Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விமான பயண டிப்ஸ்
Page 1 of 1
விமான பயண டிப்ஸ்
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா
-
* விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு
இருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும்
காலமும் பாஸ்போர்ட் செல்லுபடியாகும்
காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி
இருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின்
பொறுப்பாகும்.
-
* ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும்
அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம்
மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து
அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா
வழங்கப்படும். விமான நிலையத்திற்கு
செல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட்
மற்றும் விசாவை சரி பார்த்துக் கொள்வது
அனைத்து பயணிகளுடைய கடமையாகும்.
-
* பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய
இடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின்
வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால்
(அமெரிக்காவிற்கு சென்றடைய லண்டனில்
இறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது
போன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட்
விசா பெற வேண்டுமா? என்று அறிந்து கொள்வது
அவசியமாம்.
-
டிரான்சிட் விசா பெற வேண்டுமானால்
புறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும்.
-
* ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய
நாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப்
பெற்றுக் கொள்ளும் வசதியை அளித்தாலும்,
இந்தியாவை விட்டு புறப்படும் முன் விசாவைப்
பெற்றுக் கொள்வதே சிறந்தது.
-
* ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய
வாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி
அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும்.
அதைப் பார்த்து விமான நிறுவனத்தைத்
தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.
-
* பயணச் சீட்டுகள் முகவர்கள் அல்லது விமான
நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில்
பெயர், பதவி, பயணத்தேதி, புறப்படும் இடம்,
சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக
இருக்கின்றதா? என்று சரி பார்த்துக் கொள்ளும்
பொறுப்பு பயணிகளுடையதாகும்.
-
* பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணைய
தள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த
பயணச்சீட்டுகள் சாதாரணமாக கம்ப்யூட்டரில்
பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும்.
இருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள்,
விமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம்,
சென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட்
வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ்
அலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.
-
* நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள
பி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில்
உள்ள பெயர், விமான எண், பயணத்தேதி, புறப்படும்
இடம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவற்றைக்
குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு பெறுவதற்கு
உதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை
குறிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச்
சீட்டின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.
-
* பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள்
விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள்
செல்ல உரிமை கோர முடியாது.
-
* விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு
வழங்கப்படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து
போய்விட்டால் பயணி காவல் நிலையத்தில் புகார்
அளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண
முகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்த
மாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.
-
* ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில்
சேமித்து வத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை
அவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக்
கொண்டு தேவைப்படும் பொழுது பிரிண்ட் எடுத்துக்
கொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட்
விவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம்.
பிரிண்டில் தேவையில்லை என்பதால் தேவையில்லாமல்
காகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும்
இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது.
-
--------------------------------------
நன்றி: மங்கையர் மலர் செய்திகள்:

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» விமான ரகசியங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum