Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் அடைமழை;
Page 1 of 1
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் அடைமழை;
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் அடைமழை;
வெள்ளம்; நெல் வயல்கள் நாசம்
ஒலுவில் விசேட, துறைநீலாவணை, புதிய காத்தான்குடி தினகரன், காரைதீவு குறூப், ஏறாவூர் குறூப், பனங்காடு தினகரன், ஆலையடிவேம்பு தினகரன், திருக்கோயில் தினகரன் நிருபர்கள்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங் களில் கடந்த நான்கு தினங்களாக இடையறாது மழை பெய்வதால் இம்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல தடவைகள் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதேபோன்று பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. மழை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பெரும் போக நெற் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடி யாத நிலையிலுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் காணிகள் நீரில் மூழ்கி குளம் போன்று காட்சியளிக்கின்றன. இதேபோன்று சேனைப் பயிர்ச் செய்கை, வீட்டுத் தோட்ட செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடை மழையால் ஆழ் கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி, மற்றும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் பட்டினிச் சாவை எதிர் கொண்டுள்ளனர்.
மீண்டும் இடையறாது பெய்து வரும் அடை மழையால் பல கிராமங்களுக்கான தரை வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள துரைவந்தியமேடு கிராமத்திற்கு துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு ஆகிய மார்க்கங்களுடனான தரைவழிப் போக்குவரத்து பாதை மழை வெள்ளத்தில் அமிழ்ந்து காணப்படுவதால் இவ்வூர் மக்கள் படகுகள் மூலம் பயணிக்கும் நிலை உள்ளது.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாழ்ந்த பிரதேசங்கள் மழை நீரில் அமிழ்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக வேத்துச்சேனை கிராமம் நீரில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம்
(ஒலுவில் விசேட நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயலாத வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில், பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, இறக்காமம், அம்பாறை, உகன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமானால் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
உள் வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. பாடசாலை மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு அவர்களது வரவும் குறைவாகக் காணப்படுகிறது. பல இடங்களில் வீதிகளுக்கு மேலால் நீர் பரவுவதுடன் குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து நெல் வயல்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
இரவு வேளைகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. குளிர் காலநிலையும் தொடர்ந்து நிலவுவதால் சிறுவர்களும் வயோதிபர்களும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவக் குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட கூலித் தொழிலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம், தம்பிலுவில் பாலைக்குடா ஆகிய பிரதேசங்களில் 158 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரத்தினம் தெரிவித்தார்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், கணேஸ்வரா வித்தியாலயம், கனகரட்ணம் வித்தியாலயம், மெதடிஸ் மிசன் வித்தியாலயம், பரமேஸ்வரா வித்தியாலயம், கோளாவில் நாவலர் வித்தியாலயம், விநாயகபுர மகா வித்தியாலயம், கஞ்சிக்குடியாறு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பொத்துவிலில் 78.4 மில்லி மீற்றர் மழையும், சாகாமத்தில் 97.3 மில்லி மீற்றர் மழையும், அக்கரைப்பற்றில் 45.5 மில்லி மீற்றர் மழையும், அம்பாறை 48.2 மில்லி மீற்றர் மழையும், இங்கினியாகலையில் 63.8 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ஏ. நயீம் தெரிவித்தார்.
மட்டு மாவட்டம்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையினால் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1439 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும் இடம் பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3964 குடும்பங்களைச் சேர்ந்த 12,515 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8320 குடும்பங்களைச் சேர்ந்த 33321 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் 162.0 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம். சூரியகுமார் தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» மட்டு.அம்பாறை நிலைமைகளை பார்வையிட பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் இன்று விஜயம்
» கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum