சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் Khan11

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்

Go down

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் Empty சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:57

சோலார் மின்சாரம் !!


மின்சாரம் இரண்டு வகைப்படும். 1. ஏசி கரண்ட் (Alternative Current). இந்த வகை மின்சாரத்தை தான் நாம் வீடுகளில் உபயோகப்படுத்துகிறோம். இதன் மின் அழுத்தம் (VOLT)
220 V ஆகும். லைட்டிலிருந்து அனைத்து மின் சாதனக்களும் 220V. ஏசி -ல்
இயங்குபவை. இவ்வகை மின்சாரத்தை சேமிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு
மின்நிலையம் 100 MW மிசாரத்தை உற்பத்தி செய்யும் பொழுது, 60MW மின்சாரம்
மட்டுமே உபயயோகப்படுத்தப்பட்டால், மீதி மின்சாரத்தை சேமிக்க முடியாது.


இரண்டாவது வகை டி.சி எனப்படும் டயரக்ட் கரண்ட் (DIRECT CURRENT).
இதை நடைமுறையில் பாட்டரி கரண்ட் என சொல்லுவோம். அதாவது சேமிக்கப்பட்டு
தேவைப்பட்ட நேரத்தில் உபயோகிக்ககூடியது. தேவைபடாத நேரத்தில் பாட்டரியில்
இருக்கும் மீதி மின்சாரம் அடுத்த முறை உபயோகத்திற்கு பயன்படும்.



இனி
சூரிய ஒளி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். சூரிய ஒளியிலிருந்து
மின்சாரத்தை தயாரிக்க கூடியது பி.வி (photovoltaicCell) எனப்படும் சிரிய
பாட்டரியாகும்.தேவைப்படும் மின்சாரத்திற்கேப பல
பாட்டரிகளை இணைத்து பிளேட் வடிவத்தில் அமைக்கப்படுவது தான் சோலார் பேனல்
ஆகும். இது 15W 12V, 30W-12V என பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.




சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் 444444
இந்த படத்தில் 9 சோலார் பானல்கள் இணைக்கப்பட்டுள்ளது.


சோலார்
பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமிக்க வேண்டும்.
அதன் பின் பாட்டரி மின்சாரத்தை நம் உபயோகத்திற்கான 220V ஏ.சி மின்சாரமாக
மாற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் என்ற உபகரணம் பயன் படுகிறது.


சோலார்
பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சூரிய ஒளியை பொருத்தது
என்பதால், மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. அது பாட்டரியின் சார்ஜிங் அளவை
காட்டிலும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். அப்படியே அதை பாட்டரியில்
சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். இதை தடுக்க சார்ஜ் ரெகுலேட்டர் என்ற
கருவி வழியாக சோலார் மின்சாரத்தை பட்டரியில் சார்ஜ் செய்ய வேண்டும்.


சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் Charge+regulator


சார்ஜ் ரெகுலேட்டர்




சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் 3333
12V / 100Ah பாட்டரி



இவ்விதம் பாட்டரியில் சேமிக்கப்பட்ட மிசாரத்தை இன்வெர்ட்டர் மூலம் 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றவேண்டும்.



சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் 22222


INVERTER

சோலார் பானல், ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் இவற்றை எல்லாம் எப்படி இணைக்கவேண்டும் என்பதை கீழே உல்ள படம் விளக்கும்



சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம் 11111


இணைப்பை விளக்கும் படம்


ஒரு
சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார்
பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள்
ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time) அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.


ஒரு
யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு
தேவைப்படும் மின்சாரம் ஆகும் 100 வாட் என்றால் 10 மணி நேரத்திற்கு
தேவைப்படும் மின்சாரம்.


எந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.


Fan 60WATTS
Tube Light 40WATTS
Television 100 WATTS


[center]ஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை


டி.வி 1 100 W 3 மணி நேரம் 300 வாட்ஸ்
ஃபேன் 1 60 W 12 மணி நேரம் 720 வாட்ஸ்
டியூப் லைட் 3 40 W 4 மணி நேரம் 480 வாட்ஸ்
மொத்தம் 1500 வாட்ஸ்


ஒரே
நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி
மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான்.அதன்படி
பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100=
100வாட்ஸ்), பேன்(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ்.ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.


நாள் ஒன்றுக்கு 1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.

சோலார்
மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான்
மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும்,
பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.

நாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.

100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல் 1 உத்தேச விலை = ரூ.20,000
600 VA இன்வெர்ட்டர் 1 உத்தேச விலை = ரூ. 4000.
100 Ah பாட்டரி 2 = ரூ.12,000
சார்ஜ் ரெகுலேட்டர் = ரூ. 2000
இதர செலவுகள் = ரூ.7000
ஆக உத்தேச செலவு = ரூ 45,000 -50000


இது ஒரு நீண்ட கால் முதலீடு.


சோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.
பாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும்


இதை
20 வருடகால முதலீடாக பார்த்தால் 3 தடவை பாட்டரி மாற்ற வேண்டியிருக்கும்.
20 வருட காலத்தில் இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் மாற்றவோ அல்லது ரிப்பேர்
செய்யவோ வேண்டியிருக்கும். பாட்டரி, இன்வெர்ட்டர் வகைக்கு அதிகப்படியாக
40,000 ரூபாயை சேர்த்தால் 90,000 ரூபாய் முதலீடு ஆகும்




மாதம் ஒன்றுக்கு 50 யூனிட் என்றால் 20 வருட கால்த்தில் 12,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.


90,000 ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு ரூ 8 ஆகும்.


இதே கணக்கை 5 வருடம் என பார்த்தால் பாட்டரி மாற்ற வேண்டாம் அப்பொழுது 1 யூனிட்டுக்கு கிட்டத்தட்ட 16 -18 ரூ உற்பத்தி செலவு வரும்.

நன்றி BusyBEE4U
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum