Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே.பாலசந்தர் பற்றி .......
5 posters
Page 1 of 1
கே.பாலசந்தர் பற்றி .......
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ்
சினிமாவின் பீஷ்மர், உறவுகளுக்கு, உணர்வுகளுக்கு புது வண்ணம் பூசிய
பிதாமகன், செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.
·
தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப்
பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு
அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!
·
சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி
வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’,
`நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.
·
கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன்,
சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள்
ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.
· இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.
·
ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில்
கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க
நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.
·
தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர்
விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என
ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.
·
மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா
கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த
இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.
·
பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி
ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை
ஆசையாகக் குறிப்பிடுவார்!.
· தோட்டக் கலையில் ஆர்வம்,
யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே
பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.
·
ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா,
கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என
பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.
·
எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து,
இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.
·
மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும்.
`அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில்
பெயரையும் சேர்த்தவர்!.
· விநாயகர்தான் இஷ்ட தெய்வம்,
பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக
இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!
·
பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து
இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத்
துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம்
இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.
· 1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!
·
கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள்
தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர்
தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.
· தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார்
பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி.
பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.
· பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.
·
அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’
படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய
காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.
· சீரியல்களில்
சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’
நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.
·
இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும்,
திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார்.
உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.
·
படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த
இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப்
பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின்
காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.
·
ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார்,
இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண
முடியாது!.
· ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.
·
தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும்
பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது
பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான்
ஆரம்ப விதை போட்டார்!.
ஆனந்த விகடன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கே.பாலசந்தர் பற்றி .......
ஓரிரு விசயங்கள் தெரியும் விரிவாக அறிந்தேன் நன்றி @.Muthumohamed wrote:அறியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே.பாலசந்தர் பற்றி .......
Muthumohamed wrote:அறியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கே.பாலசந்தர் பற்றி .......
நண்பன் wrote:ஓரிரு விசயங்கள் தெரியும் விரிவாக அறிந்தேன் நன்றிMuthumohamed wrote:அறியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
நன்றி ,,நண்பா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கே.பாலசந்தர் பற்றி .......
நல்ல டைரக்டர்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இயக்குநர் பாலசந்தர் …
» வய் - ஃபி (Wi - Fi) தொழில்நுட்பம் பற்றி .......
» எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ............
» காதலைப் பற்றி...!
» இஸ்லாத்தைப் பற்றி....
» வய் - ஃபி (Wi - Fi) தொழில்நுட்பம் பற்றி .......
» எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ............
» காதலைப் பற்றி...!
» இஸ்லாத்தைப் பற்றி....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum