமைக்காக பள்ளிவாசல்களைக் கட்டுவது, யுக முடிவுநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸாயீ 689
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸாயீ 689
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹர்ஜ் பெருகாதவரை யுக முடிவு நாள் வராது” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஹர்ஜ் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கொலை; கொலை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5537
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5537
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர், (குர்ஆனின் 2:156 ல் உள்ள) அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா‘ (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அ(வர் துன்பத்தை பொறுத்துக் கொண்ட)தற்கு ஈடாக அ(வர் இழந்த)தை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று) நான் கூறினேன். அல்லாஹ், அபூசலமாவை விடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1675, (1674)
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1675, (1674)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்-அன்சாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 4992
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்-அன்சாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 4992
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை நற்காரியங்களுக்காக அர்ப்பணிக்கிறார்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த (கல்வி) ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (தானும் அமல் செய்து பிறருக்கும்) அதைக் கற்பித்துக் கொண்டும் இருக்கிறார்; (இவ்விருவரைப் போல் தாமும் செய்து அதிக நன்மைகளை அல்லாஹ்விடம் பெற வேண்டும் என்ற விதத்தில் இந்த) இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 7141
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 7141
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
சில துதிச்சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் (மறுமையில்) நஷ்டமடையமாட்டார். (அவை:) முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே) என்றும், முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும் கூறுவதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1046
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1046
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாக அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 691
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 691
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ‘ஜஸாகல்லாஹு கைரா‘ (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் (நன்றி கூறி) நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495
அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) “தவ்ஸ்’ குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள், “தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்றும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2937
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2937
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தினம் ஒரு ஹதீஸ்
தொடர்ந்து படித்து வாருங்கள் அக்கா !_பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
இறைநம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது. (துன்பங்களைப் பொறுத்துக் கொண்டதற்கு ஈடாக அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2336
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2336
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் “அல்ஜுமுஆ‘ எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் “இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன‘ (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1591
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1591
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
தினம் ஒரு ஹதீஸ் ...இந்த நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தினம் ஒரு ஹதீஸ்
"யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில், அல்லாஹ்விடம் அவர் செய்த பிரார்த்தனையான, "லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்" (உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) என்பதைக் கூறி எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 10028
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 10028
Re: தினம் ஒரு ஹதீஸ்
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம்
' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்...... (திருக்குர்ஆன் 31:13)
'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 4:48)

அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றி இஸ்லாம்
அண்டை வீட்டாரை அன்புடன் உபசரிப்பது ஒரு முஸ்லிமின் கடமை!
அல்லாஹ் கூறுகிறான்: -
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் 4:36)

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)
நூல்: புகாரீ 6016
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.

“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 73
நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 73
நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.
Re: தினம் ஒரு ஹதீஸ்
தொல்லை தருதல்
வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5187
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.

“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12575
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12575
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 15 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum