சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Khan11

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:36

First topic message reminder :

பாட்டி வைத்தியம்:-

* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்.

நன்றி :FB
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Tue 17 Jun 2014 - 5:45

jaleelge wrote:நாட்டு வைத்தியர் அனுராகவா...

நீங்க  எங்கேயோ போய்ட்டீங்க சார்....
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 7e2b3891-9358-4869-b7c4-43400e185821_S_secvpf உங்களுக்கும் சொல்லி தாரேன் காத கொடுங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by rammalar Tue 17 Jun 2014 - 7:42

எழுத்துப் பிழைகளை நீக்கினால் நலம்...
-
முக நூலில் பதிபவர்கள் தாங்கள் பதிந்ததை
மீண்டும் சரி பார்ப்பதில்லை...
-
அதனால் அங்கிருந்து சுவைத்த பதிவை நாம்
மீள பதியுமுன்னர் ஒரு முறை சரி பார்த்தல் நலம்
-
நுகலாம்.
-
தயணைக்கு
-
அரைந்து
-
உணரு

-
பயனுள்ள பகிர்வு.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:31

நிரம்ப தகவல்களோடு நல்ல திரி ஒன்றிற்காக நன்றி ராகவன்!

இன்னும் தொடருங்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ahmad78 Tue 17 Jun 2014 - 10:42

பலனுள்ள பதிவு

நன்றி தம்பி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:22

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10151974_750445288311122_3276881182234052729_n
அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்:-

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:23

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10487383_749900138365637_5048792894494014857_n

பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம்:-

முடியை பாதுகாக்க...

* உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருது வாக இருக்கும்.

* வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரைமணி நேரம் ஊறிய பின், குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும், தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும்; பொடுகு நீங்கும்.

* கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி, தலையில் தேய்த்து வர, நரைமுடி குறையும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:24

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10471504_749900061698978_1087623982699778616_n
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்:-

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய்.

முருங்கைகாய்.

என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%,
கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது.

யாருக்கு நல்லது : குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:26

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10401922_749398285082489_5807300589089537346_n
இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய் :-

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:27

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10433267_745912955431022_254889878691411732_n
தேங்காயில் புதைந்துள்ள சத்துகள் :-

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது. புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணை உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும்புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:30

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10367194_745398428815808_1489222820764692212_n
இயற்கை முறை மூலம் சில நோய்களுக்கான தீர்வுகள்:-

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:32

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 10341468_744609198894731_3382551665549212002_n
மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

வேறு பெயர்கள்-

மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

பயன் தரும் பாகங்கள் -:

கொடி, இலை மற்றும் வேர் முதலியன.
"
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின்
நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.

இன்று காரமான சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும் சமைத்தது மிளகை வைத்துத்தான். சிலி நாட்டிலிருந்து சில நூறு வருடங்கட்கு முன் மிளகாய் நமக்கு அறிமுகமானபோது மிளகைப் போல் காரமாக இருந்ததால் தான் அதற்கு மிளகாய்(மிளகு+ஆய்) என்று பெயரிட்டனர். மிளகு பல ஆயிரம் ஆண்டுகளாய் நமக்கு பழக்கமான ஒன்று.

’திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள்.

இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இது குறித்து முன்பே நாம் பேசியுள்ளோம். இப்போது உள்ள
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ’திரிதோட சமப் பொருட்கள்’ எனப்படும் மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த
திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும்
விளையாமல் உடலைப் பேணும். அந்த திரிதாட சமப்பொருளின் ’டீம் லீடர்’ மிளகுதான். அதனால் ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்.

மிளகை அதன் உலர்ந்த பழமாகவே(கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு
விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறப்பு!

மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும்
மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக ரோட்டோரங்களில் கடற்கரையில் மிளகாய்வற்றல் பொடியைத் தூவிக் கொடுக்கப்படும் வெள்ளரியில் பயனில்லை. அது வெள்ளரியையும் கெடுக்கும்.வயிறையும் கெடுக்கும்!

வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது
அவசியம்.பால் அனைவருக்கும் அவசியமில்லாத பொருள் என்றாலும், சில நேரங்களில் மருந்தாக/ ஊட்ட உணவாக சில நோயாளிகளுக்குத் தேவைப்படும். அச்சமயம் பாலில் மிளகு சேர்த்து தருவது அவசியம். சளி இருமல் இருப்பவர்
பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக அவசியம்.

.வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று. 16ம்
நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல்
பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள்
மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும். இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச் செய்யப்படுகிறது.

வால் மிளகு மருத்துவப் பயன்கள்-

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக
எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25
மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை
வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில்
மெலிதாகத் தேய்க்க முடி வளரும்.

மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில் குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.

குழந்தைப்பருவம் முதலே மிளகின் மகத்துவத்தை புரியும் படி மிரட்டாமல் சொல்லிக் கொடுத்து, மிளகை ரசித்து உண்ண குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் மிளகிற்கு இணை ஏதுமில்லை

பல நேரங்களில் ஆட்சியைப்பிடிக்கும் வரை ஒன்றாய் ஊர்வலம் வந்து விட்டு பதவி கிடைத்ததும் கூட்டணிகட்சிகளை ஓரமாய் ஒதுக்குவதுபோல, சமைத்தபின் மிளகை ஒதுக்கி ஓரமாக கழிப்பது பல நேரங்களில் நடக்கும். அது மிகத் தவறு. மிளகு மணமூட்டிமட்டுமல்ல. அதன் பிறசத்துக்கள் முழுமையாகச்
சாப்பிட்டால்தான் உடலில் சேரும்.

மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine, piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய முலக்கூறுகள். piperine, piperidine இரண்டும் உடலின்
நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும். இருமல் இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும்
சேர்த்து மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சவைத்து சாப்பிட இரைப்பும் குறையும்.
அசீரணமும் சீராகும்.

மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2
சிட்டிகை அளவு தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.

Urticaria எனப்படும் திடீர் திடீர் என ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி காலையில் அருகம்புல்(ஒரு
கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும். எந்த ஒரு சாதாரண தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி, சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு
மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது

வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு
அதன் வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால் உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது
உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து
தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க
வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை
வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே
போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில்
அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட
நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

மிளகு ஊறுகாய்:
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

கருமிளகு

பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு
அனுப்பப்படுகிறது.

வெண்மிளகு

பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப்
போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு
உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பச்சைமிளகு,

கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.

கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும்,
கரோட்டின்,தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.சளி,
கோழை, இருமல், நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும்
சுரத்தையும்(காய்ச்சல்) போக்கும் தன்மை உடையது.இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க
வல்லது.

மிளகின் பொதுக்குணங்கள்

மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும். நரம்புகளுக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற டானிக்காகும்.

சரகஸம்ஹிதை படி மிளகு

தன்மை – கார்ப்புச் சுவை உள்ளது. கபத்தையும், வாதத்தையும் போக்கும். ஜீரணசக்தி அதிகரிக்கும். இருமல் கிருமி நோய்களை போக்கும். தக்க படி பயன்படுத்தினால் இராசயனமாகும்.

தீர்க்கும் நோய்கள் – இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், தவிர நச்சுகளால் தோன்றும் துன்பம், கண்நோய் இவற்றை போக்கும்.

பயன் – இருமல் நிற்க மிளகுத்தூள், சர்க்கரை, நெய், தேன் இவற்றை கலந்து உண்டால் இருமல் நீங்கும். மிளகு கலந்த மருந்துகளான மரீச்யாதி தைலம். தேக ராஜமரீசம் இவைகளால், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி இவற்றை போக்கும்.

மிளகின் மருத்துவ குணங்கள்

ஜீரணத்திற்கு – கருமிளகு வாய்வுத்தொல்லை, அஜீரணம் இவற்றை போக்கும்.மோருடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து குடிக்கலாம். இதனுடன் ஜீரகம் சேர்த்தால் இன்னும் நல்லது. மிளகு பசியை தூண்டும்.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவில் கலந்த சூரணம் திரிகடுகம். இதை 2 கிராம் எடுத்து தேனுடன் சாப்பிட வாயுக்கோளாறை போக்கும். திரிகடுகம் மிக பழமையான, உபயோகமான சூரணம்.

நஞ்சுகளை போக்க – மிளகு எல்லா வித நஞ்சுகளையும் முறிக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி 5 – 6 மிளகை தூள் செய்து வெற்றிலையில் வைத்து, தேன் கலந்து, அப்படியே மென்று விழுங்கினால் எந்த நஞ்சும் பாதிக்காது.

இருமல் நிற்க – இருமலுக்கு கைகண்ட மருந்து மிளகு கஷாயம். இருமல் ஆரம்பித்தவுடனே வீட்டிலிருப்பவர்கள் செய்து கொடுக்கும் கஷாயம் இது. தொண்டை நோய்களுக்கும் மிளகு நல்லது. மிளகை அடிக்கடி உபயோகித்தால் குரல் வளம் பெருகும்.

கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க – மிளகில் உள்ள ‘காப்சைன்’ கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 லிருந்து 10
மிளகை தூள் செய்து தண்ணீருடன் அருந்தவும். கொலஸ்ட்ராலை குறைப்பதால், மாரடைப்பு வராமல் காப்பதற்கு மிளகு நல்ல மருந்து என்ற தற்போதைய
ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மறதிக்கு – சிறிதளவு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து உண்ண மறதி குறையும். ஞாபக சக்தி பெருகும்.

ஆண்மை குறைவுக்கு – தினமும் 6 மிளகுகளுடன் 4 பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் உட்கொள்ள, ஆண்மை பெருகும். வயது முதிர்வை குறைக்கும்.

ஜலதோஷம், ஜுரம், தலைவலிக்கு – மிளகு கஷாயம் ஜலதோஷத்தை குறைக்கும். மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவில் சேர்த்து அரைத்து, மிளகளவு
மாத்திரைகளாக செய்து கொள்ளவும். இதில் 2 – 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, காய்ச்சல் குணமாகும்.மிளகை சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, சளி குறையும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி
குறையும். ஜுரம் தணிந்த பின் வரும் பலவீனத்தை மிளகு போக்கும். சளி, தும்மல், ஆஸ்துமா இவற்றுக்கும் மிளகு கஷாயம் பயன்படுகிறது. மலேரியாவை மிளகு கட்டுப்படுத்தும்.

தசை, மூட்டு வலிகளுக்கு – எள் எண்ணெய்யில், மிளகுப்பொடியை வறுத்து இதை வலிக்கும் இடங்களில் தடவலாம், வலி குறையும்.

பல், ஈறுவியாதிகளுக்கு – மிளகுப் பொடியை உப்புடன் சேர்த்து பல் துலக்குவது வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி போன்றவற்றை குறைக்கும். பயோரியாவுக்கும் இந்த பற்’பசை’ நல்லது.மிளகிலிருந்து
எடுக்கப்படும் மிளகு தைலம் உணவுக்கு மணம் கூட்டவும் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படும். தவிர இந்த தைலம் ஜுரம் குறைய உதவுகிறது.பச்சை மிளகு மூலநோய், வாதநோய்களை கட்டுப்படுத்தும்.எச்சரிக்கை மிளகு உடலின்
உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் கரு கலையும். நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தேவையற்ற சுழற்சி, மந்த நிலை தூக்கமின்மை இவற்றை மிளகு சீராக்கும். கல்லீரலை பாதுகாக்கும்.மிளகு கலந்த உணவுகள் பசியை தூண்டும்.ஆப்ரிக்கா மிளகை உண்டால் அது உடலில் ஒரு வித திரவத்தை / ஒரு வித வாசனையை உண்டாக்குகிறது. இதனால் கொசுக்கள் கடிப்பதில்லை என்றும் நம்புகிறார்கள்.சீன மருத்துவத்தில் மிளகு, வாந்தி வருவதை தடுக்கவும், தலைசுற்றலை தவிர்ப்பதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.மிளகில் உள்ள பைப்பரின் பைப்பரின் எனும் அல்கலாய்டு மிளகில் உள்ள ஒரு கெட்டியான வேதிப்பொருள். இது தண்ணீரில் கரையாது. ஆயுர்வேதத்தில் மிகவும் பயன்படும் பொருட்களில் மிளகும் உண்டு. சீன வைத்தியத்தில், இந்த பைப்பரினலிருந்து
தயாரிக்கப்படும் ஆன்டிஎபிலெப்ஸிரின் என்ற பொருளை வலிப்பு நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. ‘பீடா கரோடின்’, வைட்டமின் பி, மற்றும் சத்துக்களை உடல் கிரகிக்க பைப்பரின் உதவுகிறது. ஆனால் அதிக அளவு
பைப்பரின் (ஒரு நாளுக்கு)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by jaleelge Thu 19 Jun 2014 - 22:55

என்னுடைய தலையே சுத்துதடா.....

அப்பனே நீங்க யாரப்பா ?????

நீங்க என்ன தகவல் பொட்டகமா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! - Page 2 Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum