சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Khan11

அறிவுடன் சிரிப்புக்கதைகள்

3 posters

Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Dec 2013 - 10:49

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார். 

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார். 

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

நன்றி:  மக்கள் சந்தை 
அறிவு தமிழ் கதைகள் தளத்தில் படித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Dec 2013 - 10:57

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

நான் ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ என்று கேட்க ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும்  அவன் சிரித்தான்.

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’ என் ஊரார்கள் கேட்க 

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’ என்றான் 

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’ ன்னு கேட்டான் 

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்? 

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’ 

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’

நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Dec 2013 - 11:03

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

நன்றி: 
அறிவு தமிழ் கதைகள் தளத்தில் படித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by பானுஷபானா Wed 18 Dec 2013 - 12:17

நல்ல கதை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Dec 2013 - 17:42

நன்றி நன்றி  {_  {_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 21 Dec 2013 - 10:16

ஒரு மொட்டை தலையனைக் கொசு கடித்துவிட்டது. கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் பளேர் என்று அடித்துக்கொண்டான். கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து சின்னதாகச் சிரித்தது. “ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக்கொள்கிறாயே, தலை வலிக்கிறதா” என்றது.

அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் ” என்றான்

நீதி:*பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்*.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 21 Dec 2013 - 10:22

ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும்  தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!

ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை    எழுப்பினார் .. “தம்பி நீ மாதம்  எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “  அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை    எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு  இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு  நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “

இது எப்படி இருக்கு …..??????

நன்றி ;சிரிப்பு கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 21 Dec 2013 - 10:33

ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. ''போடீ இங்கிருந்து'' என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ''ஓகே!'' என்றார். 

அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ''ஒழுங்கா அடிம்மா!'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு!'' என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா. 

அப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. ''கைலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே!'' என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. 

சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே? அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள். அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை!'
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by பானுஷபானா Sat 21 Dec 2013 - 13:27

^_  ^_  ^_  ^_  ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 21 Dec 2013 - 14:45

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jan 2014 - 8:39

அன்புள்ள அம்மாவுக்கு, 
***********************************
ஒரு வீட்ல அம்மா அப்பா மகள் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்திருந்தது.. ஒரு நாள் அம்மா மகளின்  படுக்கை அறை சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, கட்டில் நடுவில ஒரு கடிதம், அதில "அம்மாவுக்கு"னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"

அன்புள்ள அம்மாவுக்கு, 

இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒரு பையனை லவ் பண்றேன்! அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.

கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்!.

அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம்! எனக்கும் அதான் ஆசை!!.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம், அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.

இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க கோவி கண்ணனுக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான். 

கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன். 

உங்கள் மகள், 
பிரியா 

பின் குறிப்பு: மேல சொன்ன எல்லாமே பொய். நான் கதவுக்கு பின்னாடி இருக்கேன்.டேபிள்ல இருக்கிற என்னோட ரேங்க் ஷீட்ட விட வாழ்க்கைல மோசமான விஷயங்கள் இருக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இத எழுதினேன் உங்க கோபம் தீர்ந்ததும் என்னை கூப்பிடவும்."

நன்றீ ;மௌன தேசம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jan 2014 - 8:43

நாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.
*****************************************************
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!


ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.



அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!


சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..



அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. 


சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by பானுஷபானா Fri 3 Jan 2014 - 10:11

கதை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by Muthumohamed Fri 3 Jan 2014 - 21:26

அனைத்தும்  அருமை அண்ணா பகிர்வுக்கு    :”@:  :”@:  :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அறிவுடன் சிரிப்புக்கதைகள்  Empty Re: அறிவுடன் சிரிப்புக்கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum