சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Khan11

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:04

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்.. !

கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.

தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப்பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்:

1.ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறைவணக்கப்பாட்டு
2.நலுங்கு, தாலாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், மசக்கை, நோன்பு, சடங்கு, ஒப்பாரி. இவை குறிப்பிட்ட காலங்களில் பாடப்படுவன.
3.புதிர்ப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டம் முதலியவை ஓய்வுகாலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.
4.தொழிற்ப்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, சுண்ணாம்ம்பு இடிப்பார்பாட்டு, தெம்மாங்கு முதலியவை வேலை செய்யும்போது பாடப்படுபவை.
5.மழைப்பாட்டு, பிரார்த்தனைப்பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு, சுகாதாரக் கும்மிப் பாட்டு என்பவை சில சந்தர்ப்பங்களுக்காகப் பாடப்படுபவை.


இந்த பதிவை  முத்தமிழ் மன்றத்தில் 2010 ஆண்டில் நான் பதிந்திருந்தாலும் இதன் மூலம் எங்கே என்பது சரியாக லிங்க் இணைக்காமல் விட்டிருக்கின்றேன்!  இணையத்தில் தேடிய போது 2009 ல் பாலாஜி சிவம் என்பவர் தன் வ்லையில் இப்பாடலகளை தொகுப்பாய் வெளியிட்டிருக்கின்றார்.  அவருக்கும்  இப்பாடல்கள் அழிந்து விடாமல்  சிரமப்பட்டு தேடி தட்டச்சிட்டு பதிந்தவர்களுக்கும்  நன்றி சொல்கின்றேன்.  


Last edited by Nisha on Sat 31 Jan 2015 - 14:26; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:12

தொழிலாளர் பாடல்கள்
எங்கும் நெல்

களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1

கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2

மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3

வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 4

தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 5

நாட்டியக் குதிரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா - ஏலங்கிடி லேலோ 6

குள்ளiமாடும் புள்ளiமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 7

பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா - ஏலங்கிடி லேலோ 8

பல்லுப்போடாத காளைக்கன்றும் - ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9

பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 10

எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11

கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ 12

நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ 13

வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா - ஏலங்கிடி லேலோ 14

ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு - ஏலங்கிடி லேலோ 15

அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் - ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் - ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19

வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா - ஏலங்கிடி லேலோ 21

தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ 22

கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23

கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் - ஏலங்கிடி லேலோ 24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ 26

------------


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:21


சந்தனத் தேவன் பெருமை


எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1

சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2

எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4

எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6

எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7

சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8

எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ

சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11

சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12

எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13

சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14

எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15

சந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16

எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17

சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18

எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19

சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20

எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21

சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22

எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23

சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24

எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25

சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26

எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ

ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28

எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29

சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30

எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31

சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32

எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33

தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34

எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35

சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36

எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37

சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38

எல்லாரும் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39

சந்தனம் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 40


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:22

ஆள் தேடுதல்

தெருத்தெருவாய் தேடி வாறான் - ஏலங்கிடி லேலோ
திண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1

சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து - ஏலங்கிடி லேலோ
சயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2

முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோ
முணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3

ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5

ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ 6

சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ 7


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:23

விறகொடிக்கும் பெண்

வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1

காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2

காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3

காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4

கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5

கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6

கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7

விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8

மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9

கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10

கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11

கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12

கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13

எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14

காட்டுக்குள்ளே விறகொடித்து -ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15

கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:24

குடும்பப் பாட்டுகள்

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:24

பெண்ணுக்கு அறிவுரை

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1

காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2

அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி சுண்டெலிப்பெண்ணே 4

கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5

காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6

நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7

புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8

ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11

வாறவனையும் போறவனையும் -சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12

சந்தைக்குப்போற சனங்களைநீ -சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13

சலுக்காரு ரோட்டிலேநீ -சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14

பக்கத்துவீட்டுப் பெண்களைச் -சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15

இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16

மண்டை பெருத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17

விரிச்சநெற்றிக் காரியே -சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18

இரும்புநெஞ்சு படைத்த -சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19

மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20

உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21

உதட்டழக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22

கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23

பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24

குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25


Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 0:29; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:25

நாட்டுப்புற ராசாத்தி

ரோடு எல்லாம் கொழுத் தாடை
ரொம்பிக் கிடக்குதுபார் -ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார்.

நல்ல கரும்பு சட்டுக் கட்டா
நயமா விக்குதுபார் -ராசாத்தி
நயமா விக்குதுபார்.

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
சந்தெல்லாம் விக்குதுபார் -ராசாத்தி
சந்தெல்லாம் விக்குதுபார்.

கல்லுக் கண்டும் கடலை அவலும்
கணக்காய் விக்குதுபார் -ராசாத்தி
கணக்காய் விக்குதுபார்.

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
குறுக்கே போறதைப்பார் -ராசாத்தி
குறுக்கே போறதைப்பார்.

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
நின்று பாக்றதைப்பார் –ராசாத்தி
நின்று பாக்கறதைப்பார்.

நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
நொண்டி அடிக்குதுபார் -ராசாத்தி
நொண்டி அடிக்குதுபார்.

பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள்
பட்டம் விடுவதுபார் –ராசாத்தி
பட்டம் விடுவதுபார்.

சாரட்டு வண்டியும் சட்கா வண்டியும்
சரியா நிக்குதுபார் –ராசாத்தி
சரியா நிக்குதுபார்.

மல்லுக் கட்டுற மைனர் மார்கள்
மாத்தி மாத்தி வாராங்க -ராசாத்தி
மாத்தி மாத்தி வாராங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:30

நாட்டுப்புற தங்கரத்தினமே

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -பொன்னுரத்தினமே.

அள்ளiஅள்ளi விதைத்த
அழமுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த –தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -பொன்னுரத்தினமே.

கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் –தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -பொன்னுரத்தினமே.

சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -பொன்னுரத்தினமே.

சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் –தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -பொன்னுரத்தினமே.


எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி –தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -பொன்னுரத்தினமே.

ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -பொன்னுரத்தினமே.

தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ளiயைக்
காவல்வைத்தால் -தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே.

மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை –தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -பொன்னுரத்தினமே.

சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் –தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -பொன்னுரத்தினமே.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:32

நாட்டுப்புற தெம்மாங்கு

செம்பிலே சிலைஎழுதி –மாமா
செல்வத்திலே நான் பிறந்தேன்
வம்பிலேதான் கைகொடுத்து –மாமா
வார்த்தைக் கிடம்ஆனேனே

கண்டி கொளும்பும்கண்டேன் –சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் –சாமி
ஒயிலாளைக் காணலையே

ஏழுமலைக் கந்தப்பக்கம் -சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம்
கண்சிவந்து வந்ததென்ன -சாமி
கடுங்கோபம் ஆனதென்ன?

மூக்குத்தித் தொங்கலிலே –குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி –குட்டி
அதிலேஒரு பச்சைக்கல்லு.

சந்தனம் உரசுங்கல்லு –குட்டி
தலைவாசலைக் காக்குங்கல்லு
மீன்உரசுங் கல்லுக்கடி –குட்டி
வீணாசைப் பட்டாயோடி.

ஆசைக்கு மயிர்வளர்த்து –மாமா
அழகுக்கொரு கொண்டைபோட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் –மாமா
சோறாக்க ஆளானேனே

வெள்ளைவெள்ளை நிலாவே –சாமி
வெளiச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ –சாமி
கருக்கவிட்டால் ஆகாதோ?

கும்பகோணம் ரெயிலுவண்டி –குட்டி
குடிகெடுத்த தஞ்சாவூரு
தஞ்சாவூரு தாசிப்பொண்ணு -குட்டி
தாயைமறக் கடிச்சாளடி.

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே –குட்டி
வெறகொடிக்கப் போறபொண்ணே
கட்டைஉன்னைத் தடுத்திடாதா –குட்டி
கரடிபுலி தாவிடதா?

ஆத்திலே தலைமுழுகி –குட்டி
ஆயிரங்கால் பட்டுடுத்தி
ஊத்துப்பக்கம் உட்காந்துநீ –குட்டி
போட்டுக்கோடி வெற்றிலையை.

கொக்குப் பறக்குதடி –குட்டி
கோணல்வாய்க்கால் மூலையிலே
பக்கத்திலே உட்கார்ந்துநீ -என்னைப்
பதறவிட்டுப் போனோயேடி.

காப்புக் கலகலென்னைக் –குட்டி
கைவளையல் ரெண்டும்மின்ன
மூக்குத்தி வேறேமின்னக் –குட்டி
முகமுங்கூட மின்னுதடி.

வண்டியும் வருகுதடி –குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி –குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே.

காளைநல்ல கறுப்புக்காளை –குட்டி
கண்ணாடி மயிலைக்காளை
சூடுவச்ச வெள்ளைக்காளை –குட்டி
சுத்துதடி மத்தியானம்.

ஆறுசக்கரம் நூறுவண்டி –குட்டி
அழகால ரெயிலுவண்டி
மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி
மாயமாத்தான் ஓடுதடி.

பூத்தமரம் பூக்காதடி –குட்டி
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் –என்
காதடைப்பும் தீராதடி.

செக்கச் சிவந்திருப்பாள் –குட்டி
செட்டிமகள் போலிருப்பாள்
லாரி முடிஞ்சிருப்பாள் –குட்டி
வந்திருப்பாள் சந்தைக்கடை.

முட்டாயி தேங்குலழு –குட்டி
முறுக்குலட்டுப் பூந்திவடை
தட்டாமே வாங்கித்தரேன் –குட்டி
தங்கமே நீ வாய்திறந்தால்.

பாசம் பிடிக்கும்தண்ணி –குட்டி
பலபேர் எடுக்கும்தண்ணி
அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி
அத்தனையும் முத்தல்லவோ?

நீட்டினகால் மடக்காமல் நீ-அடி
நெடுமுக்காடை எடுக்காமலே
காட்டினாயே கருமூஞ்சியை-அடி
கருங்கழுதை மூஞ்சிபோலே.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:33

நாட்டுப்புற சடுகுடு(கபடி)
பலிஞ் சடுகுடு

1.
சக்கு சக்குடி -சரு வொலாக்கைடி
குத் தொலக்கைடி -குமரன் பெண்டாண்டி
பாளயத்திலே வாழ்க்கைப்பட்ட
பழனி பெண்டாட்டி.

2.
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புளே
அரைக்காசு வெற்றிலைக்குக்
கதிகெட்ட மாப்பிளை.

3.
குத்துலக்கை –கோலிக்குண்டு
வச்செடுத்தான் –வாரிக்கொள்வான்
தப்பைதாளம் –ஏந்திஇறக்கி
ஏந்தின கையிலே சொக்கி

4.
கவானைக் சுவட்டி சுவட்டி சுவட்டி
பலிஞ் சடுகுடு .....................

5.
பலிஞ் சடுகுடு அடிப்பானேன் ?
பல்லு ரெண்டும் போவானேன் ?
உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்
ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம்.

6.
தூதூ நாயக்குட்டி -தொட்டியத்து நாய்க்குட்டி
வளைச்சுப் போட்டா –நாய்க்குட்டி
இழுத்துப் போட்டா –நாய்க்குட்டி
நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி

7.
கிக்கீக்குங் கம்பந் தட்டை
காசுக்கு ரெண்டு சட்டை
கருணைக் கிழங்கடா
வாங்கிப் போட்டா வாங்கிப் போட்டா.

8.
அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை
கல்லிலே போட்டால் கரைக் குடுக்கை
சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை....

9.
அந்த அரிசி இந்த அரிசி
நேத்துக் குத்தின கம்பரசிகம்பரிசி
கம்பரிசி கம்பரசி

10.
கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா
தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா
அடையடா அடையடா அடையடா

11.
கீச்சுக் கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சுடா
பட்டுப் போச்சுடா பட்டுப் போச்சுடா

12
கொத்துக் கொத்து ஈச்சங்காய்
கோடாலி ஈச்சங்காய்
மதுரைக்குப் போனாலும்
வாடாத ஈச்சங்காய்
ஈச்சங்காய் ஈச்சங்காய்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:35

நாட்டுப்புற கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி -1

கண்ணாம் கண்ணாம் பூச்சாரே
காது காது பூச்சாரே
எத்தனை முட்டை இட்டாய்?
மூணு முட்டை.
முணு முட்டையுந் தின்னுப்புட்டு
ஒருசம்பா முட்டை கொண்டுவா

கண்ணாமூச்சி-2

தத்தக்கா புத்தக்கா -தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா -பச்சைமரத்திலே பதவலை கட்டப்
பன்றிவந்து சீராடப் -பறையன் வந்து நெல்லுக்குத்த
குண்டுமணி சோறாக்கக்-குருவிவந்து கூப்பிடுது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:39

கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள் - 15

1.
கொக்குக்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு
முக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப் பழம் சொட்டு.

2.
1.
கட்டை வச்சேன்
மரம் பிளந்தேன்

2. ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை வையடா
பஞ்சணேசா.

3. முக்கட்டி வாணியன் செக்காட
செக்குஞ் செக்கும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட.

4.
நாலை வைச்சு நாலெடு
நாரயணன் பேரேடு
பேரெடுத்துப் பிச்சையெடு

5.
ஐவரளi பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசுமஞ்சள

6.
ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம

7.
ஏழு புத்திர சகாயம்
எங்கள் புத்திர சகாயம்
மாட்டுப் புத்திர சகாயம் மகராஜி.

8.
எட்டும் பொட்டும்
இடக்கண் பொட்டை
வலக்கண் சப்பட்டை

9.
ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தது
பேரிடவாடி பெரியாத்து

10.
பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம்ஆடி
வெள்ளiக்கிழமைஅம்மன் கொண்டாட்டம்.

11.
நானும் வந்தேன் நடுக்கட்டைக்கு
என் தோழி வந்தாய் எடுத்தகட்டைக்கு
தட்டில் அப்பம்கொட்ட
தவலை சம்பாக்கொட்ட
ஒத்தைக் கையால் கொட்ட
ஒசந்த மரக்கட்டை
குத்திக் குத்திக் தாரும்
பொட்டலங் கட்டித் தாரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:41

நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்கள்


செம்பிலே சிலைஎழுதி –மாமா
செல்வத்திலே நான் பிறந்தேன்
வம்பிலேதான் கைகொடுத்து –மாமா
வார்த்தைக் கிடம்ஆனேனே 1

கண்டி கொளும்பும்கண்டேன் –சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் –சாமி
ஒயிலாளைக் காணலையே 2

ஏழுமலைக் கந்தப்பக்கம் -சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம்
கண்சிவந்து வந்ததென்ன -சாமி
கடுங்கோபம் ஆனதென்ன? 3

மூக்குத்தித் தொங்கலிலே –குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி –குட்டி
அதிலேஒரு பச்சைக்கல்லு. 4

சந்தனம் உரசுங்கல்லு –குட்டி
தலைவாசலைக் காக்குங்கல்லு
மீன்உரசுங் கல்லுக்கடி –குட்டி
வீணாசைப் பட்டாயோடி. 5

ஆசைக்கு மயிர்வளர்த்து –மாமா
அழகுக்கொரு கொண்டைபோட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் –மாமா
சோறாக்க ஆளானேனே 6

வெள்ளைவெள்ளை நிலாவே –சாமி
வெளiச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ –சாமி
கருக்கவிட்டால் ஆகாதோ? 7

கும்பகோணம் ரெயிலுவண்டி –குட்டி
குடிகெடுத்த தஞ்சாவூரு
தஞ்சாவூரு தாசிப்பொண்ணு -குட்டி
தாயைமறக் கடிச்சாளடி. 8

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே –குட்டி
வெறகொடிக்கப் போறபொண்ணே
கட்டைஉன்னைத் தடுத்திடாதா –குட்டி
கரடிபுலி தாவிடதா? 9

ஆத்திலே தலைமுழுகி –குட்டி
ஆயிரங்கால் பட்டுடுத்தி
ஊத்துப்பக்கம் உட்காந்துநீ –குட்டி
போட்டுக்கோடி வெற்றிலையை. 10

கொக்குப் பறக்குதடி –குட்டி
கோணல்வாய்க்கால் மூலையிலே
பக்கத்திலே உட்கார்ந்துநீ -என்னைப்
பதறவிட்டுப் போனோயேடி. 11

காப்புக் கலகலென்னைக் –குட்டி
கைவளையல் ரெண்டும்மின்ன
மூக்குத்தி வேறேமின்னக் –குட்டி
முகமுங்கூட மின்னுதடி. 12

வண்டியும் வருகுதடி –குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி –குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே. 13

காளைநல்ல கறுப்புக்காளை –குட்டி
கண்ணாடி மயிலைக்காளை
சூடுவச்ச வெள்ளைக்காளை –குட்டி
சுத்துதடி மத்தியானம். 14

ஆறுசக்கரம் நூறுவண்டி –குட்டி
அழகால ரெயிலுவண்டி
மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி
மாயமாத்தான் ஓடுதடி. 15

பூத்தமரம் பூக்காதடி –குட்டி
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் –என்
காதடைப்பும் தீராதடி. 16

செக்கச் சிவந்திருப்பாள் –குட்டி
செட்டிமகள் போலிருப்பாள்
லாரி முடிஞ்சிருப்பாள் –குட்டி
வந்திருப்பாள் சந்தைக்கடை. 17

முட்டாயி தேங்குலழு –குட்டி
முறுக்குலட்டுப் பூந்திவடை
தட்டாமே வாங்கித்தரேன் –குட்டி
தங்கமே நீ வாய்திறந்தால். 18

பாசம் பிடிக்கும்தண்ணி –குட்டி
பலபேர் எடுக்கும்தண்ணி
அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி
அத்தனையும் முத்தல்லவோ? 19

நீட்டினகால் மடக்காமல் நீ-அடி
நெடுமுக்காடை எடுக்காமலே
காட்டினாயே கருமூஞ்சியை-அடி
கருங்கழுதை மூஞ்சிபோலே. 20


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:42

நாட்டுப்புற தங்கரத்தினமே பாடல்

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -பொன்னுரத்தினமே. 1

அள்ளiஅள்ளi விதைத்த
அழமுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த –தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -பொன்னுரத்தினமே. 2

கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் –தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -பொன்னுரத்தினமே. 3

சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -பொன்னுரத்தினமே. 4

சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் –தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -பொன்னுரத்தினமே. 5


எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி –தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -பொன்னுரத்தினமே. 6

ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -பொன்னுரத்தினமே. 7

தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ளiயைக்
காவல்வைத்தால் -தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே. 8

மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை –தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -பொன்னுரத்தினமே. 9

சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் –தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -பொன்னுரத்தினமே. 10


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Nisha Tue 3 Jun 2014 - 0:43

நாட்டுப்புற ராசாத்தி பாட்டு


ரோடு எல்லாம் கொழுத் தாடை
ரொம்பிக் கிடக்குதுபார் -ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார். 1

நல்ல கரும்பு சட்டுக் கட்டா
நயமா விக்குதுபார் -ராசாத்தி
நயமா விக்குதுபார். 2

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
சந்தெல்லாம் விக்குதுபார் -ராசாத்தி
சந்தெல்லாம் விக்குதுபார். 3

கல்லுக் கண்டும் கடலை அவலும்
கணக்காய் விக்குதுபார் -ராசாத்தி
கணக்காய் விக்குதுபார். 4

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
குறுக்கே போறதைப்பார் -ராசாத்தி
குறுக்கே போறதைப்பார். 5

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
நின்று பாக்றதைப்பார் –ராசாத்தி
நின்று பாக்றதைப்பார். 6

நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
நொண்டி அடிக்குதுபார் -ராசாத்தி
நொண்டி அடிக்குதுபார். 7

பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள்
பட்டம் விடுவதுபார் –ராசாத்தி
பட்டம் விடுவதுபார். 8

சாரட்டு வண்டியும் சட்கா வண்டியும்
சரியா நிக்குதுபார் –ராசாத்தி
சரியா நிக்குதுபார். 9

மல்லுக் கட்டுற மைனர் மார்கள்
மாத்தி மாத்தி வாராங்க -ராசாத்தி
மாத்தி மாத்தி வாராங்க. 10


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..! Empty Re: கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum