சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP Khan11

உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP

2 posters

Go down

உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP Empty உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 8:41

இலங்கையின் மனித அபிவிருத்தி கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதால், உயர் மனித அபிவிருத்தியுடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை 73ஆவது இடத்தை பிடித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமான யு.என்.டி.பி. யின் 2014 ஆம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த 24ம் திகதி டோக்கியோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. “நிலையான மனித முன்னேற்றத்திற்கு பாதிப்புகளை குறைத்தல் மற்றும் பின்னடைவினை கட்டியெழுப்புதல்” என்னும் தொனிப் பொருளில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 187 நாடுகள் பற்றிய தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டிற்குரிய மனித அபிவிருத்தி அறிக்கையில் மக்களின் கருத்துக்களை ஊக்குவித்தல், மனித அபிவிருத்தி சாதனைகளை பாதுகாத்தல் மற்றும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் காரணிகள், பின்னடைவிலிருந்து மீளக்கூடிய வழிமுறைகள் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மனித அபிவிருத்தி சுட்டி 2014 ஆம் ஆண்டில் 0.750 வளர்ச்சியை எட்டியுள்ளது. இது 1980 இல் 0.513 ஆக விருந்தது. மனித அபிவிருத்தி பாரிய முன்னேற்றங் கண்டுள்ளதை இது காட்டி நிற்கின்றது.

187 நாடுகளினதும் சுகாதாரம் கல்வி மற்றும் வருமானம் பற்றிய தேசிய ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் இலங்கை உயர் மனித அபிவிருத்தி நாடுகளின் பட்டியலில் 73 வது இடத்தை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் ஒன்பது தெற்காசிய நாடுகளினதும் முன்னணியில் இருக்கின்றது.

ஆசிய பிராந்தியத்தின் மனித அபிவிருத்தி சுட்டிக்கான சராசரிப் பெறுமானம் 0.588 ஆக காணப்படும் நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையே சராசரியிலும் ஆகக்கூடிய சுட்டியைக் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் அதன் ஏனைய உபகண்டங்களைப் போன்று இலங்கை காலனித்துவ ஆட்சியைக் கொண்டிருந்த போதிலும் நீண்டகால மோதல்களுக்குப் பின்னரும் கூட இதன் கல்வி மற்றும் சுகாதார நிலைமைகள் சர்வதேசத்திற்கு ஒப்பான வையென 2014 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகின்றது.

மேலும் இலங்கையின் கல்வியறிவு வீதம். எதிர்பார்க்கப்படும் வயதெல்லை பாடசாலைக்கு செல்லும் வருடங்கள் ஆகியனவும் உயர் மனித அபிவிருத்தி குழுமத்திற்குள் அங்கம் வகிப்பதற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

இலங்கையின் அயல் நாடான இந்தியா, நடுத்தர அபிவிருத்தி நாடுகளுள் 135 வது இடத்தை பெற்றுள்ள நிலையில் குறைந்த அபிவிருத்தி பிரிவில் பூட்டான் 136வது இடத்தையும் மாலைதீவு 103 வது இடத்தையும் பாகிஸ்தான் 146, நேபாளம் 145, ஆப்கானிஸ்தான் 169 ஆகிய இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.

தெற்காசியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் 800 மில்லியன் மக்களும் வறுமை கோட்டினை அண்மித்த நிலையில் 270 மில்லியன் மக்களும் வாழ்கின்றனர். இது உலகிலேயே 56 சதவீதமான வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களினதும் 35 சதவீதமான வறுமை கோட்டிற்கு அண்மித்த நிலையில் வாழ்பவர்களினதும் இருப்பிடமாகவுள்ளது.

இதேவேளை ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் மனித அபிவிருத்திக்கு வறுமை, சமத்துமின்மை மற்றும் அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களே பாரிய சவாலாக இருப்பதாகவும் 2014 ஆம் ஆண்டிற்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்புக்கள் மனித அபிவிருத்திக்கு அச்சுறுத்தலாக அமைந் துள்ளமை இதன்மூலம் தெளிவாகியுள்ள அதேநேரம். இவை முறையாக முகாமைத்துவம் செய்யப்படாவிடின் முன்னேற்றமானது சிறந்த பெறுபேற்றினைக் கொண்டதாகவோ நிரந்தரமானதாகவோ இருக்கமாட்டாது என்பதனையும் சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் 2014 ஆம் ஆண்டிற்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் முதற்தடவையாக பால் அபிவிருத்தி சுட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது 148 நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனியான கணக்கெடுப்புக்களை மேற்கொண்டு மனித அபிவிருத்தி சுட்டியுடன் ஒப்பிடப் பட்டுள்ளது.

இதனடிப்படையில் பால் அபிவிருத்தி சுட்டியில் 66வது இடத்தை பிடித்திருக்கும் இலங்கை பெண்கள் 0.720 இணையும் ஆண்கள் 0.750 இணையும் மனித அபிவிருத்தி சுட்டியாக கொண்டுள்ளனர்.

நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய 05 நாடுகளுமே மனித அபிவிருத்தி சுட்டியின் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

இதேவேளை நைகர், கொங்கோ ஜனநாயக குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட் மற்றும் சிரலியோன் ஆகிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டிப் பட்டியலில் ஆக கீழ் மட்டத்திலுள்ள ஐந்து நாடுகளாகும்.

நன்றி தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP Empty Re: உயர் மனித அபிவிருத்தி நாடுகளில் இலங்கைக்கு 73வது இடம் ; UNDP

Post by Nisha Sat 26 Jul 2014 - 11:27

நமக்கு கீழே உள்ளவர் கோடி!
நினைத்து பார்த்து நிம்மதி தேடு

என்றோ சொன்னது இன்று நினைவுக்கு வருகின்றது! இலங்கையை விட மோசமான வாழ்வதற்கே தகுதியில்லா நாடுகள் பலவிருக்க நம் நாட்டு மக்கள் தம் உயிரை பணயம் வைத்து கடன் வாங்கி கடலிலும் காட்டிலும் தம் உயிரை விடுகின்றார்கள்1


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics
» முதியோர் நலனை சிறப்பாக பராமரிக்கும் 91 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 73வது இடம்
» மகிழ்ச்சியாக உள்ள நாடுகளில் இலங்கை 22ஆம் இடம் _
» யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்
» அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்
» இன்று நமது தளம் நான்காவது இடம் மிக விரைவில் முதலாவது இடம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum