Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
Page 1 of 1

பாடசாலைகளில் இருந்தே
நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
நாட்டின் எதிர்கால சந்ததியினர் சட்டத்தையும், ஒழுங்கை யும் மதிக்கும்
நற்குணசீலர்களாக மாறுவதற்கு விடலைப் பருவத்தை அடையும் மாணவர்களுக்கு பாடசாலைக ளில்
இருந்தே நற்புண்புகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு மாணவன் பாடசாலைக்குள் குற்றமிழைப்பது அபூர்வமான செயலாகும். அந்தளவிற்கு
பாடசாலைகளில் நல் ஒழுக்கம் தழை த்தோங்கி வருவதே அதற்கான காரணமாகும். பாடசாலைகளுக்
குள் ஒரு மாணவன் அப்பாடசாலை கலவன் பாடசாலையாக இரு ந்தால் காதல் கடிதம் எழுதுதல்,
அல்லது பாடசாலை பரீட்சைக ளில் கொப்பி அடித்தல், பாடசாலை கழிவறைகளில் ஆபாச மான
வசனங்களை எழுதுதல் போன்ற சிறு குற்றங்களை இழை ப்பது சகஜமாகும்.
அத்தகைய குற்றங்களுக்கு பாடசாலை அதிபர் அவர்களை கடுமை யாக கண்டிப்பதுடன், அந்த
மாணவர்கள் தொடர்ந்தும் அந்தக் குற்றங்களை செய்வதை தவிர்த்துக்கொள்வார்கள். இவ்விதம்
பாடசாலைக்குள் மிகவும் ஒழுக்கமாக இருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில்
சென்றவுடன் சற்று சுதந்திரம் கிடை த்துவிட்டதென்ற எண்ணத்துடன் சிகரெட் புகைத்தல்,
மற்ற பாட சாலை மாணவிகளுக்கு கிண்டல் செய்து துன்புறுத்துதல் போன்ற சேஷ்டைகளில்
ஈடுபடுவதுண்டு.
கண்டியில் உள்ள ஒரு பெருமைக்குரிய பாடசாலையின் மாணவர் கள் வீதிகளில் 6 மணிக்குப்
பிறகு அநாவசியமாக நடமாடுவதை அப்பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள் அல்லது அதிபர்
பார்த்து விட்டால் அவர்களை மறுநாள் அழைத்து விசாரணை செய்வார்கள். இவர்கள் வீதிகளில்
அநாவசியமாக இருப்பது இந்த விசாரணைகளில் ஊர்ஜிதமானால் பாடசாலை அதிபர் அந்த
மாணவர்களின் பெற்றோரை அழைத்து உங்கள் பிள்ளைகளை கண்டித்து வளருங்கள் என்று ஆலோசனை
கூறவும் தவறுவதி ல்லை.
சுமார் 6 அல்லது 7 தசாப்தங்களுக்கு முன்னர் பாடசாலைகளில் மாதா, பிதா, குரு, தெய்வம்
என்ற பாரம்பரிய நற்பண்புகள் சிற ந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டன. தாய்,
தந்தையருக்கு அடு த்தபடியாக குரு என்ற ஆசிரியர்களும் அதற்குப் பின்னரே எல் லாம்
வல்ல இறைவனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பண்பு அன்று தழைத்தோங்கியிருந்தது.
பெற்றோரின் அரவணைப்பில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து வரும் போது அவர்கள் ஆசிரி யர்களின்
பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் விடப்படுகிறார்கள்.
ஆசிரியர்களே அவர்களுக்கு வாழ்க்கையின் நற்பண்புகளை எடுத் துக்காட்டி, தெய்வ
நம்பிக்கையையும் ஏற்படுத்தும் கடமையை சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். அதனால்தான்
பாடசாலைகளில் காலையில் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவ, மாணவி யர் மத
வழிபாடுகளில் ஈடுபடும் நடைமுறை கடைப்பிடிக்கப்படு கிறது.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் குருகுலங்கள் என்ற கல்வி அமைப்புகள்
இருந்தன. அங்கு மாணவர்கள் தங்கியிரு ந்து கல்வி கற்க வேண்டும். காலையில் 5 மணிக்கு
விழித்தெ ழும் மாணவர்கள், காலை கடன்களை முடித்த பின்னர் தெய்வப் பிரார்த்தனைகளை
செய்து முடித்து, கல்வியில் கவனம் செலுத்து வார்கள். பின்னர் காலை ஆகாரத்தை
முடித்துக் கொண்டு வகு ப்புகளுக்கு செல்வார்கள். மாலையில் வகுப்பு முடிந்தவுடன் அவ
ர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் விடுதியில் ஓய்வெடுப்பதற்கு இடமளிக்கப்படும்.
அதையடுத்து சுமார் இரண்டு மணித்தியாலங் கள் மைதானத்தில் ஏதாவது ஒரு விளையாட்டில்
ஈடுபடுவதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிறகு மீண்டும் மாலை யில்,
படிப்புக்கு பின்னர் உணவு அருந்திவிட்டு நித்திரைக்கு செல்வார்கள்.
இந்த குருகுலங்களில் பிள்ளைகள் சுத்தமாக இருப்பது, தங்கள் ஆடைகளை தாங்களே துவைத்து
ஸ்திரி போடுதல், அளவுடன் உணவு உண்ணுதல் போன்ற நற்பழக்கங்களும் போதிக்கப்படு கின்றன.
இந்த குருகுலத்தில் கல்வி கற்றவர்கள் பிற்காலத்தில் பெரும் அறிஞர்களாகவும்,
கல்விமான்களாகவும், அரசியல் வாதி களாகவும் இந்தியாவில் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் கவி யரசு கண்ணதாசனும் ஒருவர்.
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பிக் மெச் என்ற புதிய சம்பிரதாயம் மாணவர்களின்
ஒழுக்கத்தை சீர்குலைக்கும் ஒரு அவல நிலையை இன்று உருவாக்கியிருக்கிறது.
பாடசாலைகளுக் கிடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் மாண வர்கள்
மைதானத்திற்கு சென்று தங்கள் அணிகளுக்கு உற்சாக மளித்து, கரகோஷம் செய்வதற்கு பதில்
வீதியிறங்கி அன்று மாலை மது அருந்தி, கும்மாளம் அடிப்பதற்காக பாதசாரிகளிடம் தங்கள்
தொப்பியை கழற்றி, பணம் கேட்கும் பிச்சைக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் அட்டகாசம் அத்துடன் முடிவதில்லை. அயலிலுள்ள பெண்களின் பாடசாலைகளுக்கும்
அத்துமீறி பிரவேசித்து அநா வசியமான சேஷ்டைகளிலும் இந்த மாணவர்கள் ஈடுபடுகிறார் கள்.
கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையின் சுமார் 50 மாணவர்கள் இந்த குற்றத்திற்காக கைது
செய்து பின்னர் கடுமை யாக எச்சரிக்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட
சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
எனவே, பெற்றோரும் பொலிஸாரும் பாடசாலை நிர்வாகத்தினரும் இந்த மாணவர்களை
நல்வழிப்படுத்துவதற்காக சற்று கண்டிப்பு டன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்
இவர்கள் பாட சாலையை விட்டு வெளியேறிய பின்னர் நற்பண்பாளர்களாக மாறுவதற்கு பதில்,
துஷ்ட செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய் ப்பு ஏற்படலாம் என்பதை நாம் ஞாபகப்படுத்த
விரும்புகிறோம்.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நபியின் நற்பண்புகள்
» நல்ல கணவனின் நற்பண்புகள்
» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
» அமர்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum