சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Khan11

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

4 posters

Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:41

வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Wiki
'விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:41

உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் 'ஆளடி' அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :). 'சர்வ அதிகாரமும் படைத்த' என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் 'அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்' என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. 'தொழில்நுட்பம்'!!!

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Handcuffed
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:42

'நாந்தான் அப்பவே சொன்னேன்ல' என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D. விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே 'வெட்டிப் போடும்' தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 IN11_CDS_22599f
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:42

விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 2010-02-04-Questions
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:43

விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;), போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்..
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:46

விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 2
விக்கலீக்ஸ்' உலகமீடியாக்களில் இன்றைய தினத்துக்கு அதிகம் பேசப்படும் விடயம். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவை இணையத் தொழில் நுட்ப ரீதியாகக் கலங்கடிந்திருக்கும் ஒரு இணையத்தளம்.

உலகப் பொலிஸ்காரன் எனச் சொல்லப்படும் நாட்டின் உண்மைத் தன்மையை உரசிப்பார்த்திருக்கும் ஊடகம். தகவல் புரட்சி யுகம் என விளிக்கப்படும் இந்த நூற்றாண்டில், அரசியல்வாதிகளால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக, உண்மைகளைத் தேடித் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புதிய தகவல் தொழில் நுட்ப யுத்தம் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது.

ஆனால் இதன் வெளியீடுகளில் முகம் கறுத்த தலைவர்கள், கொதிப்படைந்து சொல்லியிருப்பது, இது ஒரு புதுவகைத் தீவிரவாதம். எது எப்படியென்றாலும், உலகின் மிகப்பெரிய அரசியற் தலைவர்கள் கூட அடிப்படையில் சராசரி மனிதர்களிலும் கீழாகச் சிந்திருப்பது உட்பட, நாடுகளுக்குக்கிடையில் பரஸ்பரம் உதட்டினில் ஒன்றும், உண்மையில் ஒன்றுமாக இருந்தது வெளிவந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாயிருப்பது 'விக்கிலீக்ஸ்'.

வெட்டவெட்டத் தளைப்போம் என்பது போல் முடக்க முடக்க, மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது. அதன் எழுச்சி, வளர்ச்சி, என்பதற்குப் பின்னால் இன்று இன்டர்போலினால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருக்கும், அதன் நிறுவனர், இயக்குனர், ஜுலியன் ஆசாஞ்சே பற்றியும், 'வீக்கிலீக்ஸ்' இணையத்தளத்தின் தோற்றம், வளர்ச்சி, இயங்கு தன்மை, என்பன பற்றியும் விரிவாகப் பேசுகிறது "உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள்" எனும் இத் தொடர்கட்டுரை.

4தமிழ்மீடியாவின் வலைப்பதிவு பக்கத்தில் ஏற்கனவே வாசகர்களுக்கு அறிமுகமான வலைப்பதிவான 'சுடுதண்ணி' வலைப்பதிவில், அவருக்கே உரிய சிறப்பான எழுத்து நடையில், சுவாரசியமாக வெளிவந்துள்ள இத்தொடரினை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, 'சுடுதண்ணி' வலைப்பதிவுக்குரிய நன்றிகளுடனும், அவர்களது அனுமதிகளுடனும், இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:47

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 2

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Julian-Assange-WikiLeaks
ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, 'ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?' என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது 'விக்கிலீக்ஸ்'
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:48

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Illam
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது. 16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே "It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police" என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Hack
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே 'ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்' என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே 'சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்' என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். 'வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:49

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Wikileaks
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் 'ஓ..ஒரு தெய்வம்... படி தாண்டி வருதே..' என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் 'விக்கிலீக்ஸ்'. ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிவிட்டது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 19:50

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Capture
பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 433-bw20101129180417.embedded.prod_affiliate.77
நன்றி tamilmedia
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by நண்பன் Sat 29 Jan 2011 - 7:58

குற்றவாளி எப்படி இருந்தாலும் கண்டு பிடித்து வெளியில் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தும் இந்த இணைய தளம் இன்னும் மேலோங்கட்டும் வாழ்க வழர்க நன்றி ரசிகன் தகவலுக்கு.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by வெங்கட் Sat 29 Jan 2011 - 10:19

சம்பவாமி யுகே யுகே!!!

வெங்கட்
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by விஜய் Sat 29 Jan 2011 - 14:02

#+ :”@:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1 Empty Re: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார்.
» நரி, நாய் இடையே வளர்ந்த காதலால் நரி கர்ப்பம்
» ஒன்றாகப் பிறந்து வித்தியாசமாக வளர்ந்த இரட்டைப் பிள்ளைகள்!
» வளர்ந்த விஞ்ஞானத்தை வாழ்க்கையின் ஒரு ஓரத்தில் நுகரும் எமது மூத்தோர்
» முகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின் காதலன் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum