சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

இது உங்கள் இடம்..! Khan11

இது உங்கள் இடம்..!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது உங்கள் இடம்..! Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:24

ஓ... இந்த பள்ளிக்கூட மாணவியர்!

அலுவலகத்திற்கு, தினமும் பஸ்சில் பயணம் செய்யும் போது, பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் காதல் சேஷ்டைகளையும், கடித பரிமாற்றங்களையும், கண் ஜாடைகளையும் பார்க்கும்போது, மனதுக்குள் வேதனையும், கோபமும் தான் எழுகிறது. இளம் பூக்கள் இப்படி அறியாமையால் காதல் தீயில் கருகுவதை நினைக்கையில், இவர்கள் வயதை குறை சொல்வதா அல்லது பெற்றோரை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.
பெற்றோரே... டீன் ஏஜ் பிள்ளைகள், உங்களுக்கு இருந்தால், அவர்களது நடவடிக்கைகளை கவனியுங்கள். நீங்கள், "டிவி' நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் நேரம், உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். அவர்கள் நன்றாக படிக்க வேண்டுமெனில், நீங்கள், "டிவி'யை மறக்க வேண்டும்.
படித்த பெற்றோராயின், அவர்களது படிப்பில் உதவி செய்யுங்கள். அவர்களோடு தோழமையுடன் பழகி, காதலின், வெற்று கவர்ச்சியையும், அழிவையும், செக்சின் அடிப்படை தத்துவத்தையும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நயமாக எடுத்துச் சொல்லுங்கள். இளமை பருவத்தில் கல்வியே சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இதை சரியாக புரிந்து கொண்டால், உங்கள் பிள்ளைகள் காதல் எனும் மாய வலையில் சிக்கி, தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ள மாட்டார்கள்.

— சவுந்தர்யா ராஜசேகர், கோவை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:25

சபாஷ்... சரியான ஐடியா!

என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மேஜையில், பைல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "அலுவலக பைல்களை வீட்டிற்கு கொண்டு வந்து பார்க்கிறீர்களா?' என கேட்டேன்.
"இல்லை. இதெல்லாம் வீட்டு சமாச்சாரம் தான்' என்று அவர் சொன்ன விஷயம் வியப்படைய வைத்தது. "வீட்டு வரி, தண்ணீர் வரி, கரன்ட் பில், பிள்ளைகளின் அட்மிஷன், வரவு செலவு, வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்கள் என, எல்லாவற்றையும் தனித்தனியாக உறைகள் போட்டு, அவற்றின் மேலே, அதன் தலைப்பை எழுதி வைத்து விடுவேன். மேலும், கரன்ட் பில், வீட்டு வரி கட்ட வேண்டிய தேதி, போன்ற விஷயங்களை பென்சிலால் குறித்து வைப்பேன்.

"ஒவ்வொரு உறையிலும், அது தொடர்பான தபால்கள் வர வர, அவற்றை, "டேக்' போட்டு இணைத்து விடுவேன். இதனால், எந்த பில்லை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மேஜையில் வைத்திருப்பதால் பார்க்கவும், எடுக்கவும், வீட்டில் உள்ள அனைவரும் கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது' என்றார்.
நண்பரின் யோசனையை நாமும் பின்பற்றலாமே!

— இளங்கோ, கரிமேடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:25

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:26

இளைய தலைமுறையின் போக்கு...

தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.

— ஆர்.தேவி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:27

பஸ்சில் தூங்கும் இளம் பெண்களே!

இரவு நேரத்தில், பேருந்தில் பயணம் செய் தேன். உட்கார இடம் இல்லாததால், நின்று வந்தேன். அப்போது, பலரும் பின்பக்கம் திரும்பி பார்த்த வண்ணம் இருந்தனர். என்னதான் பார்க்கின்றனர் என்று நானும் திரும்பி பார்த்தேன். ஆடை கலைந்த நிலையில், கவர்ச்சி தெரியும்படி, அழகான இளம்பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியைத்தான், இமைக்க மறந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட நான் திடுக்கிட்டேன்.
பெண்கள், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படி தன்னை மறந்த நிலையில் தூங்குவது, ஆண்களை தவறு செய்ய தூண்டும். எனவே, தூக்கம் வரும்போது, தோளைச் சுற்றி சேலையை நன்றாக இழுத்துச் செருகிக் கொண்டு தூங்கலாமே!
சமீபகாலமாக, நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களை கேள்விப்பட்ட பிறகாவது, நாமும் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.

— வி.மாதவன், திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:27

ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!

அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. "புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. "அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறாள்.
"அவளின் பெற்றோரை விட்டு, நீண்ட ஆண்டுகள் பிரிந்தே இருந்ததால், எங்களோடு சகஜமாக பழகுவதில்லை. வேலை முடிந்ததும், தன் அறைக்கு சென்று விடுகிறாள். எங்களோடு சேர்ந்து, "டிவி' கூட பார்ப்பதில்லை. அவர்களது அறையில் தனி, "டிவி' உள்ளது. வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. "அதிகமாக ஹாஸ்டலில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியாது. நீங்க பக்குவமா சொல்லி அவளை திருத்துங்க...' என்று அவளது பெற்றோர் எங்களிடம் கூறி விட்டனர். அவள் வீட்டில் சமையல் செய்து பழக்கம் இல்லாததால், இங்கு வந்த பின், அவளால் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது. உப்பு காரம், குறை உள்ளது என்று பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கிறாள்.
"மகனும் எங்களை புரிந்து கொள்ளாமல், நாங்கள் தான் அவளை குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று, எங்களிடம் கோபப்படுகிறான். அதனால், நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் தனிக்குடித்தனம் போகப் போகிறோம்...' என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாஸ்டலில் தங்கி படித்த பெண்களின் பெற்றோரே... உங்கள் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கலாமே!

— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:27

எங்கே செல்கிறது இந்த பாதை!

மகளிர் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஒன்றில், சற்று நேரம் நிற்க நேர்ந்தது. இரு மாணவியர் பேசிக் கொண்டிருந்தனர். ஆவலாக காதை நீட்டினேன். அதில் ஒருத்தி, "ஏய்... சரவணன் வர்றான் டீ... அவன் யாரை பார்த்து அதிகம், "ஜொள்' வடிக்கிறான்னு ஒரு பெட் வச்சுக்கலாமா?' என்று கூற, இன்னொருத்தி, உடனே, ஓ.கே., சொன்னாள்.
அவர்கள் குறிப்பிட்ட பையன், இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து, அவர்கள் செய்த காரியம், என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. ஒருத்தி, தன் சேலை முந்தானையை, நெஞ்சு தெரிகிற மாதிரி சரிய விட்டாள். இன்னொருத்தி, "பிரா' பட்டை வெளியே தெரியற மாதிரி எடுத்து விட்டாள். பையன் நெருங்கி வந்து, இருவரிடமும், வழிய வழிய பேசிக் கொண்டிருந்தான். இருவரும் அவனை உசுப்பேத்தி கொண்டிருந்தனர்.
எங்கே செல்கிறது இந்த பாதை என்ற பொருமலோடு, எனக்கான பேருந்து வந்ததும் ஏறிச் சென்றேன்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:28

"நான் ரெடி...'

ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, "இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், "டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று கிண்டல் செய்ய... "ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. "டேய்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று!
பிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும். குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா!

— வி.கன்னிகா, சென்னை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 12:28

இரண்டு கட்டணம் ஏன்?

"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, "பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, "குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, "பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!

— த.கண்ணன், கோவை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:26

இளைய தலைமுறையின் போக்கு...

தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.

— ஆர்.தேவி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:27

ஓ... இந்த பள்ளிக்கூட மாணவியர்!

அலுவலகத்திற்கு,
தினமும் பஸ்சில் பயணம் செய்யும் போது, பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் காதல்
சேஷ்டைகளையும், கடித பரிமாற்றங்களையும், கண் ஜாடைகளையும் பார்க்கும்போது,
மனதுக்குள் வேதனையும், கோபமும் தான் எழுகிறது. இளம் பூக்கள் இப்படி
அறியாமையால் காதல் தீயில் கருகுவதை நினைக்கையில், இவர்கள் வயதை குறை
சொல்வதா அல்லது பெற்றோரை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.
பெற்றோரே...
டீன் ஏஜ் பிள்ளைகள், உங்களுக்கு இருந்தால், அவர்களது நடவடிக்கைகளை
கவனியுங்கள். நீங்கள், "டிவி' நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் நேரம்,
உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். அவர்கள்
நன்றாக படிக்க வேண்டுமெனில், நீங்கள், "டிவி'யை மறக்க வேண்டும்.
படித்த
பெற்றோராயின், அவர்களது படிப்பில் உதவி செய்யுங்கள். அவர்களோடு தோழமையுடன்
பழகி, காதலின், வெற்று கவர்ச்சியையும், அழிவையும், செக்சின் அடிப்படை
தத்துவத்தையும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நயமாக எடுத்துச்
சொல்லுங்கள். இளமை பருவத்தில் கல்வியே சிறந்தது என்பதை எடுத்துச்
சொல்லுங்கள். இதை சரியாக புரிந்து கொண்டால், உங்கள் பிள்ளைகள் காதல் எனும்
மாய வலையில் சிக்கி, தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ள மாட்டார்கள்.

— சவுந்தர்யா ராஜசேகர், கோவை.


Last edited by Muthumohamed on Sun 24 Mar 2013 - 15:29; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:27

சபாஷ்... சரியான ஐடியா!

என் நண்பர் ஒருவரின்
வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மேஜையில், பைல்களாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. "அலுவலக பைல்களை வீட்டிற்கு கொண்டு வந்து
பார்க்கிறீர்களா?' என கேட்டேன்.
"இல்லை. இதெல்லாம் வீட்டு சமாச்சாரம்
தான்' என்று அவர் சொன்ன விஷயம் வியப்படைய வைத்தது. "வீட்டு வரி, தண்ணீர்
வரி, கரன்ட் பில், பிள்ளைகளின் அட்மிஷன், வரவு செலவு, வீட்டுக்கு வரும்
அழைப்பிதழ்கள் என, எல்லாவற்றையும் தனித்தனியாக உறைகள் போட்டு, அவற்றின்
மேலே, அதன் தலைப்பை எழுதி வைத்து விடுவேன். மேலும், கரன்ட் பில், வீட்டு
வரி கட்ட வேண்டிய தேதி, போன்ற விஷயங்களை பென்சிலால் குறித்து வைப்பேன்.
"ஒவ்வொரு
உறையிலும், அது தொடர்பான தபால்கள் வர வர, அவற்றை, "டேக்' போட்டு இணைத்து
விடுவேன். இதனால், எந்த பில்லை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதில்லை.
எல்லாவற்றையும் மேஜையில் வைத்திருப்பதால் பார்க்கவும், எடுக்கவும்,
வீட்டில் உள்ள அனைவரும் கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது' என்றார்.
நண்பரின் யோசனையை நாமும் பின்பற்றலாமே!

— இளங்கோ, கரிமேடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:27

மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டா....

திருமணமான
புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன்.
இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே,
தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல்
சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது
வழக்கம்.

இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் சலிப்பு ஏற்படவே,
சண்டைக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். "இனி, எதை செய்தாலும், நம்
இஷ்டப்படி செய்யாமல், மனைவியின் ஆலோசனைப்படி செய்வதே சரி...' என முடிவுக்கு
வந்தேன். அதிலிருந்து, நண்பர்கள் ஏதாவது சொன்னால் கூட, "என் மனைவியிடம்
ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்...' என்பேன்.

நண்பர்களோ,
"பொண்டாட்டி தாசன் ஆகி விட்டாயா?' என்று கேலி செய்வர். "நம்ப லைப்
பார்ட்னர் ஆச்சே... பார்ட்னர் கிட்ட கேட்காமல் செய்வது தப்பில்லையா?' என்று
சொல்லி சமாளித்து விடுவேன்.

இப்போதெல்லாம், சின்ன சின்ன
விஷயத்திற்கு கூட, மனைவிக்கு சம உரிமை அளிப்பதால், நான் எதைச் சொன்னாலும்,
ஓ.கே., சொல்லி விடுகிறாள். அதனால், எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே
இடமில்லை.
தற்போது, மனைவி போற்றும் கணவனாக மட்டுமில்லை, மாமனார், மாமியார் மெச்சும் மருமகனாகவே மாறி விட்டேன்.

— வீ.சுரேந்திரன், காரைக்குடி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:28

இளநீர் குடிக்கச் செல்கிறீர்களா?

இது கோடை காலம்!
நம்மில் பலர், இளநீர் கடையை நோக்கி படையெடுக்கிறோம். வெயில் கொடுமையும்,
தண்ணீர் தாகமும் சேர்ந்து, நம் கண்கள் இளநீரையே வட்டமிடுவதால், அதை
குடிப்பதற்கு கொடுக்கும் ஸ்டிராவை கவனிப்பதில்லை.

நாம் குடித்து
விட்டு தூர எறியும் ஸ்டிராக்களை, இளநீர் வியாபாரிகள் எடுத்து, தண்ணீரில்
கழுவாமல், வெயிலில் காய வைத்து, மீண்டும் உபயோகிக்கின்றனர். இதனால், அந்த
ஸ்டிராவின் மூலம் பலவிதமான நோய் பரவ வாய்ப்புண்டு. எனவே, இளநீர்
பருகியவுடன், அந்த ஸ்டிராவை மறுமுறை உபயோகிக்க முடியாத அளவிற்கு முறுக்கியோ
அல்லது முறித்தோ போட்டு விடுங்கள்.

இப்படி செய்வதால், நம் எச்சிலை பிறர் சாப்பிட வேண்டியதில்லை. அத்துடன் நோய் பரவாமலும் தடுக்கலாம்.

— எஸ்.வினோதினி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 15:28

அடகு கடை பித்தலாட்டங்கள்!

என் கணவர், என்னுடைய
ஒரு பவுன் தங்கச் செயினை, சில மாதங்களுக்கு முன், அடகு வைத்திருந்தார். அது
மிகச் சரியாக, ஒரு பவுன் - அதாவது, எட்டு கிராம் இருந்தது. ஆனால், அடகு
வைத்த ரசீதில், 7.900 மில்லி கிராம் என்று எழுதியிருக்க, கணவரிடம்
விசாரித்தேன். "அடகு கடைக்காரர்கள் சேதாரத்தை கழித்து விட்டுதான்
எழுதுவார்களாம்;

நானும் விசாரித்தேன்...' என்றார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டோம்.
சமீபத்தில்
மீண்டும் பணப் பற்றாக்குறை ஏற்பட, அந்த செயினை மீட்டு, வேறு பிரபலமான,
அடகு நகை வங்கியில், அதிக தொகைக்கும், குறைந்த வட்டிக்கும் வைத்தோம்.

அப்போது
தான், அந்த அதிர்ச்சி தெரிய வந்தது. ஏற்கனவே, 100 மில்லி கிராம் குறைத்து
எழுதியதோடல்லாமல், பிரபலமான அந்த வங்கியின் கம்ப்யூட்டர் தராசில் எடை போட,
7.700 மில்லி தான் இருந்தது. பித்தலாட்டத்தை விசாரித்த போது, ஏற்கனவே அடகு
வைத்த நகைக்கடையின் கைவரிசை புரிந்தது. கோபப்பட்டு, அந்த கடையில்
விசாரித்ததற்கு, "நகையை மீட்கும் போதே, எடை போட்டு விட்டு போக வேண்டியது
தானே ...' என்று கூலாக பதில் சொல்ல, ஆடிப் போனோம்.

மிடில் கிளாஸ்
மக்களே... தங்க நகை அடகு வைக்கும்போது, ஏரியாக்களில் புற்றீசல் போல்
முளைத்துவிட்ட அடகு நகை கடைக்காரர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.
எங்களைப் போல் ஏமாறாதீர்கள்.

— பி.ஜெயலட்சுமி, திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 16:00

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.

நான் அனைத்தையும் படித்தேன் அனைத்தும் இன்றய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான தகவல்கள் தொடருங்கள் உறவே.
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக.

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

:flower: :flower: :flower:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 16:06

அனைத்தும் அருமை பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 16:15

*சம்ஸ் wrote:அனைத்தும் அருமை பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்
தல இந்த செய்திகள் அனைத்தும் பெறுமதி வாய்ந்தது கண்டிப்பாக மக்கள் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் நாம் அவர்களிடம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களைப் பகிர வேண்டும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 16:18

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அனைத்தும் அருமை பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்
தல இந்த செய்திகள் அனைத்தும் பெறுமதி வாய்ந்தது கண்டிப்பாக மக்கள் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் நாம் அவர்களிடம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களைப் பகிர வேண்டும் @.
முடிந்தவரை எத்திவைப்போம் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 16:22

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அனைத்தும் அருமை பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்
தல இந்த செய்திகள் அனைத்தும் பெறுமதி வாய்ந்தது கண்டிப்பாக மக்கள் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் நாம் அவர்களிடம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களைப் பகிர வேண்டும் @.
முடிந்தவரை எத்திவைப்போம் பாஸ்

கண்டிப்பாக நம்மால் முடிந்த வரை எத்தி வைப்போம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 16:29

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அனைத்தும் அருமை பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்
தல இந்த செய்திகள் அனைத்தும் பெறுமதி வாய்ந்தது கண்டிப்பாக மக்கள் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் நாம் அவர்களிடம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களைப் பகிர வேண்டும் @.
முடிந்தவரை எத்திவைப்போம் பாஸ்

கண்டிப்பாக நம்மால் முடிந்த வரை எத்தி வைப்போம் அண்ணா
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by எந்திரன் Sun 24 Mar 2013 - 17:13

சூப்பர் சூப்பர் சூப்பர்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 17:32

புது மாப்பிள்ளைகளே....!

பக்கத்து வீட்டு பையனுக்கு, கிராமிய சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து, சில தினங்களாகியும், புது மணப்பெண், "மூட் - அவுட்'டாகவே இருந்திருக்கிறாள்.

மாப்பிள்ளையிடமும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. தகவலறிந்து, ஊரிலிருந்து வந்த பெண் வீட்டார், "யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டனர்...' என புலம்பினர்.
இதற்கிடையே, புதுமண தம்பதியரை, மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து போய் காண்பித்திருக்கின்றனர்.
அங்கு, இருவருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்திய பிறகே, புதுமணப் பெண், கணவனோடு தேனிலவு செல்ல சம்மதித்திருக்கிறாள்.
இதற்கு காரணம், மாப்பிள்ளையின் தவறான அணுகுமுறைதான்...

மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், "முதல் இரவில் வீரமாக செயல்படும் புருஷனையே, பெண்கள் அதிகம் விரும்புவர். மனதை அலைபாய விட மாட்டார்கள்...' என்றெல்லாம் கூறி, குழப்பியிருக்கின்றனர். மாப்பிள்ளை பையனும், தன் இளம் மனைவியை அசத்தி விட வேண்டுமென்ற வெறியில், முதலிரவில் சற்று முரட்டுத்தனமாகவே நடந்திருக்கிறார்.

அதிர்ச்சியுற்ற அந்த கிராமத்துப் பெண், இப்படித்தான் ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதும் இருக்குமோ என அஞ்சி, "அந்த' விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் விலகியே சென்றிருக்கிறாள். புது மாப்பிள்ளைகளே... பூவை போன்று மென்மையான பெண்
களிடம் இரவில் மென்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

— பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 17:32

இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா?

என் நெருங்கிய நண்பருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நண்பர், சமீபத்தில் தன் மகனுக்கு, சென்னையில் விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமண வைபவத்திற்கு நான் செல்லவில்லை.
ஒரு விடுமுறை நாளில், சென்னைக்கு சென்று, நண்பரின் குடும்பத்தினரையும், புது மணமக்களையும் சந்தித்து, வாழ்த்துகள் கூறி, பரிசு வழங்கினேன்.

நண்பர், தன் மகளுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், நல்ல குடும்ப சூழ்நிலையில், படித்த மாப்பிள்ளை ஜாதகம் வந்தால், தன்னிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த நண்பரின் மகள், தனக்கு வரப்போகும் கணவரும், அவருடைய குடும்ப சூழ்நிலையும், எப்படியிருக்க வேண்டும் என்று, என்னிடம் பட்டியலிட்டு கூறிய போது, அதிர்ந்து போனேன்.

அவளது எதிர்பார்ப்பு என்னவென்றால்...

* மாப்பிள்ளை, வியாபாரமோ, சொந்த தொழிலோ செய்யக் கூடாது.
* இன்ஜினியரிங் படித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை செய்ய வேண்டும்.
* வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கேயே தங்கியிருக்கவோ வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
* மாமனார் மாமியாருடன் இல்லாமல், தனிக்குடித்தனமாக இருக்க வேண்டும்.
* மிக முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கவே கூடாது.

இவற்றைக் கேட்ட நான், நண்பரின் முகத்தை பார்த்தேன். தன் கட்டுப்பாட்டிற்கு மீறிய விஷயம் இது என்று வருத்தத்துடன் கூறினார்.

நண்பரின் மகள் எதிர்பார்ப்பது போல், அவளது அண்ணி, தன் பெற்றோரிடம் இப்படி கண்டிஷன் போட்டிருந்தால், எப்படி திருமணம் நடந்திருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தனக்கு நாத்தனார் இல்லாத வீட்டில் தான் திருமணமாக வேண்டும் என்று மேற்கூறிய கண்டிஷன்கள் போட்டால், பெண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று, என்னால் யோசிக்க முடியவில்லை.

பெண்கள் பொறுமைசாலிகள் எனும் கருத்தை, இந்த காலத்து படித்த பெண்களில் சிலர் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்றனரே!

— எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon 1 Apr 2013 - 17:33

வளர்க்கலாமா வன்முறையை?

ஒரு ஞாயிற்றுக்கிழமை, என் அம்மாவுடன் பக்கத்து ஊர் சந்தைக்கு (வாடிப்பட்டி) சென்றிருந்தேன். தேசிய நெடுஞ்சாலை சந்திப்பின் அருகே முக்கிய பிரமுகரின் குழந்தைகளுக்கு காதணி விழாவை முன்னிட்டு, பிரமாண்டமான கட்-அவுட் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ஒருபுறம் அபிமான நடிகர் ஒருவரின் படமும், மற்றொரு ஓரத்தில் ஜாதி தலைவர் ஒருவரின் படமும், நடுவில் குடும்பத்தினர் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால்...

நடுவில் காதணி விழாவிற்கான இரண்டு மற்றும் மூன்று வயது இரு குழந்தைகளின் கையில், அரிவாள் மற்றும் வாள் பிடித்தவாறு அச்சிடப்பட்டு, அதன் அருகே வீரம் சம்பந்தப்பட்ட வசனமும் இடம் பெற்றிருந்தது. இதைக் கண்டு முதலில் அதிர்ந்து போன என் அம்மா, என்னிடம் காட்டி, "இந்த வயசிலேயே இந்த குழந்தைகளுக்கு ஆயுதத்தை பிடிக்கச் செய்து, வன்முறையை வளர்க்கின்றனரே...' என்று வருத்தப்பட்டார்.

சினிமா, வீடியோ கேம், இன்டர்நெட் போன்றவற்றில் வன்முறை தலை விரித்தாடுவது போதாதென்று, வீரம் என்ற பெயரில், ஆயுத கலாசாரத்தை குழந்தை களுக்கு புகுத்தலாமா? அன்பு வழியில், அறவழியில் செல்வது, இக்காலத்தில் அநாகரிகம் போல் ஆகிவிட்டதே என, மனதிற்குள் நொந்து போனேன்.

— பி.போத்திராஜா, எஸ்.பெருமாள்பட்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum