Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்பினால் நம்புங்கள்!
+9
SAFNEE AHAMED
Muthumohamed
முனாஸ் சுலைமான்
ராகவா
கவிப்புயல் இனியவன்
Nisha
நண்பன்
பானுஷபானா
ahmad78
13 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நம்பினால் நம்புங்கள்!
First topic message reminder :
* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.
* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816
* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.
* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*பெரும்பாலான மால்ட் சத்து பானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக சர்க்கரையே உள்ளது.
*டீசல் கார்களை மாதம் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயன் படுத்துபவர்கள், பெட்ரோல் கார்களை விட ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இக்கணக்கீட்டின்படி, டீசல் கார் வாங்குவதற்கு கூடுதலாகச் செலவிட்ட தொகையை 2 ஆண்டுகளில் மீட்டுவிட முடியும்!
*பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்கள், அவற்றின் 20 சதவீத ஊட்டச்சத்தை இழந்து விடுகின்றன.
*அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்கிறவர்களுக்கு, வயிற்றின் காப்பு உறை பாதிக்கப்பட்டு, கேன்சர் ஏற்படும் அபாயம் உண்டு.
*மகாராஷ்டிர மாநிலத்தில் பெர்மிட் இல்லாமல் மது அருந்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
*ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது.
*ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது.
*கார் தயாரிப்பாளர்கள் உறுதியளித்த மைலேஜ் அளவு சரியாக இருப்பதாக, 60 சதவீத உரிமையாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
*இந்தியாவில் பர்சனல் லோனுக்கு ஆண்டுக்கு 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வரிகள் மற்றும் சேவைக்கட்டணங்கள் தனி.
*மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன்களில் 85 சதவீத லாபம் கிடைக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*பறந்து கொண்டிருக்கும் ஒரு சோப்புக்குமிழி வெடிக்கும் தருணம் ஆயிரத்தில் ஒரு நொடிக்குள் அமைந்து விடுகிறது.
*மேக மூட்டமுள்ள ஒரு நாளில் சூரியனின் 70 சதவீத கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
*அமெரிக்காவில் 2012ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. 1930க்குப் பிறகு, இதுதான் அங்கு மிகப்பெரிய வறட்சியாம். இந்தியாவில் ஏற்படும் பஞ்சங்களும் வறட்சிகளும் இதைவிடப் பல மடங்கு தீவிரமானவை!
*உலகின் முதல் நீராவி எஞ்சின் 1804ல் இயங்கியபோது, அதன் சராசரி வேகம் மணிக்கு 3.9 கிலோமீட்டர். இப்போதைய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில்களின் வேகத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்!
*உலகில் 2030ம் ஆண்டில், நீர்ச் சேவைகளைப் பராமரிக்க 537 பில்லியன் டாலர் தேவைப்படும்... அப்போது நீர்வளம் இருந்தால்!
*கேவியர் வகை மீன்களும் அதன் முட்டைகளும் ரகசிய அறைகளில் ரகசியமான முறையில் பாதுகாக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. காரணம், அதன் நம்பமுடியாத விலை! ஒரு காலத்தில் இவை இலவசமாகவே வழங்கப்பட்டன என்பது இன்னொரு ஆச்சரியம்!
*நறுமணப் பொருட்களைத் தேடிச் சென்றபோதுதான், ஐரோப்பியர்கள் தூரக் கிழக்கு நாடுகளைக் கைப்பற்றினர்.
‘*எந்திரன்’ டைப் ரோபோக்கள் அணிகிற ரோபோடிக் சூட்டுக்கு ஆற்றல் தர 41 அல்கலைன் பேட்டரிகள் தேவை. 2 ஆண்டுகள் வரை செயல்படும் இந்த பேட்டரிகளுக்கான செலவு ரூ.90 ஆயிரம்!
*முக்கால் லிட்டர் ஷாம்பெய்ன் பாட்டிலில் உள்ள நீர்க்குமிழிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. ஆமாம்... அதைக் குடிக்காமல் இந்தக் கணக்கீட்டைச் செய்திருக்கிறார் ஒரு ‘நிபுணர்’!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*ஐந்தரை முதல் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தைய 379 திமிங்கலப் படிமங்கள் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
*ஹெர்குலிஸ் பீட்டில் என்ற வண்டுதான் பூச்சிகளில் மிக நீளமானது. 170 மி.மீ. நீளம். அதன் எடையைப் போல 850 மடங்கு சுமையைத் தாங்கக் கூடியது. இந்த அளவில், பூமியின் மிக வலிமையான உயிரினம் இதுவே!
*2011ல், பச்சை லேசர் ஒளியை உமிழக்கூடிய வகையிலான மனித சிறுநீரக செல், ஜெல்லி மீன் டிஎன்ஏவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
*கடல் உப்பை விடவும் சாதாரண உப்பே சிறந்தது. எந்த உப்பாக இருந்தாலும் அதிகபட்சம் தினம் 6 கிராம் மட்டுமே நல்லது.
*ஷார்யீ ஃபின் மேக்கோ என்ற சுறா மீன், நீருக்கு வெளியே 6 மீட்டர் வரை தாவும். இது சுறா வகைகள் தாண்டுவதில் உச்ச உயரம்!
*அதிக பரப்பளவுள்ள 10 நாடுகள்: ரஷ்யா, கனடா, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, கஸகஸ்தான், சூடான்.
*0.0089 மில்லிமீட்டர் அகலத்தில் ஒரு ‘பீரியாடிக் டேபிள்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை முடிந்தால், அளந்து பார்த்து வியந்து கொள்ளுங்கள்!
*ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளையின் எடை, சராசரியாக 8 கிலோ. யானையின் மூளை 5 கிலோ. பாட்டில்நோஸ் டால்பினுக்கு 1.51.7 கிலோ.
*பால்வீதி மண்டலத்திலேயே மிகக்குளிர்ச்சியான பகுதி பூமராங் நெபுலா. மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். ஹைட்ரஜனை உறையச் செய்யும் அளவு குளிர் நிறைந்த அப்பகுதி, பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*1964ல் நார்வேயின் ஆஸ்லோ நகரத்தில், 20 ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப் பிரமாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
*சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சீனப்பெண்கள் கத்தரிச் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி, பற்களை கறுப்பாக்கிக் கொண்டனர்!
*பிஷப் நாற்காலிக்கு லத்தீன் மொழியில் ‘கதீட்ரா’ என்று பெயர். அதனால்தான் இன்றும் பல தேவாலயங்கள் ‘கதீட்ரல்’ என்று அழைக்கப்படுகின்றன.
*1664ல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட 10 டாலர் நாணயங்கள் ஒவ்வொன்றும் 19.5 கிலோ எடை இருந்தது!
*மற்ற எந்த உணவையும் விட அமெரிக்கர்கள் அதிக அளவு எடுத்துக்கொள்வது பால்தான். சராசரியாக ஆண்டுக்கு 132 கிலோ/ஒருவருக்கு!
*இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி நெப்போலியன் அணிந்ததுதான். 1970ல் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்!
*ஆங்கில எழுத்துகளிலேயே மிகப்பழமையானது ‘ o’. 3 ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த எழுத்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. ஓ போடு!
*70 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இப்போது இருப்பதை விடவும் மிக அதிக செய்தித்தாள்கள் (2,461) வெளிவந்தன. இப்போது 1,700க்கும் குறைவுதான்!
*உலகில் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பெயர் ‘மொஹமத்’.
*இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆம்பர் ஜெம் ஸ்டோனின் எடை 15 கிலோ!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*ஒரு மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத் தின்று முடித்தது அவ்வண்டு!
*காண்டர் என்ற சிறப்புப் பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தோடு மோதியிருக்கிறது!
*பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்!
*தகர (டின்) டப்பாக்கள் முழுக்க முழுக்க தகரத்தினால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல!
*ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் 267 கூழாங்கற்கள் காணப்பட்டன!
*உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன.
*30 அடி நீளமுள்ள சுறாவின் வயிற்றில், ஒருமுறை 50 கிலோ எடையுடைய கடல் சிங்கம் காணப்பட்டது!
*ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்!
*நல்ல பார்வைத்திறன் உடையவர்களால் ஒரு மைல் தூரத்தில் (1.6 கி.மீ.) உள்ளவரையும் முக அடையாளம் காண முடியும்!
*1948ல்தான் கடைசி வைட்டமின் கண்டறியப்பட்டது. அது பி12!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
நிறைய தகவல்கள் மழைபோல மலைபோல குவிந்தும் ஆறாக ஓடுகிறதே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்பினால் நம்புங்கள்!
*ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது.
*சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!
*ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!
*சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
*சில ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஒரே வினாடி யில் இரண்டு நகல்களை வெளித் தள்ளும் அளவு வேகம் கொண்டவை.
*கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிகமிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம் ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்!
*4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
*ஃபிலிம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், புகைப்படத் துறை ஆபரணக் கடைகள், நாணயத் தயாரிப்புத் துறையை விடவும் அதிக வெள்ளியைப் பயன்படுத்தியது.
*தேநீரில் 2 ஆயிரத்துக்கும் அதிக வெவ்வேறு விதமான கலப்பு வகைகள் (பிளெண்ட்) உள்ளன.
*பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் சுதந்திர தேவி சிலை (லிபர்டி) உள்ளது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*4 லிட்டருக்கும் குறைவான எரிபொருளில் 350 கிலோமீட்டர் பயணிக்கக்கூடிய Urbee 2 என்ற கார் ஆராய்ச்சிக்கட்டத்தில் உள்ளது. இது 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் உருவானது!
*நாம் அறிந்த வரையில், மிகத் தொலைவிலுள்ள கேலக்சியிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை அடைய 13.1 பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். பெருவெடிப்பு நிகழ்ந்து, 700 மில்லியன் ஆண்டுகள் ஆன பிறகே, இந்த ஒளி உமிழல் தொடங்கியது!
*தென் ஆப்ரிக்காவில் பிறந்து, கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின் அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர் ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், சென்னையிலிருந்து மதுரையை அரை மணி நேரத்துக்குள் அடைந்து விடலாம்!
*29.6 காரட் எடை கொண்ட மிக அரிதான நீல வைரம், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் குல்லினன் சுரங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காரட் என்பது 0.2 கிராம்.
*2013ல், லண்டன் கழிவுநீர் குழாய் அமைப்பில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டது. அது என்னவென ஆராய்ந்ததில் கிடைத்தது, 15 டன் எடையுள்ள மிகப்பெரிய கொழுப்புப்பாறை! உறைந்த கொழுப்பும் இன்னபிற கழிவுகளும் சேர்ந்து, ஒரு பஸ் அளவுக்கு தடையாக உருவாகியிருந்தது.
*மின்னல் வெட்டும்போது அதைச் சூழ்ந்திருக்கும் பகுதியே உலகின் மிக வெப்பமான இடம். நொடிக்கும் குறைவான ஒரு பொழுதில், அங்கு 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
*உலகில் மிகமிக நெருக்கமாக மக்கள் வாழும் இடம் பங்களாதேஷ் தலைநகரமான டாக்கா. இங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 44,500 பேர் வசிக்கின்றனர்.
*உலகின் 48 ஏழை நாடுகளின் மொத்த சொத்து மதிப்பை விட, உலகின் 3 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகம்!
*ஹெச்டி தரத்திலுள்ள 44 சினிமாக்களை, அப்படியே ஒரு நொடியில் டவுன்லோடு செய்யும் பிராட்பேண்ட் வசதி லண்டனில் உள்ளது. இதன் வேகம் நொடிக்கு 1.4 டெராபைட்ஸ்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே!
*சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்!
*சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்!
*கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என் பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன!
*ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்!
*ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.
*பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்!
*சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை!
*சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும்.
*டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை!
*மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்!
*சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும்.
*தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன.
*டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும்.
*முதன்முதலாக ஒரு பிங்க் வண்ண பாட்டில்நோஸ் டால்பின் அமெரிக்காவிலுள்ள லூசியானா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
*ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும்.
*‘கில்லர் வேல்ஸ்’ என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே!
*ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்து அடையாளம் காணும் வகையில், பிரத்யேக விசில் சத்தம் உண்டு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
டால்பின் பகிர்வு சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்பினால் நம்புங்கள்!
டால்பின் குறித்த செய்திகள் அருமை.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நம்பினால் நம்புங்கள்!
*தூசுகளையும் அழுக்குகளையும் விரட்டி விலகச் செய்யும் புதுமையான பெயின்ட்டை ஜப்பானின் நிஸான் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அல்ட்ரா-எவர் ட்ரை’ என்றழைக்கப்படும் இந்த சூப்பர்-ஹைட்ரோபோபிக் பெயின்ட் எல்லா கார்களிலும் பூசப்பட்டால், கார் வாஷ் செய்பவர்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்!
*மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர் புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம்.
*பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
*மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
*ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது. பனிப் புகையிலேயே 3டி உருவங்களை விரல்களைக் கொண்டே உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
*சிக்கன் மற்றும் இறைச்சியை பாக்டீரியா தாக்குதலில் இருந்து 3 வாரங்கள் வரை பாதுகாக்கக்கூடிய ஃபிலிம் உறையை பென்சில்வேனியா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஃபிலிமும் சாப்பிடக்கூடிய பொருள்தான்!
*இன்டர்நெட் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிறிய போட்டோன் ஸ்விட்ச் ஒன்றை ஹார்வர்டு விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். மின்சாரத்தின் துணையின்றி, ஒளியை மட்டுமே பயன்படுத்தி, பாதுகாப்பான இணைய இணைப்பை இதன் மூலம் அளிக்க முடியும்.
*ஜீன் தெரபி மூலம் செவி நரம்புகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இதனால் காது கேளாமையை மட்டுமல்ல... பார்கின்சன்ஸ் நோய் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னைகளையும் சரி செய்ய முடியும்.
*அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை, ‘அசிடேட்’ பயன்படுத்தி குறைக்கலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் விரைவிலேயே வரப்போகிறது அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கான மாத்திரை!
*ஆப்டிகல் லென்ஸ் ஒளியைப் பிரதிபலிப்பது போலவே, மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் முறையை சவுத் ஈஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது செயல்பாட்டுக்கு வரும்போது, மொட்டை மாடிகளில் காணப்படும் அத்தனை ஆன்டெனாக்களின் அளவும் வடிவமும் மாறிவிடும்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*அமெரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் ‘சியர் லீடர்’ ஆகவும் பணியாற்றினார்!
*மற்றொரு குடியரசுத் தலைவரான ஜான் எஃப் கென்னடி, தனது ஆண்டு ஊதியமான ஒரு லட்சம் டாலரை பெற மறுத்து, சேவை அமைப்புகளுக்கு வழங்கும்படி கூறிவிட்டார்.
*நீர்யானைகளின் உடலில் சுரக்கும் ரத்தம் போன்ற செம்பழுப்புத் திரவம், அதன் தோலுக்கு ஈரப்பதம் அளித்து, நீர் உட்புகாமல் தடுக்கவும் செய்வதோடு, ஆன்டிபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.
*சீனாவில் விமானப் பயணம் செய்த ஒருவர் பேக்கேஜ் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, 70 உடைகளை ஒரே நேரத்தில் அணிந்திருந்தார்!
*சார்லஸ் செர்விஷியோ என்பவர் ஒரே நாளில் 46,001 முறை ‘புஷ் அப்’ உடற்பயிற்சி செய்திருக்கிறார்!
*மரங்கள் தோன்றும் முன்பே சுறாக்கள் தோன்றி விட்டன!
*மழை பெய்தவுடன் எழும் மணத்துக்குக் காரணம் ஆக்டினோசைட்ஸ் என்ற பாக்டீரியாவே!
*அடிக்கடி சூயிங் கம் மெல்பவர்களுக்கு வாயுக்கோளாறுகள் அதிகம் ஏற்படும்.
*பிரய்ரி இன நாய்கள் முத்தம் இடுவதன் மூலமாகவே, ஒன்றையொன்று வாழ்த்திக் கொள்கின்றன.
*8 மாத காலத்துக்கு சில மீன்களை தரையில் நகரப் பழக்கிய பிறகு, அவை தரைக்கேற்ற தகவமைப்பைப் பெற்றுவிட்டன!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*40 நாடுகளில் முதன்மை மொழியாக இருக்கிறது ஆங்கிலம். முதன்மை மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ, ஒட்டுமொத்தமாக 150 கோடி மக்களால் பேசப்படுகிறது.
*உலகில் இப்போது 41,806 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
*ஆங்கிலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக வார்த்தைகள் உள்ளன.
*கி.மு. 3200 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சுமேரிய அல்லது எகிப்திய மொழியே உலகின் முதல் எழுத்து மொழி.
*சுரினாம் என்ற தென் அமெரிக்க நாட்டில் பேசப்படும் ‘டகி டகி’ என்ற ‘ஸ்ரனன்’ மொழியில் 340 வார்த்தைகளே உள்ளன.
*P, T, K, M, N ஆகிய எழுத்துகளே உலக மொழிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒலிகளாகும்.
*உலகின் பல மொழிகளிலும் ‘அம்மா’ என்பதற்கான வார்த்தை ‘ம்’ என்ற ஒலியிலேயே தொடங்குகிறது.
*கி.மு. 132 முதல் 63 வரை வாழ்ந்த பான்டுஸ் மன்னன் 6வது மிர்த்ரிடேட்ஸ், 25 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
*70 லட்சம் மக்களே வாழக் கூடிய பாப்புவா நியூ கினியா நாட்டில் 850 பாரம்பரிய மொழிகள் உள்ளன.
*உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சீனம் சார்ந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர்.
*உலகில் இப்போது 41,806 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
*ஆங்கிலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக வார்த்தைகள் உள்ளன.
*கி.மு. 3200 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சுமேரிய அல்லது எகிப்திய மொழியே உலகின் முதல் எழுத்து மொழி.
*சுரினாம் என்ற தென் அமெரிக்க நாட்டில் பேசப்படும் ‘டகி டகி’ என்ற ‘ஸ்ரனன்’ மொழியில் 340 வார்த்தைகளே உள்ளன.
*P, T, K, M, N ஆகிய எழுத்துகளே உலக மொழிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒலிகளாகும்.
*உலகின் பல மொழிகளிலும் ‘அம்மா’ என்பதற்கான வார்த்தை ‘ம்’ என்ற ஒலியிலேயே தொடங்குகிறது.
*கி.மு. 132 முதல் 63 வரை வாழ்ந்த பான்டுஸ் மன்னன் 6வது மிர்த்ரிடேட்ஸ், 25 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
*70 லட்சம் மக்களே வாழக் கூடிய பாப்புவா நியூ கினியா நாட்டில் 850 பாரம்பரிய மொழிகள் உள்ளன.
*உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சீனம் சார்ந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
அறியா அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி அஹமட்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்பினால் நம்புங்கள்!
*குரங்குகளால் பேச முடியாவிட்டாலும், சத்தம் மற்றும் உடலசைவுகளைப் பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
*இசபெல் டினோயர் என்ற பெண்ணுக்கு 2005ம் ஆண்டு நவம்பரில் செய்யப்பட்டதுதான் உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை. ஒரு நாய் கடித்ததால் முகமே அற்றுப் போன அந்தப் பெண்ணுக்கு, புதிய திசுக்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்காக சக்தி வாய்ந்த மருந்துகள் அளிக்கப்பட்டன.
*நமது பிரபஞ்சத்தின் அண்டை வீட்டுக்காரரான ஆண்ட்ரோமேடா கேலக்சி, நமது பால்வழி மண்டலத்தைப் போல இரு மடங்கு பெரியது. அதில் ஒரு ட்ரில்லியன் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும்.
*அற்புதமான விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு, யூரி காகரின் ஒரு பயிற்சி விமான விபத்தில் இறந்து போனார்.
*அமெரிக்காவிலுள்ள ஹண்ட்ஸ்வில்லி ஸ்பேஸ் மியூசியத்தில், பார்வையாளர்களும் ஒரிஜினல் உபகரணங்களைப் பயன்படுத்தி விண்வெளிப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
*விண்வெளிக்கு லிஃப்ட் மூலம் செல்லும் கனவுத் திட்டத்துக்காக, ஓர் அமெரிக்க நிறுவனம் உழைத்துக் கொண்டிருக்கிறது.
*பெண்களை விட ஆண்கள் சற்று உயரமாக இருப்பது பரிணாம வளர்ச்சிப்படியே ஏற்பட்டிருக்கிறது.
*ஒத்த உரு கொண்ட இரட்டையர்களுக்கு ஒன்று போலவே ஜீனோம் அமைந்திருந்தாலும், அவர்கள் 100 சதவீதம் அச்சு அசலாக இல்லாமலும் இருக்கலாம்.
*சுவையை மிகத்துல்லியமாக அறிவதில் நாக்கை விட மூக்கின் பங்கே அதிகம்.
*நமது ரத்தச் சிவப்பு அணுக்கள் தினமும் ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தூரம் பயணமாகின்றன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
அப்பாடா எம்மாம் பெரிய உண்மைகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்பினால் நம்புங்கள்!
*நோய்வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற எலியை, மற்ற எலிகள் பராமரிப்பது வழக்கம்.
*துணையில்லாமல் இருக்கும் எலி தனிமையை உணர்வதோடு, மனச்சோர்வுக்கும் ஆளாகும்.
*எலிகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. ஒருமுறை கண்டறிந்த பாதையை ஒருபோதும் மறப்பதில்லை!
*எலிகள் மகிழ்ச்சியாக இருக்கையில் ஒன்றுக்கொன்று ஒலி எழுப்பியும், பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்கும். அப்போது அவற்றின் கண்களும் ஒளிரும். விளையாடும் போது சிரிப்பொலியை வெளிப்படுத்தும்.
*நமக்கு ஏற்படுவதைப் போன்ற Peer Pressure எனும் ஒருவகை மன அழுத்தப் பிரச்னைக்கு எலிகளும் ஆளாவதுண்டு. பிற எலிகள் உண்பதைக் காணும்போது, தனக்குப் பிடிக்காத உணவாக இருப்பினும், அதை உண்பது இதற்கு ஒரு உதாரணம். குறிப்பாக பழுப்பு எலிகளே இந்த அழுத்தத்துக்கு அதிகம் ஆளாகின்றன.
*துறுதுறுவென திரிந்தாலும் கூட, எலிகளுக்கு அச்ச சுபாவம் அதிகமே. ஆபத்து எனத் தெரிந்தால் அங்கிருந்து துரிதமாக பின்வாங்குவதற்கும் இதுவே காரணம்.
*எலிகள் மிகவும் சுத்தமான விலங்குகள். தன்னை மட்டுமின்றி குழு உறுப்பினர்களின் உடலையும் தினமும் பல மணி நேரம் தேய்த்துச் சுத்தம் செய்து கொள்ளும். பூனைகள், நாய்களோடு ஒப்பிடும்போது, எலிகளைத் தாக்கும் வைரஸ்களும் ஒட்டுண்ணிகளும் மிகக்குறைவே.
*எலிகளால் ஒட்டகத்தை விடவும் நீண்ட தொலைவுக்கு நீர் அருந்தாமலே செல்ல முடியும்.
*உடலையும் வெப்பத்தையும் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், தகவல் தொடர்புக்கும் எலிகளுக்கு அவற்றின் வால்களே உதவுகின்றன.
*உலகின் பல ஆய்வுக்கூடங்களில் காஸ்மெடிக் பொருட்களை பரிசோதிக்க எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.
*ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் அருகிலுள்ள கார்னி மாதா ஆலயம் ‘எலி கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. இங்கு 20 ஆயிரத்துக்கும் அதிக எலிகள் உள்ளன.
*சீன ஜாதகத்தின் 12 விலங்குகளில் எலிக்கே முதலிடம். எலி ஆண்டில் பிறப்பவர்கள் கற்பனைத்திறன், புத்திசாலித்தனம், நேர்மை, இலக்கு, தாராள குணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது சீன நம்பிக்கை!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
அறியாத பலதகவல்கள் அறியக்கிடைத்து அஹமட் பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்பினால் நம்புங்கள்!
*அமெரிக்காவிலுள்ள நோவா’ஸ் ஆர்க் சரணாலயத்தில், 2001ம் ஆண்டிலிருந்து, ஒரு புலி, ஒரு சிங்கம், ஒரு கரடி என மூன்று விலங்குகளும், பிரிக்க முடியாவண்ணம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றன.
*நன்றாக உறங்க இயலாத சூழலிலும், நிறைவாகத் தூங்கியதாக நினைத்துக்கொண்டாலே, புத்துணர்ச்சியைப் பெற முடியும் என ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது.
*அதிக பயணம் செய்கிறவர்களுக்கு புத்திக்கூர்மையும் படைப்பாற்றலும் அதிகரித்து, திறந்த மனதுடன் கூடிய செயல்பாடு அமையும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*44 வயது மனிதர் ஒருவர், மூளையின் 50-75 சதவீத பகுதிகளை hydrocephalus என்ற அதீத மூளைநீர் பிரச்னை காரணமாக இழந்துவிட்டார். இருப்பினும், அம்மூளை தன்னைத் தானே மறுசீரமைத்துக் கொண்டு, அவரை இன்னும் வாழ வைக்கிறது!
*இறந்து போனவரை திருமணம் செய்து கொள்வதற்கு பிரான்சில் சட்டப்படி அனுமதி அளிக்கப்படும்!
*தன் வாழ்நாளில் வால்டர் சம்மர்ஃபோர்டு என்பவர் மும்முறை மின்னலால் தாக்கப்பட்டார். ‘விடாது மின்னல்’ என்பது போல, அவர் இறந்த பிறகும், அவரது கல்லறையைத் தாக்கியது மின்னல்!
*காளான்களின் ஜீன்கள் தாவரங்களைக் காட்டிலும், மனிதர்களுக்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது.
*வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை சிறையிலிருந்து தப்பிப்பதற்கு முன், சிறை அதிகாரிகளுக்கு ‘வருத்தக் கடிதம்’ எழுதி வைத்திருந்தாராம்!
*இதுவரை கதைகளில் மட்டுமே வந்த ‘கண்ணுக்குத் தெரியாத உடை’யைத் தயாரிக்கும் ஆய்வில் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
*ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் - இவை இரண்டுக்கும்ரியல் ரீதியாகவோ, வயது காரணமாகவோ இறப்பில்லை. யாரேனும் கொன்றால்தான் சாகும்!
*சாக்லெட் சாப்பிடுகையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் அதிலுள்ள phenylethylamine எனும் ஹார்மோன். இதே ஹார்மோன்தான் காதல் வயப்படுகையிலும் சுரக்கிறது!
*தும்மல் ஏற்படும் அந்த நொடிப்பொழுதில், இதயம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளும் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன.
*முத்தமிடும்போது, மூளையில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே இருவருக்கான பந்தத்தை உறுதிப்படுத்தும் உணர்வை அளிக்கிறது.
*1904ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த உலகப் பொருட்காட்சியில்தான், கோன் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது.
*இறந்த பிறகும் தலைமுடியும் நகங்களும் வளரும் என்பது மாயையே. உடல் உலர்வதால்தான் இப்படித் தோன்றுகிறது.
*மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வெதுவெதுப்பான நிறங்களுக்குப் பசி தூண்டும் தன்மை உண்டு. அதனால்தான் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இந்த நிறங்கள் ஜொலிக்கின்றன.
*ஆத்ம நண்பர்களால் தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் டெலிபதி முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
*கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை லேசாகச் சுருங்கும். மீண்டும் பழைய அளவை அடைய 6 மாதங்கள் ஆகும்.
*துணிகளில் படிந்துள்ள ரத்தக்கறையை கோக கோலா கொண்டு நீக்க முடியும்!
*1933ல் ‘மண்டா ரே’ எனும் அரிய வகை மீன் பிடிக்கப்பட்டது. அதன் எடையோ 2,500 கிலோவுக்கும் அதிகம். அகலமோ 20 அடி!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்பினால் நம்புங்கள்!
ஆத்ம நண்பர்களால் தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் டெலிபதி முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிஜமாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பொது அறிவுத்தகவல்கள்<நம்பினால் நம்புங்கள்!
» நம்பினால் நம்புங்கள் !
» முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!
» நம்புங்கள் ஓவியங்கள்தான் இவை...!
» நம்புங்கள் இவை ஓவியங்களே..
» நம்பினால் நம்புங்கள் !
» முடிவெட்டுவதற்கு ரூ.50,000 மட்டுமே : நம்பினால் நம்புங்கள்!
» நம்புங்கள் ஓவியங்கள்தான் இவை...!
» நம்புங்கள் இவை ஓவியங்களே..
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum