சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Khan11

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

+2
rammalar
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:27

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.

இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.

இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It

எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.

மூட நம்பிக்கை: 1

இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.

உண்மை நிலை:

டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.

ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.

இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.

மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.

எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!

Thanks to ஔவை , முத்தமிழ் மன்றம்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:44

முடநம்பிக்கை 2:

உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.

உண்மை நிலை:


உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.

எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை

ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:45

மூடநம்பிக்கை: 3

எனக்கு மிகக் குறைந்த அளவே சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார் அல்லது சர்க்கரை நோயின் விளிம்பில் (பார்டர் லைன்) தான் இருக்கின்றேன். எனவே எனக்குக் கவலையில்லை.

உண்மை நிலை:


மருத்துவர்கள் இவ்வாறு கூறக் காரணம், ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை தென்படுகின்றது. ஆனால், அது சர்க்கரை நோய் என்று சொல்லுமளவுக்கு இல்லை என்பதே பொருளாகும்.

சரி, நான் விளிம்பு நிலையில் இருக்கின்றேன் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். எனக்கு எந்த அளவுக்கு சர்க்கரை நோய் வருவதற்குச் சாத்தியக் கூறு இருக்கின்றது என்று கேட்பவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.

1. உங்கள் வயது 45ஐக் கடந்து விட்டதா?
2. உங்கள் குடும்பத்தில் உள்ளோர்க்கு (அன்னை, தந்தை, சகோதரர்கள்/ரிகள்) சர்க்கரை நோய் இருந்ததா/இருக்கின்றதா?
3. உங்கள் உடல் பருமன் என்ன? உடல்/நிறை விகிதம் (BMI) 25ஐத் தாண்டி இருக்கின்றதா?
4. ஆசியரா?
5. பெண்ணாயிருந்தால் கர்ப்பமாய் இருக்கின்றீர்களா?
6. கெட்ட கொழுப்பான LDL அதிகமாகவும், நல்ல கொழுப்பான HDL குறைவாகவும் கொண்டவரா?
7. பெண்ணாயிருந்தால் மாதவிடாய்க் கோளாறு, அதிகத் தலைமுடி வளர்தல் பிரச்னை, உடல்பருமன் அதிகம் ஆகியவை உண்டா?

இக்கேள்விகளுக்கான பதில் ஆம் என்றிருந்தால் மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகும். அவ்வாறு ஆம் என்று சொன்னால், விளிம்பு நிலையில் இருப்பவர்கள் ஆண்டுக்கொரு முறையும், சர்க்கரை நோய் இல்லாதிருப்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையும் தங்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:56

மூடநம்பிக்கை: 4

இரண்டாம் வகை சர்க்கரை நோய் முதலாம் வகை சர்க்கரை நோய் அளவுக்குக் கொடுமையானது அல்ல.

உண்மை நிலை:


டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவாக அனைவருக்கும் வருவது. டைப் 1 சர்க்கரை நோய் உடலமைப்பிலேயே கணையம் இன்சுலினைத் தேவையான அளவு சுரக்காததால் வருவதாகும். இது பெரும்பாலும் சிறிய வயதிலேயே பாதித்து விடும். இவர்களுக்கு ஆரம்பம் முதலே இன்சுலினை ஊசி மூலம் செலுத்த வேண்டியதிருக்கலாம்.

சர்க்கரை நோய் எந்த வகையானதாக இருந்தாலும் அதன் பாதிப்பு என்னவோ உடலில் ஒரே வகை தான். அது ஏற்படும் விதத்தினாலேயே மூன்று வகையாகப் பிரித்து வைத்திருக்கின்றார்களே அன்றி அதன் விளைவுகள் ஒன்றே தான்.

எனவே எந்த வகை சர்க்கரை நோயாக இருந்தாலும் மிகவும் கவனமாக நமது வாழ்க்கை முறையை மருத்துவர்களின் அறிவுரையைக் கேட்டு மாற்றிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்தல் நல்லது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:57

மூடநம்பிக்கை: 5

எனக்கு இப்போது தான் சர்க்கரை நோய் இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். சர்க்கரை நோய் முற்றினால் தான் பெரிய சிக்கல். எனக்கு அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது.

உண்மை நிலை:


சர்க்கரை நோய் முற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வகை 2 அல்லது வகை 1 சர்க்கரை நோய்க்காரர்களில் 25 சதவீதம் பேருக்கு நரம்புத் தளர்ச்சி, கண்கள் பாதிப்பு, இதயக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் அவர்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கின்றது என்று கண்டுபிடித்த உடனேயே வருகின்றன.

இதில் வகை 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பயம் இருக்கத் தேவையில்லை. ஏனெனில் இவர்களுக்குச் சர்க்கரை நோய் உடலில் திடீரென்று வரக்கூடும். ஒரே மாதத்தில் கூட வர நேரிடலாம்.

ஆனால் சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடிய வகை 2 சர்க்கரை நோய் அவ்வாறல்ல. நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே இருந்திருக்கக் கூடும்.

எனவே, இப்போது தான் சர்க்கரை நோய் வந்திருக்கின்றது என்று விட்டு விடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்தே ஐந்து தான்.

1. சோதனை, சோதனை, சோதனை. அடிக்கடி சர்க்கரை அளவைச் சோதனை செய்து பாருங்கள்.
2. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் உடலுழைப்பு செய்யுங்கள். முடியாதவர்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
3. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள்.
4. நீங்கள் உண்ணும் உணவின் கலோரியை அறிந்து உண்ணுங்கள்.
5. மூன்று மாதத்திற்கொரு முறையாவது மருத்துவரை அணுகுங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by rammalar Tue 25 Mar 2014 - 15:51

பயனுள்ள பகிர்வு...
-
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Images?q=tbn:ANd9GcRj5khbPibmv63jjSgW19IKNixwsoYGantjlXDYam6wSX8zTWpT
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:11

நன்றி ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by ராகவா Wed 26 Mar 2014 - 5:34

மிக அருமையான பதிவு அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 1:05

மூடநம்பிக்கை: 6

வயது முதிர்ந்தோர்க்கு மட்டுமே வகை 2 சர்க்கரை நோயும், வயது குறைந்தவர்களுக்கு மட்டுமே வகை 1 சர்க்கரை நோயும் வரும்.

உண்மை நிலை:

உண்மை என்னவென்றால், வயது குறைந்தவர்களும் வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வகை 1 சர்க்கரை நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உடல் பருமன், தீனி மற்றும் போதிய விளையாட்டின்மை போன்ற காரணங்களால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகமாகிக் கொண்டே போகின்றது. 1994ல் வெறும் 2 சதவீத இளைஞர்களே பாதிக்கப்பட்டனர். இப்போது 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கிய காரணம் உடல் பருமன் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, திடீரென எடை குறைதல், சோர்வு, கண் பார்வை தெளிவின்மை, கழுத்திலோ, அக்குளிலோ, அந்தரங்க உறுப்பின் அருகிலோ கருப்பு நிறத்தில் திட்டுத் திட்டாக உருவாதல் ஆகியவை சிறுவர்களுக்கு/இளைஞர்களுக்கு ஏற்பட்டால் உடனே சோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 1:05

மூட நம்பிக்கை: 7

எனக்கு இன்சுலின் ஊசி போடச் சொல்லி விட்டார்கள். என் முடிவு ஆரம்பமாகிவிட்டது.

உண்மை நிலை:


உண்மையில் இதற்குச் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க எடுத்த நல்ல முடிவு ஆரம்பமாகிவிட்டது என்றே பொருள்.

பலரும் இன்சுலினை ஊசி மூலம் செலுத்துவதைச் சர்க்கரை நோயின் முற்றிய கட்டம் என்றோ அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்வது கடுமையான பின்விளைவுகளைத் தருமென்றோ எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. கணையம் இன்சுலினைச் சுரக்காதிருக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எந்த வகையிலேனும் உடலுக்கு இன்சுலின் தேவை. அதைத் தருவதே இன்சுலின் ஊசிகள்.

அப்படியானால் இன்சுலினை ஏன் முதலிலேயே போடுவதில்லை? ஏனென்றால், அதிக இன்சுலினும் ஆபத்தானதாகும். ரத்தத்தில் சர்க்கரை மிகவும் குறைந்து விட்டாலும் பிரச்னை அதிகமாகி விடும். எனவே, கணையம் இன்சுலினைச் சுரக்கும் போது மாத்திரைகளும், தேவைப்படும் போது இன்சுலின் ஊசியும் போடச் சொல்கின்றனர்.

உண்மையில், ஊசியை விட மாத்திரையினால் ஏற்படும் பின் விளைவுகளே அதிகமாகும். இருப்பினும் நமது உடல்நிலையைக் கணக்கில் கொண்டே மருத்துவர்கள் மாத்திரையா ஊசியா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.

எது எப்படியாயினும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வரை சர்க்கரை நோயால் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. எனவே இது முடிவின் ஆரம்பம் அல்ல. ஆரோக்கியத்தின் ஆரம்பம் என்று புரிந்து உணர்ந்து கொள்ளல் வேண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 1:06

மூடநம்பிக்கை: 8

என் குடும்பத்தில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கின்றது. அடுத்தது எனக்குத் தான் வரப்போகின்றது.

உண்மை நிலை:


வகை 1 சர்க்கரை நோய் வருவதை மட்டும் தான் தடுக்க முடியாதே ஒழிய வகை 2 சர்க்கரை நோயை முடிந்த வரை வரும் முன் நம்மால் தடுக்க முடியும். குடும்பத்தில் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பது ஒரு அபாயச் சங்கு என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, எடையைக் கட்டுப்பாட்டுக்குள்ளும், உடல் உழைப்பை மேம்படுத்தியும், உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்தியும் வாழ்ந்தால் சர்க்கரை நோய் நம்மைத் தாக்காமல் தப்பிக்க வாய்ப்பிருக்கின்ற‌து.

அதற்கு,

1. விரைவு உணவகங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருவாரங்களுக்கு ஒருமுறையோ செல்லப் பழகுங்கள்.
2. ஒருநாளைக்கு 30 நிமிடங்களாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள்.
2. அ. லிப்டில் செல்லாமல் படிக்கட்டில் ஏறலாம்.
2. ஆ. வண்டியைக் கடைக்கருகில் நிறுத்தாமல் தள்ளி நிறுத்தி நடந்து செல்லலாம்.
2. இ. முந்தைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கலாம்.
2. ஈ. யோகாவில் ஈடுபடலாம்.
3. தொலைக்காட்சியைப் பார்த்தபடி தூங்காமல், ஒரு புத்தகத்தைப் படித்து விட்டோ அல்லது மூச்சுப்பயிற்சி செய்து விட்டோ தூங்கலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 9:30

ரொம்ப ஈஸியா இருக்கே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 27 Mar 2014 - 10:08

கவியருவி ம. ரமேஷ் wrote:ரொம்ப ஈஸியா இருக்கே!

 நன்றி ரமேஷ் சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 9:09

பலனுள்ள தகவல்கள்

மீதியையும் தொடருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:05

மூடநம்பிக்கை: 9

சர்க்கரை நோய் வந்து விட்டால் சர்க்கரையை மறந்து விட வேண்டும்.

உண்மை நிலை:


கணையத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தத்தில் குளுகோஸின் அளவு கூடுவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகமாக முழுமுதற்காரணம் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு முறையாகும்.

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் இனிப்பு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால், சர்க்கரையில் மட்டும் தானா கார்போஹைட்ரேட் இருக்கின்றது? அது தான் இல்லை. ஸ்டார்ச் நிறைந்த உணவு (எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு, அரிசி சாதம்) உட்கொண்டாலும் கார்போ ஹைட்ரேட் மிகுந்து காணப்படுகின்றது.

ஒருவரைச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளச் சொல்லி, இன்னொருவரை சர்க்கரையிலிருக்கும் கார்போஹைட்ரேட் அளவுக்கு அரிசி சாதம் சாப்பிடச் சொன்னால் இருவருக்கும் ஒரே அளவு குளுகோஸ் ரத்தத்தில் இருந்தது. 10 கிராம் இனிப்பிலிருக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவும், 10 கிராம் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவும் வேறு என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்!

ஆக, கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொள்வது மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம். நாம் உட்கொள்ளும் உணவுகளின் கார்போஹைட்ரேட் அளவு தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

இனிப்பை அளவாகச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. எப்போது? சத்து நிறைந்த உணவு உட்கொண்டால்.

1. இனிப்பை ஒருவாய் சுவைக்க மட்டும் செய்யுங்கள். அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
2. அதிகக் கருப்பான சாக்லேட்டுகளைக் கொஞ்சம் சாப்பிடலாம். அவற்றின் கார்போ ஹைட்ரேட் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும்.
3. ஒவ்வொரு உணவிலிருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவைக் கணக்கிட்டு ஒரு அளவீடு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு Low Glycemic Index என்று பெயர். சுருக்கமாக LGI என்று அழைக்கப்படுகின்றது.

விக்கிபீடியா லிங்க்: http://en.wikipedia.org/wiki/Glycemic_index

இதில் 55 அல்லது அதற்கும் அளவு கீழிருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:06

மூடநம்பிக்கை: 10

சர்க்கரை நோய் ஒரு ஆரம்பம் மட்டுமே. அது வந்து விட்டால் வரிசையாக கண்பார்வை பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் கால்களை எடுக்கவேண்டிய நிலைமை ஆகியவை வர ஆரம்பிக்கும்.

உண்மை நிலை:


ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காதவர்களுக்கு மட்டுமே மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் வரும். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு புள்ளியியல்படி 50 முதல் 80 சதவீதம் வரை பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் குறைகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மிக மிக முக்கியம் என்று சர்க்கரை நோயாளிகள் உணர்ந்து கொள்தல் வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Mon 31 Mar 2014 - 14:55

மூடநம்பிக்கை: 11

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கால்களை இழக்க நேரிடும்.

உண்மை நிலை:


சமீப காலமாக இந்த நிலை மிகவும் மாறி வருகின்றது.

சரியான காலணிகளை அணிவது, கால்களையும் பாதங்களையும் ஒழுங்காகப் பராமரிப்பது, கவனத்துடன் இருப்பது, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் கால்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Mon 31 Mar 2014 - 14:56

மூடநம்பிக்கை: 12

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது உடலில் பயங்கர வலியை ஏற்படுத்தும்.

உண்மை நிலை:

இது வெகுகாலத்துக்கு முந்தைய நிலை. இப்போது நடைமுறையில் இருக்கும் ஊசிகள் மிக நுண்ணியமானவை. சில சமயங்களில் அவற்றைச் சட்டென்று பார்த்தால் கூடத் தெரியாத அளவுக்குச் சிறியதாக இருக்கின்றன.

பழங்கால 1.5 இஞ்ச் உயர ஊசிகள் தான் இருந்தன. தற்போது 5/16 இஞ்ச் (0.3125) அளவே இருக்கும் சிறிய ஊசிகள், 31 கேஜ் (Gauge) தடிமன் கொண்டு இருக்கின்றன. அதாவது வெறும் 0.2604 மிமீ விட்டமே உடையவை இந்த ஊசியின் முனைப்பகுதி.

இந்த கேஜ் அளவு அதிகரிக்க அதிகரிக்க முனைப்பகுதியின் அளவு குறைவு என்று பொருள். எடுத்துக்காட்டாக 28 கேஜ் ஊசியைக் காட்டிலும் 31 கேஜ் ஊசி கூர்மையானது ஆகும்.

ஊசியின் முனை அளவு பற்றி இங்கே பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Needle_gauge

இப்போது பேனாக்கள் வடிவில் ஊசி போடும் கருவிகள் கிடைக்கின்றன. சரியான அளவில் மருந்தைச் செலுத்துவதற்கும் உதவி புரிகின்றன.

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். 400px-Insulin_pen
இப்போதெல்லாம் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள், "என்ன? அதற்குள் ஊசி போட்டாயிற்றா?" என்ற கேள்வி கேட்குமளவுக்குத் தான் வலி இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Mon 31 Mar 2014 - 14:57

மூடநம்பிக்கை: 13

என் வாரிசுகளுக்கு சர்க்கரை நோய் வருவதைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது.

உண்மை நிலை:


சர்க்கரை நோயில் மூன்று வகை என்பதைக் கண்டோம்.

அதில் வகை 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு வருவது. மீதி இருக்கும் இரண்டு வகைகளிலும் முதல் வகை எப்படி வருகின்றது என்பது தெரியாமல் இருந்தது.

சமீபத்திய கண்டுபிடிப்புகளின் மூலம், தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு வகை 1 சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு குறைகின்றது.

மாட்டுப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிலிருக்கும் கேசீன் (Casein) என்னும் புரோட்டீனை உடைப்பதற்கான என்சைம் குழந்தைகளின் உடற்கூறில் இல்லாமையால் அவை உடலில் சேர்ந்து பின்னாளில் சர்க்கரை நோய் வரக் காரணமாக இருக்கின்றன. தாய்ப்பால் வழங்க முடியவில்லையெனில், சோயாப் பால் தருவது உகந்தது.

வகை 2 ஐப் பொருத்தவரை மரபணுக்களாலும், உடலில் இன்சுலின் குறைபாடாலும் ஏற்படுகின்றது.

என்ன தான் மரபணு ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கங்களால் சர்க்கரை நோய் வருவதைத் தள்ளிப் போடவும், விளைவைக் குறைக்கவும் எளிதில் முடியும்.

குழந்தைகளிடம் நோய் வருவதற்கான அறிகுறிகள்:

படுக்கையில் சிறுநீர் கழித்தல், இரவு அடிக்கடி சிறுநீர் கழித்தல்
அதிகப்படியான தாகம்
எவ்வளவு சாப்பிட்டாலும் எடைக்குறைவு ஏற்படுதல்
அதிகப்படியான பசி
சோர்வு
ஆறாத புண்கள்.

தவிர்க்க‌ என்ன செய்யவேண்டும்?

காலையில் மிகவும் சத்து நிறைந்த உணவைத் தரவேண்டும். இரவில் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும்.
இனிப்பு கலந்த பானங்கள், பழச்சாறுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பின்னர் நிறுத்தி விடலாம்.
பழங்கள் காய்கறிகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.
இனிப்பு பதார்த்தங்களை வாரத்திற்கொருமுறை என்று கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சி/கணினிக்கு முன் 2 மணி நேரங்களுக்கு மேல் அமர விடக்கூடாது.
குழந்தைகள் ஓடிஆடி, ஆடிப்பாடி பொழுதுபோக்க வகை செய்யவேண்டும். சுற்றுலா செல்லுதல், ஓடி விளையாடுதல் போன்ற உடலுழைப்பை மேம்படுத்தும் எது வேண்டுமானாலும் அதைச் செய்ய வேண்டும்.

நமக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதை ஒரு எச்சரிக்கை மணியாகக் கொண்டு, நமது ஒட்டு மொத்தக் குடும்பத்தின் உணவு பழக்க வழக்கங்களைத் திருத்திக் கொண்டு எடையைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நமது வாரிசுகள் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து மீள வழி செய்தவர்களாக நாம் இருப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 2 Apr 2014 - 9:37

மூடநம்பிக்கை: 14

சர்க்கரை வியாதிக்காரர்கள் தமக்கென உருவாக்கப்பட்ட பிரத்யேகமான காலணிகளே அணிய வேண்டும்.

உண்மை நிலை:


சரியாகப் பொருந்தக் கூடிய, காலுக்கு எந்த வித அழுத்தமும் கொடுக்காத காலணிகள் எதை வேண்டுமானாலும் அணியலாம்.

உங்கள் செருப்புகளைப் பகல் பொழுதில் வாங்குங்கள். (அப்போது தான் பாதம் நீளமாக இருக்கும்)
ஒரு தடவைக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் செருப்புகளை அணியாதீர்கள்.
ஒரே ஜோடி செருப்புகளையே தினமும் அணியாதீர்கள். இரண்டு மூன்று ஜோடிகள் வாங்கிக் கொள்ளுங்கள்.

அடிக்கடி உங்கள் கால்கள்/பாதங்களை உற்றுப் பாருங்கள். இவ்வாறு காண்பதன் மூலம் உங்கள் காலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

செருப்புகளை நடக்கும் போதெல்லாம் அணிந்திருங்கள். வீட்டினுள்ளும், வெளியேயும்.

மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே செயல்படுத்துங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 2 Apr 2014 - 9:37

மூடநம்பிக்கை: 15

சர்க்கரை வியாதிக்கு நாம் சாப்பிடும் மருந்தே நமது எடையை அதிகமாக்குகின்றது.

உண்மை நிலை:


சில மருந்துகள் இவ்வாறு நம் எடையை அதிகப்படுத்தவும் செய்கின்றன. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் பல மருந்துகள் எடை அதிகமாக்காமல் குறைக்கவும் உதவுகின்றன.

இதற்குக் காரணம் என்ன?

முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகள் யாவும் கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதை ஊக்குவித்தன. இதன் காரணமாக உடலில் சர்க்கரை அளவு (குளுகோஸ்) குறைந்து விடும். உடனே ஈரல் குளுகோஸைச் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் அதிகமாகப் பசிக்க ஆரம்பிக்கும். உணவில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் நம் உடல் எடையை அதிகப்படுத்தும்.

இப்போது வந்திருக்கும் மருந்துகள் கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதை ஊக்குவிப்பதுடன், ஈரலிலிருந்து குளுகோஸ் அதிகமாக உருவாவதையும் தடுக்கின்றன. இதனால் பசி ஏற்படாது. எடையும் அதிகரிக்காது.

எது எப்படியானாலும், உங்கள் எடையில் திடீரென மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்து உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றித் தெளிவித்துக் கொள்வது நல்லது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 2 Apr 2014 - 9:38

மூடநம்பிக்கை: 16

எனக்குத் தான் எந்த அறிகுறியும் இல்லையே. எனவே எனக்கு சர்க்கரை நோய் இருக்காது.

உண்மை நிலை:


சர்க்கரை நோய்க்கென்று தனியான அறிகுறி ஏதுமில்லை. வயதானதால் ஏற்படும் கோளாறுகளைப் போன்றே இதன் அறிகுறிகளும் தோற்றமளிப்பதால் நம்மால் எளிதில் இது சர்க்கரை நோய்க்கானது என்று கண்டறிய முடிவதில்லை.

இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பது, கண் பார்வை மங்குவது ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

வயதாக ஆக, சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் மிக வேகமாக வருவதுடன், தீவிரமாகவும் தாக்க ஆரம்பிக்கின்றது. எனவே ஆரம்பகாலத்திலேயே சோதனைகள் மூலம் கண்டுபிடித்து விடுவது சாலச் சிறந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by ahmad78 Wed 2 Apr 2014 - 16:12

பலனுள்ள தகவல்கள்

தொடருங்கள்

முழுவதையும் சேகரிக்க ஆவலாய் உள்ளேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 2 Apr 2014 - 16:38

ம்

யாராவது ஒருவருக்கு பயன் படட்டும்னு  நோக்கம்தான் எனக்கும்.

 நான் இங்கே நீரழிவு நோயாளர்களுக்க்கு ஜெர்மன் தமிழ் மொழிக்கான மொழிபெயர்புக்கு செல்வேன்!  

டாக்டர்களின் ஆலோசனை யோடு இப்பதிவு ஒத்து போவதால்  தயங்காது பகிர்ந்தேன்!

மற்றும் நம் உணவு முறைகள் குறித்தும் இப்பகிர்வுடன் பகிர வேண்டும்.  நேரம் கிடைத்தால் முயல்கிறேன்!

நன்றி முஹைதீன்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 3 Apr 2014 - 0:05

மூடநம்பிக்கை: 17

என் எடையை நான் கணிசமாகக் குறைத்ததால், மருத்துவர் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டார். எனவே இனி எனக்குக் கவலையில்லை.

உண்மை நிலை:


வகை 2 க்கான அறிகுறிகள் உங்களிடமிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் நிலை எதுவும் மாறிவிடவில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் மாத்திரை சாப்பிடாததால் பெற்ற நன்மைகள்:

1. பக்கவிளைவுகள் இனி இராது.

2. நேரம் மற்றும் பணம் மிச்சம்.

3. மன அமைதி.

எடையைக் குறைத்தாலும், அவ்வப்போது சோதனையை மேற்கொள்ளுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum