சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பழமொழிகள்-சிலவற்றை பார்ப்போம். Khan11

பழமொழிகள்-சிலவற்றை பார்ப்போம்.

Go down

பழமொழிகள்-சிலவற்றை பார்ப்போம். Empty பழமொழிகள்-சிலவற்றை பார்ப்போம்.

Post by ராகவா Sat 14 Sep 2013 - 19:16

ஒரு சில தமிழ்ப் பழமொழிகள்

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 இக்கரைக்கு அக்கரை பச்சை.
 இனம் இனத்தையே சாரும்.
 இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
 ஈர நாவிற்கு எலும்பில்லை.
 உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய 
 உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
 உளவு இல்லாமல் களவு இல்லை.

 உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப 
 உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
 ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
 ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
 எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
 எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே, 
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
 எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
 எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
 எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு. 
 கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
 கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
 கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
 கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
 கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
 கடுகு சிறுத்தாலும் காரம் குறை யாது.
 கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும். 
 கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.

 கரும்பு தின்னக் கூலியா?
 காலம் போகும் வார்த்தை நிற்கும்.
 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
 காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 காற்றுள் போதே தூற்றிக்கொள்.
 நாளை கிடைக்கப்போகும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்காய் மேல்.
 குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
 குடல் காய்ந்தால் குதிரை  வைக்கோல் தின்னும்.
 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

 குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
 கெண்டையைப் போட்டு வராலை இழு.
 கெடுவான் கேடு நினைப்பான்.
 கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
 கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
 கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
 கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
 கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
 சர்க்கரை என்றால் தித்திக்குமா?

 சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
 சிறு துரும்பும் பல் குத்த  உதவும்.
 சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
 சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
 சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
 சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
 தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
 தன் கையே தனக்கு உதவி.
 தன் வினை தன்னைச் சுடும்.
 தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

 தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
 தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
 தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
 தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
 தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
 தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
 துணை போனாலும் பிணை போகாதே.
 துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
 தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
 தூங்குகிற பசு பால் கறக்காது. 

 நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
 நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும். 
 நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
 நிறை குடம் நீர் தளும்பாது.
 நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
 நெருப்பு இல்லாமல் புகை இருக்காது. 
 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
 பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்
 பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.
 பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

 பாம்பின் கால் பாம்பு அறியும். 
 பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 
 பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி. 
 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 
 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
 வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
 விளையாட்டு வினையாயிற்று.
 வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். 
 வெறுங்கை முழம் போடுமா?

 வெளுத்ததெல்லாம் பாலா, கறுத்ததெல்லாம் தண்ணீரா?
 வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
 வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

நன்றி:பாரதிபயிலகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum