சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

இனிது இனிது வாழ்தல் இனிது Khan11

இனிது இனிது வாழ்தல் இனிது

4 posters

Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty இனிது இனிது வாழ்தல் இனிது

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 16:56

மனித வாழ்வில் காதல் அற்புதமான உணர்வு. வாழ்வின் கடைசி நிமிடம் வரை அதை அனுபவிக்க வேண்டும். எல்லாமே இயந்திரத்தனமாக மாறிவிட்ட தற்காலச் சூழலில் காதலும் கூட மாற்றுத்துக்கு உட்பட்டு விட்டதுதான் வருத்தமான விஷயம். திரைப்படங்களில் இடம்பெறுவதுபோல ‘கண்டதும் காதல், பரஸ்பர புரிதலுக்கு முன்பே திருமணம், தாலிக்கயிற்றில் தடவப்பட்ட மஞ்சளின் ஈரம் காய்வதற்குள் விவாகரத்து’ என்பதாக... இன்றைய தலைமுறைக்கு இத்தனை சீக்கிரம் காதல் கசக்கத் தொடங்கிவிட்டதே ஏன்? என்னாச்சு இவர்களுக்கு? உண்மையில் கவலையளிக்கிறது இவர்களின் வேகம்.

இளம் தம்பதிகளுக்கும் நாளைய தம்பதிகளான இன்றைய யுவன்-யுவதிகளுக்கும் காதல் பற்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.
ஆண்கள் பெண்களைப் புரிந்து கொள்ள பழகுங்கள்... பெண்கள் ஆண்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள் என்பதே என் முதல் கோரிக்கை. ஆண், பெண் இருவரும் இணைந்து, இயைந்து வாழ்வதே இயல்பான இயற்கையான வாழ்க்கைமுறை.

இது இருபாலருக்கும் தெரிந்த ஒன்றே. ஆயினும், ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாமல் நீதிமன்றத்தில் நிரம்பி வழிகிறதே விவாகரத்தை விரும்புகிறவர்களின் கூட்டம். எனில் எங்கே தவறு? எங்கோ தவறு!

அவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து, காலம் முழுக்க கசக்காத காதலுடன், வாழ்க்கையை இனியதாக்கிக் கொள்ளும் வழிகளை இதழ் தோறும் உங்களுடன் பகிரப் போகிறேன்...

பிரச்னை இருக்கிற ஜோடிகளுக்கு கண்களைத் திறக்கும் இந்தத் தொடர், மற்றவர்களுக்கு காதலைக் கூட்டும். ஆதிகாலத்தில் தாய்வழிச் சமூகம்தான் உலகை ஆண்டிருக்கிறது. பெண்கள் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். விலங்குகளை வளர்த்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக பயிர்களைப் பயிரிட்டு, உணவுகளைப் பெருக்கி, எதிர்கால உணவுத் தேவைக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார்கள்.

மெல்ல மெல்ல காட்சி மாறியது. தேவை என்பதைத் தாண்டி, உணவு உபரியானது. ஆணுக்கு ஆசை தலைதூக்க ஆரம்பித்தது. அது பேராசையானது. சொத்துகளை சேர்க்கத் தொடங்கினான். அவன் கை ஓங்கியது. தன் சொத்துகள் எல்லாம் தனது வாரிசுக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என நினைத்தான். முதல் கட்டமாக, பெண்ணுக்கு தடைகள் பல விதித்து, தனக்கு அடிமையாக்கினான்.

அதன் தொடர்ச்சியாகவே பெண்கள், ஆண்களுக்கு அடங்கிப் போய், வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போர் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. போரில் ஆயிரக்கணக்கான ஆண்கள் இறந்து போக, ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்க ஆண்கள் இல்லாமல், பெண்கள் அதற்குத் தயாரானார்கள்.

1960ல் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கட்டாயம் கர்ப்பத்தை சந்திக்க வேண்டும் என்கிற நிலை மாறி, பாலியல் விடுதலை பெற்றார்கள் பெண்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இது மாபெரும் மாற்றத்தை உண்டாக்கி, அந்நாட்டுப் பெண்களுக்கு, ஆணைச் சாராத நிலை சாத்தியமாயிற்று.

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என இந்திய ஆண்களுக்கோ இது இரண்டுங்கெட்டான் நிலை. ‘படித்த, வேலைக்குப் போகிற பெண் மனைவியாக வேண்டும்’ என்பதில் தெளிவாக இருக்கிற அவன், அப்படி வருகிறவள், ‘படித்த, வேலைக்குப் போகிற பெண் மாதிரி நடந்து கொள்ளாமல், படிப்பறிவில்லாத, வேலைக்குச் செல்லாத, தான் பார்த்து வளர்ந்த தன் அம்மாவைப் போல அடக்கத்தின் அடையாளமாக இருக்க வேண்டும்’ என்றும் எதிர்பார்க்கிறான்.

அந்த விஷயத்தில் அவனுக்கு முன் மாதிரி யாருமில்லாததால் குழம்பித் தவிக்கிறான். கணவன்-மனைவிக்கிடையே புதுப்புது கருத்து வேறுபாடுகளும், புது பிரச்னைகளும் தலைதூக்குகின்றன. சின்ன புள்ளியில் தொடங்கும் இந்தப் பிரச்னை, வெடித்து, விஸ்வரூபமெடுத்து, விவாகரத்து என்கிற தீர்வை அல்ல, தீவை நோக்கி இருவரையும் இட்டுச் செல்கிறது. பிரச்னைக்கான முதல் விஷ விதையை வளர விடாமல் வேரிலேயே களைந்தெறியத் தெரிந்த தம்பதியர் தப்பிக்கிறார்கள்... மற்றவர்கள் தவிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன பின்னணி?

வேலை செய்பவரிடம் ஆரம்பித்து, வீட்டுக்காரர் வரை நமக்கெல்லாம் எல்லாவற்றையும் கட்டளையிட்டே பழக்கம். அதிகார தொனியில் சொன்னால் தான் திருப்தி. முதல் வேலையாக அந்த மனோபாவத்தை இருவரும் மாற்றிக் கொள்ளுங்கள். கட்டளை இடுவதற்குப் பதில் அன்பாக, கனிவாகக் கேளுங்கள்.

கட்டளையிட்டால் இன்னொருவர் அதைச் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் கட்டளையிட்டவருக்குக் கோபம் வரும். வேண்டுகோள்விடுப்பதில் இந்தச் சிக்கல் இருக்காது. எதிராளிக்கு விருப்ப மில்லாவிட்டால், அதை ஏற்பதைத் தற்காலிகமாகவாவது தவிர்க்க முடியும். அடுத்தவரை மட்டம் தட்டிப் பேசுவதிலும், அவர்களை அறிவிலிகளாக வெளிப்படுத்துவதிலும் பலருக்கும் ஏனோ ஒரு சுகம்.

‘கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு... இன்னும் சாம்பார் வைக்கத் தெரியலை’ என்று கத்துகிற கணவருக்கு, சாம்பாரில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்றுகூடத் தெரிந்திருக்காது! ‘புள்ளையா வளர்த்திருக்காங்க உங்க வீட்ல... ஒரு மண்ணும் தெரியலை’ என்று கணவரைக் கடிந்து கொள்கிற மனைவிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை.

நமக்குத் தெரிகிறதோ, இல்லையோ, வாழ்க்கைத்துணைக்கு சரியாகத் தெரியாத அந்த விஷயத்தை மிகமிக அநாகரிகமாக, விலாவாரியாக விமர்சனம் செய்கிற மனப்போக்கைப் போன்ற ஆபத்தான விஷயம் வேறு இல்லை. முதல் இரண்டு விஷயங்களையும் சரி செய்யாவிட்டால், அது நமக்கே தெரியாமல், கோபம் என்கிற அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும்.

தகாத வார்த்தைகளால் திட்டுவது, அநாகரிகமாகப் பேசுவது, அடிப்பது என இது எப்படி வேண்டுமானாலும் வெளிப்படும். மிரட்டுவது என்பது நம் மக்களுக்கு மிகப்பிடித்த தேசிய விளையாட்டு. ‘நான் யார் தெரியுமா’ என்று மிரட்டிப் பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோஷம். இந்த மிரட்டல் மனோபாவம் கணவன்-மனைவியிடம் மட்டுமின்றி, குழந்தைகளிடம் வெளிப்படுவது கூடத் தவறுதான். ‘மிரட்டினாதான் திருந்துவாங்க... பயம் இருக்கும்’ என்கிற சுய சமாதானங்கள் தேவையில்லை.

கல்யாணம் முடிந்த கையோடு, தன் சுதந்திர மெல்லாம் போச்சு எனப் புலம்புகிற எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். கல்யாணத்துக்கு முன் வரை ஊர் சுற்றுவது, கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வருவது என இருவரும் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும், இரண்டு பேருக்கும் ஒத்துப்போகிற ஒரு வாழ்க்கை முறைக்குத் தயாராகத்தான் வேண்டும்.

‘உன் வீடு... என் வீடு...’ என்கிற பிரிவினைகள் தேவையில்லை. வாழ்க்கைத்துணையின் பிறந்த வீட்டைத் தனியே வைப்பதும், தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களுடன் உறவாடுவதும் தவறு. இருவருக்கும் இரு வீட்டாரின் மேலும் அன்பும் அக்கறையும் இருக்க வேண்டும். காதலிக்கும் போது காதலன் அல்லது காதலி அருகில் இருக்கும்போது, இருபாலருக்கும் நேரம்போவதே தெரியாது. பேசுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் நேரம் மட்டும் போதாது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானா என கவிதை வரும், கோபம்கூட வரும். அதுவே திருமணமானதும் எல்லாம் தலைகீழாகும். பார்வைகள் மாறும். நிறைகள் குறைகளாகும். பிரிவு துயரம் தந்தது மாறி, விலகி இருக்கிற தருணங்களை மனது எதிர்பார்க்கும். இந்த இரண்டுக்குமே காரணங்கள், நம் உடலில் சுரக்கும் பி.இ.ஏ. மற்றும் ஆக்சிடோசின் என்ற இரண்டு ஹார்மோன்கள்.

இந்த இரண்டும் உறவுகளைப் பலப்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் என்கிறது அறிவியல். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் அதிகமாக இருக்கும் இவை, திருமணத்துக்குப் பிறகு குறையத் தொடங்குகிறது. மாறாக செரட்டோனின் என்கிற இன்னொரு ஹார்மோனின் சுரப்பு அதிகமாகி, காதல் கசக்கிறது. இடைவெளி பெரிதாகி, நிரந்தரப் பிரிவுக்கு இதுவே அஸ்திவாரமாகிறது.

வாரம் 15 மணி நேரத்தை தம்பதி தங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குவதுதான் இதற்கான தீர்வு. அந்த 15 மணி நேரத்தில் வேலை, டி.வி., செல்போன், இன்டர்நெட், கேம்ஸ், பொழுதுபோக்குகள்... இவ்வளவு ஏன் குழந்தைகளுக்குக் கூட அனுமதியில்லை. இருவருக்கும் பிடித்த விஷயங்களைப் பேச, செய்ய, பகிர மட்டுமே அந்த 15 மணி நேரம். நெருக்கத்துக்குக் காரணமான ஹார்மோன்களை குறையாமல் காக்கவும் இதுதான் ஒரே வழி!

கடைசியாக நேர்மை. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக் கூடாது. எதையும் செய்யவும் கூடாது. எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமையை வாழ்க்கைத்துணைக்குக் கொடுக்க வேண்டும். தன் மீதான அடிப்படை நம்பிக்கையை துணைக்கு ஆரம்பத்திலேயே உறுதியளிப்பதோடு, அதைப் பின்பற்றவும் வேண்டும்.

துணைக்குத் தெரியாத இருட்டுப்பகுதி எந்தக் காலத்திலும் வேண்டவே வேண்டாம். காதலிக்கும் போதும் திருமணமான புதிதிலும் திகட்டத் திகட்டக் கிடைத்த அந்த இனிமையான அனுபவங்களை, வாழ்க்கை முழுக்க தக்க வைத்துக் கொள்ளலாம். அதற்கு கணவன்- மனைவி இரு தரப்பினரும் படிக்க வேண்டிய பால பாடங்கள் நிறைய உள்ளன... என்ன படிக்கத் தயாரா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by ansar hayath Thu 18 Apr 2013 - 17:22

கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக் கூடாது.
@. @. பகிர்வுக்கு ~/ ~/
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 18:39

ansar hayath wrote:கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக் கூடாது.
@. @. பகிர்வுக்கு ~/ ~/
நன்றி அன்சார் மறுமொழிக்கு :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by rammalar Fri 19 Apr 2013 - 8:06

இனிது இனிது வாழ்தல் இனிது 800522இனிது இனிது வாழ்தல் இனிது 253626_449635721779856_1268339346_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by ஜனநாயகன் Fri 19 Apr 2013 - 16:47


‘கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு... இன்னும் சாம்பார் வைக்கத் தெரியலை’ என்று கத்துகிற கணவருக்கு, சாம்பாரில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்றுகூடத் தெரிந்திருக்காது!

ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனார்.கைப்புள்ளைக்கி மட்டும் இது பொருந்தாது. #+
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by *சம்ஸ் Sat 20 Apr 2013 - 7:58

ஜனநாயகன் wrote:

‘கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு... இன்னும் சாம்பார் வைக்கத் தெரியலை’ என்று கத்துகிற கணவருக்கு, சாம்பாரில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்றுகூடத் தெரிந்திருக்காது!

ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனார்.கைப்புள்ளைக்கி மட்டும் இது பொருந்தாது. #+
ஏன் அவருக்கு தெரியுமா சாம்பார் வைக்கவும் சேர்க்கவும் :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum