சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Khan11

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

+6
Nisha
*சம்ஸ்
பானுஷபானா
rammalar
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Muthumohamed Tue 11 Mar 2014 - 21:05

திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.

___________________________________________________________

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 18 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.

1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.

3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது. முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.

4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.

5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.

6. இன்று நடந்த மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.

2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது


மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். 1510983_626670754046976_1458038067_n

riyasbanu viswa
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 9:30

எவ்வளவு தகவல்கள்... 

அப்பன்னா அவங்க தூங்கிதான் போயிருப்பாங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:42

மலேசிய  விமானம் கடத்தப் பட்டிருக்கலாம்
என புதிய தகவலகள் கூறுகின்றன..
-
இந்தியாவி்ன் கப்பல்படைக்கு சொந்தமான
செயற்கைகோளான ருக்மணி உதவியுடன்
தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 9:47

இதைப் படிக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கு... அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 10:09

பானுஷபானா wrote:இதைப் படிக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்கு... அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும்
 )*  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:18

இம்முறை நடந்த மலேசியன் விமான் விபத்தில் விமானிகள் இருவருமே  ஒன்றுபட்டு தூங்கி இருக்க சாத்தியம் இல்லை. தூங்கும் படி இப்பயணம் நெடுந்தூரப்பயணமும் இல்லை.

அத்தோடு தானியங்கி முறையில் விமானம் இயக்கப்பட்டாலும்  VACCUM pocket  ல் உடனடியாக்  சிக்கி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு கம்மியே..

விமானத்தில் ஏறினால் பயணிகளுக்கு விமானிகள் தாம் கடவுளாம்.. காபபதும் அழிப்பதும் அவர்களால் மட்டுமே இயலுமாம். ஒரு நொடி தூக்கம் அவர்களையும் நிரந்தரமாய் தூங்கவே வைக்கும் என்பதை அறியாமலிருப்பாரோ..

இவ்விமானபயணம் நெடுந்தூர விமானபயணமில்லை எனும் போது விமானிகளும் ஒன்றுபட்டு தூங்கி இருக்க இயலுமா..

அத்தனை அனுபவம் வாய்ந்த விமானி ஈர்ப்புச்சக்தியை அறியாமலா இருந்திருப்பார்..


நிச்சயம் வேறேதோ காரணம் இருக்கலாம்.. கடத்தப்ட்டிருந்தாலும்  இது வரை யார் என்ன காரணத்தினால் கடத்தினார்கள்  என தொடர்பில்  வராமல் போனது ஏன் ...

அந்த ஏர்லைன்சில் மிகபெரிய செல்வந்தர்களோ, மிக முக்கியமான்வர்களோ இருந்ததாக செய்திகள் வெளியிடபட்டிருக்கிறதா.. என்றெல்லாம் யோசித்தால்   நாம்  குழம்பிபோவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 12:34

அப்படியனால் நடந்தது என்ன? 

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே அவர்களுக்கா துவா செய்வோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:40

விமானி விமானத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து இருக்காலம்!

இராணுவ‌ தலையீட்டில் ஏதோ நடந்திருக்கின்றது!
சீனா செல்லாமல் விமானம் திரும்பி மலேசியாவின் புலோ பெராக் தீவுக்கு பகுதியில் பறந்து!
என்று புதிய புதிய கதைகளாக வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த நேரம் வரை விமானம் தொடர்பான எந்த புதிய தகவலுமில்லை என்பது மாத்திரம் நிஜம்.


றெனி முத்தமிழ்  மன்றத்தில் இப்படி கூறுகின்றார். பொறுத்திருந்து பார்ப்போம். 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty மறைந்த மலேசிய விமானம்-புதிய சந்தேகம்?

Post by ahmad78 Wed 12 Mar 2014 - 14:56

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். 1796429_738024909575273_1926584234_n
அமெரிக்க இஸ்ரேலிய யூதர்களின் சதியா ?

க்லோக்கிங் டேக்னாலஜியா ?

மனிதர்களின் கண்ணில் மண்ணை தூவலாம் - ஆனால் மனிதர்களின் இறைவனாம் அல்லாஹுவின் கண்ணில் இருந்து எதுவும் மறையாது .

விமானம் மறைந்து போன நான்கு நாள் ஆகியும் - விமானத்தின் - சிதைவடைந்த ஒரு துகளையும் கண்டுபிடிக்கத நிலையில் - பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

1.இந்த விமானம் மறைவதர்க்கு நான்கு நாட்களுக்கு முன் தைவான், பீஜிங் ஏர்போர்ட் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனறு தெரிவித்துள்ளது.

2.விமானி யு டர்ன் செய்துள்ளார்,கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேஆக வேன்டிய விஷயம் இது.

3.அப்போது தான் வியட்னாம் ராடாரில் இருந்து மறைந்துள்ளது,அவர்கள் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் அதே வழியாக சென்ற்வேறு ஒரு விமானியை விட்டு எம்ஹெச்370ஐ தொடர்பு கொள்ள சொல்கிரார்கள்.
அது நரீடா செல்லும் விமானம்.அவரிடம் இந்த ஃப்ளைட்டின் விமானி பேசியிருக்கிரார்,குரல் சரியாக கேட்காமல் தொடர்பு அறுந்திருக்கிறது.

4.ஏதேனும் எமெர்ஜென்சியாக இருந்தால் அவர்கள் அப்பொதே டிஸ்ட்ரெஸ் கால் குடுத்திருப்பார்கள் அல்லவா.

5.பெண்டகன் உலகம் முழுவதும் பெரிய தீ பிழம்பு ஏற்பட்டால் அதனுடைய சிஸ்டம்மில் தெரியும்படியான டெக்னாலஜியை உடையது.அன்று அந்த பகுதியில் எந்த தீ பிழம்பும் ஏர்படவில்லை.

6.முதலில் இருவர் போலி பாஸ்போர்ட் என்றார்கள்,இப்போது நான்கு நபர்களை சந்தேகிக்கிறார்கள்.

7.ஏழு நபர்கள் ஒன்றாக டிக்கெட் எடுத்துள்ளார்கள்,அதில் ஐந்து பேர் வரவில்லை,அவர்களுடைய பேக்கெஜ் எப்படி விமானத்திற்க்குள் வந்தது?அதை பிறகு வெளியே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

8.அமெரிக்காவும்,இஸ்ரேலின் மொசாட்டும் க்ளோக்கிங் என்ற போர் தொழில் நுட்பத்தை கன்டுபிடித்துள்ளார்கள்.ஒரு பொருளை கண்களில் இருந்தும் ராடாரில் இருந்தும் மறைய வைக்கும் டெக்னாலஜி அது.சீனாவும் அதை கன்டுபிடித்துள்ளது.

இதன் மூலம் போர்கப்பல் , போர் விமானம் போன்றவற்றை - எலெக்ட்ரோ மெக்னேடிக் ஒளி கற்றைகள் மூலம் மறைய வைக்க முடியும் 

இந்த விமானத்தில் டெக்சாசை சேர்ந்த ஃப்ரீ ஸ்கேல் செமி கன்டக்டர் என்ற நிறுவனத்தை சேர்ந்த 20பேர் பயனம் செய்துள்ளனர்.

அந்த கம்பெனி இந்த தொழில் நுட்பத்தை தான் தயாரிக்கிரது.மற்றும் போர்க்குரிய தொழில் நுட்பங்களை அமெரிக்க ரானுவத்திர்க்கு சப்ளை செய்கிறது.

9.இது வரை சந்தேகிக்கபட்ட ஆயில் சுவடு,ப்ளேனுடைய கதவு என்று சொல்லப்பட்ட பொருள்,லைஃப் ஜாக்கட் போன்ற பொருள்,எல்லாம் இந்த ப்ளேனுடையது அல்ல,

இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை?

அமெரிக்கா,சீனா,வியட்னாம்,சிங்கப்பூர்,இந்தொனேசியா,ப்லிப்பீன்ஸ்,தாய்லந்து,ஆஸ்ட்ரேலியா,நியூசீலாந்து,மலேசியா இத்தனை நாடுகள் தஙகள் தளவாடஙகளை கொடுத்து உதவுகிறார்கள்.

உறவினர்கள் - செல் போனிற்கு தொடர்பு கொல்லும் பொது - ரிங் அடிபதாக கூறுகின்றனர் என்பது - விமானம் - 

தரையில் நொறுங்கியிருக்க வேண்டும் இல்லை
ராடார் கண்ணிற்கு தெரியாமல் - மறையவைக்கும் டேக்னாலசிய பயன்படுத்தி - விமானத்தை கடத்தி இருக்க வேண்டும் - கடத்தி - அதை - ஒரு குற்பிட்ட இடத்தில வைத்து "க்லோக்கிங்" டேக்னாலகியை வைத்து மறைத்து இருக்க வேண்டும் ....என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது..

ஆனால் அல்லாஹுவே அறிந்தவன் - அனைத்துமே ....இன் ஷா அல்லாஹ் 

உண்மையும் விமானமும் அதில் பயணம் செய்தவர்கள் - உயிருடன் திரும்பி வர " மனிதர்களின் அரசனான அல்லாஹுவிடம் பிரார்த்திக்கிறோம்"

http://en.wikipedia.org/wiki/Cloaking_device

நன்றி:- இக்ரா.நெட்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 15:12

Nisha wrote:விமானி விமானத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து இருக்காலம்!

இராணுவ‌ தலையீட்டில் ஏதோ நடந்திருக்கின்றது!
சீனா செல்லாமல் விமானம் திரும்பி மலேசியாவின் புலோ பெராக் தீவுக்கு பகுதியில் பறந்து!
என்று புதிய புதிய கதைகளாக வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த நேரம் வரை விமானம் தொடர்பான எந்த புதிய தகவலுமில்லை என்பது மாத்திரம் நிஜம்.


றெனி முத்தமிழ்  மன்றத்தில் இப்படி கூறுகின்றார். பொறுத்திருந்து பார்ப்போம். 

இன்ஷா அல்லா நல்ல தகவல் கிடைத்தால் மகிழ்ச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 21:37

இந்த விமான் விபத்தில் நிரம்ப கேள்விகள் சந்தேகங்கள்.அமேரிக்காவின்  தில்லுமுல்லுத்தனம் உண்மையை வெளிபடுத்தாமல்   இதிலும்வெளீப்படுகிறதோ! யார் அறிவார்..
  

ஒரு செய்தி குறித்த  பகிர்வு அனைத்தையும் ஒரே பகிர்வாய் பகிர்ந்தால்  படிக்கும் போது ஒன்றோடொனேறு தொடர்புடையதாய்  இருக்குமே..

உதாரணமாக மலேசிய  விமான விபத்துக்கள் குறித்து  அனைத்து செய்திகள்  சந்தேகங்கள்,  கேள்விகள்,  விவாதங்கள்,  நாம்  கேட்டவை படித்தவை என அனைத்துமே  அங்கொன்று இங்கொன்றால் சேனையில் பதிவாக்கப்டாமல்  ஒரே திரியில் தொடர்ந்தால் படிப்பவருக்கும்   முன் பின் என்ன நடந்தது என உணர்ந்து  படிக்க உதவியாயிருக்கும்.  
 

இதோ http://www.chenaitamilulaa.net/t44712-topic#386524இந்த திரி யில் ஏற்கனவே  தொடங்கி இருக்கிறோம்தானே.. அத்துடன் இச்செயிதியை இணைத்து விட்டு  மலேசிய விமான் விபத்து தொடரும் சந்தேகங்கள்  என தலைப்பிட்டு தொடரலாமே..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty தேடுதல் வேட்டையில் சூனியக்காரர்

Post by பர்ஹாத் பாறூக் Thu 13 Mar 2014 - 21:17

மாயமான விமானம்!..தொடரும் மர்மங்கள்!..


தேடுதல் வேட்டையில் சூனியக்காரர்

மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.

அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார்.

அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.

விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Missing_plane_009
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 21:26

தேடுதல் வேட்டையில் சூனியக்காரர்


ஹாஹா  2014ல் உலகத்தின்  மிகபெரிய ஜோக்கராய் மலேசியா  இருக்க விரும்புகிறதோ!

பறந்து கொண்டிருக்கும் அல்லது  விழுந்திருக்கும்  என்பதை சின்ன குழந்தை கூட சொல்லுமே! இதை சொல்ல எதுக்கு சூனியக்காரரும் மந்திரவாதியுமாம்.

Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 21:29

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். 3562481
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Muthumohamed Thu 13 Mar 2014 - 22:52

அனைத்தும் அறிந்த இறைவனுக்கு தான் வெளிச்சம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 14 Mar 2014 - 8:01

இத்தனை நாட்கள் ஆகியும் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்... கண்டுபிடித்த அறிவியல் தொழில் நுட்பகங்கள் எதற்கு?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by பானுஷபானா Fri 14 Mar 2014 - 11:11

கவியருவி ம. ரமேஷ் wrote:இத்தனை நாட்கள் ஆகியும் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்... கண்டுபிடித்த அறிவியல் தொழில் நுட்பகங்கள் எதற்கு?

உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் உலகத்தையே கண்காணிப்பில் வைத்திருக்கின்றோம் என்று பயங்காட்டி வந்த அமெரிக்காவின் பூச்சாண்டி இந்த சம்பவத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த சவால் முறியடிக்கப்பட்டுவிட்டது.


இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி குறி சொல்லி காசு பார்க்கும் போலி முரீதுகள், ஷேகுகள், பீர்கள் என அனைவரது போலி முகமும் இந்த சம்பவத்தின் மூலம் கிழிந்து தொங்கிவிட்டது.

அதுபோல உலகில் நடக்கும் அத்தனை விஷயங்களும் எங்களுக்குத் தெரியும்; நாளை என்ன நடக்கப்போகின்றது என்பதும் எங்களுக்குத் தெரியும்; எங்களுடைய ஞானக்கண்ணை வைத்து அனைத்து விஷயங்களையும் பார்த்து சொல்லி விடுவோம் என்று சொல்லிக்கொள்ளும் சாமியார்கள்;

வெற்றிலையில் மை போட்டுப்பார்த்து மறைவானதை சொல்வதாக புருடா விடும் மந்திரவாதிகள்;

கிளியையும், எலியையும் வைத்து ஜோசியம் பார்த்து மறைவானதை சொல்வதாக பொய் சொல்லும் ஜோசியக்காரர்கள்;

பரிசுத்த ஆவி உந்துதலின் காரணமாக அனைத்து செய்திகள் குறித்தும் முன்னறிவிப்புச் செய்யும் ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று சொல்லும் பாதிரிமார்கள்; கிறித்தவ போதகர்கள்;

பெரும் சவாலாக இருந்த இவர்களது புருடாக்களும், சவால்களும் முடிவுக்கு வந்துவிட்டன.

இவர்களுக்கு உண்மையிலேயே மறைவானதை அறியும் ஆற்றல் இருந்திருக்குமேயானால் மாயமான மலேசிய விமானம் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்க வேண்டியது தானே!


நன்றி பிஜே


மறைவான ஞானம் படைத்த இறைவனைத்தவிர வேறு எவருக்கும் இல்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 17:05

மலேசிய விமானம் கடத்தல்? தொடர்பை இழந்த பின்னும் பயணம், செயற்கைகோள் புதிய தகவல்; தேடும் பணி தீவிரம்
கோலாலம்பூர்,

மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.  இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரேடார் தொடர்பு இழப்பு
மலேசிய விமானம் 239 பயணிகளுடன் கடந்த 7–ந்தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம், புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்துக்குப் பின்னர், அதாவது 8–ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி) ரேடார் தொடர்பை இழந்தது.
தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

தேடுதல் வேட்டை
விபத்தைத் தொடர்ந்து மலேசியா, வியட்நாம் நாடுகள் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்துகின்றன. சீனாவும்  கடற்படை மீட்பு கப்பல்களை தெற்கு சீனக்கடல் பகுதிக்கு அனுப்பியது. அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட இந்த ‘போயிங் 777–200’ ரக விமானம் சந்தித்துள்ள மிக மோசமான விபத்து இது என தகவல்கள் கூறுகின்றன. இந்த ரக விமானம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சான் பிரான்சிஸ்கோவில் தான் (அமெரிக்கா) முதல் முதலாக விபத்தில் சிக்கி, 3 பேரை பலி கொண்டது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. விமான பாகங்கள், பலியானவர்களின் உடல்கள் மீட்கப்படும் வரையில் மீட்புப்பணிகள் நீடிக்கும் என்று மலேசியா கூறியுள்ளது.

தேடுதல் வேட்டை விஸ்தரிப்பு
விமானம், வியட்நாம் அருகே பு குவாக் தீவிற்கு 153 மைல் தெற்கே கடலில் விழுந்து மூழ்கியதாகவும், இது வியட்நாம் ராணுவ ரேடாரில் பதிவாகியதாகவும் தகவல்கள் வெளியாகின.
விமானத்தின் பாகங்களையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் வேட்டையில் 34 விமானங்கள், 40 கப்பல்கள், 10 நாடுகளின் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டையில் எந்தவொரு சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்த விமானம் கடைசியாக ரேடாரில் பதிவாகியுள்ள இடத்திலிருந்து 185 கி.மீ. பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை விஸ்தரிக்கப்பட்டது. லாவோஸ் - கம்போடியா இடையே நிலப்பரப்பிலும் தேடுதல் வேட்டை நடத்தும்படி உத்தரவிட்டிருப்பதாக வியட்நாம் ராணுவ துணைத்தலைவர் கூறினார்.

திருட்டு பாஸ்போட்டில் பயணம்
விபத்துக்குள் சிக்கிய விமானத்தில் இரண்டு பேர் திருட்டு பாஸ்போர்ட்டில் சென்றுள்ளனர். இதனை அடுத்து விமானம் கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் இல்லாத நிலையில் போலி பாஸ்போர்ட் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். தூதரங்கள் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு டிக்கெட், அடையாள அட்டைகள், விமான நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து அதிகாரிகள் விசாரித்தனர். சில பயணிகள் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் டிக்கெட் வாங்கியது தெரியவந்தது.

திருட்டு பாஸ்போர்ட்டில் ஈரானை சேர்ந்தவர்கள்
மாயமாகியுள்ள விமானத்தில் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேர் தீவிரவாதிகளா, அவர்கள் விமானத்தை கடத்த முயற்சித்து, அதில் ஏற்பட்ட தகராறில் விமானம் புறப்பட்ட இடத்துக்கு திரும்ப முற்பட்டதா, அப்போது விபத்து நேரிட்டதா அல்லது அவர்களே நாசவேலையில் ஈடுபட்டு விபத்தினை ஏற்படுத்தினார்களா என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது.

அந்த 2 நபர்களுக்காக டிக்கெட் வாங்கிக் கொடுத்த ஈரான்வாசி காஜிம் அலி என்பவர் பற்றி பயண நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காஜிம் அலி எந்தவொரு தீவிரவாத தொடர்பும் இல்லாதவர் என தெரியவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேரும் ஈரான்வாசிகள் என்பது உறுதியாகி இருக்கிறது. அவர்கள் பவ்ரியா நூர் முகமது (வயது 19), தெலாவர் சையத் ரேஸா (30) ஆவார்கள்.

போலீஸ் ஐ.ஜி. தகவல்
இது தொடர்பாக கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபு பக்கர், பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பவ்ரியாவின் பின்னணி பற்றி விசாரணை நடத்துகிறோம். அவரது குறிப்புகளை வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் எந்தவொரு தீவிரவாத அமைப்பின் உறுப்பினராகவும் இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அவர் ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்து செல்லும் நோக்கத்துடன்தான் விமானம் ஏறியுள்ளார். அவரது தாயார் ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் உள்ளார். அவரையும் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது என கூறினார்.

எப்.பி.ஐ. ஆய்வு
5 பயணிகள் டிக்கெட் வாங்கிவிட்டு விமானத்தில் பயணம் செய்யவில்லை என வெளியான தகவலையும் கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் மறுத்தார்.

முடிவாக அவர் கூறுகையில், 4 கோணங்களில் விசாரணை நடத்துகிறோம். அதாவது, விமானம் கடத்தப்பட்டதா? நாசவேலை நடந்ததா? பயணிகள், சிப்பந்திகளில் யாருக்கேனும் உளவியல் பிரச்சினைகள் இருந்ததா? பயணிகள் மற்றும் சிப்பந்திகளுக்கு தீவிரமான தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததா என ஆராய்ந்து வருகிறோம். 14 நாடுகளை சேர்ந்த பயணிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றார். விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் கைரேகை பதிவுகளை அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது.

படங்கள் வெளியீடு, தீவிரவாதிகள் அல்ல
இந்த நிலையில் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்த ஈரான்வாசிகள் 2 பேரின் புகைப்படங்களையும் சர்வ தேச போலீஸ் (இன்டர்போல்), பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள தனது தலைமையகத்தில் வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணையும் நடத்துகிறது. அதே நேரத்தில் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றி சர்வதேச போலீஸ் உயர் அதிகாரி ரொனால்டு நோபிள் கருத்து தெரிவிக்கையில், பவ்ரியா நூர் முகமதி, தெலாவர் சையத் ரேஸா ஆகிய இருவரும் கோலாலம்பூருக்கு தங்களது ஈரான் பாஸ்போர்ட்டுடன்தான் வந்துள்ளனர். அங்கிருந்து திருட்டு பாஸ்போர்ட்டில் பீஜிங் விமானத்தில் ஏறி இருக்கிறார்கள் என்று கூறினார்.

புதிய தகவல், மலேசியா மறுப்பு
இந்த நிலையில், அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்தத்தகவல் சரியானது அல்ல என்று மலேசியா மறுத்து விட்டது. இதுதொடர்பாக மலேசிய விமானப்படை தளபதி ரோட்ஜாலி தாவுத் கூறுகையில், மலாய் பத்திரிகை பெரட்டா ஹாரியன், மாயமான விமானம் ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக மலாக்கா ஜலசந்தி பகுதியில் பறந்ததாக வெளியிட்ட தகவல் தவறானது என்றார். மாயமான விமானம் கடைசியாக மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும், வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உண்மையை சொல்லுங்கள்
இந்நிலையில் விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை தெரிவியுங்கள் என்று விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள், பீஜிங்கில் மலேசிய மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு தங்களது கோபத்தை வெளிபடுத்தியுள்ளனர். பீஜிங்கில் ஓட்டல் ஒன்றில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேசிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் ஏன் மலேசிய ராணுவம் தங்களுக்கு தெரிந்த ரகசியத்தை வெளிபடுத்தாமல் உள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

விமானி குறித்து ஆஸ்திரேலியா பெண் தகவல்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி அப்துல் ஹமீது கடந்த 2011ம் ஆண்டு என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார் என்று புதிய தகவலை வெளியிட்டார். அவர், மிகவும் ஜாலியாக பைலட்கள் பேசினார்கள் என்றும் முழு விமானம் முழுவதும் சுற்றினோம் என்றும் கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம்.

அப்போது விமானி அப்துல் ஹமீது எங்களை விமான ஓட்டிகள் அறையில் இருந்து பயணிக்க விருப்பமா என்று கேட்டனர். நாங்களும் சென்றோம். அவர்கள் எங்களுடன் மிகவும் ஜாலியாக பேசினர். புகைப்படம் எடுத்தனர். புகைப்பிடித்தனர். அவர்கள் மிகவும் நண்பர்களாக பேசினர்.  நாங்கள் எங்களது தாய்லாந்து பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார்.

'கொஞ்சம் ஒழுக்கம் கெட்ட' செயல்
தற்போது மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி 'கொஞ்சம் ஒழுக்கம் கெட்ட' செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜோந்தி ரோஸ் கூறியுள்ளார். ஹமீத் குடும்பத்திற்கு மற்றும் நண்பர்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நண்பர் ஹமீது ஓட்டி சென்ற விமானம் மாயமாகியது குறித்து கேள்விபட்டதும் எனது இதயம் வெடித்துவிட்டது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இளம்பெண்ணின் இந்த தகவல் மாயமான விமானம் விவகாரத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஆல் ரைட், குட் நைட்'  பைலெட்டின் இறுதி தகவல்
இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக 'ஆல் ரைட், குட் நைட்'  என்று கூறியுள்ளார். விமானம் ரேடார் தொடர்பை இழந்ததற்கு முன்னர் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல் இது தான் என்று கோலால்பூர் விமான கட்டுபாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவி
இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் உதவியை மலேசியா நாடியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டெல்லியில் கூறுகையில், மாயமான விமானத்தை கண்டறிய இந்தியாவின் உதவியை மலேசியா நாடி உள்ளது. இந்த பிரச்சினையில், அதற்கான உரிய நபர்களை நியமிக்கிறோம். இதுதொடர்பான தகவல்களும் பகிரப்படுகின்றன என்றார்.
மாயமான விமானத்தை தேடும் பணி அந்தமான் தீவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்தியாவின் உதவியை மலேசியா நாடி உள்ளது. அந்தமானில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

சீனா செயற்கைகோள் புதிய தகவல்
இதற்கிடையே வரலாறு காணாதவகையில் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 10 செயற்கைக்கோள்களை சீனா தேடும் பணியில் தீவிரபடுத்தப்பட்டது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீனா செயற்கைக்கோள் ஒன்று வியட்நாமின் தென்முனையில் கடற்பகுதியில் மிதக்கும் பொருட்கள் கிடந்ததை கண்டுபிடித்துள்ளது என்று அந்நாட்டு அரசு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாயமான விமானத்தில் உடைந்த பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தின் உடைந்த பொருள்தான என்று உறுதி செய்யப்படவில்லை. படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகம் இல்லை என்று வியட்நாம் மற்றும் மலேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தி மறைத்து வைப்பு?
இந்நிலையில்  மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் விசாரணை
அமெரிக்க அதிகாரிகள் விமானம் மற்றொரு பாதைக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்த பிறகு நான்கு மனி நேரம் தொடர்ந்து தாழ்வாக பறந்துள்ளது. விமான ஓட்டி அல்லது வேறு யாரவாது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு சாதனங்களை துண்டிக்க செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

விமானம் பறந்த நான்கு மணி நேரங்களில் 2, 200 கடல் மயில்கள் தூரம் பயணம் செய்திருக்கலாம். இது பாகிஸ்தான் மற்றும் அரேபியன் கடல் உள்ளடக்கிய பகுதிகளுக்குள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தீவிமாக நடந்து வருகிறது.



http://www.dailythanthi.com/2014-03-13-Was-missing-jet-HIJACKED-Missing-Malaysia-Airlines-plane-flew-on-for-hours-report
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 17:09

மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம்; ரேடார் பதிவுகள் தெரிவிக்கிறது
கோலாலம்பூர்,


மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்துள்ளது என்று ரேடார் பதிவுகள் தெரிவிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இன்று (வெள்ளிக்கிழமை) 7–வது நாளாக தொடர்கிறது. 12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் சிறிதும் பலன் இல்லை.


விமானம் விபத்தில் சிக்கியதா, கடத்தப்பட்டதா, நாசவேலையில் சிதைக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் உலக நாடுகள் எல்லாம் தவிக்கின்றன.
இருப்பினும் வியட்நாமில் ‘பு குவாக்’ தீவிற்கு 153 மைல் தெற்கே அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக வெளியான முதல்கட்ட தகவலின் அடிப்படையில் 12 நாடுகளின் 42 கப்பல்கள், 39 விமானங்கள் அதைத் தேடி வருகின்றன. இவற்றில் சீனாவின் 8 கப்பல்கள், 3 விமானங்கள், 10 செயற்கைக்கோள்களும் அடங்கும்.
இதற்கிடையே மாயமான விமானம் கடைசியாக ரேடார் திரையில் தோன்றியதற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் வானில் பறந்திருப்பதாக 2 வல்லுனர்களது தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ கூறி உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையையோ, இந்திய பெருங்கடல் அல்லது அரபிக்கடல் பகுதியில் உள்ள இடத்தையோ சென்றடைந்திருக்க முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக, விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னர் மலாக்கா ஜலசந்திக்கு மேல பறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் மறுக்கப்பட்டன.
முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாயமன மலேசிய விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது. விமானம் இந்திய பெருங்கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து அமெரிக்கா, விமானம் தேடலை மேற்கு பகுதிக்கு மாற்றியுள்ளது.  இந்தியாவும் அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடி வருகிறது.


அமெரிக்கா, கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அந்தமான் கடல் பகுதியில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியில் மாயமான விமானத்தை தேடும் பணியினை தொடங்குகிறது.


அமெரிக்காவின் பி-3சி ஓரியன் விமானம் விரைவில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியான அந்தமான் பகுதியில் விமானத்தை தேடும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் முன்னதாக மலாய் தீபகற்பத்தின் மேலே அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்தாதாக இராணுவ ரேடார் கண்காணிப்பு பதிவுகள் தெரிவிப்பதாக விசாரணை அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.dailythanthi.com/2014-03-14-Missing-jet-deliberately-flown-towards-Andamans-modify


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 17:13

மலேசிய விமானம் மாயம்: 12 நாடுகளை சேர்ந்த 42 போர்க் கப்பல்கள் 40 விமானங்கள் தேடுதல் வேட்டையில் தீவிரம்

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Malysiyaflight1432014


நியூயார்க்,
கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதாஎன பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது.

 மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- ,
 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். எனகூறினார்
.அவர்கள் பூர்யா மெர்டேட்  முகமது நூர், 19, மற்றும் தெலவார் சையத் முகமது ரேசா, 29,ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்

மலேசிய விமானம் மாயமானது குறித்து சீன பிரதமர் லீ கெஹியாங் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயமான விமானம் குறித்த தகவலுக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் தேடுதல் பணியை கைவிடவே மாட்டோம். இந்தச் சம்பவத்தால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் சீனப் பயணிகளுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

 மலேசிய விமானம் காணாமல்போன வியட்நாம் தெற்கு கடலோர பகுதியில் விமானத்தின் சிதைந்து போன பாகங்கள் போன்று தோற்றமளிக்கும் 3 பொருட்கள் கடலில் மிதப்பதாக சீன செயற்கை கோள் கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.  இந்த தகவலை சீன ராணுவத்தின் அறிவியல், தொழில்நுட்ப நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் இதை வியட்நாம் மறுத்து விட்டது. இத்தகவல் கிடைத்தவுடன் தனது 2 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை உடனடியாக அனுப்பி நேரடியாகவும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் மிதக்க வில்லை என்றும் உறுதியாக தெரிவித்தது.
 
இதற்கிடையே, மாயமான விமானம் திசைமாறி மலாக் கலா ஜலசக்தி பகுதியில் பறந்ததாக தகவல் வெளி யானது. எனவே இப்பகுதியில் கடலில் விழுந்து மலாக்கா ஜலசக்தி வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு சென்ற இருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்கா கூடுதலாக பி-8 போசிடன் கண்காணிப்பு விமானம் மற்றும் பி-3 ஓரியன் விமானங்களை தேடுதல் பணியில் ஈடுபடுத் தியுள்ளது.

மலேசியா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்தியாவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 5 போர்க்கப்பல்கள் மற்றும் 5 விமானங்கள் இப்பணியில் இறங்கியுள்ளன.

எனவே, அமெரிக்கா தனது ஏவுகனை அழிப்பு போர்க் கப்பலை இந்திய பெருங்கடலுக்கு அனுப்பி யுள்ளது. அக்கப்பல் தாய் லாந்து வளைகுடா பகுதியல் தேடுதல் வேட்டையை நடத்துகிறது.

 அந்தமான் தெற்கே இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் அந்தமான் கடலில் சுமார் 35,000 சதுர கி.மீட்டர் தொலைவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. இவை தவிர தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணைய உள்ளது. மேலும் இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணி மூலமும் விமானத்தை தேடும் பணி தொடங்கியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகனும்  ஈடுபட்டு உள்ளது

http://www.dailythanthi.com/2014-03-14-12-countries%252C--using-a-total-of-42-ships-and-40-aircraft-to-search-for-the-missing-plane


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 17:15

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் கீழ் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல்

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Malysiyaflight14320142

நியூயார்க்,
கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதாஎன பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகனும்  ஈடுபட்டு உள்ளது.

இந்த விமானம் ராடார்களின் பார்வையில் இருந்து மறைந்த பின்னர் பல மணி நேரங்கள் செய்கோள் ஒன்றுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்திருக்கலாம் என்று சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் புதிதாக குறிப்பிடத்தக்க துப்பு எதுவும் கிடைக்கவில்லை, புதிய கோணத்தில் விசாரணை நடக்கிறது அவ்வளவுதான் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடரபாலர்  ஜே கார்னி தெரிவித்தார்.

சின்குவா அறிக்கை சீன அரசு செய்தி நிறுவனம்   இன்று ஒரு சீன நிலநடுக்க இயல் மற்றும் ஆராய்ச்சி குழு கடந்த சனிக்கிழமை காலை 5 உள்ளூர் நேரத்தில் மலேஷியா மற்றும் வியட்நாம் இடையே கடல் ஒரு "பூகம்பம் அலை" கண்டறியப்பட்டது என்று. கூறியது

அமெரிக்கக் கடற்படைக் கப்பலான யுஎஸ் எஸ் கிட் தாய்லாந்து வளைகுடாவிலிருந்து மலேசியாவின் மேற்குக் கடற்கரைக்கு விரைகிறது என்று அமெரிக்க கடற்படை அறிவித்திருக்கிறது.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் கீழ் இருக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

http://www.dailythanthi.com/2014-03-14-US-official%253A-Missing-Malaysian-Airlines-plane-is-at-bottom-of-Indian-Ocean


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 17:20

மலேசிய விமானத்தின் கதி என்ன? முரண்பட்ட தகவல்களால் குழப்பம்


பீஜிங்,
மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் இதை வியட்நாம் மறுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கதி என்ன?
6 நாட்களாகியும், நடுவானில் 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா, கடத்தப்பட்டதா, நாசவேலையில் சிதைக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் உலக நாடுகள் எல்லாம் தவிக்கின்றன.

இருப்பினும் வியட்நாமில் ‘பு குவாக்’ தீவிற்கு 153 மைல் தெற்கே அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக வெளியான முதல்கட்ட தகவலின் அடிப்படையில் 12 நாடுகளின் 42 கப்பல்கள், 39 விமானங்கள் அதைத் தேடி வருகின்றன. இவற்றில் சீனாவின் 8 கப்பல்கள், 3 விமானங்கள், 10 செயற்கைக்கோள்களும் அடங்கும்.

சீனா அறிவிப்பு
இந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் உதவியை மலேசியா நாடியது. அதன்பேரில் இந்தியாவும் 3 போர்க்கப்பல்களையும், ஒரு விமானத்தையும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மலேசிய விமானம் காணாமல் போன இடத்தில் (வியட்நாமின் தெற்கு கடலோரப்பகுதி) விமானத்தின் சிதைந்துபோன பாகங்கள் போன்ற தோற்றமளிக்கும் 3 பொருட்கள் கடலில் மிதந்ததை சீன செயற்கைக்கோள் ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ராணுவத்தின் அறிவியல், தொழில் நுட்பம், தொழில் நிர்வாகம் நேற்று காலையில் தெரிவித்தது.

பிரதமர் பேட்டி
இது தொடர்பாக சீன பிரதமர் லி கெகியாங் பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘‘239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தில் 154 பேர் சீன மக்கள். அவர்களின் குடும்பங்கள் வேதனையில் தவிக்கின்றன. அந்த விமானம் பற்றிய தகவலுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். ஒரு சிறிய தகவலாவது வந்துவிடாதா என எதிர்பார்க்கிறோம். ஒரு துளி நம்பிக்கை இருக்கிறவரை, அந்த விமானத்தை தேடும் பணியை சீனா நிறுத்தாது’’ என கூறினார்.

வியட்நாம் மறுப்பு
சீனாவின் தகவலை அடுத்து அந்தப்பகுதிக்கு வியட்நாம் 2 கப்பல்களையும், 2 விமானங்களையும் உடனடியாக அனுப்பி வைத்தது. ஆனால் சீனா கூறியது போன்ற அந்தப்பகுதியில் உள்ள கடலில் விமானத்தின் சிதைந்து போன பாகங்கள் போன்று எதுவுமே மிதக்கவில்லை என தெரியவந்துள்ளது.
எனவே சீனாவின் தகவலை வியட்நாம் உறுதியாக மறுத்துள்ளது.

சீனா, வியட்நாம் ஆகிய இருநாடுகளின் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


மேலும் 5 மணி நேரம் பறந்ததா?
இதற்கிடையே மாயமான விமானம் கடைசியாக ரேடார் திரையில் தோன்றியதற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் வானில் பறந்திருப்பதாக 2 வல்லுனர்களது தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ கூறி உள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையையோ, இந்திய பெருங்கடல் அல்லது அரபிக்கடல் பகுதியில் உள்ள இடத்தையோ சென்றடைந்திருக்க முடியும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நபர்களில் ஒருவர் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை நிறுவனத்திடம் பேசுகையில், ‘‘ மலேசிய விமானத்தின் பராமரிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த விமான என்ஜினிலிருந்து தகவல்கள் தானியங்கி முறையில் ‘ரோல்ஸ் ராய்ஸ்’க்கு ஆய்வுக்காக வந்து கொண்டிருக்கும்.
 
என்ன உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. விமானத்தின் வேகம் என்ன என்பது போன்ற விவரங்கள் வரும். அந்த அடிப்படையில்தான் விமானம் கடைசியாக காணப்பட்டதற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் பறந்திருக்கிறது என்கிறோம்’’ என்று கூறினார்.


மந்திரவாதிகள்
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இன்று (வெள்ளிக்கிழமை) 7–வது நாளாக தொடர்கிறது. 12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் சிறிதும் பலன் இல்லை.

இந்த நிலையில், மாயமான விமானத்தை கண்டறிவதில் மந்திரவாதிகளின் உதவியை மலேசியா நாடி உள்ளது. அங்கு பிரபலமாகியுள்ள இப்ராகிம் மத் சின் என்ற மந்திரவாதியை முதற்கட்டமாக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மலேசிய அரசு வரவழைத்து, காணாமல் போன விமானம் குறித்து குறி கேட்டது.

இதற்கு அவர், ‘‘ மாயமான விமானம் இன்னும் பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கும்’’ என கூறினார். மாயமான விமானம் குறித்து மந்திரவாதிகளிடம் திரை மறைவிலும் குறி கேட்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

http://www.dailythanthi.com/2014-03-14-Missing-Malaysian-plane-may-have-flown-up-to-five-hours-US-officials-say


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 18:42

அமெரிக்காவின் பார்வையில் விமானம் அந்தமான் நிக்காபார் தீவுகள் அருகே சென்றிருக்காலம் என்பதே! இந்டியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியாவும் இப்போது தனது கடற்ப்றப்பில் தேடுகின்றது. அமெரிக்க கப்பல் ஒன்றும் இந்து சமுத்திரத்தில் தேடுதலை ஆரம்பித்திருக்கின்றன.
மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Article-2579955-1C47505700000578-824_634x462
நன்றி Dailymail





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 18:43

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Article-2579955-1C45E0A800000578-807_634x992


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 18:43

மலேசிய விமானம் மாயம் - அமெரிக்க மாணவரின் அதிர வைக்கும் தியரி


டம்ளர் என்ற வலைத்திரட்டியில் ஆண்ட்ரூ என்கிற அமெரிக்க மாணவர் எழுதியுள்ள கட்டுரை பரபரப்பாகியிருக்கிறது. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு புரொபஷனல் பைலட். அதனால் சிறுவயதிலிருந்தே விமானம் பற்றி ஆர்வம். அதனால் மலேசிய விமானம் மாயமானதும் அது தொடர்பாக நிறைய வாசித்து அம்மாணவர் எழுதியுள்ள கட்டுரை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அக்கட்டுரையில் உள்ள நம்பகத்தன்மை.

சில விமானங்களில் சில கோளாறுகள் ரெகுலர். அது போல போயிங் 777 விமானங்களின் முதுகில் துருப்பிடிக்கக்கூடிய கோளாறுகள் ரெகுலர்.

போயிங் 777 விமானங்களின் முதுகுப்பகுதியில் சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள உதவும் SATCOM Adapterகள் உள்ளன. அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அடிக்கடி துருவேறி பிளந்து கொள்ள வாய்ப்பு உண்டாம்.

"cracking in the fuselage skin underneath the satellite communication (satcom) antenna adapter"

விமானத்தின் முதுகுப்பகுதியில் பிளவு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போய், மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும்.

கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக செப்டம்பர் 26, 2013ம் தேதி வெளியான FAA அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு போயிங் 777 வகை விமானத்தில் 40.6 செ.மீ அளவுக்கு ஒரு பிளவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக FAA ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

மலேசிய விமானம் MH370க்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிளவு ஏற்பட்டதும் முதலில் சாட்டிலைட் தொடர்புகள் அனைத்தும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கும். அதைப்பற்றி உணர்வதற்குள் பைலட்டுகளும், பயணிகளும் தாங்களே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார்கள்.

ஆனாலும் ஆட்டோ பைலட் நிலையில் இருந்த விமானம் தொடர்ந்து அதே உயரத்தில் பறந்திருக்கலாம். பின்னர் விமானத்துக்குள் அழுத்தம் குறைவு மற்றும் எரிபொருள் காலியானது காரணமாக கிழக்கு சைனா அல்லது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம்.

PPRUNE - Professional Pilots Rumour Network என்ற ஆன்லைன் குழுத்தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்துதான் இந்த சிந்தனைக்கான இழையைப் பிடித்ததாக ஆண்ட்ரூ கூறியுள்ளார்.



எழுதியவர் Selva Kumar ISR நேரம் Thursday, March 13, 2014


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum