சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Khan11

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

+6
Nisha
*சம்ஸ்
பானுஷபானா
rammalar
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Muthumohamed Tue 11 Mar 2014 - 21:05

First topic message reminder :

திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.

___________________________________________________________

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 18 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.

1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.

3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது. முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.

4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.

5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.

6. இன்று நடந்த மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.

2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது


மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 1510983_626670754046976_1458038067_n

riyasbanu viswa
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Mon 17 Mar 2014 - 12:49

மாயமான விமானத்தின் சிக்னல் சிஸ்டம் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எந்தவித பிரச்சனையைப் பற்றியும் தெரிவிக்காமலேயே பேசியுள்ளார்.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக இதில் விமானி அல்லது விமானிகளின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 17-malaysia-airlines-b-777-2-600

விமானத்தில் உள்ள சிக்னல் சிஸ்டங்கள் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமானி ஒருவர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் விமானம் கடத்தப்பட்டதில் விமானி அல்லது இரண்டு விமானிகளின் பங்கும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

விமானம் வழக்கமான வழியில் இருந்து மாறி வேறு வழியில் ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்துள்ளது. விமானம் எதற்காக வழி மாறியது, ஏன் அத்தனை மைல்கள் பறந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

http://tamil.oneindia.in/news/international/timing-report-flight-s-pilot-focuses-inquiry-195733.html
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Mon 17 Mar 2014 - 12:51

1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில்

கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை.

முன்னதாக மலேசிய விமானம் மாயமான பகுதியில் 6 விமானங்கள் மாயமாகியுள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Mon 17 Mar 2014 - 12:54

3 ராணுவ ராடார்களை கடந்துள்ளது மலேசிய விமானம்: ஒருவர் கூடவா பார்க்கவில்லை?
செபாங்: மாயமான மலேசிய விமானம் தாய்லாந்து வளைகுடாவில் யு டர்ன் எடுத்து 3 ராணுவ ராடர்களை கடந்து சென்றதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சீனாவுக்கு சென்ற மலேசிய விமானம் மாயமானது. அந்த விமானம் தாய்லாந்து வளைகுடாவில் பெரிய யு டர்ன் அடித்து திரும்பி குறைந்தது 3 ராணுவ ராடார்களை கடந்து வடக்கு மலேசியாவை அடைந்து நாட்டின் பெரிய நகரம் ஒன்றின் வழியாக பறந்து சென்று மலாக்கா ஜலசந்தி பக்கம் சென்றுள்ளது.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 16-malaysian-airlines-signaj-6

இந்நிலையில் மலேசிய விமானப்படை கட்டுப்பாட்டு அறையில் இருந்த 4 பேர் விமானம் ஒன்று அனுமதி இன்றி வந்ததை கவனிக்காமல் இருந்துள்ளனர்.

விமானம் மலேசிய ராணுவ அதிகாரிகளின் கண்ணில்படாமல் அங்கு பறந்து சென்றுள்ளது என்பது வித்தியாசமாக உள்ளது. ஏன் அதிசயமாகக் கூட உள்ளது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மாயமான சில மணிநேரத்திலேயே மலேசிய ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலர் கூறுவது போன்று விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருந்தால் தேடுதல் பணி சிரமமாகிவிடும். இந்நிலையில் மலேசிய அரசு கவனக்குறைவாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மலேசிய அரசு உண்மையை மறைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/international/evidence-missteps-malaysia-mounts-complicating-flight-searc-195677.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by பானுஷபானா Mon 17 Mar 2014 - 13:11

என்ன தான் ரகசியம் இருக்கோ இறைவனுக்கே வெளிச்சம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Mon 17 Mar 2014 - 13:17

தலைப்பில் விமான  என்பதுக்கு  ன் மேலிருக்கும் புள்ளியை  நீக்கி விட முடியுமா பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by பானுஷபானா Mon 17 Mar 2014 - 13:46

Nisha wrote:தலைப்பில் விமான  என்பதுக்கு  ன் மேலிருக்கும் புள்ளியை  நீக்கி விட முடியுமா பானு!

நீக்கிட்டேன் நிஷா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Muthumohamed Mon 17 Mar 2014 - 20:43

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க ஏர்போர்ட்டுக்கு மந்திரவாதியை அனுப்பியது யார்?

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மந்திரவாதி வரவழைக்கப்பட்டதற்கு, அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து மலேசிய பிரதமர் அலுவலகம், “மந்திரவாதியை நாம் ஏர்போர்ட்டுக்கு அனுப்பவில்லை” என அறிவித்துள்ளது.

விமானத்தை கண்டுபிடிக்கும் மந்திர சடங்குக்காக, இரண்டு முழு தேங்காய்கள், ‘ஸாம்-ஸாம்’ மந்திர தண்ணீர், மந்திரக் கோல், மந்திர ஜமுக்காளம் ஆகியவற்றை மந்திரவாதி கொண்டுவந்தார்.

விமான நிலையத்தில் மந்திர ஜமுக்காளத்தை விரித்து, அதில் மந்திரவாதியும், சிஷ்யர்களும் ஏறி அமர்ந்தனர்.

மந்திரம் சொல்லும்போது, இவர்கள் ஏறி அமர்ந்துள்ள மந்திர ஜமுக்காளம் ஒரு படகாக மாறி, கடலில் சென்று விமானம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் என மந்திரவாதி தெரிவித்தார். (ஆனால் மந்திர ஜமுக்காளம் பறக்கவும் இல்லை, மிதக்கவும் இல்லை, இருந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை)

இதனால் வேறு வழியில் விமானத்தை கண்டுபிடிக்க ஆலோசனை செய்துவிட்டு வருவதாக கூறிய மந்திரவாதி, தேங்காய் சகிதம் புறப்பட்டு போய் விட்டார்.

இந்த மந்திரவாதியை மலேசிய அரசே ஏற்பாடு செய்தது என்ற தகவல் மலேசிய மீடியாக்களில் வெளியானது.

அதையடுத்து, இந்த மந்திர சடங்குக்கு மலேசிய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தங்களுடைய கடும் கண்டனங்களை வெளியிட்டனர். எதிர்க்கட்சி தலைவர்கள், “இதனை தேசிய அவமானமாக கருத வேண்டும். இவர்களை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.

இவர்களை தாம் ஏற்பாடு செய்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ள பிரதமர் அலுவலக அமைச்சகம், “இஸ்லாமிற்கு புறம்பான இத்தகைய செயல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்” என அறிவித்துள்ளது.

மலேசிய அரசுத் துறை மார்க்க தலைவர்கள், “இது இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது. இது குறித்து பத்வா (ஆழ்ந்த மார்க்க அறிவுடன் தெரிவிக்கப்படும் கருத்து) வெளியிடப்படும், இதனை மந்திரவாதி ஏற்க மறுத்தால் அவரும் சிஷ்யர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.

மந்திரவாதி ‘டாடுக் மகாகுரு’ இப்ராஹிம் மாத் ஸாயின் இதுகுறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

மூட நம்பிக்கையை உடைத்த மார்க்கத்தில் இப்படியும் மடையர்கள்?

நிஜத்தின் நிழல்நிமிடத்தின்உண்மைகள்.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 532206_431951536939982_1359570618_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Tue 18 Mar 2014 - 2:07

!*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Tue 18 Mar 2014 - 2:15

மறைந்த விமானம் கடத்தப் பட்டது என்பது 100 வீதம் உறுதியாக தெரிந்து விட்டது.
ஆம்! "ஓல்ரைட் குட்நைட்" என்று குரலுக்கு சொந்தக்காரர் அளையாளம் காணப்பட்டார். அவர் வேறு யாருமில்லை உதவி விமானி தான்.
தலைமை விமானிக்கு தெரிந்து தான் இவை நடை பெற்றதா என்று தகவல் இல்லை.



அந்த விமானத்தில் இன்னும் ஒரு சந்தேக நபரும் பயணம் செய்திருக்கின்றார். அவர் ஒர் "ஏரோட்டிகள் எஞ்சினியர்" அனேகமாக இவருடைய உதவியோடு தான் ராடரில் இருந்து மறையும் வேலை நடை பெற்றிருக்கவேண்டும்.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Article-2582595-1C5CEEAA00000578-854_634x292

நிர்ண‌யம் செய்யப் பட்ட உயரத்திற்கு கீழே விமானம் பறந்தால் ராடரில் தெரியாது. (இது அனேகருக்கு இது தெரிந்தும் இருக்கும்) இந்த பாணியில் விமானம் கொண்டு செல்ல பட்டிருக்கலாம்.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Article-2582595-1C5C8D1900000578-317_634x490

ஒரு இணையதளம் விமானம் பறக்க கூடிய தூரத்தில் இருந்த விமான நிலையங்களை கணக்குஎடுத்திருக்கின்றது. மொத்தம் 634 விமானநிலையங்கள் உள்ளன என்று அறிவித்திருக்கின்றது. (ஆனால் இதிலே பல விமான நிலையத்தில் இந்த விமானத்தை தரையிரக்க முடியாது. அப்படியும் கட்டாயப் படுத்தி இறக்கினால் விமான நிலையத்தில் அருகே வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய சத்தமும் அதே நேரம் பெரிய மாற்றமும் தெரியும்.)
http://www.slate.com/blogs/the_slatest/ ... anded.html

நன்றி Dailymail

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&p=1140837&sid=3aa29f26b86beca14a9f08a65cacd4c2#p1140837
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:23

அப்படி விமானத்தைக் கடத்தியவர்கள் என்ன தான் செய்து இருப்பார்கள்?

ஒன்னுமே புரியலையே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 12:33

இதற்கு  முன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப்   பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது.


6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாட்டினால் இந்த காணாமல் போன சம்பவத்தை  ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான்.   இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து  பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.  ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!


மலேசியன் ஏர்லைன்ஸ்  MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை !


நன்றி : மடவல நியூஸ்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Tue 18 Mar 2014 - 12:54

அந்த விமானம் எங்கே விழுந்தது என்பது   லேட்டானாலும் தெரிந்தது. இதுவோ என்னானது என்பதே தெரியவிலலையே!

இனியும் விமானத்தில் பயமின்றி பயணிக்க முடியுமா{


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by *சம்ஸ் Wed 19 Mar 2014 - 7:40

கவியருவி ம. ரமேஷ் wrote:அப்படி விமானத்தைக் கடத்தியவர்கள் என்ன தான் செய்து இருப்பார்கள்?

ஒன்னுமே புரியலையே...
விமானம் கடத்தப் பட்டு இருந்தால் இது வரைக்கும் அவர்கள் எந்த ஒரு நிபந்தனையும்  வைக்கவில்லை அதனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை.என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by *சம்ஸ் Wed 19 Mar 2014 - 17:34

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த தைவான் பல்கலை மாணவர்கள்.

மலேசிய விமானம் MH370 கடந்த 8ஆம் தேதி மாயமாய மறைந்து போனது. அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 26 நாடுகள் சேர்ந்த குழுக்கள் முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தைவான் பல்கலைக்கழக மாண்வர்கள் தற்செயலாக கூகுள் வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தைவான் காடுகளுக்கு இடையே ஒரு விமானம் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து reddit என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர்.

இன்னும் அந்த புகைப்படத்தில் இருப்பது மாயமான மலேசிய விமானம்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை எனினும், அந்த விமானம் அதுவாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த செய்தி தெரிந்த அந்த பகுதி கிராம மக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை பார்த்ததாகவும் கூறினார்கள். மாலத்தீவு அருகேயுள்ள Dhaalu Atoll என்ற தீவை சேர்ந்த பொதுமக்கள் பலர் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாகவும் கூறுகின்றனர். இந்த பரபரப்பான செய்திகளால் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.




மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 1510623_1421970951385021_8269240_n

நன்றி முகநூல் நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:21

சந்தோசமாக இருக்கிறது... அப்படி இருந்தால் மகிழ்ச்சிதான்... உயிர்கள் சீக்கிரம் காப்பற்றப்படட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by rammalar Thu 20 Mar 2014 - 5:23

காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம்
பற்றிய திடுக்கிடும் தகவல்களை, தெலுங்கு மொழி,
'டிவி' சேனல், நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆந்திர மாநிலம்,
நெல்லுார் மாவட்டத்தை ஒட்டிய, வங்கக் கடல் பகுதியில்,
மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்ற போது,
விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதை
 கண்டு உள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல்
தரப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக,
கடலுக்குள் சென்று, விமானத்தின் பாகங்களை
கைப்பற்றி, அது, காணாமல் போன விமானத்தின்
 பாகங்கள்தானா என விசாரித்து வருகின்றனர்

.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.எ
னினும், அந்த செய்தி உண்மை தானா என்பதை
உறுதிபடுத்த முடியவில்லை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:26

விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!


மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.

இப்போது நாம் கூறப்போகும் விஷயம், மலேசியாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், “விமானம் மூழ்கிவிட்டது” என்று மட்டும் அறிவித்தது.

அதை எப்படி கண்டுபிடித்தோம் என்று வாய்திறக்கவில்லை.

அதையடுத்து சீன அரசு ஆதாரம் கேட்டது, பயணிகளின் உறவினர்கள் கேட்டார்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவும், “மலேசியா என்ன வைத்திருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்” என்றது.

இதையடுத்து மலேசியா தாம் அதுவரை பொத்திக் காத்து வைத்திருந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு காட்ட.. மீதியை ஊகித்திருப்பீர்களே.. ஆம், விஷயம் அமெரிக்காவில் லீக் ஆகிவிட்டது.

இவர்கள் பொத்தி வைத்திருந்த ரகசியம் இதோ இதுதான்:

மலேசிய விமானம் ரேடியோ தொடர்பை இழந்த பின்னரும், ‘பிங்கிங்’ தொடர்பை வைத்திருந்தது (இதுபற்றி நாம் விளக்கமாக எழுதியதை பார்க்கவும்).

இந்த பிங்கிங் என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், விமானமும், சாட்டலைட்டும் மணிக்கொரு தடவை கைகுலுக்கி கொள்ளும் நடைமுறை. அதாவது, மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்ளும்.

மலேசிய விமானம் காணாமல் போன பின்னரும் சில மணி நேரத்துக்கு இந்த ‘பிங்கிங்’ நடந்திருக்கிறது. மணிக்கொரு தடவை அது பதிவாகியும் உள்ளது. அந்தப் பதிவுகளை ஆராய்ந்தபோது, அவற்றில் ஒரு ‘முற்றுப்பெறாத பிங்’ (partial ping) இருந்ததை கண்டிருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் அப்போது புரிந்து கொள்ளப்படவில்லை.

அதன்பின் விமானம் மாயமாகி வாரக்கணக்கில் மர்மம் நீடிக்கவே, இந்த ‘முற்றுப்பெறாத பிங்’ பற்றி சற்றே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான், அது வெறும் ‘முற்றுப்பெறாத பிங்’ மட்டுமல்ல, ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ (a failed login) என்பதை புரிந்து கொண்டார்கள்.

அதாவது, விமானத்தில் உள்ள சிஸ்டம், சாட்டலைட்டுடன் பிங் பண்ண முயன்று தோற்றது.

அதையடுத்து, அதுவரை பதிவாகிய பிங்குகள் அனைத்தையும் மீண்டும் செக் பண்ணியிருக்கிறார்கள். அவை சரியாக 1 மணி நேர இடைவெளியில் பிங் ஆகியுள்ளன. விமானம் ரேடியோ தொடர்பை இழந்தபின் அப்படி சரியாக 6 பிங்குகள் உள்ளன. இந்த அரைகுறை பிங், ஏழாவது.

அப்போது மற்றொரு விஷயத்தை கவனித்தனர். 6-வது பிங்குக்கும், இந்த 7-வது பிங்குக்கும் இடையே 1 மணி நேரம் இல்லை.

6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் 7-வது அரைகுறை பிங் முயற்சி நடந்திருக்கிறது.

அதன் அர்த்தம் என்னவென்றால், 6-வது பிங் முடிந்து 8-வது நிமிடத்தில், விமானத்தின் சிஸ்டம் உருக்குலைந்திருக்கிறது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிஸ்டம் ரீசெட் பண்ண தாமாகவே முயன்றிருக்கிறது (system to reset itself). ஆனால், ரீசெட் பண்ண முடியவில்லை. அதனால்தான் ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ பதிவாகியது.

இதன்பின் எந்தவொரு பிங்கிங்கும் நடைபெறவில்லை!

இதனால், 6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் விமானம் தண்ணீரில் மூழ்கியது என்ற ஊகத்துக்கு வந்துள்ளார்கள்.

ஏன் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? தரையில் வீழ்ந்திருக்க முடியாதா?

முடியாது. காரணம், இவர்களது கணிப்பின்படி, 6-வது பிங் இந்தியக் கடலின் தென்பகுதியில் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து 8 நிமிடங்களில் தரைக்கு போக முடியாது. எனவே தண்ணீரில் மூழ்கியது என முடிவு செய்தார்கள்.

இதுவரை நீங்கள் படித்தது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் மன்னிக்கவும், இதற்குமேல் இதை எளிதுபடுத்த நம்மால் முடியாது.

இவர்களது கணிப்பு, ஓரளவுக்கு ஊகத்தையும் சேர்த்துக் கொண்டதுதான் என்றாலும், தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுதான் இருப்பதற்குள் உத்தமம்.

இந்திய கடலின் தென் பகுதியில் விமானம் மூழ்கியிருக்க சான்ஸ் உள்ளது.



நன்றி

http://viruvirupu.com/2014/03/26/65717/#ixzz2x4uxAurK


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:29

விமானத்தில் சிதைவுகளை என்று நம்பம்படுகின்ற 122 மிதக்கும் பொருட்களை பிரான்ஸின் செய்மதி அடையாளம் கண்டுவிட்டது. அனேகமாக இது விமானத்தின் சிதைவுகள் தான் நன்றும் நம்பப் படுகின்ற‌து. 400 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவில் இவையுள்ளன. (இந்த அளவுகளை விமானங்கள் சுலபமாக நகல் எடுத்து சோதனை செய்து விடும்) இனி இதனை மீட்டு எடுப்பது தான் வேலை.

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Article-2589723-1C94951400000578-233_634x446மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Article-2589723-1C93936900000578-875_634x580



ஆனால் கருப்புப் பெட்டியை தேட பல காலம் செல்லலாம் எடுக்க பல வருடங்கள் கூட செல்ல‌லாம்.எடுக்காலமும் போகலாம்!.

Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:32

கடத்தப்பட்ட ஒரு விமானம் கடலில் விழும் காட்சி

நிஜ சம்பவம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:50

அந்த விமானிதான் தன்னோடு சேர்த்து பிறரையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. 

இந்த கேள்விக்குப் பதில் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 21:40

கவியருவி ம. ரமேஷ் wrote:அந்த விமானிதான் தன்னோடு சேர்த்து பிறரையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. 

இந்த கேள்விக்குப் பதில் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

தலைமை விமானி வயதான்வர்,  உதவி  விமானி திருமணத்துக்கு  திட்டமிட்டிருந்தவர் வாழ்க்கையின் எதிர்கால்ம் குறித்து கனவோடிந்தீருப்பார்!

விமானத்தியை இஅயக்கும் பணியில் சேர்வதும் அதற்கான படிப்பும் அவ்வளவு எளிதல்ல!  எல்லோராலும் இயலாததும் கூட. 

விமானிகளை  சந்தேகப்படுவதை விட அவர்கள் இழப்பால்  அவர்கள் குடுப்பத்தினர் படப்போகும் இன்னல்களோடு  இந்த  பழியும் சேர்ந்து .. பாவம் அவர்கள்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 4 Apr 2014 - 11:17

http://intellihub.com/freelance-journalist-hijacked-flight-370-passenger-sent-photo-hidden-iphone-tracing-back-secret-u-s-military-base-diego-garcia/
இந்த ஆங்கில பத்திரிக்கையின் செய்தியைத்தான் தமிழ்வின் வெளியிட்டிருக்கின்றது.

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!
 

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில் “நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும், கூறியுள்ள அவர், மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். இதுதான் ”

(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)

Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது அமெரிக்க ராணுவம் மீது திரும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370 விமான பயணி அனுப்பிய புகைப்படம்.



நன்றி தமிழ்வின்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by rammalar Fri 4 Apr 2014 - 11:26

ஏப்ரல் பூல் பண்ண ஏற்படுத்தப்பட்ட
நியூஸாக இருக்கமோ..?!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Fri 4 Apr 2014 - 11:49

அப்படியும் இருக்குமா ஐயா!

இதிலெல்லாமா விளையாடுவார்கள்.  _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 11:56

கடந்த 8ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மலேசிய பயணிகள் விமானம், சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.

பல்வேறு விசாரணைகளை அடுத்து , செயற்கைக் கோள்களின் தகவல்கள் அடிப்படையில் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய அறிவித்தது.

மலேசிய பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

விமானத்தின் உள்ள கருப்புப் பெட்டியின் பட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.இது விமானத்துறை வரலாற்றிலேயே தேடும் பணிக்காக செலவிடப்பட்டதில் அதிகம் செலவிடப்பட்ட தொகை என்று கூறப்படுகிறது.

விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகளின் விமானங்கள் மற்றும்கப்பல்கள்செயற்கைகோள்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானத்தை தேடும் பணி ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில் அஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்கா வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ கப்பல்கள் இந்திய ஓசேன் தெற்கு சீனா பகுதியில் மேற்கொண்ட ரோந்து பணியில் மட்டும் இதுவரை குறைந்தபட்சம் 44 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மதிப்பிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அட்லாண்டிக் கடலில் மாயமான விமானத்தை தேடும் பணிக்காக 32 மில்லியன் யூரோ செலவிடப்பட்டது.
பல்வேறு மாதங்கள் தேடும் பணிக்காக செலவிட்ட தொகையை ஒரு மாத தேடும் பணியிலேயே தற்போது மாயமான விமானம் எட்டியுள்ளது.

 ஏர்பிரான்ஸ் விமானத்தை தேடும் பணிக்காக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் செலவிடப்பட்டது என்றும் தற்போதைய மாயமான விமானத்தை தேடும் பணியில் செலவிடப்படும் தொகை 100 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 MALASEJA-01


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள். - Page 3 Empty Re: மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum