சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Khan11

தினம் ஒரு ஹதீஸ்

+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 26 Jan 2013 - 18:16

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 10:19

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 10:32

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது.தாவுத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.

(புகாரி : 2072)

பிறரிடம் யாசகம் கேற்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து(விற்கச்)செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம்.

(புகாரி : 2074,2075)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 11:19

"ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 311


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 18:17

“என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6069


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 1 Apr 2013 - 18:16

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள், “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச்சாரல் பட்டு விட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது, “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “யார் (பிறரை) ஏமாற்றுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1315


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 1 Apr 2013 - 18:18

திருமணம் செய்யும் நோக்கம் இன்றி ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, திருமணப் பேச்சை எடுக்காதீர்கள். ஏனெனில் ஒருவர் மற்றவர் மனதில் வீண் ஆசைகளை விதைப்பதனால், பிறகு பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்."
என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். [ஸஹீஹுல் புஹாரி: 1905]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 11:15

மறுமை வெற்றிக்கு..................

‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது தூதரின் வழிமுறை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம் 318


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by பானுஷபானா Tue 2 Apr 2013 - 11:17

*சம்ஸ் wrote:மறுமை வெற்றிக்கு..................

‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது தூதரின் வழிமுறை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம் 318

ஆமீன் பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 19:00

ஹதீஸ் 16. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் " ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விடயங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். நிலையான தர்மம் (ஷதகதுல் ஜாரிஆ), பயனளிக்ககூடிய அறிவு, தனக்காக பிரத்திக்ககூடிய சிறந்த பிள்ளைகள்". (முஸ்லிம் 3:1631)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Wed 3 Apr 2013 - 18:41

“இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1920


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 17:57

“என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1700


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 6 Apr 2013 - 8:22

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.

நூல் : புகாரி (935)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 6 Apr 2013 - 12:27

"நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5855


"நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5856


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 16:47

:# சிறந்த ஹதீஸ் பகிர்வுக்கு :] சம்ஸ் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 6 Apr 2013 - 17:56

உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் 7095


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:17



“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு

அல்லாஹ் கருணை காட்டமாட்டான்”


என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.


என்று ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.

நூல்:- புகாரி,7376.




தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 521659_10151385170538450_885748876_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:59

"தொழுகை" ஒளியாகும்...


"தர்மம்" அத்தாட்சியாகும்...


"பொறுமை" வெளிச்சமாகும்...


"திருக்குர்ஆன்"

உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான

ஒரு நிரூபணமாகும்.....




-நபி(ஸல்).... நூல்: முஸ்லிம்....


தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 64273_554786937886109_740430533_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 18:21

இரவில் உறக்கம் கலைந்தவர், “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை) என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 1154


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Sun 7 Apr 2013 - 22:48

:# சிறப்பான ஹதீஸ் பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ்..!

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 22:51

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 8:12

ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் தம் சீடர்களுடன் ஒரு வழியே சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது பன்றி ஒன்று எதிரே வருவதைக்கண்டு அதை பார்த்து “நலமாக ஒதுங்கி போ” என்று கூறினார்கள்.

அப்பொழுது அவர்களின் சீடர்கள் அவர்களை நோக்கி, “இந்த இழிந்த பிராணியிடம் இத்துணை மதுரமாக மொழிய வேண்டுமா? சீ பன்றியே ஒதுங்கி விடு ! என்று கூறக்கூடாதா? என்று வினவியபோது,

இறைவனை துதி செய்யும் என் நாவால் நன்மொழிகளைத் தவிர தீய மொழிகளை உச்சரிப்பதற்கு நான் அஞ்சுகிறேன்” என்று பதில் கூறினார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 9:39

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 3316.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 18:30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படி இருந்தும் தனக்காகப் பிறர் எழுவது நபியவர்களுக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்களைக் கண்டால், அவர்களுக்காக நபித்தோழர்கள் எவரும் எழ மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 2754


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 17:00



"தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை,

மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான

கருவூலக்காப்பாளர், தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்".


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2260.




தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 534144_10151389462828450_2028269056_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 17:23

சிறந்த ஹதீஸ் பகிர்விற்கு நன்றி :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 9 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum