சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Khan11

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

+5
மீனு
கவியருவி ம. ரமேஷ்
rammalar
Nisha
ராகவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா Sat 15 Mar 2014 - 18:28

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு...

பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்...

வாங்க யோசிப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 1:57

இதுவும்  தெரிந்த விடை  தான் அச்சலா!

வேறுயாராவது முயற்சிக்காவிட்டால் பார்க்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:16

பூனைக்கு (4.25) நாலே கால்
பறவைக்கு (2.25) இரண்டே கால்
யானைக்கும் (4.25)நாலே கால்
-
ஆடு - கால் இல்லை- வார்த்தையில் எழுதும்பொழுது
மாடு - கொம்பில்லை- வார்த்தையில் எழுதும்பொழுது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:17

முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று ஒருவர் சொல்ல...
-
நண்பர் சொன்னாராம்:

-
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய் என்று.
-
விடை சொல்லுங்கள்

Last edited by rammalar on Sun 16 Mar 2014 - 2:19; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 2:17

பூனையின் பதினேழு கால்  எப்படி நாலே காலாச்சுன்னு  சொல்லவே இலலயே ஐயா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:23

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு 0af32013-3a04-4672-9bcd-5ea47632692c_S_secvpf

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4,
எனவே , பூனைக்கு 4 கால் .
பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
-
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4,
எனவே, பறவைகளுக்கு 2 கால்.
-
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில்
துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால்
இல்லை.

மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ,
இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு
கொம்பில்லை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 2:44

இதையே நான் எதிர்பார்த்தேன்.

நன்றி ஐயா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:56

முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று ஒருவர் சொல்ல...
-
நண்பர் சொன்னாராம்:

-
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய் என்று.
-
விடை சொல்லுங்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 3:22

rammalar wrote:முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று ஒருவர் சொல்ல...
-
நண்பர் சொன்னாராம்:

-
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய் என்று.
-
விடை சொல்லுங்கள்
-

முக்கால் என்பது  வயதான்பின் நம் கால்களுடன்  நம்மை தாங்கி நடத்த பயன்படுத்தும் தடி அல்லது கோல்
மூவிரண்டு  என்பது  இயற்கை உபாதைகள்
இக்காலை என்பது எமது சொந்த கால்  
ஐந்து தலை நாகம் என்பது நெருஞ்சி முள்

கோலை ஊன்றி இயற்கை உபாதைக்காக காட்டோரமாய் ஒதுங்கிசெல்லும் போது  அவர்காலில்  நெருஞ்சி முள் குத்தியதூ.

பத்துரதன் எனில் தசரதன்
பத்துரதனின்  புத்திரன்  யார் .. ராமன்
பத்துரதனான தசரதனின் புததிரன் ராமனுக்கு  மித்திரன்  அதாவது தோழன் யார் .. சுக்ரீவன்
பத்துரதனாம் தசரதனின்  புத்திரன் ராமனின்  மித்திர்னாம் சுகீவனின் மனைவிபெயர்  தாரையாம்
தாரையின் பெயரில் இருக்கும்  காலை  நீக்கி விட்டால் தரையாம்.

அப்பாடி  முள் குத்தியது  என  டாக்டரிடம் வலியோடு போனால்  தரையில் தேய்  என  சொல்லாமல் இப்படி ஊரை சுற்றி  உலகம் சுற்றி  முள்ளுக்குத்தினால் வரும் வலியை விடவும் தலைவலியை தரும்  டாக்குத்தர் மார்  வாழும் காலத்தில் நான் வாழாமல் போனதுக்கு நன்றி கடவுளே! {_

Last edited by Nisha on Sun 16 Mar 2014 - 3:32; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 3:28

இதுவும்  எப்போதோ எங்கோ படித்து மனதில் நிற்பதே ஐயா!

சில நேரம்  சில தவறுகள் இருக்கலாம்.. என் நினைவில் நின்றவரை  பகிர்ந்தேன்.

புலவர் பாடல் என்பதாய் இவை வரும்.

ஏற்கனவே படித்தவை,  தெரிந்தவைகளை  மீண்டும்  பகிர்வதை விட இயன்ற வரை புதிய  இணையத்தில் வராத  புதிர்களாய் கொடுத்தால்  யோசித்து விடை சொல்ல  சுவாரஷ்யமாய் இருக்குமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by rammalar Sun 16 Mar 2014 - 5:23

சரி...இணையத்தில் இல்லாததை தேடுவோம்.
-
இப்போதைக்கு இந்த பால்களின் பொருளை
கூறுங்கள:
-
1)
-
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

-
2)
-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 5:46

அப்பப்பா... எத்தனை அறிவு... 

எனக்குத்தான் குறைவு போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 7:35

கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா... எத்தனை அறிவு... 

எனக்குத்தான் குறைவு போல...
அப்படியா...கொஞ்சம் யோசித்தால் எல்லாம் உன் மையம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 13:26

rammalar wrote:சரி...இணையத்தில் இல்லாததை தேடுவோம்.
-
இப்போதைக்கு இந்த பாடல்களின் பொருளை
கூறுங்கள:
-
1)
-
தத்தித்தா தூதுதி தாதூதித் தாதூதித்
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்துதல் என்றால் குதிப்பது, தாவித்தாவி ஏறுவது, தாவிசெல்வது, அடியால் அளப்பது, ததுப்புவது,பரவுவது, ஒளி வீசுவது, கெந்துவதுன்னு  என பல அர்த்தம் தரும்.

மேலே இருக்கும் பாடல் காளமேகபுலவர் பாடி இருக்கிறார்..

இப்பாடலை நாம் பிரித்து
தத்தித்தா தூதுதி ---தத்து தாது  ஊதி----பாய்ந்து மகரந்தத்தினை உறிஞ்சி   
தாதூதித்-------தாது ஊதி-- மகரந்தத்தினை உறிஞ்சி
தாதூதித்------தத்து ஊதி-- பாய்ந்து , பறந்து உறிஞ்சி  னும் எடுத்துக்கலாமோ.! 

துத்தித் துதைதி -- துத்தித்து தை த்தி---- தூ தூ  என சத்தமிட்டு  பூவை நெருங்கி
துதைதத்தா தாதுதி--- துதைத்து  அத்தாது  ஊதி-- அந்த பூவின் மகரந்தைத்தையும் உறிஞ்சி
தித்தித்த தித்தித்த -- தித்த தித்த  தித்தித்த ----உனக்கு தித்திப்பாய், சுவையாய்  
தாதெது தித்தித்த--தாது எது தித்தித்த ---தித்திப்பாய்  இருந்த மகரந்தம்  எது?
தெத்தாதோ தித்தித்த தாது?-- தெத்தாதோ   தித்தித்த தாது-- மிகவும் தித்திப்போடு இருந்த மகரந்தம் எதுவோ? ..

பாடலை  பிரித்த  பின் ஓரளவுக்கு  பாடல் புரிந்து  படிக்க இலகுவாகவும்  இருக்கின்றதல்லவா..
இதில்  தத்துதல் என்பததை மேலே  இருக்கும் எந்த வார்த்தை இப்பாடலுக்குரிய அர்த்தம் தரும் என்பதை  அடுத்து வரும்  வரியாம் தாது ஊதி யோடு சேர்த்து பார்த்தால்   தாது  என்பதற்கு மரகந்தம் அதாவ்து பூவின் மேல் வரும் மகரந்தம் என அர்த்தம்  தவதால் பூவையும் , மகரந்தைத்தையும்  சேர்த்தே இப்பாடல் புனையப்பட்டிருப்பதை  உணர்வோம்.

பூவுக்கு பூ மாறி மகரந்தம்தேடிசெல்லும்  ஒரு வண்டினை பார்த்து காளமேகபுலவர்....

வண்டே! ஒரு பூவில் பாய்ந்து அம்ர்ந்து  அப்பூவிலிருக்கும் மகரந்தத்தினை முழுமையாக உறிஞ்சியபின்  மீண்டும்  வேறொரு பூவை நோக்கி தூ தூ என  தாவி, தாவி பறந்து  அப்பூவிலிருக்கும் மகரந்தத்தினையும்  ஊறிஞ்சிகுடித்தபின்  உனக்கு  தித்திப்பாய் எந்த பூவின் மகரந்தம் இருந்தது என கேட்கிறாராம். 

நலல் வேளை நாம் எல்லாம் தப்பிச்சிட்டோம் அலலவா... )* 

 நம்மை பார்த்து கேட்காமல் வண்டினை  பார்த்து கேட்டதால் வண்டே பதில் சொல்லிட்டு போ---- __( னு  இப்படியே விட்டு விட்டு  நான் அடுத்த பாடலுக்கான  விளக்கத்தோடு வரேன்.   

Last edited by Nisha on Sat 6 Dec 2014 - 3:06; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 13:35

அச்சலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அப்பப்பா... எத்தனை அறிவு... 

எனக்குத்தான் குறைவு போல...
அப்படியா...கொஞ்சம் யோசித்தால் எல்லாம் உன் மையம்....

அடடா!

கவியருவி என  கவியையே தன் பெயரில்  வைத்துகொண்டிருக்கும் நீங்கள் இப்படி சொல்லலாமோ சார்! நீங்கள் இப்படி  சொன்னால் நாங்கள் எல்லாம் எந்த மூலைக்கு.. அவரவருக்கு எது இடப்பட்டதோ  அதுவே அவரவருக்கு  முழுமையாய் நிறைவாயும் அருளப்பட்டிருக்குமென்பதால்..யாருக்கும் எதுவும் எங்கும்  குறைவு படாது என  நம்புவோம் .
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by மீனு Sun 16 Mar 2014 - 13:46

ஒரே அறிவு சம்மந்தமானதும் யோசிக்க வேண்டியதுமா இருக்கே மீனு இது உனக்கு சம்மந்தம் இல்லாத ஏரியா
 *# 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 15:28

மீனு wrote:ஒரே அறிவு சம்மந்தமானதும் யோசிக்க வேண்டியதுமா இருக்கே மீனு இது உனக்கு சம்மந்தம் இல்லாத ஏரியா
 *# 
அப்படி ஒன்று இல்லையே மீனு..எல்லாம் சாத்தியம்...வாங்க நிஷா அக்காவை பாருங்க..எப்படி யோசிக்கிறாங்க என்று..
மூளையில்லையேன கேட்போம்..புகார் க்கொடுப்போம்..கிடைக்கும் வரையில்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sun 16 Mar 2014 - 16:33

அச்சலா wrote:
மீனு wrote:ஒரே அறிவு சம்மந்தமானதும் யோசிக்க வேண்டியதுமா இருக்கே மீனு இது உனக்கு சம்மந்தம் இல்லாத ஏரியா
 *# 
அப்படி ஒன்று இல்லையே மீனு..எல்லாம் சாத்தியம்...வாங்க நிஷா அக்காவை பாருங்க..எப்படி யோசிக்கிறாங்க என்று..
மூளையில்லையேன கேட்போம்..புகார் க்கொடுப்போம்..கிடைக்கும் வரையில்..

என்ன சொல்ல வருகின்றீர்கள் அச்சலா! சொல்ல நினைப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால் என்ன..!

Last edited by Nisha on Tue 18 Mar 2014 - 0:22; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 19:48

Nisha wrote:
அச்சலா wrote:
மீனு wrote:ஒரே அறிவு சம்மந்தமானதும் யோசிக்க வேண்டியதுமா இருக்கே மீனு இது உனக்கு சம்மந்தம் இல்லாத ஏரியா
 *# 
அப்படி ஒன்று இல்லையே மீனு..எல்லாம் சாத்தியம்...வாங்க நிஷா அக்காவை பாருங்க..எப்படி யோசிக்கிறாங்க என்று..
மூளையில்லையேன கேட்போம்..புகார் க்கொடுப்போம்..கிடைக்கும் வரையில்..

என்ன சொல்ல வருகின்றீர்கள் அச்சலா! சொல்ல நினைப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால்  தன என்ன..!
அக்கா....கொஞ்சம் சொல்லிக்குடுங்க என்று டீசண்டாக கேட்டேன் அக்கா.. _* 
அதான் கொஞ்சம் அறிவைக்கடனாக கொடுத்தால் அடுத்த தடவை வட்டியும் முதலுமாக கொடுப்போம்.. ஐடியா!  ஐடியா! 
அதான் ..வேற ஒன்றும் இல்ல.. :joint: ~/ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Tue 18 Mar 2014 - 0:35

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
மீனு wrote:ஒரே அறிவு சம்மந்தமானதும் யோசிக்க வேண்டியதுமா இருக்கே மீனு இது உனக்கு சம்மந்தம் இல்லாத ஏரியா
 *# 
அப்படி ஒன்று இல்லையே மீனு..எல்லாம் சாத்தியம்...வாங்க நிஷா அக்காவை பாருங்க..எப்படி யோசிக்கிறாங்க என்று..
மூளையில்லையேன கேட்போம்..புகார் க்கொடுப்போம்..கிடைக்கும் வரையில்..

என்ன சொல்ல வருகின்றீர்கள் அச்சலா! சொல்ல நினைப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால்  தன என்ன..!
அக்கா....கொஞ்சம் சொல்லிக்குடுங்க என்று டீசண்டாக கேட்டேன் அக்கா.. _* 
அதான் கொஞ்சம் அறிவைக்கடனாக கொடுத்தால் அடுத்த தடவை வட்டியும் முதலுமாக கொடுப்போம்.. ஐடியா!  ஐடியா! 
அதான் ..வேற ஒன்றும் இல்ல.. :joint: ~/ 

அறிவும் , நினைவும்  கடன் கொடுக்கவோ, கடனாய் பெறவோ இயலாதது அச்சலா... நாமாய் முயற்சித்தால்   போதும்.  எனக்கு தமிழ் அறிவு  கொஞ்சம் இருக்குமென்று நீங்கள் நினைத்தால்  நன்றி சொல்ல வேண்டியது  நான் படிக்கும் புத்தகங்களை  எழுதியவர்களுக்கே..

சின்னவயதிலிருந்தே  வாசிக்கப்பிடிக்கும்,  அதனால் தான் சுவிஸ் வந்து 24 வருடம் ஆகியும் , வீட்டில் அதிகமாய் தமிழில் பேசாவிட்டாலும்,  என்  ஹோட்டலிலும்  தமிழ் பேசும் வாய்ப்பு  கம்மியாயிருந்தாலும் தமிழ் மறக்காமல் இருக்கிறது..கூடவே முத்தமிழ் மன்றத்தின் மூலம் நான் கற்றவையும் அனேகம்.
 
என் மகன் வயது 16, அவன் பள்ளியில்  முதல் மொழி ஜேர்மன்.. இரண்டாவது பிரெஞ்ச்.. மூன்றாவது ஆங்கிலம்...  இருந்தும் அவனுக்கு தமிழ் எழுத வாசிக்க முடியும்.  பேசவும் தெரியும்.எங்கள் மகனோடும், மகளோடும் இயன்ற வரை நாம் தமிழில்  பேசுவோம்.

தமிழ் என்பது  என் தாய் மொழி, என் மதமும் உங்கள் மதமும் எதுவாயிருக்கட்டும்  நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்பது நம் மனதில் நிலைப்பதும்,  நிரம்ப படிப்பதும், வாசிப்பதும், கேட்பதும்  நம் தமிழ் அறிவை கொஞ்சமாவது வளர்த்திட உதவும்.

வரலாற்று , சரித்திர நாவல்களை  தேடி வாசியுங்கள், பாரதியார் பாடல்கள்  படியுங்கள்,  தமிழ் அறிவு தானாய் வளரும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Tue 18 Mar 2014 - 1:52

rammalar wrote:சரி...இணையத்தில் இல்லாததை தேடுவோம்.

-
2)
-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

 இதுவும் காளமேகபுலவர் இயற்றியதே! காளமேகப்புலவரை   ஆக்ககவி என்பர்.  ஒற்றைசொல்லை பயன் பல வெண்பாக்களை இயற்றிய பெருமைக்குரியவரும் இவரே!

முதலில் நாம் இந்தப்பாடலை  தனித்தனி  வாக்கியங்களாக பிரிப்போம்..பிரித்த பின்  ஓரளவு  அர்த்தம் புரியும் விதமாயிருக்கும்.

காக்கைக்கு ஆகா  கூகை , கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ  காக்கை க்கு, கொக்கு ஒக்க  கைக்க க்கு
காககைக்கு  கைக்கு  ஐக்கு ஆகா...

விளக்கம்

கூகை என்றால் ஆந்தை

ஆந்தைக்கு பகலில் கண்பார்வை  இராது என்பதால் பகல் நேரம்  ஆந்தை வெளியில் வந்தால் காகம் அதை கொத்தி கொத்தி  துரத்தி விடுவதாலும்.. இரவில் ஆந்தையின் கண்பார்வை தெளிவாகி  காகத்தின்   பார்வை மங்குவதால்  இரவில் காகத்தை ஆந்தை துரத்துவதாலும்...மாறிமாறி  துரத்தியே  காகமும் ஆந்தையும் ஜென்ம விரோதிகளாய் போனார்கள்.
காகத்துக்கு பகலும் ஆந்தைக்கு  இரவும்  தான்  ஏற்ற நேரம்.
 
காக்கைகு ஆகா  கூகை , கூகைக்கு ஆகா காக்கை
காககைக்கு ஆந்தையைக்கண்டால் ஆகாது,  ஆந்தைக்கு காகத்தை கண்டால் ஆகாது என்பதால்  அதற்கான் நேரம் வரும் வரை காத்திருந்து ஒன்றையொன்று ஜெயிக்குமாம்.

கோக்கு கூ  காக்க க்கு,
கோ எனப்படும்  நாட்டை  காக்கும்  அரசனும், தன் நாட்டைக்காக்க 

கொக்கு ஒக்க    
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கைபோல் தனக்கான் இரை வருமளவும் ஒற்றைக்காலில்  ஆடாது அசையாது காத்திருக்கும் கொக்கைபோல் விழிப்புடனும்  அவதானத்துடனும்,ஏற்ற  நேரம் வரும் வரை காத்திருந்து சரியான நேரத்தில்  செயலாற்றுபவனாக   இருக்க வேண்டுமாம்  அவ்வாறு இல்லாது அவசரபட்டால்  

 கைக்க க்கு  காககைக்கு கைக்கு  ஐக்கு ஆகா...
எதிரியிடமிருந்து காப்பதற்கு அரசனால் இயலாது போய் விடுமாம்

முழுமையான விளக்கம்
 காகத்தால்  ஆந்தையை பகலில் தான் வெல்ல இயலும், அதே போல்  ஆந்தையால் இரவில் தான் காகத்தை வெல்ல இயலும்.

நாட்டைக் காக்கும் அரசனானவன்  பகலில் காகத்தைப்போலவும், இரவில்  ஆந்தையை  போலவும்  எதிரிகளை விரட்டி  நாட்டைக்காப்பதுடன் கொக்கைபோல்  தனக்கு சாதகமான சூழல் வரும் வரை  பொறுமையாக காத்திருந்து  நாட்டைக்காக்க  வேண்டுமாம்.தக்க நேரம் பார்த்து செயல்படாமல் போனால்  அரசனானவனாலும் வெல்ல இயலாது போகலாமாம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sat 6 Dec 2014 - 3:12

தொடரலாமா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா Sat 6 Dec 2014 - 19:47

Nisha wrote:தொடரலாமா!

மிகவும் அருமையான திரி இது. நகலெடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி. எனது மாணவர்களுக்கு ப்ரீ வகுப்பில் இதை சொல்வேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Nisha Sat 6 Dec 2014 - 19:50

தொடரலாமா என கேட்டால்  நகலெடுத்தேன் என்கின்றீர்களே சார்? நியாயமா?

இன்னும் இன்னும் தொடரலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by சுறா Sat 6 Dec 2014 - 19:51

தொடருங்கள் ரசிக்க நாங்க இருக்கோம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு Empty Re: பதில் சொ‌ல்லு‌ங்க‌‌ள் பாட்டு‌க்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum