சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Khan11

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

+2
rammalar
Nisha
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Tue 25 Mar 2014 - 11:27

First topic message reminder :

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.

இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.

இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It

எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.

மூட நம்பிக்கை: 1

இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.

உண்மை நிலை:

டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.

ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.

இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.

மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.

எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!

Thanks to ஔவை , முத்தமிழ் மன்றம்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 3 Apr 2014 - 0:05

மூடநம்பிக்கை: 18

சர்க்கரை நோய் ஒரு பழம்பெரும் வியாதி. அதற்கென்று புதிய மருந்துகளோ சிகிச்சையோ ஏதும் கிடையாது.

உண்மை நிலை:


விஞ்ஞான யுகமான தற்காலத்தில் எல்லாத் துறைகளும் முன்னேறி வருவது போலவே சர்க்கரை நோய்க்கான மருந்துகள், சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சை முறைகள் ஆகியன புதியதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

உடலிலிருக்கும் பல்வேறு சுரப்பிகளுக்கும், ரத்தச் சர்க்கரைக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி சமீபத்தில் அதிகம் கண்டறிந்துள்ளனர். சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு நோயாளிகளிடையே அதிகரித்திருப்பதும் நவீன முறைகளை அறிமுகப்படுத்துவதை எளிதாக்குகின்றது.

வயிற்றில் Gastric bypass surgery என்னும் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் ஒரு பகுதியைத் தைத்து விடுவதால் அதிகப் பசியெடுக்காமலும், எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.

லெப்ரோஸ்கோப் முறையிலும் இதே போன்று ஒரு அளவு மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய ரப்பரை வயிற்றில் கட்டி விடுவதால், குறைந்த அளவே சாப்பிட முடியும்.

Continuous Glucose Monitor (CGM) எனப்படும் ஒரு மிகச் சிறிய கருவியை தோலுக்குள் புதைத்து வைப்பதன் மூலம் அதிலிருந்து ரேடியோ சமிக்ஞைகள் மூலமாக உடனுக்குடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளும் வகை ஏற்பட்டிருக்கின்றது. இதனுடன் இன்சுலின் பம்ப்பையும் சேர்த்து நிறுவிக் கொண்டால், ரத்தத்தில் இன்சுலின் தேவையை அவ்வப்போது நிவர்த்தி செய்வதுடன், நோயாளியின் சர்க்கரை அளவை மிகத் துல்லியமாகக் குறித்து வைத்துக் கணிக்கவும் ஏதுவாக இருக்கின்றது.

இது ஒருபுறமிருக்க, செயற்கையாகவே கணையத்தை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகின்றது. செயற்கைக் கணையத்தினுள்ளே, ஒரு CGM, இன்சுலின் பம்ப் மற்றும் சிறு கணினி ஆகியவை இருக்கும். ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலினை வழங்கிக் கொண்டே இருக்கும்.

உட்கொள்ளும் மாத்திரை மருந்துகளும் சமீப காலத்தில் அதிக பக்கவிளைவற்றவையாகவும், நேர்த்தியான செயல்பாடு மிக்கவையாகவும் இருக்கின்றன.

ஆக மொத்தத்தில், சர்க்கரை நோயாளிகளின் கவலைகளைத் தீர்ப்பதாகவே விஞ்ஞானம் இருக்கின்றது என்பது மிகையாகாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 3 Apr 2014 - 0:06

மூடநம்பிக்கை: 19

காய்ச்சல் அல்லது மற்ற நோயால் பாதிக்கப்பட்டு பசியில்லாமையால் அதிகம் சாப்பிடாத போது சர்க்கரை நோய்க்கான மருந்தைக் குறைத்துச் சாப்பிடவேண்டும்.

உண்மை நிலை:


உண்மை அதுவல்ல. எப்போதும் போல், அல்லது அதற்கும் மேல் மாத்திரைகளையோ இன்சுலினையோ எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

காய்ச்சல், காயம் போன்றவை ஏற்படும் போது பசி ஏற்படாமல் இருக்கலாம். அதிகம் சாப்பிடாமலும் இருக்கலாம். ஆனால் உடலில் ஏற்படும் இறுக்கம் காரணமாக உடலில் சர்க்கரை அளவு அப்போதும் அதிகமாகவே இருக்கும். எனவே சர்க்கரை நோய்க்கான மருந்துகளை நோயுற்ற காலங்களிலும் தவறாது சாப்பிடவேண்டும். சர்க்கரை அளவையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அச்சமயங்களில் நாம் உண்ணும் உணவின் அளவு சர்க்கரையை நிர்ணயிப்பதில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Thu 3 Apr 2014 - 0:07

மூடநம்பிக்கை: 20

நான் சோதனை செய்து பார்க்கும் போது எனது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கின்றது. எனவே நான் மருத்துவரைச் சென்று காணவேண்டிய அவசியம் இல்லை.

உண்மை நிலை:


இரத்தஅழுத்தம் நம் உடலுக்குள் மறைந்திருந்து கொல்லும் ஒரு கொலையாளி. சோதனை செய்து பார்க்காவிட்டால் நமக்கு இருப்பதே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் ஆளையே காலி செய்து விடும் அளவுக்கு பலம் வாய்ந்தது. எனவே அவ்வப்போது இதைச் சோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இது போலவே தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு மருத்துவரை அணுகிச் சில சோதனைகளைச் செய்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம்.

1. Hemoglobin A1c என்னும் சோதனை
2. Lipids test— உடலில் நல்ல கொழுப்பு, தேவையில்லாக் கொழுப்பு, ட்ரைக்ளிசரைட் காணும் சோதனை
3. இரத்த அழுத்த சோதனை
4. Microalbumin test
5. Serum creatinine and BUN (blood urea nitrogen) tests
6. Dilated eye exam (உங்கள் பார்வை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் கூட, கண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். அதை இந்தச் சோதனை காட்டிக் கொடுத்து விடும். ஆண்டுக்கொரு முறை கண் மருத்துவரிடம் இதைச் செய்து கொள்ளலாம்.)
7. கால்களைப் பரிசோதித்துக் கொள்தல்

மேற்கண்ட முக்கியமான சோதனைகளை வாழ்நாள் முழுதும் குறிப்பிட்ட இடைவெளி விட்டுச் செய்து, அதன் முடிவுகளைப் பொருத்து நமது மருந்து, பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வரை நிம்மதியான வாழ்வு வாழ முடியும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:20

மூடநம்பிக்கை: 21

நான் இன்சுலின் மருந்தை உட்கொள்வதால் மூன்று வேளை சாப்பாடு தவிர குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொண்டாக வேண்டும்.

உண்மை நிலை:


முன்பிருந்த இன்சுலின் மருந்துகள் உடலில் நீடித்திருந்ததாலும், அதன் அளவு உடனே உச்சத்தை எட்டுவதாக இருந்ததாலும், குறை சர்க்கரை ஆகிவிடக் கூடாது (ஹைப்போ) என்பதற்காகச் சிறிது நொறுக்குத்தீனி அல்லது உணவு எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

நீங்கள் உட்கொள்ளும் மருந்து எவ்வளவு நேரம் உடலில் தொடர்ந்து நீடித்திருக்கின்றது என்பது அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். சில மருந்துகள் 3 மணி நேரம் நீடித்திருக்கின்றன. சில மருந்துகள் 24 மணி நேரம் கூட நீடித்திருக்கின்றன. உடலில் நீடித்திருக்கும் மருந்து உட்கொள்பவர்கள் தான் தொடர்ந்து உணவு உட்கொள்ள வேண்டும்.

Humalog®, Novolog® மற்றும் Apidra® போன்ற உடனடி நிவாரண மருந்துகள் உணவில் கார்போஹைட்ரேட் சேர்வதைத் தடுப்பதில் வெகுவிரைவாகச் செயல்படுகின்றன. வெகுவிரைவில் உச்சத்தை எட்டி வெகுவிரைவில் உடலை விட்டு வெளியேறவும் செய்கின்றன. இவை bolus வகை மருந்துகளாகும். நாம் உண்ணப் போகும் உணவைப் பொருத்து இவற்றின் அளவைக் கூட்டியோ குறைத்தோ உட்கொள்ளவேண்டும். இவற்றின் அதிகபட்ச வீரியம் 3 மணி நேரங்கள் தான். எனவே ஒவ்வொரு வேளை உணவுக்கும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Lantus® மற்றும் Levemir® போன்ற மருந்துகள் basal வகை மருந்துகள் ஆகும். இவற்றின் வீரியம் 16 மணி முதல் 24 மணி நேரங்கள் வரை இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை இட்டுக் கொண்டால் போதும். மெதுவாகக் குறைந்த அளவு இன்சுலினை ரத்தத்தில் கலந்து கொண்டே இருக்கும்.

இவை அனைத்தையும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும், நீங்கள் உண்ணும் உணவு வகை மற்றும் அளவினைக் கருத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:22

மூடநம்பிக்கை: 22

வகை 1 சர்க்கரை வியாதிக்கான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

உண்மை நிலை:


கடந்த பத்து ஆண்டுகள் வரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், சமீபத்தில் சில ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Islet cell transplantation என்னும் முறை மூலம் செல்களை மாற்றி அமைத்து இன்சுலின் சுரப்பதற்கு வகை செய்யப்படுகின்றது. தொடர்ந்து ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலினை வழங்குவதால் நாம் ஏற்கனவே கண்ட CGM கூட ஒரு சிறந்த தீர்வாகும். செயற்கை கணையமும் விரைவில் உருவாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே வகை 1 சர்க்கரை வியாதிக்காரர்களும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:22

மூடநம்பிக்கை: 22

வகை 1 சர்க்கரை வியாதிக்கான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

உண்மை நிலை:


கடந்த பத்து ஆண்டுகள் வரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், சமீபத்தில் சில ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Islet cell transplantation என்னும் முறை மூலம் செல்களை மாற்றி அமைத்து இன்சுலின் சுரப்பதற்கு வகை செய்யப்படுகின்றது. தொடர்ந்து ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலினை வழங்குவதால் நாம் ஏற்கனவே கண்ட CGM கூட ஒரு சிறந்த தீர்வாகும். செயற்கை கணையமும் விரைவில் உருவாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே வகை 1 சர்க்கரை வியாதிக்காரர்களும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:23

மூடநம்பிக்கை: 23

சர்க்கரை வியாதியிருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிக்கவே கூடாது.

உண்மை நிலை:


இது உண்மை அல்ல.

வகை 1 அல்லது 2 ஆகிய சர்க்கரை வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களும் கருத்தரிக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்திலும், பேறு காலத்திலும் சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தினால் மட்டுமே குழந்தை பாதிக்கப்படாமல் காக்க முடியும்.

இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, இதய ஆரோக்கியம் ஆகியவற்றைச் சரிபார்த்துக் கொண்ட பின்னரே இவர்கள் கர்ப்பம் தரிப்பது நல்லது.

குழந்தையின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், மற்றும் பல உறுப்புகள் யாவும் கர்ப்பம் தரித்து 5 வாரங்களிலேயே உருவாக ஆரம்பித்து விடும். இந்தக் காலத்தில் தான் கர்ப்பம் தரித்திருக்கின்றோமா என்று கூடப் பெண்களால் அறிந்திருக்க முடியாமல் இருக்கலாம். எனவே, கர்ப்பம் தரிக்கும் முன்னரே கவனமாக நமது உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடவேண்டும்.

இதனால் தானாகக் கருக்கலைவது, குறைப்பிரசவம், குழந்தை ஊனத்துடன் பிறப்பது ஆகியவற்றைத் தவிர்க்க முடியும்.

இது தவிர, கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக சர்க்கரை நோய் வருவது 4% பெண்களுக்கு சகஜமான ஒன்றாக இருக்கின்றது. இது சராசரியாக 22 முதல் 28 வார காலத்தில் நிகழும். குழந்தைக்குத் உணவு வழங்கும் தொப்புள் கொடி (ப்ளசாண்டா) இன்சுலின் அளவைக் குறைக்கும் ஹார்மோனையும் உற்பத்தி செய்கின்றது. இதுவே கர்ப்ப காலச் சர்க்கரை வியாதியின் காரணமாகும்.

ஏற்கனவே வகை 1 மற்றும் 2 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போல் இவர்களுக்குப் பிரச்னை இல்லை என்றாலும் சர்க்கரை நோய் இருப்பது அறியாமலே இவர்கள் இருந்திருக்கவும் கூடும் என்பதால் முதலிலேயே பரிசோதித்துக் கொள்வது நல்லது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:24

மூடநம்பிக்கை: 24

தினசரி நம் வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தத்துக்கும், உளைச்சலுக்கும் சர்க்கரை வியாதிக்கும் தொடர்பில்லை.

உண்மை நிலை:


உண்மையில் மன அழுத்தமும், உளைச்சலும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டுகின்றன. நமது சர்க்கரை நோய் மேலாண்மையைப் பெரிதும் பாதிக்கின்றன.

மன அழுத்தம் மொத்தத்தில் யாருக்குமே நல்லதில்லை என்றாலும் சர்க்கரை நோய்க்காரர்களுக்கு மிகவும் கேடு விளைவிப்பதாகும். மனதில் கவலையாலோ, வேலை நிர்பந்தத்தாலோ ஏற்படும் மன அழுத்தத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் அதிக ரத்தஅழுத்தமும் ஒன்று. மேலும் ஏற்படும் மாற்றங்களால் பசி அதிகரிக்கின்றது, தூக்கம் குறைகின்றது, எதிர்பார்ப்பு அதிகமாகின்றது, மன உளைச்சல் ஏற்படுகின்றது. உடல் சோர்வடைகின்றது.

மனிதர்களின் அழுத்தத்துக்கும் உடலுக்குமான தொடர்பு மரபுவழி வந்ததாகும். வேட்டையாடும் போது புலி உறுமும் சத்தம் கேட்டதென்றால், சண்டையிடவா ஓடவா என்னும் முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான். அப்போது அவன் உடலில் ஓடுவதற்கோ அல்லது சண்டையிடுவதற்காகவோ உடல் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து சக்தியைச் செலவளிக்கத் தயாராகின்றது. அதே சமயத்தில் கணையத்திலிருந்து இன்சுலின் சுரந்தால் மட்டுமே சர்க்கரை சக்தியாக மாறும். சர்க்கரை நோய் இருக்கும் போது இது ஏற்படாததால் சர்க்கரை அளவு அதிகரித்து பிரச்னைக்கு வழிவகுக்கின்றது.

மன அழுத்தம் கவலைகளால் மட்டும் வருவதில்லை. அதிக உற்சாகமுற்றாலோ, சந்தோசமடைந்தாலோ, சாதனை புரியும் போதோ, நல்ல விஷயத்தை எதிர்பார்ப்பதாலோ வரலாம்!

சர்க்கரை உச்சத்தை அடைவதற்கு உணவுமுறை எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கின்றதோ அதே அளவு மன அழுத்தமும் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

எனவே அதிக சந்தோசமும், அதிகக் கவலையும் ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைச் சமமாக வாழப் பழகிக் கொண்டால் சர்க்கரை வியாதியை எளிதாக மேலாண்மை செய்யலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:25

மூடநம்பிக்கை: 25

எனது சர்க்கரை நோய்க்கான மருந்தை எடுத்துக் கொள்வதோடு என் கடமை முடிந்து விட்டது. மருத்துவர் என்னைச் சரியாகக் கண்காணித்துக் கொள்வார்.

உண்மை நிலை:


நோய் வந்திருப்பது உங்களுக்குத் தானே ஒழிய உங்கள் மருத்துவருக்கு இல்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வதால் மட்டுமே சர்க்கரை நோயை மேலாண்மை செய்து விட முடியாது.

இந்த நோயைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும். பலரும் சர்க்கரை அளவு கூடுவதை அல்லது குறைவதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகின்றார்கள். ஆனால், சர்க்கரை அளவு கூடுவது அல்லது குறைவதைப் பரிசோதனையின் மூலம் தான் கண்டறிய முடியும். அதைப் பற்றிய அறிவினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு நாமே பரிசோதனை செய்து கொள்ளும் முறைகளைத் தெரிந்து கொண்டு, தொடர்ந்து பரிசோதனையும் செய்து, அதைக் குறித்தும் வைத்து மருத்துவருக்கு நாம் உதவ வேண்டும். இதன்மூலம் சர்க்கரை நோயை மேலாண்மை செய்ய இயலும்.

உணவு முறையும் ஒரு முக்கியமான பங்கு வகிப்பதால், அதிலும் மிகுந்த கவனம் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

சர்க்கரை மேலாண்மைக்கான 5 வழிமுறைகள்:

1. சர்க்கரை நோயைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சமீபத்திய தகவல்களையும் அறிந்து கொள்ள முனையுங்கள்.

2. புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துங்கள். இன்சுலின் மருந்துகளை எடுத்துக் கொள்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல், அடிக்கடி பரிசோதித்துக் கொள்தல், திட்டமிட்ட உணவுமுறைகளை மேற்கொள்தல் ஆகிய‌வற்றை நீங்களாக முனைப்புடன் செய்யுங்கள்.

3. உங்களுக்கான ஒரு குருவைத் தேர்ந்தெடுங்கள். நல்லபடியாகத் தன் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தினால் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழுங்கள்.

4. எப்போதும் நன்மைகளையே நினையுங்கள். தீமைகளைத் தவிர்க்க உங்களுக்கு இது உதவும்.

5. உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சுற்றத்தாரிடம் இவ்வியாதியுடன் நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு ஆதரவளிக்கக் கோருங்கள். நீங்கள் இவ்வுலகத்தில் தனிமனிதர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:54

மூடநம்பிக்கை: 26

சர்க்கரை வியாதிக்காரர்கள் உட்கொள்வதற்கென்றே இருக்கும் பத்திய உணவுப் பட்டியலில் உள்ளவற்றைத் தான் சாப்பிடவேண்டும்.

உண்மை நிலை:


உண்மை என்னவென்றால், அப்படி ஒரு பட்டியலே கிடையாது என்பது தான்!

நீங்கள் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும், அது ரத்தத்தில் குளுகோஸ் அளவு, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவுக்கு மீற விடாததாகவும், உங்கள் எடையை மட்டுக்குள் வைத்திருப்பதாகவும், உங்கள் வாழ்க்கை முறைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

உங்கள் வட்டிலின் பாதிப் பகுதிக்கு கார்போ ஹைட்ரேட் குறைந்த காய்கறிகளும், கால் பகுதிக்கு கார்போஹைட்ரேட் மிகுந்த நீங்கள் வழக்கமாக உண்ணும் சாதம், உருளைக்கிழங்கு போன்றவற்றையும், மீதிக் கால் பகுதிக்கு புரோட்டீன் நிறைந்த உணவு வகைகளையும் வைத்துக் கொண்டால் போதுமானது.

நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும், இரண்டு வேளைகளுக்கு இடையேயான கால இடைவெளியும் தான் மிக முக்கியமானதாகும்.

உணவு உட்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய 5 வழிகள்:

1. நீங்கள் உண்ணும் உணவு மூன்று நிறங்கள் கொண்டதாகவும், இழைகள் அதிகமுள்ளதாகவும் (Textured) அதாவது வழுவழுவென்றில்லாமல் இருத்தல் நல்லது. பளிச்சென்றிருக்கும் அதிக நிறமுடைய காய்கறிகள் வைட்டமின் சத்து நிறைந்ததாகும். உண்ணும் உணவு வண்ணமயமாக இருப்பது மனதுக்கும் இனிமையானதாக இருக்கும்.

2. உங்கள் உடலை ஒரு வாகனமாகக் கருதிக் கொண்டு, வாகனத்துக்கு எரிபொருள் இடுவது போலவே உடலுக்கும் உணவிடுவதாகக் கருதுங்கள். அதிக எரிபொருளைக் குறைந்த நேரத்தில் எரிப்பது யாருக்கும் பிடிப்பதில்லை தானே?

3. உணவை ரசித்து, ருசித்து உண்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக மென்று சுவைத்து உண்ணுங்கள்.

4. எதையும் சாப்பிடுவதற்கு முன், நான் இதை உண்ணும் அளவுக்குப் பசியோடிருக்கின்றேனா? என்ற கேள்வியைக் கேட்டுப் பின் சாப்பிடுங்கள்.

5. ஒரு சில முறைகள் பத்திய உணவைச் சாப்பிட்டுப் பின் அதை விடுவதைக் காட்டிலும், தொடர்ந்து எளிமையான உணவு முறையை மேற்கொள்வது சிறந்தது என்பதை உணருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:55

மூடநம்பிக்கை: 28

இனி நான் விரும்பியதை உண்ணவே முடியாது.

உண்மை நிலை


நீங்கள் விரும்பும் இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனி வகைகளைத் தாராளமாக உட்கொள்ளலாம். கீழ்க்காணும் இரண்டு வழிகளில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

1. குறைந்த அளவிலேயே அதிக இடைவெளி விட்டு நீங்கள் விரும்பும் உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் விரும்பியதை உண்பது சுவைக்காக மட்டுமேயன்றி உணவாக அல்ல.

2. உங்களுக்குப் பிடித்த உணவுகளின் அடிப்படை மூலப்பொருட்களில் சத்தான மூலப்பொருட்களும் சேருமாறு அதன் அமைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் உணவில் கார்போ ஹைட்ரேட்டும் கொழுப்பும் அதிகமாக இருக்குமானால், நீங்கள் உண்ணும் மற்ற உணவு வகைகளில் அதைக் குறைக்க வேண்டும். அதாவது நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகின்றீர்கள் என்பது தான் மிக மிக முக்கியம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:56

மூடநம்பிக்கை: 29

உரிய மருந்து உட்கொண்டு விட்டால் நான் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

உண்மை நிலை


அதிக கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு நிறைந்த பதார்த்தங்களை உட்கொண்டு விட்டு, அதற்கேற்றாற் போல் மாத்திரையையோ இன்சுலினையோ அதிகரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். அது மாபெரும் தவறாகும்!

அதிக உணவை உட்கொள்வதும், மாத்திரையை அதிகம் எடுத்துக் கொள்வதும் எப்போதாவது (வருடத்துக்கு) ஒருமுறை என்றால் பரவாயில்லை. அடிக்கடி அவ்வாறு செய்தால், உடல் எடை கூட ஆரம்பிக்கும். இதனால் உடலில் இன்சுலின் உருவாவது குறையும். மேலும் அதிக மருந்து உட்கொள்ள நேரிடும்!

உணவு அதிகம் சாப்பிடுவது ’இரு சர்க்கரை வியாதி’ (Double Diabetes) எனப்படும். எனவே வேளைகளை அதிகரித்துக் கொண்டு அளவைக் குறைத்து உணவையும் மருந்தையும் உட்கொள்வது நல்லது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:57

மூடநம்பிக்கை: 30

ஒருவேளை என் ரத்தத்தில் சர்க்கரை மிகவும் குறைந்ததாகத் தோன்றினால், அது சரியாகும் வரை நான் இனிப்பைச் சாப்பிட வேண்டும்.

உண்மை நிலை


உண்மை என்னவென்றால் நீங்கள் அதிக விரைவாய்ச் செயல்படும் கார்போ ஹைட்ரேட் நிறைந்த ஏதேனும் உணவை 15 கிராம் அளவுக்குள் அருந்தி விட்டு உடனே சர்க்கரை அளவைச் சரிபார்த்தல் வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது அகோரப் பசியும், அதிக இதயத் துடிப்பும் ஏற்படும். உடனே அதைச் சரி செய்வதற்காகப் பலரும் கையிலேயே ஏதேனும் மிட்டாய், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்து அள்ளி அருந்துவதைக் காணலாம்! ஆனால், இதனால் பாதிப்பு அதிகமாகுமே தவிரக் குறைவதில்லை.

இது போன்ற சமயங்களில் நாம் செய்ய வேண்டியது, உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சரி செய்யக் கூடிய முயற்சியை எடுக்க வேண்டும். இனிப்பைச் சாப்பிடும் போது கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை ஏறுவதால் அது குறிப்பிட்ட அளவில் சென்று நிற்காமல் மேலும் மேலும் ஏறிக் கொண்டே இருந்து அதிகச் சர்க்கரை அளவை எட்டக் கூடும்!

உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு 70 mg/dl அளவுக்கும் குறைவாக இருந்தால், உடனே நீங்கள் மிகவும் பிரபலமான விதி 15 ஐப் பயன்படுத்த வேண்டும். அதாவது உடனே செரிக்கக் கூடிய, அதி விரைவில் வேலை செய்யக் கூடிய 15 கிராம் கார்போ ஹைட்ரேட் மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து உங்கள் ரத்தத்தைச் சோதிக்க வேண்டும். அப்போதும் சர்க்கரை அளவு 70 mg/dl அளவுக்குள்ளேயே இருந்தால் மீண்டும் ஒரு 15 கிராம் உட்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் சோதிக்க வேண்டும். உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 mg/dl கொண்டு வருவதே நமது எண்ணம். ஆனால், இப்போதும் 70 mg/dl அளவுக்குள்ளேயே இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்! நீங்களாக எந்த சிகிச்சையும் மேற்கொள்ளக் கூடாது!

இப்போது 15 கிராம் அளவுள்ள சில உணவுப் பொருட்களான ஓரிரு கரண்டி தேன் அல்லது அரை டம்ளர் சோடா அல்லது நான்கு குளுகோஸ் மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையக் காரணங்களாகக் கருதப்படுபவை:

1. அதிக இன்சுலின் மருந்தை உட்கொள்தல்
2. ஒரு வேளை உணவைத் தவிர விடுதல்
3. அதிக உடற்பயிற்சி மேற்கொள்தல்
4. மது உட்கொள்தல்
5. உடல் எடை குறைதல்.

அடிக்கடி சோதனை செய்து கொள்வதன் மூலம் இதைக் குறைக்கலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 13:41

சூப்பர்  சூப்பர் 

தொடருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by rammalar Fri 11 Apr 2014 - 14:27

சர்க்கரை நோயால் அதிக பாதிப்பு

அடைந்தவர்கள், தனியாக எங்கு

சென்றாலும் தங்கள் பையில்

அடையாள அட்டை வைத்திருக்க

வேண்டும்...

அதில் அவர் சர்க்கரை


நோயாளி என்பதும், குடும்ப மருத்துவர்

மற்றும் உறவுகள் விபரமும் கூடுதலாக

இருந்தால் நல்லதே..!

-

ஆபத்தான நேரத்தில் உயிர் காக்க உதவும்..

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Sun 13 Apr 2014 - 9:15

மூடநம்பிக்கை: 31

சர்க்கரை வியாதி இருப்பவர்கள், சுகர் ஃப்ரீ எனப்படும் சர்க்கரை நீக்கிய இனிப்பு கலந்ததையே சாப்பிடவேண்டும்

உண்மை நிலை:


கடைகளில் சென்று பார்த்தால் சுகர் ஃப்ரீ என்று தலைப்பிட்டு நிறைய பதார்த்தங்களைக் காணலாம். அவைகள் அனைத்தும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கென்று விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றால் பயன் அடைபவர்கள் அந்தப் பதார்த்தங்களை உருவாக்கும் தொழிற்சாலை முதலாளிகள் மட்டுமே!

இவ்வகைப் பதார்த்தங்களைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க முடியாது! மேலும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் மேற்கொள்பவர்கள் கூட இவ்வகைப் பதார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது!

அதேசமயத்தில், இவ்வகைப் பதார்த்தங்களில் சில நன்மைகளும் உண்டு. இப்பதார்த்தங்கள் சாதாரண இனிப்புப் பதார்த்தங்களைக் காட்டிலும் அதிக விலையில் இருப்பதால், நீங்கள் குறைவாகவே வாங்கிச் சாப்பிடுவீர்கள்! சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Happy11நீங்கள் இப்பதார்த்தங்களை வாங்கும் போது இதில் கலக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருளின் பெயரைப் பாருங்கள். அப்பெயர்கள் -ose என்று முடிவடைந்திருக்குமானால் (எ.கா. sucrose, high-fructose corn syrup, maltose, and fructose) அவைகளில் கார்போ ஹைட்ரேட்டும் சர்க்கரையும் இருக்கின்றது என்று பொருளாகும்.

இப்பதார்த்தங்களில் கொழுப்பின் அளவும் குறைவதில்லை. மாறாக அதிகமாக இருக்கக் கூடும்! கலோரியின் அளவு வேண்டுமானால் சற்று குறைவாக இருக்கலாம்.

முற்றிலும் இனிப்பில்லாத டயட் சோடா, செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியவற்றால் அத்தனை பாதகங்கள் விளைவதில்லை.

1. எலுமிச்சையைச் சாதாரண/கார்பனேட்டட் நீரில் பிழிந்து அருந்தலாம்.

2. Stevia எனப்படும் மூலிகை இனிப்பூட்டியைப் பயன்படுத்தலாம்! இதில் -ose இல்லை என்பதைக் கவனியுங்கள்.

3. பழ மற்றும் மூலிகை டீயை அருந்தலாம். இவற்றில் இனிப்பிருந்தாலும் கலோரி அதிகமில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Nisha Sun 13 Apr 2014 - 9:15

முடநம்பிக்கை: 32

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மது அருந்தக் கூடாது.

உண்மை நிலை
:

உண்மையில் மதுவானது உடலில் சர்க்கரையைக் குறைக்கும் வேலையையே செய்கின்றது! மது தயாராகும் முறை அப்படி. கார்போ ஹைட்ரேட் அதிகம் இருக்கும் உருளைக்கிழங்கு, திராட்சை, மக்காச்சோளம் ஆகியவற்றிலிருந்தே மது தயாரிக்கப்பட்டாலும், இவற்றை நொதிக்கச் செய்து மது தயாரிக்கும் போது கார்போஹைட்ரேட் குறைந்து போய் அது தான் மதுவாக உருமாறுகின்றது. எனவே மதுவில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடே இருக்கின்றது.

உடலில் சர்க்கரை அளவு குறையும் போது கல்லீரலானது சேமித்து வைக்கப்பட்டிருக்கும் க்ளைகோஜென் எனப்படும் கார்போ ஹைட்ரேடிலிருந்து குளுகோஸை (சர்க்கரை)யைத் தயாரித்து ரத்தத்தில் கலக்கச் செய்கின்றது. ஆனால், மது அருந்தும் போது கல்லீரல் தனது வழக்கமான பணியை விட்டு விட்டு, வேண்டாத பொருளான மதுவை உடலிலிருந்து வெளியேற்றும் பணியைச் செய்ய ஆரம்பிக்கின்றது! இதனால் உடலில் குளுகோஸ் குறைந்து போகின்றது! எனவே தான் மது அருந்தும் போது உடலில் சர்க்கரை அளவு குறைய ஆரம்பிக்கின்றது. இதில் இன்சுலினையும் சேர்த்து உட்கொண்டால், அது குறை சர்க்கரை நிலைக்குக் கொண்டு சென்று ஆபத்தாகிவிடும்!

எனவே மது அருந்துபவர்கள் அடிக்கடி தங்கள் சர்க்கரை அளவைச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும். எந்த வகை மது தமக்கு உடலில் எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறிந்திருக்க வேண்டும்.

மது அருந்துபவர்கள் கவனிக்க வேண்டியவை:

1. மது அருந்தும் போது கார்போ ஹைட்ரேட் அதிகம் இருக்கும் நொறுக்குத் தீனியை உட்கொள்தல் வேண்டும். இதை அதிகம் உட்கொண்டால் அதி சர்க்கரை அளவையும் எட்ட வாய்ப்பிருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது! மதுவுடன் பழரசம் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம்.

2. மது அருந்தியவுடனும் சிறிது நேரம் கழித்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும்.

3. எக்காரணம் கொண்டு மது அருந்தி விட்டு கார் ஓட்டவே கூடாது.

4. மது அருந்துவதால் சர்க்கரை அளவு குறைவது நல்ல அறிகுறி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு, கண்கள் பார்வைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் இவை அனைத்தும் வர அதிக வாய்ப்பிருக்கின்றது.

5. மது அருந்தும் சமயத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் அதன் அளவு குறித்த விழிப்புணர்ச்சி மிகவும் அவசியமாகும்.

6. மது அருந்துவதால் உடலில் எடை அதிகமாக வாய்ப்பிருக்கின்றது. அதைக் குறைக்க தகுந்த நடவடிக்கைகளும் தேவை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Apr 2014 - 9:30

அருமையான பதிவு தொடருங்கள்


சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும். - Page 2 Empty Re: சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum