சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Yesterday at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

பழமொழிகள் -2 Khan11

பழமொழிகள் -2

Go down

பழமொழிகள் -2 Empty பழமொழிகள் -2

Post by ராகவா Wed 18 Sep 2013 - 16:37

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி

ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு

ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்.

ஓதிய மரம் தூணாமோ, ஓட்டாங் கிளிஞ்சல் காசாமோ

ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக் கடையிலே

ஓர் ஊர்ப் பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு

ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஓன்பது வழி



கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா

கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை

கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது

கடல் திடலாகும் திடல் கடலாகும்

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா

கடலுக்குக் கரை போடுவார் உண்டா

கடலைத்தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கடன் இல்லா கஞ்சி கால் வயிறு

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான் மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொழுத்திவிடும்

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு போன இடம் ஆராய்வார், பூசுனைக்காய் போன இடம் தெரியாது

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்

கடுஞ்சொல் தயவைக் கெடுக்கும்

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது

கண் கண்டது கை செய்யும்

கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.

கணக்கன் கணக்கைத் தின்னாவிடில் கணக்கனை கணக்கு தின்றுவிடும்

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண்டது சொன்னால் கொண்டிடும் பகை

கண்டதே காட்சி கொண்டதே கோலம்

கண்டால் ஒருபேச்சு காணாவிட்டால் ஒரு பேச்சு

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

கப்பல் ஏறிப் பட்டகடன் கொட்டை நுர்ற்றா åடியும்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு

கரணம் தப்பினால் மரணம்

கரி விற்றபணம் கறுப்பாய் இருக்குமா?

கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.

கரும்பு ருசிஎன்று வேரோடு பிடுங்கலாம்?

கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கல்லடிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தåடுபொடி

கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே

கல்லாதவரே கண்ணில்லாதவர்

கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்

கல்å அழகே அழகு

கல்å இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு

கல்விக்கு இருவர் களவுக் கொருவர்

கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது

கள் விற்றுக் கால்பணம் சம்பாதிப்பதைåட, கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

கள்ள மனம் துள்ளும்

கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்றுகூடினால் åடியுமட்டும் திருடலாம்.

கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

கற்கையில் கல்å கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

கற்பில்லாத அழகு வாசைன இல்லாத பூ.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு

கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கனåல் கண்ட பணம் செலåற்கு உதவுமா?

கன்று செத்துக் கலப் பால் கறக்குமா?

கனிந்த பழம் தானே åழும்.

.......................................................



காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காண ஒருதரம் கும்பிட ஒரு தரமா?

காணி ஆசை கோடி கேடு.

காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.

காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

காய்த்த மரம் கல் அடிபடும்.

காய்ந்தும் கெடுத்ததும் பெய்தும் கெடுத்தது.

கார்த்திகை பின் மழையும் இல்லை கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ

காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி

காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

காலம் போம் வார்த்தை நிற்கும் கப்பல் போம் துறை நிற்கும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூலளவே ஆகுமா நுண் சீலை.

காலுக்குத் தக்க செருப்பும் கடலிற்குத் தக்க உழைப்பும்.

காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

காற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே.

காற்றில்லாமல் தூசி பறக்குமா?

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

....................................

கிட்டாதாயின் வெட்டென மற.

கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கீர்த்தியால் பசி தீருமா?

கீறி ஆற்றினால் புண் ஆறும்.

.............................................

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

குசவனுக்கு ஆறு மாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்பட வேண்டும்.

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

குடிவைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடி, சூது , விபசாரம் குடியைக் கெடுக்கும்.

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

குணத்தை மாற்றக் குருவில்லை.

குணம் இல்லா åத்தை எல்லாம் அåத்தை

குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கåல்லை.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்

குப்பை உயரும் கோபுரம் தாழும்

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

குரங்கின் கைப் பூ மாலை.

குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங் குருவி கூண்டு இழந்தது.

குரு இல்லார்க்கு åத்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே.

குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்.

குறைகுடம் தளும்பும் நிறைகுடம் தளும்பாது.

..................................

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே.

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

................................

கெட்டாலும் செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

கெட்டும் பட்டணம் சேர்.

கெடுக்கினும் கல்å கேடுபடாது.

கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.

கெடுவான் கேடு நினைப்பான்.

கெண்டையைப் போட்டு வராலை இழு.

கெரடி கற்றவன் இடறி åழுந்தால் அதுவும் ஒரு åத்தை என்பான்.

கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பினதெல்லாம் சொல்லாதே?

கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே.

கேள்åப் பேச்சில் பாதிதான் நிசம்.

கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

........................

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டåல்லை.

கைக்கோளனுக்குக் காற் புண்ணும் நாய்க்கு தலைப்புண்ணும் ஆறா.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.

கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.

கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

கையில் பிடிப்பது துளசிமாலை கக்கத்தில் இடுவது கன்னக்கோலம்.

கையிலே காசு வாயிலே தோசை.

கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

................................

கொட்டினால் தேள் கொட்டாåட்டால் பிள்ளைப் பூச்சியா?

கொடிக்கு காய் கனமா?

கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.

கொண்டானும் கொடுத்தானும் ஒன்று கலியாணத்தைக் கூட்டிவைத்தவன் வேறு.

கொல்லன் தெருåல் ஊசி åலைபோமா?

கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

கொள்ளிக்கு எதிர்போனாலும் வெள்ளிக்கு எதிர் போகலாகாது.

கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

............................................

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

கோணி கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு பாத்திரமறிந்து பிச்சையிடு.

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

கோபம் சண்டாளம்.

கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

....................................................

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.

சத்தியமே வெல்லும் அசத்தியம் கொல்லும்

சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

சபையிலே நக்கீரன் அரசிலே åற்சேரன்.

சம்பளம் இல்லாத சேவகனும் கோபமில்லா எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா?

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் åடான் பஞ்சாங்கக்காரன்

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

சாண் ஏற முழம் சறுக்கிறது.

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

........................................

சுகதுக்கம் சுழல் சக்கரம்.

சுட்டசட்டி அறியுமா சுவை?

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சுண்டைக்காய் காற்பணம் சுமைகூலி முக்காற் பணம்.

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்துப் பாராதே.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சுவாமி வரங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையிற் சேராது.

....................................

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?

செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்.

செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செய்வன திருந்தச் செய்.

செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?

செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சென்ற இடமெல்லாம் சிறப்பே கல்வி.

......................................

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

சேற்றில் செந்தாமரை போல.

சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொல் அம்போ åல் அம்போ?

சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் செய்கிறவனுக்கு தலைச்சுமை.

சொல் வல்லவனை வெல்லல் அரிது.

சொற்கேளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பகிர்ந்து இடாத சோறும் பாழ்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

..........................................................................

தங்கம் தரையிலே தåடு பானையிலே

தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.

தட்டிப்பேச ஆள் இல்லாåட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தடி எடுத்தவன் தண்டல்காரனா?

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அåக்கும்.

தண்ணீரிலே åளைந்த உப்பு தண்ணீரிலே கரையவேண்டும்.

தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

தணிந்த åல்லுத்தான் தைக்கும்.

தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தம்பி உண்டான் படைக்கு அஞ்சான்.

தருமம் தலை காக்கும்.

தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

தலை இருக்க வால் ஆடலாமா?

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன முழம் ஓடி என்ன?

தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

தவத்துக்கு ஒருவர் கல்åக்கு இருவர்.

தவளை தன் வாயாற் கெடும்.

தåட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

................................................

நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடரி கொண்டு வெட்டகிறான்.

நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?

நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

நண்டு கொழுத்தால் வலையில் இராது தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.

நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.

நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உள்ளாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்.

நயத்திலாகிறது பயத்திலாகாது.

நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.

நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

நரை திரை இல்லை நமனும் அங்கில்லை.

நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

நல்லவேளையில் நாழிப்பால் கறவாதது.

நல்லது செய்து நடுவழியே போனால்.

நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

நல்லவன் ஒருநாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.

நா அசைய நாடு அசையும்.

நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா?

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

நாய் விற்றகாசு குரைக்குமா?

நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமுமில்லை.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாலாறு கூடினால் பாலாறு.

நாள் செய்வது நல்லார் செய்யார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

.........................................

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

நித்திய கண்டப் பூரண ஆயிசு.

நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

நித்திரை சுகம் அறியாது.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.

நின்றவரையில் நெடுஞ் சுவர் åழுந்த அன்று குட்டிச் சுவர்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டுபோம்.

நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணமுடியாது.

நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

நீர்மேல் எழுத்துபோல்.

நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

...............................................

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூல் கற்றவனே மேலவன்.

நூலளவே யாகுமாம் நூண்ணறிவு.

நுர்ற்றுக்குமேல் ஊற்று ஆயிரத்துக்குமேல் ஆற்றுப் பெருக்கு.

நூற்றைக் கொடுத்தது குறுணி.

..........................

நெய் முந்தியோ திரி முந்தியோ.

நெருப்பு இல்லாமல் நீள்புகை எழும்புமா?

நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?

நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோய் கொண்டார் பேய் கொண்டார்.

நோய்க்கு இடம் கொடேல்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

..........................................................

பக்கச் சொல் பதினாயிரம்

பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

பகுத்தறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.

பகைவர் உறவு புகைஎழு நெருப்பு.

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.

பசியுள்ளவன் ருசி அறியான்.

பசுåலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்.

பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும் காற்காசு சந்தையில் ஓடி உலாவும்.

படிக்கிறது திருவாய்மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

படையிருந்தால் அரணில்லை.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர் பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?

பணம் உண்டானால் மனம் உண்டு

பணம் என்னசெய்யும் பத்தும் செய்யும்.

பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

பத்துப் பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

புதறாத காரியம் சிதறாது.

பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னிஏறச் சீவன் இல்லை.

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு.

பழகப் பழக பாலும் புளிக்கும்.

பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம்.

பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

பழுத்தபழம் கொம்பிலே நிற்குமா?

பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

பனிபெய்தால் மழை இல்லை பழம் இருந்தால் பூ இல்லை.

பனை நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ?

பனைமரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்கள்.

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திதி.

புத்திமான் பலவான்.

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

புலிக்குப் பிறந்தது பூயையாய்ப் போகுமா?

பூ மலர்ந்து கெட்டது வாய் åரிந்து கெட்டது.

பூமியைப் போலப் பொறுமை வேண்டும்.

பூ விற்றகாசு மணக்குமா?

பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.

.....................................

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பேசப் பேச மாசு அறும்.

பேசாதிருந்தால் பிழை யொன்றுமில்லை.

பேர் இல்லாச் சந்நிதி பாழ் பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.

பேராசை பெருநட்டம்.

..............................................

பொங்குங்காலம் புளி மங்குங்காலம் மாங்காய்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை மெய் சொல்லி கெட்டவனுமில்லை.

பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

பொல்லாதது போகிற வழியிலே போகிறது.

பொற்கலம் ஒலிக்காது வெண்கலம் ஒலிக்கும்.

பொறி வென்றவனே அறிåன் குருவார்.

பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

பொறுமை கடலினும் பெரிது.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

போனதை நினைக்கிறவன் புத்திகெட்டவன்.

நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum