சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Khan11

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

3 posters

Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 10:59

ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, மற்ற, 20 எம்.எல்.ஏ.,க்களின் மீது, சந்தேக பார்வை விழத் துவங்கியுள்ளது. இது குறித்து, அவர்களிடம் கேட்ட போது, பெரும்பாலானோர், "கட்சிக்கு விசுவாசமாகவே இருப்போம்' என்று தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகிய, ஏழு பேர், முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட துவங்கியுள்ளனர். ராஜ்யசபா தேர்தல் வரும், 27ம்தேதி நடக்கவுள்ள நிலையில், மேலும் சில, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்து பேசக் கூடும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, கட்சி தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை தவிர்த்து, மற்ற எம்.எல்.ஏ.,க்கள் அளித்த பேட்டி:

சந்திர குமார் - ஈரோடு மேற்கு தொகுதி:

கட்சியில் இருக்கும் வரை, இவர்கள் எதுவும் பேசவில்லை. முதல்வரை சந்தித்த பிறகு, கட்சி தலைமை மீது, அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். முதல்வரை சந்தித்த பின், ஆட்சியை பற்றி புகழும் இதே வாய் தான், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, எதிர்த்து பேசி வந்தது. இவர்கள் சொல்வதை, தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால், தே.மு.தி.க., அழிந்து விடும் என நினைத்தால், அது கனவிலும் நடக்காது.

சுபா - கெங்கவல்லி:

ஆளும்கட்சியின், 151 தொகுதிகளிலும் பிரச்னை இருக்கிறது. அங்குள்ள மக்கள், அனைத்து வசதிகளையும் பெற்று, ராஜபோக வாழ்க்கை நடத்துகின்றனரா? முதலில், அவர்கள் தொகுதி பிரச்னையை தீர்க்கட்டும். தூண்டில் போட்டு, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதை விட்டுவிட்டு, 234 தொகுதி மக்களையும், தன் பிள்ளைகளாக கருதி, நல்லது செய்தால், சிறப்பாக இருக்கும். கிழக்கே உதிக்கும் சூரியன், மேற்கே உதித்தாலும், என் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன். இறுதி மூச்சு உள்ள வரை, இந்த கட்சியில் தான் இருப்பேன்.

பாபு முருகவேல் - ஆரணி :

கடந்த, எட்டு மாதங்களாக என்னை தொடர்பு கொண்டு முதல்வரை சந்திக்க அழைத்தனர். அது நடக்காது என்பதால், இப்போது தொடர்பு கொள்வதில்லை. அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வக்கீல் தொழில் பார்த்து சம்பாதித்துக் கொள்வேன். என்னை கட்சியை விட்டு நீக்கினாலும், வேலை பார்க்க கோர்ட்டுக்கு செல்வேனே தவிர, மற்றவர்களை பார்க்க, கோட்டைக்கு செல்ல மாட்டேன்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிப் பெற, தே.மு.தி.க., உதவி தேவைப்பட்டது. ராஜ்யசபா தேர்தலிலும், அதே உதவி தேவைப்படுவதால் தான் இந்த இழுப்பு நடவடிக்கை. அப்படியானால், தே.மு.தி.க., ஆதரவு இல்லாமல், ஆளும் கட்சி வெற்றிபெற முடியாது என்பதே உண்மை.

தினகரன் - சூலூர்:

தே.மு.தி.க., என் வீடு. யாராவது வீட்டை விட்டு வெளியே போவார்களா? அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே கட்டுப்படுவேன். மற்றவர்களை போல, நாகரிகமில்லாமல் நடந்துக் கொள்ள மாட்டேன்.

சிவக்கொழுந்து - பண்ருட்டி :

ஏழு எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி வளர்ச்சிக்காக முதல்வரை சந்தித்தார்களா அல்லது தங்களது வளர்ச்சிக்காக சந்தித்தார்களா என்பது மக்களுக்கு தெரியும். முதல்வரை சந்தித்தால் தான் பிரச்னை தீரும் என்றால், இதுவரை எதிர்கட்சி தொகுதிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 11:00

சி.எச்.சேகர் - கும்மிடிபூண்டி:

மாமரத்தில் உள்ள அனைத்து பூக்களும் காய்க்காது. காற்றில் உதிர்ந்து பல பூக்கள் காணாமல்போய் விடும். எஞ்சி நிற்கும் பூக்கள் தான் கனியாகி மற்றவர்களுக்கு பலன் தரும் . வியாபார ரீதியாக செயல்பட்டால், அரசியலில் நிலையாக இருக்க முடியாது. எனவே, நான் காற்றில் உதிரும் பூவாக இல்லாமல், மரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மக்களுக்கு பலன் தரும் கனியாகவே இருப்பேன்.

நல்லதம்பி - எழும்பூர்:


தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில் எந்த வளர்ச்சிபணியும் நடக்கவில்லை. சென்னையின் முக்கிய பகுதியான, என் எழும்பூர் தொகுதியில், கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. முதல்வரை சந்தித்து, அரசை பாராட்டி ஜால்ரா அடித்தால் தான், வளர்ச்சி பணி நடக்குமா? தன்னை சந்தித்த, ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம் முதல்வர் வாக்குறுதி கொடுத்தாரே தவிர, அதை நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நிச்சயமில்லை. தே.மு.தி.க., என்பது, நான் வளர்த்த கட்சி. அதில் இருந்து என்னை பிரிக்க நினைத்தால், என் உயிர் பிரிந்து விடும்.

பார்த்திபன் - மேட்டூர் :

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து, விஜயகாந்த் முதுகில் குத்தியவர்களுக்கு காலம் பதில் சொல்லும். காசுக்காக அணி மாறுவது நியாயமாக இருக்காது. நானும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த திருவிளையாடல்களுக்கு விரைவில் விஜயகாந்த் முற்றுப்புள்ளி வைப்பார்.

வெங்கடேசன் - திருக்கோவிலூர்:

மற்ற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தான், தே.மு.தி.க.,வில் போட்டியிட்டு, ஏழு பேரும் அரசியலில் முகவரி பெற்றனர். தொகுதி பிரச்னையை தீர்க்க, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும், துறைகளின் செயலர்களிடம் முறையிடலாம். அதை அரசு கேட்கவில்லை என்றால், மக்களை திரட்டி ஜனநாயக முறையில் போராடலாம். முதல்வரை சந்தித்தால் தான் தொகுதி பணி நடக்குமா? கொள்கை, நேர்மை, விசுவாசம், உழைப்பு, நாணயம் இருக்கும் எவருக்கும் பணம் பெரிதாக தெரியாது. பணம் மட்டுமே தெரிந்தவர்கள், அதற்காக எதையும் விட்டுக்கொடுப்பர். அந்த எண்ணம் எனக்கு மட்டுமல்ல, கட்சி தலைமை மீது விசுவாசமாக இருக்கும் எவருக்கும் இருக்காது.

செந்தில்குமார் - திருவெறும்பூர்:

ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு ஆட்களை இழுப்பது ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தில் இது தொடர்ந்து நடக்கிறது. எனவே, மற்றவர்கள் சென்றதை பற்றி பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கென கடமைகள், வேலைகள் இருக்கின்றன

பாஸ்கர் - தர்மபுரி :

முதல்வரை சந்திக்குமாறு யாரும் என்னை யாரும் இதுவரை அணுகவில்லை. எதிர்க்கட்சிகளின் தொகுதிக்கு, இந்த அரசு எதையும் செய்யாது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அதனால், என் சொந்த செலவில், முடிந்தவரை தொகுதி மக்களுக்கு உதவுகிறேன். வறட்சி பாதித்த தர்மபுரியில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகிறேன். இதற்காக முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 11:00

ஏ.கே.டி.ராஜா - திருப்பரங்குன்றம் :

கட்சி மற்றும் எங்களின் மதிப்பை குறைப்பதற்காக, நாங்கள் முதல்வரை சந்திக்க இருப்பதாக வதந்தியை பரப்புகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில், எங்களை பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

முத்துக்குமார் - விருத்தாசலம் :

கட்சி தலைமையிடம் அனுமதி பெறாமல், என்னால் எதையும் சொல்ல முடியாது.

அருட்செல்வன் - மயிலாடுதுறை :

முதல்வரை சந்திக்க நான் ஏற்கனவே மனு கொடுத்தேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. என்னோடு சேர்ந்து மனு கொடுத்த சாந்திக்கு அனுமதி கிடைத்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மட்டுமின்றி, அமைச்சர்களின் தொகுதியே இன்னும் வளர்ச்சி அடையவில்லை. அப்படி இருக்கும்போது, முதல்வரை சந்தித்தால், எதிர்கட்சியின் தொகுதிகள் வளர்ந்து விடும் என்பது வேடிக்கையாக உள்ளது.

சம்பத்குமார் - திருச்செங்கோடு:


விஜயகாந்த், "சீட்' கொடுத்ததால் தான் இன்றைக்கு நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். அதனால், தொகுதி வளர்ச்சி என கூறி முதல்வரை சந்தித்து, விஜயகாந்திற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. ஏழு எம்.எல்.ஏ.,க்கள் சென்றதால், கட்சிக்கு, ஏழு ஓட்டு மட்டும் தான் இழப்பு; வேறு எந்த வகையிலும் நஷ்டம் இல்லை.

மோகன்ராஜ் - சேலம் வடக்கு :


என், 40 ஆண்டுகால அரசியலுக்கு முகவரி கொடுத்தவர் விஜயகாந்த். என் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றிவிட்டு, முதல்வரை சந்திப்பது மிகப்பெரிய துரோகம். கறுப்பு ஆடுகள் வெளியேறினால், கட்சி சுத்தம் ஆகிவிடும். அதனால் தான், விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார். அவரது பின்னால், எப்போதும் நான் இருப்பேன்.

திருத்தணி எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணியத்தை தொடர்பு கொள்ள, பலமுறை முயற்சித்தும் அவரது மொபைல் போன், தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருப்பதாக தெரிவித்தது. இதே போல், விருகம்பாக்கம்- பார்த்தசாரதி, சோளிங்கர்- மனோகர் ஆகியோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசனை தொடர்பு கொண்ட போது, அவர் "கருத்து சொல்ல விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

தே.மு.தி.க., -எம்.எல்.ஏ.,க்களில், பெரும்பாலானோர், கட்சிக்கு தான் விசுவாசமாக இருப்போம் என்று தெரிவித்தாலும், உண்மையில் என்ன நடக்கும் என்பது போக போகத் தான் தெரியும்.

---- தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by rammalar Sat 15 Jun 2013 - 11:02

எதற்காக முதல்வரை சந்தித்தார்கள் என்பது மக்களுக்கு
தெரியும்..!
-

தே.மு.தி.க.,தலைமைக்கு தெரியுமா..?!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by kalainilaa Sat 15 Jun 2013 - 16:55

எத்தனை நாட்கள் நடக்கும் ...மாறிய பின் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருப்பார்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 18:00

rammalar wrote:எதற்காக முதல்வரை சந்தித்தார்கள் என்பது மக்களுக்கு
தெரியும்..!
-

தே.மு.தி.க.,தலைமைக்கு தெரியுமா..?!

தெரியும் ஆனால் தெரியாது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum