சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! Khan11

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

3 posters

Go down

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! Empty அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

Post by Muthumohamed Sun 17 Feb 2013 - 14:31

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் :::

கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் ::::

கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்குக் போது வியப்பாகவே இருக்கிறது

பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?

ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?

பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.


இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா....

நன்றி
சோ.ஞானசேகர்.(இன்று ஒரு தகவல்)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! Empty Re: அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

Post by பானுஷபானா Sun 17 Feb 2013 - 14:38

நல்ல தகவல் நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! Empty Re: அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 14:47

:];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !! Empty Re: அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
» பாரிய அசம்பாவிதங்கள் இல்லை : கபே அமைப்பு தகவல்
» 'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்
» காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது
» அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum