சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Today at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்  Khan11

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

2 posters

Go down

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்  Empty பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 18:43

பெண்களின் ஆடை
பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.

01. அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

• ''மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அந்நூர்:31)

மேலே குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியில் தெரிவன' என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கருதுகின்றார்கள். இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரஹ்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் சிலர், இது வெளியே தெரியக்கூடிய மோதிரம், கழுத்துச் சங்கிலி போன்றவற்றைக் குறிக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.

பொதுவாக ஓர் இஸ்லாமியப் பெண் முகத்தையும் இரு கைகளையும் மூடாமல் திறந்துவிடுவது தொடர்பான சட்டப்பிரச்சினை மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியே தெரிவன தவிர' என்ற சொற்றொடரை வைத்தே எழுந்துள்ளது. சுருங்கக் கூறின் இது விடயத்தில் இரு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.

1. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும்.
2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.

பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு: ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:• 'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.ஆயினும் முகமும், கரங்களும் கூட 'அவ்ரத்' எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.

பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ 'பித்னா' ஏற்படாது என்று காண்கின்றபோது தனது முகத்தையும் கைகளையும் மூடாமல் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும். அதற்குமேல் உள்ள பகுதி அவ்ரத் ஆகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

02. கனமான ஆடை

பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். மேனியை - உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்திருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: • 'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.)'(அத்தபரானி)

மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். • 'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்  Empty Re: பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 18:43

03. இறுக்கமற்ற உடை

பெண்களின் ஆடைக்குரிய மூன்றாம் நிபந்தனை அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.

• 'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், 'அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்' என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.

04. மணம் பூசாமை

பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்: 'ஒரு பெண் மணம் பூசி, அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தினர் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபசாரியாவாள்.'

ஆயினும் ஒரு பெண் வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறே வெளியிலும் துர்நாற்றம் வீசும் நிலையில் அதனைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு மாத்திரம் இலேசாக நறுமணம் பூசிக்கொள்ளவும் அனுமதி உண்டு.

05. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும். இதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன:

• 'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)• 'நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)• 'மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.' (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

06. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

• 'நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்!' என்றார்கள். (முஸ்லிம்)

07. எளிமையானவை

சமூகத்தில் புகழையும் பிரபல்யத்தையும் நாடி காலத்திற்குக் காலம் வரும் நவீன வடிவமைப்புக்களில் ஆடை அணிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். அணியும் ஆடை பல வர்ணங்களிலும், நிறங்களிலும் வேலைப்பாடு களுடனும் கூடியதாக அமையாமல் எளிமையானதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருத்தல் வேண்டும். இதுவரை நாம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்ட ஆடையே ஒரு பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையாகும். ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டும். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கான மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டவையாகும்.

O ஹிஜாபின் பயன்கள்

பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;. கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்;பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.

• ''நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்.'' (அஹ்ஸாப் :59)

இந்த வசனத்தில் 'அவர்கள் அறியப்படுவதற்கு' அவர்களின் 'ஜில்பாப்' எனும் முந்தானை உதவும் என்பதன் பொருள் இந்த அடக்கமான உடை, அந்தப் பெண் ஒரு கௌரவமான, கற்புடைய, அடக்கமும், நாணமும் உடைய தூய்மையான ஒரு பெண் என்பதை பிறர் அறிய உதவும் என்பதாகும். ஒரு பெண் ஹிஜாபை பேணாத போது எவ்வாறு பாதுகாப்பை இழக்கிறாள் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

'எவரேனும் ஒரு பெண் தனது கணவனது வீடல்லாத மற்ற இடங்களில் தனது ஆடைகளை களைவாளாயின் அவள் தனக்கும் அல்லாஹ்வுக் குமிடையே உள்ள தனக்கான பாதுகாப்பை -மறைப்பை- தகர்த்துக்கொள்கிறாள்.' இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறவரும் கருத்து யாதெனில், ஒரு பெண் தனது ஆடைகளைக் களைவதன் மூலம் தனக்கிருந்த பாதுகாப்பை நீக்கி அந்நியருக்கு தனது அழகை காட்டும் போது அவள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்து நீங்கிக் கொள்கிறாள் என்பதாகும்.

மேலும் பெண்கள் ஹிஜாப் உடையை ஷரீஆ வரையறைகளைப் பேணி முறையாக அனுஷ்டிக்கின்ற போது சமூக உறுப்பினர்களும் சூழலும் தூய்மை பெற வழிபிறக்கிறது. ஹிஜாப் பார்வைக்கு திரையிடுகிறது. தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வழியமைக்கிறது. பித்னா விளைவதை தடுக்க துணைபுரிகின்றது. இதனால் உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. அத்துடன் ஹிஜாப் நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக்கிரமத்தில் அத்தகைய உள்ளங்களும் கூட திருந்தி தூய்மை அடைய இது வழிவகுக்கிறது.

• ''(நபியின் மனைவியான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கள். உங்களதும், அவர்களதும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.''(அஹ்ஸாப்:53)

இஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.• 'ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.' (முவத்தா)• 'வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)• 'வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)

இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)

அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும். உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.

• 'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவுத்)இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும். அனைத்திற்கும் மேலாக ஹிஜாப் ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாக விளங்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களை விளித்துத்தான் ஹிஜாபை அணியுமாறு பணிக்கிறான். ஈமானின் பெயராலேயே இது பற்றிய கட்டளைகள் வந்துள்ளன. ''நபியே! முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்'' முஃமின்களின் மனைவியர் என்றே ஹிஜாப் பற்றிய வசனங்கள் அமைந்துள்ளன.

பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழி) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்: 'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'

'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' எனும் வட்டத்தில் அடங்கும். 'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் 'தபர்ருஜ்' எனும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;' என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.

ஹிஜாபிற்கு எதிரான 'தபர்ருஜ்' ஐத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் பின்வருமாறு கூறுகிறது:• ''மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முன்னைய ஜாஹிலிய்யாக் காலங்களில் (பெண்கள்) வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்தாதீர்கள்.''(அஹ்ஸாப்: 33)

உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்:• 'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் 'தபர்ருஜ்'யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.


Asheikh Aagar Mohammad


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்  Empty Re: பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 19:15

@. பயனுள்ள பகிர்வு :!+: நன்றி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்  Empty Re: பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் எவ்வாறு தொழுகையினை கடைப்பிடிக்க வேண்டும்
» உண்மையான இஸ்லாமிய பெண்மனி எவ்வாறு இருக்க வேண்டும் . சில இளைஞர்களின் கேள்விக்கு பதில்
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
»  கண் எவ்வாறு இயங்குகிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum