Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
4 posters
Page 1 of 1
பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
பெங்களூர், சேலம் அருகே விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பயிற்சியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பலியானார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தர் 26 வயதுடைய ரம்யா என்ற பெண்ணே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு விமானம் சேவை இடம்பெற்றுள்ளது. போதிய பயணிகள் வராதமையால் விமான சேவையில் பாரிய நஷ்டம் ஏற்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, குறித்த விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் டெல்லியை சேர்ந்த இந்தியா ஸ்கை டைவிங் பாராசூட் அமைப்பின் சார்பில், சிறிய வகை விமானத்தில் இருந்து பாராசூட் கட்டிக் கொண்டு குதிக்கும் பயிற்சி (ஸ்கை டைவிங்) கடந்த 24ஆம் திகதி ஆரம்பமானது.
இப் பயிற்சியில் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொரியியலாளர் வினோத் (வயது28), அவரது மனைவி ரம்யா (26) உள்ளிட்ட 11 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வினோத்தும், ரம்யாவும் பயிற்சிக்கு சென்றனர். ரம்யாவுடன் பயிற்சியாளர்கள் மோகன்ராவ், ஆஷ் ஆகியோர் விமானத்தில் சென்றனர். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்த போது, பராசூட் கட்டிக் கொண்டு ரம்யா குதித்தார். அப்போது, பராசூட் விரியாததால், பொட்டையாபுரம் என்னுமிடத்தில் காட்டுப் பகுதியில் அவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால், உடனடியாக பயிற்சி நிறுத்தப்பட்டது.
பயிற்சியின் போது ரம்யாவுடன் சென்ற அவரது கணவர் வினோத் கூறுகையில், நானும், எனது மனைவியும் பயிற்சிக்கு சென்றோம். விமானம் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும், முதலில் எனது மனைவியை குதிக்கும்படி பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரம்யா விமானத்தில் இருந்து குதித்தார். அப்படி குதிக்கும் போது, சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் பராசூட் முழுமையாக விரிய வேண்டும். ஆனால், அந்த பாராசூட் விரியவில்லை.
ரம்யா, பராசூட்டை விரிவடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காற்று பலமாக வீசியதால், பாராசூட் விரிவடைவதற்கு பதிலாக அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். பயிற்சியின் போது விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்க வயர்லெஸ் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த வயர்லெஸ் மூலம் பயிற்சியாளர்களுடன் ரம்யா தொடர்பு கொண்டார்.
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. விபத்து நடந்த போது அந்த இடத்தில் பயிற்சியாளர்களோ, பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்களோ இல்லை என்றார்.
இந்த விபத்து தொடர்பாக இந்தியன் ஸ்கை டைவிங் அமைப்பின் சேர்ந்த பயிற்சி நடத்துனர்கள் மதுரை திருநகர் நாகேஷ் (42), புதுடெல்லி கிருஷ்ணா நகர் அங்கீதா (28), பயிற்சியாளர்கள் விசாகப்பட்டணம் மோகன் ராவ் (38), ராஜஸ்தான் ஐஸ்வர்ய யாதவ் (33) ஆகிய 4 பேரை ஓமலூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நன்றி வீரகேசரி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
வருத்தம் தரும் செய்தி.
தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு இல்லாமல் பணம் ஒன்றை குறிகோளாக கொண்டு செய்ல்படுபவர்களுக்கு உயிரின் மதிப்பு புரியாது.
தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு இல்லாமல் பணம் ஒன்றை குறிகோளாக கொண்டு செய்ல்படுபவர்களுக்கு உயிரின் மதிப்பு புரியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
நாம் இதை ஏன் செய்கிறோம் எதற்கு சொய்கிறோம் என்று சிந்தித்து செயல்பட்டால் அனைத்தும் சிறப்பாக அமையும். !_Nisha wrote:வருத்தம் தரும் செய்தி.
தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு இல்லாமல் பணம் ஒன்றை குறிகோளாக கொண்டு செய்ல்படுபவர்களுக்கு உயிரின் மதிப்பு புரியாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
*சம்ஸ் wrote:நாம் இதை ஏன் செய்கிறோம் எதற்கு சொய்கிறோம் என்று சிந்தித்து செயல்பட்டால் அனைத்தும் சிறப்பாக அமையும். !_Nisha wrote:வருத்தம் தரும் செய்தி.
தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு இல்லாமல் பணம் ஒன்றை குறிகோளாக கொண்டு செய்ல்படுபவர்களுக்கு உயிரின் மதிப்பு புரியாது.
சரிதான்,
அளவுக்கு மீறிய ஆர்வம், இம்மாதிரி உயிரோடு விளையாடி ரிஸ்க் எடுக்க செய்கிறது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
இது ஆர்வமில்லை அளவிற்கு மீறிய ஆசை !_Nisha wrote:*சம்ஸ் wrote:நாம் இதை ஏன் செய்கிறோம் எதற்கு சொய்கிறோம் என்று சிந்தித்து செயல்பட்டால் அனைத்தும் சிறப்பாக அமையும். !_Nisha wrote:வருத்தம் தரும் செய்தி.
தகுந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு இல்லாமல் பணம் ஒன்றை குறிகோளாக கொண்டு செய்ல்படுபவர்களுக்கு உயிரின் மதிப்பு புரியாது.
சரிதான்,
அளவுக்கு மீறிய ஆர்வம், இம்மாதிரி உயிரோடு விளையாடி ரிஸ்க் எடுக்க செய்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
அப்படின்னு சொல்ல முடியாதுப்பா..
பலருக்கு இம்மாதிரி ரிஸ்க் எடுப்பதில் இயல்பாகவே ஆர்வம் வரும். நம்மை போல் கவிதை கட்டுரை, கதைன்னு இருப்பவர்கள் போல் எப்போதும் எதையாவது படித்திட்டு இருக்காமல் உலகம் சுத்தி பார்க்க, ரசிக்க வென ரிஸ்க் எடுப்பவங்கதான் நிர்மப பேர்.
கடலில் கடல் ஆழத்தில், மலையில், பனிகட்டிகள் நடுவே, வானத்திலும் பயமின்றி சென்று திர்ல் அனுபவிக்க விரும்புவர்கள் அதிகம்.
அதிருக்க பாரசூட்டில் குதிப்பது ஒன்றும் அளவுக்கு மீறிய ஆசையால் வந்ததல்ல.. அந்த திரில் அனுபவிக்க வந்த ஆர்வத்தால் இருக்கலாம். தகுந்த முன்னேற்பாடு இல்லாது குதிப்பதும். பயிற்சிகாலத்தில் தனியாக குதிப்பதும் தவறு.
எங்கள் இடத்தில் தினமும் ஆயிரகணக்கில் பரசூட்டில் பறந்து ரசிப்பவர்கள் மலையிலிருந்து இறங்குவார்கள். ஆயிரத்தில் ஒன்று பாலன்ஸ் தவறி விபத்தாவதும் அதற்கு தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை இருப்பதும் நான் உணர்ந்ததே..
பலருக்கு இம்மாதிரி ரிஸ்க் எடுப்பதில் இயல்பாகவே ஆர்வம் வரும். நம்மை போல் கவிதை கட்டுரை, கதைன்னு இருப்பவர்கள் போல் எப்போதும் எதையாவது படித்திட்டு இருக்காமல் உலகம் சுத்தி பார்க்க, ரசிக்க வென ரிஸ்க் எடுப்பவங்கதான் நிர்மப பேர்.
கடலில் கடல் ஆழத்தில், மலையில், பனிகட்டிகள் நடுவே, வானத்திலும் பயமின்றி சென்று திர்ல் அனுபவிக்க விரும்புவர்கள் அதிகம்.
அதிருக்க பாரசூட்டில் குதிப்பது ஒன்றும் அளவுக்கு மீறிய ஆசையால் வந்ததல்ல.. அந்த திரில் அனுபவிக்க வந்த ஆர்வத்தால் இருக்கலாம். தகுந்த முன்னேற்பாடு இல்லாது குதிப்பதும். பயிற்சிகாலத்தில் தனியாக குதிப்பதும் தவறு.
எங்கள் இடத்தில் தினமும் ஆயிரகணக்கில் பரசூட்டில் பறந்து ரசிப்பவர்கள் மலையிலிருந்து இறங்குவார்கள். ஆயிரத்தில் ஒன்று பாலன்ஸ் தவறி விபத்தாவதும் அதற்கு தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை இருப்பதும் நான் உணர்ந்ததே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
!_Nisha wrote:அப்படின்னு சொல்ல முடியாதுப்பா..

அது சரி உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்
ஆமா மூத்தபையன்Nisha wrote:அது சரி உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்
» பேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...
» உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்
» முல்லைத்தீவில் மர்மமப் பொருள் வெடித்து 14 வயதுடைய சிறுவனொருவன் படுகாயம்!
» LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum