சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Khan11

சுட சுட செய்திகள்...ராகவா

+4
rammalar
kalainilaa
*சம்ஸ்
மீனு
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 6 Feb 2013 - 1:39

First topic message reminder :

தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்...

ஆய்வை முடித்தது மத்தியக் குழு: நாளை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிப்பு


புதுடில்லி: காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி வாடும் நெற்பயிர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இன்று அப்பகுதிக்கு வந்த மத்தியக்குழு தனது ஆய்வை முடித்தது. இதையடுத்து இந்த அறிக்கை நாளை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு செய்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையின் போது, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜனவரி மாத இறுதிக்குள், அரசிதழில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி, லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம், 20ம் தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரியில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு, உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர் வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு, தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதன்படி, இன்று காலை மத்திய வேளாண் அமைச்சகத்தின் துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்கள் ஜேக்கப், மகேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் தங்கமணி அடங்கிய மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் ஓடும் உய்யக்கொண்டான் பகுதியில் தங்களது ஆய்வைத் துவக்கியது.


தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் யூனியனில் கோவில்பத்து பகுதிகளில் கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய குழுவினர்கள் குணமங்கலம், ராயந்தூர் ஆகிய இடங்களிலும், வயல்பரப்பில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது ராயந்தூரில் தீபன் என்ற விவசாயி, தன் வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். தொடர்ந்து மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு, சொக்கனாவூர் ஆகிய பகுதிகளில் பயிர்களை பார்வையிட்டனர். மத்தியக்குழுவினருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சந்தீப் சக்சேனா, வேளாண்மைத்துறை கமிஷனர் சிவதாஸ்மீனா, கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய்த்துறை நிர்வாக கமிஷனருமான ஸ்ரீதர், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

மத்தியக்குழுவை சேர்ந்த மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நெற்பயிர்களை பார்வையிட்டோம். பயிர்கள் கருகியுள்ளது தெரியவருகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டுள்ளோம். பயிரை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து பாய்ச்சுவதையும் பார்த்தோம். விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்வையிட்டோம். தண்ணீர் தேவை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல் செய்வோம்.

தினமலர்


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 7:44; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:59

ஐ.மு., கூட்டணியின் கொள்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும் வகையில் உள்ளது: அரசு துறை ஆய்வு
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643911

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசின்
கொள்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித ஆற்றல் ஆய்வு
நிறுவனம் (ஐஏஎம்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி லட்சகணக்கான மக்களை தினக்கூலிகளாக மாற்றிய பெருமையும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாரும்.

வளர்ச்சி பாதையில் இந்தியா
எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வேலையின்மை மற்றும் தகவல்கள் என்ற
தலைப்பில் திட்டக்குழுவுடன் இணைந்து ஐஏஎம்ஆர் நடத்திய ஆய்வு அறிக்கையில்
இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் நாட்டின்
வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பங்கு குறித்து இந்த
அறிக்கை விபரம் தெரிவிக்கிறது. அதில் உலகின் 4 வது பெரிய பொருளாதார
அமைப்புடைய நாடு இந்தியாவாக இருந்த போதிலும், மொத்த வேலைவாய்ப்பு மற்றும்
விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சி ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதே இந்த அரசின் சாதனையாகும்.
2005-10ம் ஆண்டுகளில் 15 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டு
உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு சென்றுள்ளனர். வேலைவாய்ப்பில்
விவசாயத்துறையின் பங்கு 57 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே சமயம் இதே காலகட்டத்தில் கட்டுமானதுறையில் 18 மில்லியன் தொழிலாளர்கள்
அதிகரித்துள்ளனர். இத்துறையின் உள்கட்டமைப்பிற்காக அரசின் முதலீடும்
பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

2005-10 வரையிலான 5 ஆண்டுகளில்
விவசாயத்துறை உற்பத்தி பெரிய சரிவை சந்தித்துள்ளது. கட்டுமான துறையில்
தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இவர்களில் 95 சதவீதம் பேர் (44
மில்லியன்) எவ்வித சமூக பாதுகாப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் விவசாயத்துறையில் இருந்து பிற துறைகளிலுக்கு சென்றதால் ஒரு
சில துறையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு துறை கடுமையான
பொருளாதார சரிவை சந்தித்தது. 2005-10ல் உற்பத்தி துறையில் 5 மில்லியன்
தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது. அதே சமயம்
சேவை துறைகளில் 2000-2005ல் 18 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மோசமான
வளர்ச்சியை பெற்ற நாடுகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக ஆய்வு
தெரிவிக்கிறது. சிறிய மற்றும் குறு தொழில் துறையில் கூலித்தொழிலாளிகளின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐஏஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொள்கையில்லாத
ஒப்பந்தங்களால் உற்பத்தி துறையில் 2010ல் 60 சதவீதம் வேலைவாய்ப்பும் ,
உற்பத்தி அல்லாத துறைகளில் 80 சதவீதமும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு
தெரிவிக்கிறது.





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:01

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Gallerye_021110964_643382

புதுடில்லி :"தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட
வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவு
பிறப்பித்தது. "9 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவிட
வேண்டும்' என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததுதமிழக
டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, 9
டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என,
தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த
வழக்கு, இம்மாதம், 4ம் தேதி, நீதிபதி, ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள்
செலமேஸ்வர் மற்றும் மதன் பி லோகுர் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன்,
விசாரணைக்கு வந்தது. "தமிழகத்திற்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட
வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், "9
டி.எம்.சி., தண்ணீர் கட்டாயம் வேண்டும்' என, தமிழக அரசு சார்பில்
வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக டெல்டா பகுதிக்கு சென்று, நிலைமையை
நேரில் ஆய்வு செய்து, இரண்டு நாட்களில் அறிக்கை தருமாறு, மூன்று பேர் கொண்ட
குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. மத்திய உணவு துறை ஆணையர் பிரதீப்குமார்
ஷா தலைமையில், அத்துறை அதிகாரிகள், கே.எஸ்.ஜேக்கப் மற்றும் ஏ.மகேந்திரன்
ஆகியோர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டனர். அந்த குழுவினர், 375 கி.மீ., பயணம் செய்து, 14 இடங்களில்
மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரித்தனர். 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் : அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: டெல்டா பகுதியில், விவசாயம் நடக்கும்
நிலப்பரப்பில், 50 சதவீத நிலத்தில் அறுவடை முடிந்து விட்டது; 40 சதவீத
நிலங்களில், இன்னும் சில நாட்களில் அறுவடை
நடக்க உள்ளது; 10 சதவீத பரப்பில் மட்டும் தான் பயிர்கள் உள்ளன. அந்த
பயிர்களில், 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு, ஒருமுறை நீர் பாய்ச்ச, 0.71
டி.எம்.சி., தண்ணீரும், 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு, இரு
முறை நீர் பாய்ச்ச, 1.73 டி.எம்.சி., என, மொத்தம், 2.44 டி.எம்.சி.,
தண்ணீர் மட்டும் தான் தேவைப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.ஷெட்டரிடம் வலியுறுத்தல் : இந்தஅறிக்கை,
சுப்ரீம் கோர்ட் பதிவாளர் வசம், நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை மீண்டும்
துவங்கியது."தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட
வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன் மூலம், தமிழக அரசின், 9
டி.எம்.சி., தண்ணீர் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
எனினும், இந்த தீர்ப்பையும் மதிக்க, கர்நாடகா தயாராக இல்லை. சுப்ரீம்
கோர்ட்டில் தீர்ப்பு வெளியான நேரம், கர்நாடக சட்டசபை கூட்டம், பெங்களூரு
நகரில் நடந்து கொண்டிருந்தது. "சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும்,
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட கொடுக்க கூடாது' என, அனைத்து கட்சி
எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டரிடம் வலியுறுத்தினர்.
பதிலளித்து, ஷெட்டர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவால், கர்நாடக
விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். விவசாயிகளின்
நலன்களை பாதுகாக்க, கடுமையான முடிவுகளை கூட எடுக்க, அரசு தயாராக உள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களின் கருத்து
கேட்கப்படும். நானும், நீர் வள துறை அமைச்சர், பசவராஜ் பொம்மையும், இன்று
டில்லி செல்கிறோம். அங்கே சட்ட வல்லுனர்களிடம்


கலந்தாலோசித்து தக்க முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக,காங்கிரஸ்
எம்.எல்.ஏ., சித்தராமையாவின் கோரிக்கையான, "கர்நாடகா சார்பில் ஆஜராகும்
வழக்கறிஞர்களை மாற்ற வேண்டும்' என்பதை, முதல்வர் ஷெட்டர் நிராகரித்தார். கர்நாடக விவசாயிகள் உரிமை : நீர்
பாசன துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறும் போது, ""சுப்ரீம் கோர்ட்
உத்தரவை, உடனடியாக நிறைவேற்றும் எண்ணம் இல்லை. முதலில், சட்ட நிபுணர்களிடம்
ஆலோசனை செய்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்,''
என்றார்."தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது' என வலியுறுத்தி,
சட்டசபையில், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், "தர்ணா' போராட்டத்தில்
ஈடுபட்டனர். பாரதிய ஜனதாவிலிருந்து விலகி, "கர்நாடக ஜனதா கட்சி' என்ற,
புதிய கட்சியை துவக்கியுள்ள, முன்னாள் முதல்வர், எடியூரப்பா, "காவிரி
நீரில், கர்நாடக விவசாயிகள் உரிமை காக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி,
பெங்களூரு முதல் மைசூரு வரை, நேற்று பாத யாத்திரை மேற்கொண்டார்.


-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:03

குஜராத் வன்முறை மீண்டும் நடக்காது: மோடி உறுதி
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643963

ஆமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடந்ததைப் போல், மீண்டும் ஒரு வன்முறை
சம்பவம் குஜராத்தில் நடக்காது என தன்னைச் சந்தித்த ஐரோப்பிய யூனியன்
தூதரிடம் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் முதல்வராக தொடர்ந்து 3வது முறையாக பொறுப்பேற்ற பின், கடந்த
ஜனவரி 7ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான ஐரோப்பிய
யூனியன் தூதர் ஜோ கிராவின்ஹோ சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு
குஜராத்தில் நடந்த கலவரத்திற்குப் பின், ஐரோப்பிய யூனியன் மோடியுடன் சுமூக
உறவு வைத்துக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 10
ஆண்டுகளுக்குப்பிறகு, திடீரென நடந்த இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ கிராவின்ஹோ,
கடந்த ஜனவரி 7ம் தேதி எங்களின் சந்திப்பு நடந்தது. அப்போது குஜராத் கலவரம்
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குஜராத் கலவரம் இந்தியாவில்
மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வரும் விஷயம் என
நான் மோடியிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். எனினும் ஜோ
கிராவின்ஹோவிடம், குஜராத் கலவரம் போன்று மற்றுமொரு சம்பவம் நடைபெறாது என
மோடி உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் தூதரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி, குஜராத் சம்பவத்தை
யாரும் எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்று கூறினார்.

-தினமலர்






 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:04

திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643385
திருச்சி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்ததாக,
நடிகை குஷ்பு மீது, திருச்சியில், தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல்
நடத்தினர். திருச்சி, தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா
எம்.பி., சிவா மகள் திருமணம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று
காலை நடந்தது. விழாவில், நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்.




திருச்சி
சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள, "பெமினா' ஓட்டலுக்கு சென்று
ஓய்வெடுத்து விட்டு, விமானத்தில் சென்னைக்கு செல்வதற்காக, ஓட்டல்
அறையிலிருந்து மதியம், 1:45 மணியளவில் வெளியே வந்தார்.ஓட்டலுக்கு வெளியே
வந்து, காரில் ஏறச் சென்ற குஷ்புவை, தி.மு.க., கரைவேட்டி கட்டிய, 50 பேர்
கொண்ட கும்பல் வழி மறித்தது. "குஷ்பு ஒழிக' என்று கோஷமிட்டனர். அவர்களிடம்,
"எதற்காக, கோஷம் போடுகிறீர்கள்' என, குஷ்பு கேட்டார்."தமிழகம் முழுவதும்
உள்ள தொண்டர்கள், தி.மு.க., தலைவராக தளபதியை (ஸ்டாலின்) ஏற்றுக்
கொண்டுவிட்டனர். நீ யாரடி, அவருக்கு எதிராக பேட்டி கொடுக்க' என்று கேட்டு,
சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

திடீரென்று அவர்கள், குஷ்பு மீது செருப்புகள், தண்ணீர் பாட்டில்களை வீசி
தாக்குதல் நடத்தினர். நிலை குலைந்து போன குஷ்புவை, ஓட்டல் மேலாளர் அமர்நாத்
காப்பாற்றி, மீண்டும் ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.போலீசார் வரும்
முன், ஓட்டலில் திரண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன்
பின், 2:15 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குஷ்பு விமான
நிலையத்துக்கு சென்றார். மதியம், 2.30 மணிக்கு, சென்னை செல்லும் ஜெட்
ஏர்வேஸ் விமானத்தில், சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.




குஷ்பு மீது தாக்குதல் ஏன்?
வார
இதழ் ஒன்றில், "தளபதி தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை'
என, ஸ்டாலினுக்கு எதிராக, நடிகை குஷ்பு பேட்டியளித்ததை போல, போஸ்டர்
செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்கி முழுமையாக படிக்காமல்,
வெறும் போஸ்டர் செய்தியை மட்டும் பார்த்து விட்டு, ஆத்திரமடைந்த சில
உடன்பிறப்புகள், குஷ்பு மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது.



செருப்பு வீச்சுக்கு பின் குஷ்பு விளக்கம் : ""என்
வழி, தலைவர் கருணாநிதி வழி; நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறுதலாக
புரிந்து கொண்டனர்,'' என்று செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பின்,
நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறினார். தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்,
ஸ்டாலினை சந்திக்க குஷ்பு முயன்றார். ஆனால், ஸ்டாலின் அவரை சந்திக்க
மறுத்துவிட்டதாக தெரிகிறது.




வீடு மீது கல்வீச்சு :

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள, குஷ்புவின் வீட்டை, 20க்கும்
மேற்பட்டோர் கல்வீசி தாக்கினர். பேட்டி தொடர்பாக, திருச்சியில் குஷ்பு
மீது, செருப்பு வீச்சு சம்பவம் நடந்த அதே நேரத்தில், சென்னை,
பட்டினப்பாக்கம், லீத் கேஸ்டல் வடக்கு தெருவில், குஷ்பு வீட்டு முன், 10
பெண்கள் உட்பட, 20 க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் குஷ்புவுக்கு
எதிராக கோஷம் எழுப்பியதுடன், வீட்டின் முகப்பு விளக்கு, கார் கண்ணாடி,
ஆகியவற்றை கல்வீசி தாக்கிவிட்டு, அங்கிருந்து மாயமாகினர். தாக்குதல்
நடத்தியவர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
தாக்குதல்
நடந்தபோது, குஷ்பு, அவரது கணவர், சினிமா டைரக்டர், சுந்தர்.சி ஆகியோர்
வீட்டில் இல்லை. குஷ்புவின் மகள்கள் அவந்திகா, அனந்திகா மற்றும்
பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். கல்வீச்சு தாக்குதல் காரணமாக,
அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது; போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம்
2:00 மணிக்கு, குஷ்புவின் தாயார், நஜ்மாகான் வீட்டுக்கு வந்தார். அப்போது,
குஷ்புவின் மகள்கள் இருவரும் அவரை கட்டிப்பிடித்து அழுதனர். நேற்று மாலை
வரை, இதுபற்றி போலீசில் புகார் செய்யப்படவில்லை.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:06

ஜெயலலிதாவுக்கு, "பெண் பூனை படை' பாதுகாப்பு
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643396
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்
மாயாவதிக்கும், பெண் பூனைப் படை பாதுகாப்பு அளிக்க, தேசிய பாதுகாப்புப் படை
முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பில்
ஈடுபடும், முதல் பெண் பூனைப் படையினர் என்ற அந்தஸ்தை, இப்படையினர்
பெறுகின்றனர்.

நாட்டின் முக்கிய இடங்களின் பாதுகாப்பு, கடத்தப்பட்டவர்களை மீட்பது,
முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக, தேசிய
பாதுகாப்புப் படை, 28 ஆண்டுகளுக்கு முன், உருவாக்கப்பட்டது. இதில், ஆண்கள்
மட்டுமே, சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, கறுப்புப் பூனைப் படையினராக
உருவாக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக, பெண்களையும், பூனைப் படையினராக
உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், தேசிய
பாதுகாப்புப் பணியில் சேர்க்கப்பட்டனர்.

பெண் பூனைப் படையினரை, நாட்டின், "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில்
இருக்கும், இரு பெண் தலைவர்களுக்கு பயன்படுத்த, தேசிய பாதுகாப்புப் படை
முடிவு செய்தது. இதையடுத்து, "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி
ஆகியோரின் பாதுகாப்புக்கு, பெண் பூனைப் படையினரை அனுப்ப, மத்திய உள்துறை
அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், பாதுகாப்புப் பெறும் இரு பெண் தலைவரும்,
இதற்கு சம்மதம் அளிக்காததால், பெண் பூனைப் படையினரை அனுப்புவது
தாமதப்பட்டது என, தேசிய பாதுகாப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது,
பெண் பூனைப் படையினரை பாதுகாப்புக்கு அனுப்ப, மத்திய உள்துறை முடிவு
செய்திருப்பதாக கூறப்படுகிறது.

"இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று தான், ஒருவர் கேட்க
முடியும். பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் ஆணா, பெண்ணா என்பதை, பாதுகாப்பு
கோருபவர் முடிவு செய்ய முடியாது. ஆண் பூனைப் படையினருக்கு இணையான அனைத்து,
பயிற்சிகளையும், பெண் பூனைப் படையினரும் பெற்றுள்ளனர். பாதுகாப்பு
வீரர்களில், ஆண், பெண் வேறுபாடு இல்லை என, தேசிய பாதுகாப்புப் படை உயர்
அதிகாரிகள் கூறுகின்றனர்.

திரும்பப் பெற்றுக்கொள்ளும் :
முதல்வர்
ஜெயலலிதாவின் பாதுகாப்பில், 21 ஆண் பூனைப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் ஏழு பேர், 24 மணி நேர பாதுகாப்பில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். மத்திய அமைச்சகத்தின் முடிவின் படி, பெண் பூனை
படையினர் அனுப்பப்பட்டால், தற்போது இருக்கும், 21 ஆண் பூனைப் படையினரை,
தேசிய பாதுகாப்புப் படை திரும்பப் பெற்றுக்கொள்ளும் என, மத்திய உளவுத் துறை
வட்டாரங்கள் கூறுகின்றன. -தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:08

அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643402
திருச்சி: ""கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள்
நடந்துள்ளன; இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை,'' என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., திருச்சி சிவா
மகள் திருமணம் மற்றும், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, திருச்சி வந்தார். அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கே: இலங்கை விவகாரத்தில், இனியாவது மத்திய அரசு விழிக்க வேண்டும் என்பதை,
நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், லட்சக்கணக்கான உயிரை
காப்பாற்றியிருக்கலாமே?


ப: தி.மு.க., மட்டுமல்ல, இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சியும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.


கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?


ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.


கே: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, 1,000 கோடி ரூபாய், ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா?


ப: தி.மு.க., மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.பி.,க்களும் வலியுறுத்தியுள்ளனர்.


கே: காங்., கூட்டணியில் உள்ள, முலாயம்சிங் யாதவ், செப்டம்பர் மாதம் லோக் சபா தேர்தல் வரும் என, கூறியுள்ளாரே?


ப: அவர் கூறியது யூகம்.


கே: உங்களது யூகம்?


ப: நாங்கள் யூகத்திலும் இல்லை; வியூகத்திலும் இல்லை.


கே: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து?


ப: தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்.


கே: ராகுல், காங்., துணை தலைவரானதை பாராட்டி, நீங்கள் கடிதம் எழுதியதற்கு
பதில் இல்லை. ராகுலை சந்திக்க, டில்லி சென்ற ஸ்டாலினையும், அவர்
சந்திக்கவில்லையே?


ப: ஸ்டாலின், பாலு உள்ளிட்டோர், "டெசோ' சார்பாக, டில்லியில் உள்ள,
வெளிநாட்டு தூதரை சந்திக்க சென்றனர். சில பத்திரிகைகள் அபாரமாக கற்பனை
செய்து, இதை திசை திருப்ப முயற்சித்துள்ளன.


கே: எதிர் கட்சியினர் மீது, தொடர்ந்து வழக்குகள் பாய்கிறதே?


ப: விஜயகாந்த் மீதா... இந்த அரசுக்கு, வழக்கு போடுவது, வழக்கமானது தான்.


கே: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது போல, தமிழகத்தில் நடத்த வலியுறுத்துவீர்களா?


ப: இங்கு எல்லாம், "நானே' என்ற ஆட்சி நடக்கிறது. இதில், ஆல் - பார்ட்டியாவது, ஆள் இல்லாத பார்ட்டியாவது.


கே: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, தி.மு.க., தடையாக இருப்பதாக, தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளரே?


ப: அ.தி.மு.க., அமைச்சர்கள் பேச்சை நான் கவனிப்பது இல்லை. அதுபற்றி கருத்து
சொல்ல ஆரம்பித்தால், அந்த கருத்துக்களை கேட்டு, தங்களை திருத்தி
கொள்பவர்களாக, இந்த ஆட்சியில் யாரும் இல்லை.


கே: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவீர்களா?


ப: எங்களது எதிர்ப்பே, போராட்டத்துக்கான அறிகுறி. தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கே: மத்திய அரசு, தி.மு.க.,வின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதே? "சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத
சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை
ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே? கல்லக்குடி உட்பட, பல களங்களை கண்ட
தி.மு.க.,வுக்கு பயமா?


ப: களங்களை கண்டு, கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாத களங்களை கழகம் விரும்பாது.


கே: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பது போல் உள்ளதே?


ப: உங்களுக்கு பொறுக்காதே!


கே: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், போலீசார் இதுவரை, ஒருவரை கூட கைது
செய்யவில்லையே?


ப: சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை கொண்டு வர, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.


கே: தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி...


ப: இந்த ஆட்சியில், 19 மாதத்தில், 896 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.


கே: அழகிரி மீது, 1,000 கோடி ரூபாய், ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?


ப: முதலில் அந்தம்மாவை, பெங்களூரு கேஸை முடிக்க சொல்லுங்கள்.


இவ்வாறு, அவர் கூறினார்.




"அகநானூறு முடிந்து விட்டது"
:
பேட்டி துவங்கியதிலிருந்து உற்சாகமாகவும், ஜாலியாக, அவர், விஜயகாந்த்
பற்றி, மூன்று முறை பேசினார். தொடர்ந்து, பல கேள்விகளுக்கு, தன் பாணியிலேயே
பதிலளித்தார். அப்போது, மூத்த நிருபர் ஒருவர், "உங்கள் இலக்கியப் பணியில்,
தொல்காப்பியத்துக்கு பின், அகநானூறு எழுதுகிறீர்களா' என, கேட்டதும், அவரை
பார்த்து சிரித்துக் கொண்டே, ""அகநானூறு தான் முடிந்து விட்டதே. எனக்கு
மட்டுமல்ல, உங்களுக்கும் முடிந்து விட்டது. இனி புறநானூறு தான் எழுத
வேண்டும்,'' என்றார்.-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:09

மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643436
சென்னை : ""அரசியலுக்கு வரும் மன நிலை எனக்கு இல்லை. என்னை மறுபடியும்
தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன்,'' என, நடிகர் கமல்ஹாசன்
தெரிவித்தார்.

சென்னையில் கமல் அளித்த பேட்டி:


"விஸ்வரூபம்' படம், ஆங்கிலப் படம் போல எடுத்திருப்பதாக, ரசிகர்கள்
பாராட்டியுள்ளனர். படம் பிரச்னை தொடர்பாக, இனிமேல் அங்கலாய்க்கவோ, கண்ணீர்
விடவோ வேண்டியதில்லை. படத்திற்கான என் உழைப்பு வீண் போகவில்லை. படத்திற்கு
போட்ட பணத்தை மீண்டும் எடுத்து, கடனையும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை
ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் துவங்கி
விட்டன. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு, எனக்கு மேலும் மேலும் உழைக்க வேண்டும்
என்ற உத்வேகத்தை தூண்டியுள்ளது.




நடிகர் விஷாலுக்கு பிரச்னை :
நாங்கள்
சமூகத்தின் நிலையை தான், சினிமா மூலம் பிரதிபலிக்கிறோம். சமூக
பொறுப்புணர்வுடன், திரைப்படங்களை தயாரித்து வழங்குவேன். அரசியலுக்கு வர
எனக்கு தனிப் பயிற்சி ஏதுமில்லை; அதற்கான மன நிலை எனக்கு இல்லை. காலம்,
வயோதிகம், வாழ்க்கை என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்து செல்லும். என்னை
மறுபடியும் தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன். என்
பகுத்தறிவு வாதம், மனிதநேயம், யாரையும் கெஞ்சாமல் நடந்து கொண்டிருக்கிறேன்.
கடமையை மட்டும், நிறைவேற்றி வருகிறேன். விஸ்வரூபம் படத்தை பார்க்கும்
இஸ்லாமியர்கள் பெருமைப்படுவர். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர்
விஷாலுக்கு பிரச்னை என்றால், அவருக்காக நான் வாதாடவும் தயாராக இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா, விஸ்வரூபம் படத்தை பார்க்க வேண்டும் என,
விரும்புகிறேன். அவரை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.




டி.டி.எச்.,சில் எப்போது?
விஸ்வரூபம்
படத்தை டி.டி.எச்., வாயிலாக வெளியிடுவது குறித்து கமலிடம் கேட்டபோது,
""தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் முதலில் வெளியிடப்பட்டதில், டி.டி.எச்.,
நிறுவனங்கள், என்மீது கோபத்தில் உள்ளன. அவர்களிடம், இனிமேல் தான் பேசி
முடிவு செய்ய உள்ளேன். டி.டி.எச்., வெளியிடும் தேதி குறித்து தற்போது
சொல்லமுடியாது,'' என்றார்.
இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின், திருட்டு, "சிடி' விற்னை, தமிழகத்தின்
முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. சென்னையில், பர்மாபஜார்,
வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் இவை வெளியாகியுள்ளன.




600 தியேட்டர்கள் :
தமிழகம் முழுவதும், நேற்று, 600 தியேட்டர்களில் விஸ்வரூபம்
திரையிடப்பட்டது. தியேட்டர்கள் முன், ரசிகர்கள் பட்டாசு வெடித்து
அமர்க்களப்படுத்தினர்.இப்படம், நேற்று முன்தினம், சென்னையில் நடிகர்
ரஜினிகாந்துக்கு அவரது வீட்டிலேயே கமல் வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினி மற்றும் குடும்பத்தினர், வீட்டிலேயே விஸ்வரூபம் படத்தை பார்த்தனர்.
சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில், நடிகர், நடிகைகளுக்கும், சினிமா,
வி.ஐ.பி.,களுக்கும் பிரத்தியோகமாக திரையிடப்பட்டது.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:14

துணை சபாநாயகர் முற்றுகை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்'
சென்னை : சட்டசபையில் அமைச்சர் முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு
தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், துணை சபாநாயகரை முற்றுகையிட
முயன்றதால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சட்டசபையில் நேற்று, கவர்னர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத விவரம்:


ம.ம.க., - ஜவாஹிருல்லா:
இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள்
தாக்கப்படும் போது, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும்,
காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இலங்கையை சர்வதேச
கோர்ட்டில் நிறுத்தி, இதற்கான இழப்பீடுகளை பெற, தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.


ஈழத்தில் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய, ராஜபக்ஷேவிற்கு இந்தியாவில்
சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. "டெல்டா' மாவட்ட விவசாயிகள்
கண்ணீர் வடிப்பதற்கு, மத்திய அரசு தான் காரணம்.



ரங்கராஜன்- காங்கிரஸ்:
இலங்கை பிரச்னை தொடர்பாக, தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட போது, தமிழக காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. இலங்கை
தமிழர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை.



அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:
இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு
செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், மத்திய அரசை,
தி.மு.க., தாங்கிப் பிடிக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும்
போது,"பேராசை பிடித்த மீனவர்கள், எல்லை தாண்டி செல்வதால் தான்
தாக்கப்படுகின்றனர்' என்று, மத்திய அரசின் செயல்பாடுகளை, தன் கருத்தின்
மூலம் நேரடியாக ஆதரித்தவர், தி.மு.க., தலைவர் தான். அவர் பேசியது,
அவைக்குறிப்பில் இருக்கிறது.


அ.தி.மு.க., - செங்கோட்டையன்:
இலங்கையில் போர் நடந்த போது, கருணாநிதி,
இரண்டு மணி நேரம் போலி உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் போர்
நிறுத்தப்பட்டதாக கூறியதும், உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால், அந்த
நேரத்தில், இலங்கையில் குண்டு வீசப்பட்டதில், 84 ஆயிரம் தமிழர்கள்
கொல்லப்பட்டனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

(அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் செங்கோட்டையன் பேசும் போது, தி.மு.க., வினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.)



அமைச்சர் முனுசாமி:
எல்லாரையும் எந்த நேரத்திலும் ஏமாற்ற முடியாது.
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவை பார்க்க சென்ற குழுவில், கனிமொழியும்
இடம் பெற்றிருந்தார். இலங்கை தமிழர்கள் அனாதையானதற்கு முக்கிய காரணம்,
தி.மு.க., தலைவர் தான்.



தி.மு.க., - சக்கரபாணி:
உங்கள் ஆட்சிக் காலத்தில் தான், பிரபாகரன்
குற்றவாளி என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் போது, அப்பாவி மக்கள்
கொல்லப்படுவது சாதாரணமானது தான் என்று செ õன்னீர்கள். இலங்கை பிரச்னையில்,
நீங்கள் நாடகமாடுகிறீர்களா; நாங்கள் நாடகமாடுகிறோமா?



அமைச்ச ர் முனுசாமி:
நாங்கள் ஒருபோதும் தீவிர வாதத்தை ஏற்றுக் கொண்டது
கிடையாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்ட போது, குரல் கொடுத்தோம். நீங்கள்
எதிர்க்கட்சியில் இருந்த போது ஒரு விதமாகவும், ஆட்சிக்கு வந்த போது, அதை
காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசுடன் சேர்ந்து, இலங்கை தமிழர்களை
முன்னிறுத்தி, அரசியல் நடத்தினீர்கள். மத்திய அரசு, இலங்கைக்கு
பிரதிநிதிகளை அனுப்பிய போது, அதை வேண்டாம் என்று சொல்லாமல், உங்கள் தலைவர்,
நான் என் மகளையே அனுப்புகிறேன் என, அனுப்பினார்.

அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததும், தி.மு.க., கொறடா சக்கரபாணி,
எம்.எல்.ஏ.,க்கள் தங்கம்தென்னரசு, அன்பழகன், பெரியகருப்பன் உள்ளிட்ட
அனைவரும் சபாநாயகர் இருக்கை அருகில் வந்து, அமைச்சரின் கருத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்தனர்.


உடனடியாக, அனைவரையும் வெளியேற்ற, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபை
காவலர்களுக்கு உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்டு, சட்டசபை அரங்கத்தின்,
"லாபி' பகுதியில் நின்று அனைவரும், அமைச்சரின் பேச்சை திரும்பப் பெற
வலியுறுத்தி கோஷமிட்டனர்.அங்கிருந்தும் வெளியேற்றுமாறு, காவலர்களுக்கு,
துணை சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோஷமிட்டபடியே, சபையில் இருந்து,
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.


சஸ்பெண்ட் :
இதுகுறித்து, சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு:

எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை, ஜனநாயக முறையில் தெரிவித்திருக்கலாம்.
வன்முறையை தூண்டுவது போல், சபாநாயகர் இருக்கை அருகே வந்து, மரபுகளுக்கு
மாறாக, கண்ணியம் மற்றும் மாண்பை குறைக்கும் வகையில், துணை சபாநாயகரின்
உத்தரவையும் மீறி பொறுப்பற்ற தனமாக கூச்சலிட்டனர்.


சபையின் அலுவல்களை இடைமறித்தும், விதிகளுக்குமாறாக சபையில் குந்தகம் செய்து
வந்ததாலும், சபையில் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதாலும்,
விதி,120ன் கீழ், வந்திருக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த
கூட்டத்தொடர் காலத்திற்கு, பேரவை பணிகளில் இருந்தும் நீக்கி வைக்கிறேன்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஸ்டாலின் வருவாரா? :
சட்டசபையில்,
அமைச்சர் முனுசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குழப்பம்
விளைவித்ததாக, இன்று சபைக்கு வந்திருந்த, தி.மு.க., கொறடா சக்கரபாணி,
எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், அன்பழகன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன்,
அன்பழகன், ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 14 தி.மு.க.,
எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கவர்னர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் உரை
மற்றும் முதல்வர் பதிலுரையுடன், இன்றுடன் முடிவடையும் நிலையில், தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி
வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். விதிப்படி, கூட்டத்தொடர் முழுவதும்
என்றால், கூட்டம் முடிந்ததாக கவர்னர் மூலம் அறிவிக்கப்படும் வரை,
நீக்கப்படுவதாக பொருள்படும் என்று கூறப்படுகிறது. சபையில் இருந்தவர்கள்
மீது தான் நடவடிக்கை என்பதால், சபைக்கு வராத, ஸ்டாலின், துரைமுருகன்
உள்ளிட்டோர் இன்று பங்கேற்பர் என, கூறப்படுகிறது.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:15

சட்டசபையில் அடக்கி வாசிக்க விஜயகாந்த் முடிவு
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கிண்டலும், எதிர்ப்பும் தெரிவிப்பதால்,
இன்று, சட்டசபை விவாதத்தில் பங்கேற்று பேசுவதை தவிர்க்க, விஜயகாந்த் முடிவு
எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு, பிப்.,
1ம்தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான,
விவாதத்தில் பங்கெடுத்து பேசியபோது, முதல்வர் ஜெ.,- எதிர்கட்சி தலைவர்
விஜயகாந்த் இடை@ய, கூட்டணி தொடர்பாக நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.
"சஸ்பெண்ட்' : அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், விஜயகாந்துடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபையில் அநாகரிக மாக நடந்துக்கொண்டதாக , 10
நாட்களுக்கு விஜயகாந்த்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதை எதிர்த்து
ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்த விஜயகாந்த், தீர்ப்பு வரும் வரை, சட்டசபைக்கு
செல்வதை தவிர்த்துவந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கடந்தாண்டு, ஏப்.,
மாதம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகு, சட்டசபைக்கு சென்று, கையெழுத்து
போடுவதோடு, சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.

கடந்தாண்டு
ஜனாதிபதி தலைமையில் நடந்த, சட்டசபை வைர விழா மற்றும் இந்த ஆண்டு கவர்னர்
உரையிலும், விஜயகாந்த் பங்கேற்றார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதம், இன்றுடன் முடிகிறது.கடந்த மூன்று நாட்களாக,
தே.மு.தி.க.,-எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேரை தேர்வு செய்து, சபை
விவாதத்தில், விஜயகாந்த் பங்கேற்க செய்தார். இன்று முதல்வரின் பதிலுரைக்கு
முன், எதிர்கட்சி தலைவருக்கு,விவாதத்தில் பங்கேற்று பேச, வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.


குட்டிக் கதைகள் :
சமீபகாலமாக
அமைச்சர்களும், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களும், தி.மு.க., தலைவர்களை
காட்டிலும், விஜயகாந்தை அதிகம் விமர்சித்து வருகின்றனர். சட்டசபையில்,
குட்டி கதைகளுடன், விஜயகாந்தை கிண்டல் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி
வருகின்றன.இதனால், முக்கியமான பிரச்னை குறித்து பேசினால் கூட, அமைச்சர்கள்,
அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்களும் குறுக்கிட்டு கிண்டலும், எதிர்ப்பும்
தெரிவிக்கவாய்ப்புள்ளது என, விஜயகாந்த் கருதுகிறார்.
எனவே, இன்றைய விவாதத்தில் பங்கேற்பதை தவிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்திற்கு பதிலாக, எதிர்கட்சி துணைத்தலைவர்
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசவுள்ளதாக தெரிகிறது.இதனிடையே, சட்டசபை
விவாதத்தில் விஜயகாந்த் பங்கேற்று பேசவேண்டும் என, அக்கட்சி
எம்.எல்.ஏ.,க்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர். அதற்கு, பதில் சொல்லாமல்
விஜயகாந்த், புன்னகைத்தபடியே சென்றுள்ளார்.



பதிலுக்கு பதில் :
இதுகுறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்
கூறியதாவது: எங்கள் தலைவர் பேசும்போது, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு
தெரிவித்தால், பதிலுக்கு நாங்களும் அதை செய்தால், நன்றாக இருக்காது. சபையை
சுமூகமாக நடத்தவேண்டும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பல்வேறு பிரச்னைகள் இருக்கும் இந்த நேரத்தில், எதிர்கட்சி தலைவர் பேசினால்
நன்றாக இருக்கும் என, கூறியுள்ளோம். எங்கள் கோரிக்கையை விஜயகாந்த் நிச்சயம்
ஏற்றுக்கொள்வார் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 20:16

குடி படுத்தும் பாடு : 70 வயது மனைவியை கொலை செய்த 75 வயது கணவர்
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Tamil_News_large_643607
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மதுபானம் குடிப்பதற்காக, தங்க
தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மனைவி பெரியபிராட்டியை,
70, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, கணவர் அர்ச்சுனன், 75, கைது
செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்,
மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி பெரியபிராட்டி.
இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும்,
திருமணமாகிவிட்டன. இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய
அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது, மனைவி
பெரியபிராட்டி, சீதனமாக தந்த, 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு
சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தையும், அடகுவைத்து, விற்று, அதில் கிடைத்த
பணத்தில், அர்ச்சுனன் மதுகுடித்தார். வீட்டில் இருந்த, பட்டுப்புடவை
உள்ளிட்ட பொருட்களையும், குடும்ப சொத்துக்களையும், மதுகுடித்தே அவர்
அழித்துவிட்டதால், அவரிடம், பெரியபிராட்டி, சமீபகாலமாக பேசாமலிருந்தார்.




மனைவியை எழுப்பி பணம் கேட்பு : மேலஆழ்வார்தோப்பில்
இருவரும், அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். அவ்வப்போது, வெளியூர்களிலுள்ள
மகன், மகள் வீட்டிற்கு பெரியபிராட்டி சென்றுவிடுவார். மகன்கள், செலவிற்கு
மாதந்தோறும் பணம் அனுப்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில்
தூங்கிக்கொண்டிருந்த பெரியபிராட்டியை, எழுப்பிய அர்ச்சுனன், மதுகுடிக்க
பணம் தேவைப்படுவதால், அடகு வைக்க, அவர் அணிந்திருந்த, ஏழுபவுன் தங்கதாலிச்
செயினை தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே,
இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அரிவாளால்,
பெரியபிராட்டி கை, தலையில் வெட்டினார். கை விரல் துண்டாகி, தலையில் பலத்த
காயமடைந்த பெரியபிராட்டி, அங்கேயே இறந்து போனார். அவரிடமிருந்து,
தாலிச்செயினை பறித்துக்கொண்டு, தப்பியோடிய அர்ச்சுனன், ஏரல் நகைக்கடையில்,
அதனை அடகு வைக்கும்போது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரை, கைது செய்தனர்.


குடிக்கக் கூடாது என கண்டித்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்


அன்னூர், : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது,
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை
மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34;
பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும்
ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது.
எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள
தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ்,
மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி,
மனைவியை அழைத்து வந்தார்.


நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம்
கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும்,
முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
சேர்த்தனர். அங்கு,

முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்:


கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர்
திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில்
இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல்
வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான்
குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது
ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார். இவ்வாறு, முருகேஸ்வரி
வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு,
வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ
வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:36

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை பதவி ஏற்பு


மும்பை

ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் உயர்வு, பொருளாதார மந்தநிலை, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாரத ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார்.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் டீ. சுப்பாராவின் ஐந்து ஆண்டு பதவி காலம் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. அவருக்குப் பதில் பன்னாட்டு நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளியல் வல்லுனரும், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த ரகுராம் ராஜன் பதவி ஏற்கிறார்.

தற்போதுள்ள சவால்கள் குறித்து ரகுராம் ராஜன் கூறியதாவது:-

சவால்களுக்கு தீர்வு காண ஏராளமான திட்டங்கள் உள்ளன. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அனைவருக்கும் வங்கிச் சேவை, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணும் வகையில் மந்திரகோல் எதுவும் நம்மிடம் இல்லை. அதேசமயம் இந்த பிரச்சினைகளுக்கு ரிசர்வ் வங்கியால் தீர்வு காண முடியும். ஒவ்வொரு பிரச்சினைகளையும் படிப்படியாக தீர்த்து வைக்கமுடியும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக பொறுப்பு ஏற்கும் ரகுராம் ராஜன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க கூடியவர். அமெரிக்க வீட்டுவசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் உருக்குலைந்தது. இதனை ரகுராம் ராஜன் முன்கூட்டியே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஓய்வுபெறும் டீ.சுப்பாராவும் சவால்கள் நிறைந்த காலத்தில்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி ஏற்ற 15 தினங்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆகி உலக அளவில் வரலாறு காணாத பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இதுபோன்ற இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் டீ.சுப்பாராவ் திறம்பட செயல்பட்டுள்ளார் என ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் சிகா சர்மா தெரிவித்துள்ளார்.

அவரது பதவி காலத்தில் வங்கிகளுக்கான ரொக்க இருப்புவிகிதம் மற்றும் கட்டாய கடன் பத்திர முதலீட்டு விகிதம் தலா 4 சதவீதம் குறைக்கப்பட்டது என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பணபுழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பலமுறை வட்டி விகிதங்களை உயர்த்தியதையடுத்து பணவீக்கம் குறைந்தது என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.



நன்றி:மாலை மலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:38

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி, செப்.4-

1996-ம் ஆண்டு வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் கூடுதல் ஒதுக்கீடு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

அப்போது நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் என்பது மதிப்புமிக்க தேசிய சொத்து. அது தர்மத்துக்கு கொடுப்பது அல்ல என்று கூறி, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஏன் இலவசமாக ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு இந்த புகாருக்கு ஒரு வருடமாக பதில் அளிக்காததால் சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கும், ஒதுக்கீடு பெற்ற பார்தி, வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் உள்பட 7 செல்போன் நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். அந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரமுக்கான தொகையை சுப்ரீம் கோர்ட்டு சட்ட ஆணையத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டனர்.



நன்றி:மாலைமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:40

மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கியது
மேட்டூர், செப்.4-

மேட்டூரில் 4 யூனிட்டுகள் கொண்ட அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தில் ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த அனல் மின்நிலையம் அருகே 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. அதன்படி சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடி செலவில் இந்த அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த 10 மாதங்களாக பல கட்டமாக மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதில் முழு உற்பத்தி திறனான 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் கடந்த மே மாதம் முதல் பராமரிப்பு பணிக்காக அனல் மின்நிலையத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அனல் மின்நிலையத்தின் இயக்கம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக ஆயில் மூலம் மின் நிலையம் இயக்கப்பட்டது. பின்னர் நிலக்கரியை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் இந்த மின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மின்உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதன் முழு உற்பத்தி திறனை எட்டி விடும் என தெரிவித்தனர்.


நன்றி:மாலைமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:41

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி
பாக்தாத், செப் 4-

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை மக்கள் நிறைந்த சந்தைகள் உள்ளிட்ட பல இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இதில் பொதுமக்கள் 36 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

சிரியாவில் பிரிவினை வாத மோதல்கள் உச்சக்கட்டம் அடைந்துள்ளதையடுத்து இந்த ஆண்டு முதல் ஈராக்கிலும் சன்னி, ஷியா பிரிவு தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிவருவது தீவிரமடைந்துள்ளது. 

குறிப்பாய் ஷியா பிரிவை சேர்ந்த பிரதமர் மாலிக்கின் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக அரசு கூறிவருகிறது. சென்ற மாதம் மட்டும் ஈராக்கில் 800 பேர் 
கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. 


நன்றி:மாலைமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:42

நாசிக்கில் ராகிங் கொடுமையால் பன்னாட்டு நிறுவன பெண் ஊழியர் சாவு: 10 பட்டதாரிகள் கைது


நாசிக், செப். 3-

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் தன் கையை அறுத்துக்கொண்டதுடன், படுக்கை அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார்.

உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த ரகானே, இன்று பரிதாபமாக இறந்தார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கு காரணமான 10 பட்டதாரிகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீனியர்களின் ராகிங் கொடுமையால் ரகானே தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் குறிப்பிட்ட 10 பட்டதாரி வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது மற்றும் ராகிங் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.



நன்றி:மாலைமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:44

ஹாங்காங் தங்கம் விலை நி‌லவரம்


ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (செப்.,3ம் தேதி) மாலை 05.55 மணி நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,044..80 ஆகவும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,790.89 ஆகவும் இருந்தது.



நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:45

சித்தராமையா சீனா சுற்றுப்பயணம்
பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா வரும் 9-ம் தேதி சீனா செல்கிறார். சீன நாட்டில் நடைபெற உள்ள பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொள்ள உள்ளார். சீனாவி்ன் டாலியன் நகரில் வரும் 9-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் பொருளாதாரம் குறித்த மாநாடு நடைபெற உள்ளது. ஆண்டு ‌‌தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தாண்டு கூட்டத்தில் 90 நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்து 500 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. கூட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடை‌யேயான சந்திக்கும் வாய்ப்பு மற்றும் ஊடகம், கல்வி , போன்றவைகளில் ஏற்படும் பிரச்னைகள், தீர்வுகள்குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சித்தரா‌மையாவுடன்முத‌ன்மை செயலாளர் நரசிம்மராஜூ, செயலாளர் ‌கே.வி., ஸ்ரீனிவாஸ் மற்றும் தொழில் துறைசார்ந்த ஆதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவி‌‌ ஏற்ற பின்னர் முதன்முதலாக வெளிநாடுகளுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank
நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:46

சைக்கோ கைதி தப்பிச் செல்ல சிறை அதிகாரிகளும் உடந்தை? கர்நாடகா முதல்வர் சந்தேகம்


பெங்களூரு: ""பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலிருந்து கைதி ஜெய்சங்கர் தப்பி செல்வதற்கு, சில அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம், என்ற சந்தேகம் உள்ளது,'' என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.முதல்வர் அலுவலகமான கிருஷ்ணாவில், மக்கள் குறைகளை கேட்டறிந்த பின், நிருபர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து, கைதி ஜெய்சங்கர் தப்பிச் செல்ல, சில அதிகாரிகள் உதவியாக இருந்திருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பட்நாயக் தலைமையில், உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி அறிக்கை கிடைத்த பின், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மத்திய சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், பாலியல் வன்முறை, கொலை குற்றத்தில் ஈடுபட்ட ஜெய்சங்கர் எளிதாக தப்பியுள்ளார். இவ்விஷயத்தில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blankநன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:47

எம்.பி.,- எம்.எல்.ஏ.,வாகனங்களில் சிவப்பு விளக்கு : விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு "நோட்டீஸ்'
புதுடில்லி:வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்துதல், வி.ஐ.பி.,க்கள் மற்றும், வி.வி.ஐ.பி.,க்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்குதல் தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர, மற்றவர்களும், தங்கள் வாகனங்களில், சிவப்பு விளக்கு பொருத்தி, உலா வருவது, போலீஸ் பாதுகாப்பு பெற்ற சிலர், அதை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி மற்றும் கோபால கவுடா அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஹரீஸ் சால்வே கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என, பலரும், தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொண்டு, தங்களை வி.ஐ.பி.,க்கள் என, கூறுகின்றனர். தங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என, கேட்கின்றனர். அப்படி பாதுகாப்புக்கு நிறுத்தப்படும் போலீசாரை, தங்களின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.டில்லியில் கூட, ஒரு மாவட்ட நீதிபதி, தனக்கு, வி.வி.ஐ.பி.,க்களுக்கான, பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கேட்டுள்ளார்.இவ்வாறு ஹரீஷ் சால்வே வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தவிர, மற்ற மாநில அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்கள் மற்றும், வி.வி.ஐ.பி.,க்கள், சரியான காரணமின்றி, தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என, கேட்கக் கூடாது. தேவையானால், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் மூலம், அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.யார் யார், தங்கள் வாகனங்களில், சிகப்பு விளக்குகளை பொருத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டு, கடிதம் எழுதிய, டில்லி மாவட்ட நீதிபதி மீது, அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும், 26ம் தேதி நடைபெறும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank
நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 4 Sep 2013 - 0:50

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Gallerye_001211405_795496மாநிலம் முழுவதும், போதிய பாதுகாப்பில்லாமல், 2,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளை மூடும் விவகாரத்தில், மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாலும், பள்ளிகளின் பின்னணியில், அரசியல் பிரமுகர்கள் இருப்பதாலும், என்ன செய்வது என, தெரியாமல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தவித்து வருகின்றனர்.எந்த நேரத்தில், என்ன நடக்கும் என, தெரியாத நிலை இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள், "கிலி' அடைந்துள்ளனர்.


தமிழகத்தில், 7,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2,000த்திற்கும் அதிகமான பள்ளிகள், போதிய பாதுகாப்பின்றி, போதிய இடவசதி இல்லாமல், குறுகலான இடங்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், பல பள்ளிகள், பழைய கட்டடங்களில் இயங்கி வருவதும், மாவட்ட அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில், 430 நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், பெரும்பாலானவை, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என்பதை, மாவட்ட அதிகாரிகள், வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சைதாப்பேட்டையில், ஒரு பள்ளி இடம் மாறியுள்ளது. அதைக்கூட, தங்களுக்கு தெரிவிக்கவில்லை என, அதிகாரிகள் வேதனைப்படுகின்றனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளிகள், போதுமான இடவசதியும், காற்றோட்டமான வகுப்பறைகளையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சென்னையில், மூலை, முடுக்குகள் எல்லாம், நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இங்கு கூட, பள்ளிகள் இருக்குமா என, ஆச்சரியப்படும் அளவிற்கு, முட்டுச் சந்துகளில் கூட, பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குழந்தைகள், எளிதில் வெளியே வர முடியாத நிலையும், பல பள்ளிகளில் உள்ளன."பள்ளி கட்டடம் பாதுகாப்பாக இல்லை' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர், அறிக்கை தருகிறார். ஆனால், "கட்டடம் வலுவாக உள்ளது' என, தாசில்தார், சான்றிதழ்தருகிறார். இது, எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. "பாதுகாப்பில்லாத, உரிய இட வசதியில்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், "நீங்கள், பள்ளியில் உள்ள குழந்தைகளை, வேறு பள்ளியில் சேர்த்துவிட்டு, தகவல் கொடுங்கள்; அதன்பின், பள்ளியை மூடுகிறோம்' என, தெரிவிக்கின்றனர். ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாற்றுவதில், பல சிக்கல்கள் இருக்கின்றன. பாதியில், வேறொரு பள்ளிக்கு மாற்றுவதை, பெற்றோர் விரும்புவதில்லை. அப்படியே, பலர் முன் வந்தாலும், "புதிய பள்ளியில், மீண்டும் ஒருமுறை கட்டணம் செலுத்த முடியாது' என, கூறுகின்றனர். ஆனால், "கட்டணம் கட்டாவிட்டால், சேர்க்க முடியாது' என, பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.இப்படி, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு, உறுதியான, சரியான முற்றுப்புள்ளி வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், நாங்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆய்வுக்குச் செல்லும் நர்சரி, பிரைமரி பள்ளி ஆய்வாளர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், புலம்புகின்றனர். பல பள்ளிகளை, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ நடத்துகின்றனர். அதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சித்தால், அரசியல்வாதிகள் விடுவது இல்லை எனவும் கூறுகின்றனர்.


அதிகாரிகள் தரும் அறிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகங்களும், கடும் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், அதிகாரிகளும், அரசும், தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், கும்பகோணம் சம்பவம் போல், எங்கேயாவது மீண்டும் நடந்துவிடும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற பள்ளிகளை அடையாளம் கண்டு, எவ்வித சிபாரிசையும் ஏற்காமல், அவற்றை மூடினால் மட்டுமே, அபாயம் நீங்கும்.


- நமது நிருபர் -
நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by பானுஷபானா Wed 4 Sep 2013 - 9:53

செய்திகளுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by Muthumohamed Wed 4 Sep 2013 - 16:22

சூடான செய்திகளின் பகிர்வுக்கு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty கோவையில் ஒரு நாள்:"பா.ஜ., பிரமுகரின் உடல் உறுப்பு இஸ்லாமிய பெண்ணுக்கு தானம்'

Post by ராகவா Wed 4 Sep 2013 - 16:24

கோவையில், வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதய வால்வுகள், விழிகள், சிறுநீரகங்கள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டன. பா.ஜ., கட்சியின் நிர்வாகியான இவரது சிறுநீரகங்களில் ஒன்று, இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கப்பட்டது; மவுனமான ஓர் உயிரின் மூலமாக, மத நல்லிணக்கம் இங்கே துளிர்விட்டிருக்கிறது.

கோவை, சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மருதாசலம்; பெயின்டர். இவரது மனைவி கலா, மகன் ராஜகோபால், 25. பி.சி.ஏ., பட்டதாரி. சரவணம்பட்டியிலுள்ள சாப்ட்வேர் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூரிலுள்ள கல்லூரி நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு, பைக்கில் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்றார். குறுக்கு பாதையில் செல்லும்போது, ரோட்டில் நின்றிருந்த அருள்டேவிட்ராஜ் என்பவரது பைக் மீது மோதினார். இதில், மூவரும் காயமடைந்தனர். ராஜகோபால், மனோஜ் ஆகியோரை அருகிலிருந்த மக்கள் மீட்டு, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் சேர்த்தனர். அருள் டேவிட் ராஜ், போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.படுகாயமடைந்த ராஜகோபால், மனோஜ் இருவருக்கும், டாக்டர் பாலமுருகன் தீவிர சிகிச்சையளித்தார். இருப்பினும் நேற்று காலை, ராஜகோபாலுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பெரியசாமி தெரிவித்தார். அப்போது, ராஜகோபாலின் தந்தை மருதாசலத்திடம், அவரது நண்பர்கள், " ராஜகோபால், தான் இறந்தால், உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பியதாக,' கூறினர். இதையடுத்து, தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, டாக்டரிடம் தெரிவித்தனர். அவர்களை பாராட்டிய டாக்டர் பெரியசாமி, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.மூளைச்சாவு அடைந்த ராஜகோபாலின் கல்லீரல், இதய வால்வுகள் -4, சென்னை, குளோபல் மருத்துவமனைக்கும்; கண்கள் கோவை, சங்கரா கண் மருத்துவமனைக்கும்; ஒரு சிறுநீரகம், அபிராமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா என்பவருக்கும், மற்றொன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் துவங்கின. உடல் உறுப்புகளை அகற்றி, பத்திரமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லீரலை பெற்றுச் செல்ல, தனி விமானம் மூலம் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் கோவை வந்தனர்.



ஆபரேஷன் "பயணம்':





ஆபரேஷன் நடத்தப்படும் அபிராமி மருத்துவமனையில் இருந்து, உறுப்பு தானம் பெறும் நோயாளிகள் சிகிச்சை பெறும் ராம்நகர் எஸ்.பி.டி., மருத்துவமனை, சங்கரா மருத்துவமனைக்கு, உறுப்புகளை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வது என்றும், சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் இதய வால்வுகளை, இங்கிருந்து பீளமேடு விமான நிலையம் வரை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானித்தனர். இதற்கான பயணத் தொலைவு, அதற்கு ஆகும் நேரம் முன்கூட்டியே கணிக்கப்பட்டது. சாலைவழி பயணத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, மாநகர போலீசாரின் உதவியை டாக்டர்கள் நாடினர்.கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஒத்துழைப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டதும், பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு விரைந்தன. மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், சரியாக நேற்றிரவு 7.30 மணிக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் பெரியசாமி தலைமையிலான டாக்டர் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர். முதலில், கல்லீரல் மற்றும் இதயத்தின் நான்கு வால்வுகள் பத்திரமாக எடுக்கப்பட்டு, ஆம்புலன்சில் கோவை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்ததாக, ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப்பின் இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டன; அதில் ஒன்று, ராம்நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இரு விழிகள் அகற்றப்பட்டு, சரவணம்பட்டி சங்கரா கண் மருத்துவமனைக்கு பயணமானது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய இதற்கான ஆபரேஷன்கள், நள்ளிரவு வரை தொடர்ந்தது.


ராஜகோபாலின் தந்தை மருதாசலம் கூறுகையில்,
"" எனது மகன், நாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள விவேகானந்தர் இயக்கத்தின் உறுப்பினர். ஏழு முறை, ரத்த தானம் செய்துள்ளான். "தான் இறந்தாலும் மற்றவர்கள் பயனடையும் வகையில், உடல் தானம் செய்ய வேண்டும்,' என, நண்பர்களிடம் கூறியுள்ளான். அவனது ஆசையை நிறைவேற்றுவதன் மூலம், எனது மகனின் உடல் உறுப்புகளால், உயிர்பெற்றவர்கள் மூலம், என் மகனை காண்பேன்,'' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.



டாக்டர் குழு:





உடல் உறுப்பு தான ஆபரேஷன் குழுவில் டாக்டர்கள் பெரியசாமி (சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்), செந்தில்குமார் (குடல்நோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்), பாலகிருஷ்ணன், பாலமுருகன், திருமலைசாமி, சம்பத் ஆகியோர் இடம்பெற்றனர். மயக்கவியல் டாக்டர்கள் சேகர் மைக்கேல், சந்தானம் ஆகியோரும், சென்னை குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் விவேகானந்தன், மனோஜ் ஆகியோரும் இடம்பெற்றனர்.

தானம் செய்யப்பட்ட உறுப்புகள்:
கல்லீரல்,
இதயத்தின் 4 வால்வுகள்
இரு சிறுநீரகங்கள்
இரு விழிகள்



போலீஸ் டீம்:





சாலை வழியே, உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு, வழி ஏற்படுத்திக்கொடுத்து, போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் கோவை மாநகர தெற்குப் பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், 15 எஸ்.ஐ.,கள், 40 போலீசார் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்களுடன் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்குச் சென்றன.


உயிரிழந்தார்உயிர்கொடுத்தார்!


விபத்தில் பலியான ராஜகோபால், சரவணம்பட்டி மண்டல பா.ஜ., துணைத்தலைவராக, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக, கட்சி உறுப்பினரும் கூட. இவரது சிறுநீரகங்களில் ஒன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கு தானம் செய்யப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.



மூளைச்சாவு என்பது என்ன?





டாக்டர் பாலமுருகன் கூறியதாவது:மனித மூளை, மண்டை ஓடால் பாதுகாக்கப்படுகிறது. தாக்குதல், விபத்துக்கு உள்ளாகும் போதும் மூளை சிதைந்துவிட நேரிடும். மீண்டும் சுயநினைவுக்கு திரும்ப முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இதுவே மூளைச்சாவு என்பதாகும். தலைப்பகுதி சிதைந்தால்தான், ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்படும் என்பதில்லை. மாறாக தலையின் வெளிப்புறத்தில் எவ்வித காயமும் ஏற்படாமலும், உள்ளே மூளை சிதைவதற்கான அபாயமும் உள்ளது.இவ்வாறு, டாக்டர் பாலமுருகன் தெரிவித்தார்.


"பீச் கிராப்ட்' விமானம் :


இறந்த ராஜகோபாலின் இதய வால்வுகள் மற்றும் கல்லீரலை கொண்டு செல்ல, சென்னையிலிருந்து குளோபல் மருத்துவமனை ஊழியர்கள், "பீச் கிராப்ட்' என்ற சிறிய ரக விமானத்தை (VTJIL) பயன்படுத்தினர். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 16 இருக்கைகள் மட்டுமே இருக்கும்.

தயார் நிலையில்கோவை ஏர்போர்ட்:


கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில், குறைந்தது 40 நிமிடம் முதல் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் சென்றடைய முடியும். ராஜகோபாலின் உடல்உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல, கோவை சர்வதேச விமான நிலையத்தில், நேற்றிரவு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக விமான போக்குவரத்து அதிகம் இருக்கும் நிலையிலும், இதுபோன்ற அவசரகால தேவைகளுக்கு, வி.வி.ஐ.பி.,க்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கோவையில் நள்ளிரவு நேரங்களில் விமான போக்குவரத்து அதிகம் இருக்காது என்ற காரணத்தால், நேற்றிரவு, உடல் உறுப்புகளுடன் செல்லும் பிரத்யேக விமானம் உடனடியாக புறப்பட வசதியாக, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) குளோபல் மருத்துவர்கள், ராஜகோபால் உடல் உறுப்புகளை உடனடியாக கொண்டு செல்ல உதவ தயார் நிலையில் இருந்தனர்.



எங்களது செல்லப்பிள்ளை...:



பாலசந்திரன் (அண்ணன்), டிராவல்ஸ் டிரைவர்:

எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். ராஜகோபால் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டிருந்தான். எங்கள் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தான். வாழ்வில் கடினமாக உழைத்து நல்ல நிலைக்கு வர வேண்டும், பெற்றோரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் தொடர்ந்து கூறி வந்தான். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என, நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. அவன் பிரிவு எங்களை கடுமையாக பாதித்துள்ளது.

பிரசாத், (சி.பி.எம்., கல்லூரி தோழர்),தனியார் நிறுவன ஊழியர்:
கல்லூரி நாட்களில் அனைவரிடமும் அன்பாகவும், சகஜமாகவும் பழகும் தன்மையை ராஜகோபால் கொண்டிருந்தான். எந்த ஒரு விஷயத்துக்கும் எளிதில் கோபப்பட மாட்டான். யாரையும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான். நல்ல நண்பரை நாங்கள் அனைவரும் இழந்து விட்டோம்.மரிய ஆரோக்கியராஜ், பிரனவ் குமார் (நண்பர்கள்)கடந்த ஒரு ஆண்டாக ராஜகோபாலை எங்களுக்கு தெரியும். யாரிடமும் கோபப்பட மாட்டான். பிறருக்கு உதவும் தன்மை அதிகம் கொண்டிருந்தான்.



இதுவரை 2,000 உடல்உறுப்புகள் தானம்:





உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, 2008 முதல் தமிழகத்தில் ஏற்படத்துவங்கியது. விலை மதிப்பில்லாத குடும்ப உறுப்பினரை இழந்த சூழலிலும், உயிருக்குப் போராடும் பலரை காப்பாற்றவும், மறுவாழ்வு அளிக்கவும், பலர் முன்வர துவங்கியுள்ளனர். கடந்த 2008 முதல் இதுவரை, தமிழகத்தில் 375 பேரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். மொத்தம் 2,000 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

- நமது நிருபர் குழு -
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by நண்பன் Wed 4 Sep 2013 - 20:40

தொடரட்டும் உங்கள் சேவை:”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Sun 15 Sep 2013 - 10:16

தமிழக போலீஸ் துறைக்கு ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் வாங்க திட்டம் : அண்ணா பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு


ராமநாதபுரம்: சென்னை எம்.ஐ.டி., அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பான ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை போல, தமிழக போலீஸ் துறையில் பயன்படுத்துவதற்காக, மூன்று ஹெலிகாப்டர்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.ஐ.டி., அண்ணா பல்கலையின் ஏரோ இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர்களின் "தக்ஷா' குழுவை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், மாணவர்கள் "தக்ஷா' என்ற பெயரில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் நடந்த கண்டுபிடிப்புகள் போட்டிகளில் பங்கேற்ற 153 நாடுகளில், முதலிடம் பெற்றது. உதவி பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியின் மூலம் "அன்மேன்டு ஏரியல் வெகிக்கிள்'(ஆளில்லா பறக்கும் வாகனம்) உருவாக்கினோம். இதன் எடை 6 கிலோ. "ரிமோட்' மூலம் இயக்கலாம். அதிகபட்சமாக ஆறு கி.மீ., தூரம் பறக்கும். தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கும் அளவில் பேட்டரி திறன் கொண்டது. இதில் சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவிலும் படமெடுக்கலாம். இதன்மூலம், ராமேஸ்வரம் "டிவி' டவரில், உப்புத்தன்மை நிறைந்த கடல்காற்றால் ஏற்பட்ட அரிப்பு தன்மையை, 500 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு, கேமரா மூலம் கண்டறியப்பட்டது. பின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர காவல்படைக்காக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டது. கேதர்நாத் வெள்ளத்தின் போதும் இதை பயன்படுத்தி, எங்கெங்கு ரோடு சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்தோம்.

திருவண்ணாமலை ஜோதி, மதுரையில் கிரானைட் குவாரி உட்பட பல இடங்களில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் மூலம் போட்டோக்கள் பதிவு செய்யப்பட்டது. தெர்மல் "கேமரா' மூலம் காடுகளில் இருட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் கண்டுபிடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் அமெரிக்கா ராணுவத்தினர், எங்கள் படைப்பை பாராட்டினர். தமிழக அரசின் உத்தரவுப்படி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி, பல இடங்களில் கூடிய கூட்டம், வாகனங்கள் வந்ததையும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்த நிலையையும் போலீசார் கண்காணித்தனர்.
போலீஸ் துறைக்கு, இதுபோல் மூன்று ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க உள்ளோம். சிலநேரங்களில் டாக்டர்கள், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், தானம் செய்பவர்களின் உறுப்புகளை கொண்டு வந்தால்
காப்பாற்றிவிடுவோம் என கூறும்பட்சத்தில், இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சிக்கு தமிழகம் மற்றும் மத்திய அரசு நிதி வழங்கினால், மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது, என்றார்.
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Blank
நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum