சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Khan11

நம்பினால் நம்புங்கள்!

+9
SAFNEE AHAMED
Muthumohamed
முனாஸ் சுலைமான்
ராகவா
கவிப்புயல் இனியவன்
Nisha
நண்பன்
பானுஷபானா
ahmad78
13 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Thu 31 Jul 2014 - 15:03

First topic message reminder :

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_Daily_News_61688959599
* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.

* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!

* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.

* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!

* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.

* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.

* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.

* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:17

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_62714350224
* கண்கள் திறந்த நிலையில் தும்ம முடியாது.

* சிறு குழந்தைகள் சராசரியாக தினமும் 200 மீட்டர் தூரம் தவழ்கின்றன.

* 111,111,111 ஜ் 111,111,111 = 12,345,678,987,654,321

* தீக்குச்சிகளை எரிய வைக்கும்போது கிடைக்கிற அளவு வெப்பம் பனிப்பாறைகளிலும் உள்ளது.

* நம் மூச்சுக்காற்றே பனித்துகளாக மாறிவிடும் அளவு சைபீரியாவில் குளிர் நிலவுகிறது.

* நிறைய மின்மினிப்பூச்சிகளை விழுங்கிவிட்டால், அந்தத் தவளையும் சிறிதுநேரம் மினுமினுக்கும்!

* 48 வினாடிகளில் ஒரு நல்ல அயர்ன் பாக்ஸ் அதிகபட்ச வெப்ப நிலையை எட்டி விடுகிறது.

* ஐரோப்பா, அமெரிக்காவில் கழிவறை பயன்படுத்திய பிறகு 90 சதவீத பெண்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்கிறார்கள். ஆண்களில் இது 75 சதவீதம்தான்!

* குளிக்கும் விஷயத்திலோ இது தலைகீழ். 70 சதவீத ஆண்கள் தினமும் குளிக்கிறார்கள். பெண்களில் இது 57 சதவீதம்தான்!

* நமது வயிறு முழுக்க நிறைந்துவிட்டது என மூளை அறிய சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால், அதற்குள் நாம் நிறைய சாப்பிட்டு விடுகிறோம்!

* மரபணு பெருக்கத்தின் (மியூட்டேஷன்) விளைவே சிலரது நீலக்கண்கள். அதற்கு முன், பொதுவாக கண்கள் பழுப்பு நிறத்திலேயே காணப்பட்டன.

* 200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதைத் தாண்டியும் வாழ்கிறார்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:18

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_73054140807
* முதல் அலாரம் கடிகாரத்தை அமெரிக்காவிலுள்ள கன்கார்ட் நகரத்தைச் சேர்ந்த லெவி கட்ச்சின்ஸ் 1787ல் கண்டுபிடித்தார். பணத்தின் மீது நாட்டம் இல்லாததால் அதற்கான உரிமத்தை அவர் வாங்கவே இல்லை!

* நம் வயிற்றில் மியூகஸ் படலம் இல்லாமல் இருந்தால், ஜீரணமாகி விடும்!

* 12 லட்சம் கொசுக்கள் தலா ஒருமுறை நம்மைக் கடிப்பதாக (பயங்கரமாக) கற்பனை செய்தால், ஒரு துளி ரத்தம் கூட மீதம் இருக்காது!

* நாய்கள், பூனைகளுக்கும் மனிதர்களைப் போலவே இடதுகை பழக்கம் உண்டு. துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் உடையவை.

* வண்ணத்துப்பூச்சிகள் கால்களின் மூலமாக சுவை அறிகின்றன.

* நாம் உரையாடுகையில் 72 வெவ்வேறு தசைகள் செயல்படுகின்றன.

* ஆந்தையால் தன் தலையை 270 டிகிரி அளவுக்குச் சுழற்ற முடியும்.

* எறும்புகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்பது உண்மையல்ல. எறும்புகளும் உறங்கும்!

* டால்பின்கள் ஒரு கண் திறந்தவாறு உறங்கும். உறக்கத்திலேயே நீந்தவும் செய்யும்.

* ஒருவரது புருவத்தில் சராசரியாக 550 முடிகள் உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:04

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_32837641240
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.

* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.

* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.

* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!

* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.

* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.

* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.

* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!

* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!

* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:04

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_54682123662
* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.

* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.

* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!

* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.

* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.

* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.

* ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.

* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.

* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.

* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:38

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_81795465947
உலகில் . . .

* 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.

* 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை).

* 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

* 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997).

* 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.

* 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர்.

* இப்போது 713 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

* 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை.

* 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:38

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_81375849247
* பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!

* உலகின் மிக லேசான பாலூட்டி  ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!

* அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.

* தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!

* சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.

* சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.

* வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!

* அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.

* டிராகன்ஃப்ளை என்றதும்பியால் ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும்.

* குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா Sun 19 Oct 2014 - 18:56

தகவல்கள் அனைத்துமே அருமை.தொடருங்கள் படிக்க படிக்க ஆவலாய் இருக்கிறது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 13:46

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_29097712040
* ‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்!

* எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.

* பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!

* சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.

* சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!

* ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்!

* டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.

* காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி   ஙிமீமீயீணீறீஷீ   என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை!

* முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.

* முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 13:46

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_27758425475
* சீனாவிலுள்ள  Qingdao  - Haiwan   சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007ல் தொடங்கி, 2011ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம்.

* போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும்.

* 2050ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் ‘பேக் அப்’ செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

* 14ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பூபோனிக் பிளேக் நோய் தாக்குதலில் 2.5 கோடி மக்கள் பலியானார்கள்.

* 2009ல் வட கொரியாவில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

* பாதிக்கப்படும் பரப்பளவு அடிப்படையில், நெதர்லாந்திலேயே மிக அதிக சூறாவளிகள் ஏற்படுகின்றன. அங்கு ஒவ்வொரு 1,991 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி. சூறைப்புயல்களுக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவிலோ, இது 8,187 ச.கி.மீ-க்கு ஒன்றாக இருக்கிறது.

நம் காதிலுள்ள மெழுகும், தாடையின் அசைவும் இணைந்து தூசுகள், இறந்த செல்கள் போன்றவற்றை வெளித்தள்ளி விடுகின்றன.

* பூமராங் நெபுலா - பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான். பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிற இதன் வெப்பநிலை மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். இது ஹைட்ரஜனையே உறைய வைக்கிற அளவு குளிர்!

* ஒரு விண்கல்லில், சூரிய மண்டலத்தின் வயதை விடவும் பழமையான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 15:00

தகவல்கள் அனைத்துமே அருமை.தொடருங்கள் படிக்க படிக்க ஆவலாய் இருக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:09

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_33019220830
* தொடும்போது மட்டுமல்ல... பலத்த காற்று, அதிர்வு மற்றும் வெப்பம் போன்ற காரணங்களாலும் தொட்டாற்சிணுங்கி செடிகள் சட்டென வாடிவிடும்.

* வைரத்துக்கு அடுத்து கடினத்தன்மை கொண்ட தாது  கோரண்டம். இதை விடவும் 90 மடங்கு கடினத்தன்மை கொண்டது வைரம்!

* அதிகபட்சமாக 15 ஆயிரம் அடி உயரமுள்ள தென்மேற்கு சீன மலைப் பகுதியில் கூட மரங்கள் வளர்கின்றன.

* கி.பி.829 மற்றும் 1010ம் ஆண்டுகளில் நைல் நதி உறைந்து கிடந்தது.

* பொதுவாக முற்றிய தேங்காய்கள் இரவு நேரத்திலேயே மரத்திலிருந்து விழுகின்றன.

* முதல் பலூன் பந்தயம் பாரிஸில் 1906ம் ஆண்டு நடைபெற்றது. 7 நாடுகளிலிருந்து 15 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். 22 மணி 28 நிமிடங்களில் 635 கிலோமீட்டர் பறந்து சென்ற அமெரிக்க போட்டியாளருக்கு பரிசு கிடைத்தது. இதே காலகட்டத்தில்தான் ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தை மேம்படுத்தினர்.

* ஜப்பானில் உள்ள ஷிமீவீளீணீஸீ சுரங்கப்பாதை 53.9 கிலோமீட்டர் நீளமானது. இதுவே இப்போது பயன்பாட்டில் உள்ள நீளமான, ஆழமான ரயில் சுரங்கப்பாதை. இதில் 23.3 கிலோமீட்டர் தூரம் கடல் படுகைக்கும் கீழே உள்ளது.

* இந்தியாவில் தோன்றிய தாமரை மலர், கி.மு. 6ம் நூற்றாண்டில் எகிப்து சென்றிருக்கிறது. அங்கு தாமரையின் விதை, வேர், இலை என அனைத்துமே உணவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* அதிக அளவு புரதம் கொண்ட கடல் உணவுகளை (ஷிமீணீயீஷீஷீபீ ஷிtமீஷ்) சாப்பிடுவதாலேயே, ஜப்பானிய சுமோ வீரர்கள் ‘அந்த’ உருவத்தைப் பெறுகிறார்கள்!

* இங்கிலாந்தைச் சேர்ந்த ஜில் ஸ்காட் என்பவரே, கார் ரேஸில் மணிக்கு 193 கிலோமீட்டர் வேகத்தை எட்டிய முதல் பெண்மணி. இந்நிகழ்வு 1928ல் புரூக்லேண்ட்ஸில் நடந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:10

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_75196039677
* ஐந்தரை முதல் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தைய 379 திமிங்கலப் படிமங்கள் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதி யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* ஹெர்குலிஸ் பீட்டில் என்ற வண்டுதான் பூச்சிகளில் மிக நீளமானது. 170 மி.மீ. நீளம். அதன் எடையைப் போல 850 மடங்கு சுமையைத் தாங்கக் கூடியது. இந்த அளவில், பூமியின் மிக வலிமையான உயிரினம் இதுவே!

* 2011ல், பச்சை லேசர் ஒளியை உமிழக்கூடிய வகையிலான மனித சிறுநீரக செல், ஜெல்லி மீன் டிஎன்ஏவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

* கடல் உப்பை விடவும் சாதாரண உப்பே சிறந்தது. எந்த உப்பாக இருந்தாலும் அதிகபட்சம் தினம் 6 கிராம் மட்டுமே நல்லது.

* ஷார்யீ ஃபின் மேக்கோ என்ற சுறா மீன், நீருக்கு வெளியே 6 மீட்டர் வரை தாவும். இது சுறா வகைகள் தாண்டுவதில் உச்ச உயரம்!

* அதிக பரப்பளவுள்ள 10 நாடுகள்: ரஷ்யா, கனடா, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, கஸகஸ்தான், சூடான்.

* 0.0089 மில்லிமீட்டர் அகலத்தில் ஒரு ‘பீரியாடிக் டேபிள்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை முடிந்தால், அளந்து பார்த்து வியந்து கொள்ளுங்கள்!

* ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளையின் எடை, சராசரியாக 8 கிலோ. யானையின் மூளை 5 கிலோ. பாட்டில்நோஸ் டால்பினுக்கு 1.51.7 கிலோ. 

* பால்வீதி மண்டலத்திலேயே மிகக்குளிர்ச்சியான பகுதி பூமராங் நெபுலா. மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். ஹைட்ரஜனை உறையச் செய்யும் அளவு குளிர் நிறைந்த அப்பகுதி, பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா Wed 22 Oct 2014 - 17:26

* ஷார்யீ ஃபின் மேக்கோ என்ற சுறா மீன், நீருக்கு வெளியே 6 மீட்டர் வரை தாவும். இது சுறா வகைகள் தாண்டுவதில் உச்ச உயரம்!


இது நம்ம ஜாதி சுறாவா இருக்கும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:17

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_479423165322
* 1964ல் நார்வேயின் ஆஸ்லோ நகரத்தில், 20 ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப் பிரமாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

* சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சீனப்பெண்கள் கத்தரிச் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி, பற்களை கறுப்பாக்கிக் கொண்டனர்!

* பிஷப் நாற்காலிக்கு லத்தீன் மொழியில் ‘கதீட்ரா’ என்று பெயர். அதனால்தான் இன்றும் பல தேவாலயங்கள் ‘கதீட்ரல்’ என்று அழைக்கப்படுகின்றன.

* 1664ல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட 10 டாலர் நாணயங்கள் ஒவ்வொன்றும் 19.5 கிலோ எடை இருந்தது!

* மற்ற எந்த உணவையும் விட அமெரிக்கர்கள் அதிக அளவு எடுத்துக்கொள்வது பால்தான். சராசரியாக ஆண்டுக்கு 132 கிலோ/ஒருவருக்கு!

* இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி நெப்போலியன் அணிந்ததுதான். 1970ல் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்!

* ஆங்கில எழுத்துகளிலேயே மிகப்பழமையானது  ‘ ஷீ’.   3 ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த எழுத்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. ஓ போடு!

* 70 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இப்போது இருப்பதை விடவும் மிக அதிக செய்தித்தாள்கள் (2,461) வெளிவந்தன. இப்போது 1,700க்கும் குறைவுதான்!

* உலகில் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பெயர் ‘மொஹமத்’.

* இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆம்பர் ஜெம் ஸ்டோனின் எடை 15 கிலோ!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:17

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_125465035439
* ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது.

* சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!

* ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!

* சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

* சில ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஒரே வினாடி யில் இரண்டு நகல்களை வெளித் தள்ளும் அளவு வேகம் கொண்டவை.

* கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிகமிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம்  ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்!

* 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

* ஃபிலிம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், புகைப்படத் துறை ஆபரணக் கடைகள், நாணயத் தயாரிப்புத் துறையை விடவும் அதிக வெள்ளியைப் பயன்படுத்தியது.

* தேநீரில் 2 ஆயிரத்துக்கும் அதிக வெவ்வேறு விதமான கலப்பு வகைகள் (பிளெண்ட்) உள்ளன.

* பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் சுதந்திர தேவி சிலை (லிபர்டி) உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 9:24

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Tamil_News_412009835244
* 4 லிட்டருக்கும் குறைவான எரிபொருளில் 350 கிலோமீட்டர் பயணிக்கக்கூடிய   Urbee   2 என்ற கார் ஆராய்ச்சிக்கட்டத்தில் உள்ளது. இது 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் உருவானது!

* நாம் அறிந்த வரையில், மிகத் தொலைவிலுள்ள கேலக்சியிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை அடைய 13.1 பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். பெருவெடிப்பு நிகழ்ந்து, 700 மில்லியன் ஆண்டுகள் ஆன பிறகே, இந்த ஒளி உமிழல் தொடங்கியது!

* தென் ஆப்ரிக்காவில் பிறந்து, கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின் அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர் ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், சென்னையிலிருந்து மதுரையை அரை மணி நேரத்துக்குள் அடைந்து விடலாம்!

* 29.6 காரட் எடை கொண்ட மிக அரிதான நீல வைரம், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் குல்லினன் சுரங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காரட் என்பது 0.2 கிராம்.

* 2013ல், லண்டன் கழிவுநீர் குழாய் அமைப்பில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டது. அது என்னவென ஆராய்ந்ததில் கிடைத்தது, 15 டன் எடையுள்ள மிகப்பெரிய கொழுப்புப்பாறை! உறைந்த கொழுப்பும் இன்னபிற கழிவுகளும் சேர்ந்து, ஒரு பஸ் அளவுக்கு தடையாக உருவாகியிருந்தது.

* மின்னல் வெட்டும்போது அதைச் சூழ்ந்திருக்கும் பகுதியே உலகின் மிக வெப்பமான இடம். நொடிக்கும் குறைவான ஒரு பொழுதில், அங்கு 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

* உலகில் மிகமிக நெருக்கமாக மக்கள் வாழும் இடம் பங்களாதேஷ் தலைநகரமான டாக்கா. இங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 44,500 பேர் வசிக்கின்றனர்.

* உலகின் 48 ஏழை நாடுகளின் மொத்த சொத்து மதிப்பை விட, உலகின் 3 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகம்!

* ஹெச்டி தரத்திலுள்ள 44 சினிமாக்களை, அப்படியே ஒரு நொடியில் டவுன்லோடு செய்யும் பிராட்பேண்ட் வசதி லண்டனில் உள்ளது. இதன் வேகம் நொடிக்கு 1.4 டெராபைட்ஸ்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 9:27

வெள்ளை நிறமே...வெள்ளை நிறமே... 

* தீங்கில்லாத பொய், ‘வெள்ளைப் பொய்’ எனப்படும்.
* உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான மருந்துகள் ‘வெள்ளை மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன.
* 1940களில் சீனாவில் தோன்றிய ஜப்பானிய எதிர்ப்பு இயக்கம் ‘வெள்ளை மலர்கள்’ என்பதாகும்.
* லெனின்கிராட் நகரில் ஜூலை 22 முதல் 26 வரை இரவே இருக்காது. இதை ‘வெள்ளை இரவுகள்’ என்று சொல்கிறார்கள். 
* ரத்தம் சிந்தாத போர் ‘வெள்ளை யுத்தம்’ எனப்படும்.
* அயர்லாந்தில் கோழையை ‘வெள்ளை ஈரல்காரன்’ என்கிறார்கள். 
* பெட்ரோலியம் கரைப்பானாகச் செயல்படும்போது ‘வெள்ளை ஸ்பிரிட்’ எனப்படும்.
* கசடு நீக்கப்பட்ட சுத்தமான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையாகும்.
* சணல், நார்த் துணிகள் விற்பனை ‘வெள்ளை விற்பனை’ எனப்படும்.
* நன்மை செய்யும் மந்திரக்காரிக்கு ‘வெள்ளை சூனியக்காரி’ என்று பெயர்.
* இங்கிலாந்தில் ஏலத்தின்போது விலைகளை ஏற்ற அமர்த்தப்படும் மனிதர் ‘வெள்ளை மனிதர்’ என அழைக்கப் படுவார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 9:27

வித்தியாச பூ!

பூக்கள் தங்கள் மகரந்தச் சேர்க்கையைப் பூச்சிகள் மற்றும் வண்டுகளின் உதவியுடன் நடத்திக் கொள்கின்றன. ஆனால் எல்லா மலர்களும் எல்லாப் பூச்சிகளையும் இச்செயலில் ஈடுபட அனுமதித்து விடுவதில்லை. சில மலர்கள் சில குறிப்பிட்ட பூச்சிகளையும் வண்டுகளையும் மட்டும்தான் மகரந்தச் சேர்க்கைப் பணிக்கு அனுமதிக்கும். மெடோசேஜ் என்ற மலர், தேனீயை மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்ய அனுமதிக்கும். அதன் அமைப்பே ஒரு தேனீ மட்டும் உள்ளே சென்று வரும் அளவுக்குத்தான் இருக்கும். தேனீயைத் தவிர வேறு பூச்சிகள் வந்தால் அந்த மலர், தன் மகரந்தம் இருக்கும் இடத்திற்கு அவற்றைச் செல்ல விடாமல் வழியில் இயல்பாகப் பல தடுப்புகளை ஏற்படுத்தி விடும்.

தேனீக்கு மட்டும் எல்லா தடைகளையும் நீக்கி விடுவதோடு, அதன் மலர் இழை தேனீயின் பக்கமாகத் திரும்பி அதை வரவேற்கும். அதே சமயம், மலரின் இன்னோர் இழை தேனீயின் உடலெங்கும் தடவிக் கொடுத்து மகரந்தத்தூளைத் தூவி விடுகிறது. இந்தச் செயல் முடிந்ததும் மலரிழை உதிர்ந்து விட, அந்த இடத்தில் சூல்முடி தோன்றி பூவின் அமைப்பே மாறிவிடுகிறது. அந்த நிலையில் உடலெங்கும் வேறு பூவின் மகரந்தத்தைப் பூசிக் கொண்ட இன்னொரு தேனீ இந்த மெடோசேஜ் பூவினுள் நுழைய, அதன் சூல்முடி வளைந்து, அந்தத் தேனீயை அனுமதித்து அதன் மேல் பூசப்பட்டுள்ள மற்றொரு பூவின் மகரந்தங்களை ஏற்றுக் கொள்கிறது.

தேன் உண்ண வரும் பூச்சிகளை சிறைப் பிடித்து அவற்றின் உடலெங்கும் மகரந்தத்தைத் தடவி அனுப்பும் மலர்களும் உள்ளன! ஆக மொத்தத்தில் மெடோசேஜ் ஒரு வித்தியாசமான பூ...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 9:27

வண்ண வண்ண முட்டைகள்...

* அமெரிக்காவில் வாலில்லாத சில வகை கோழிகள் நீல நிறத்தில் முட்டையிடும்.
* நியூகினியாவிலுள்ள காசோவரி வான்கோழிகள் பச்சை நிறத்தில் முட்டையிடும். 

* அன்னப் பறவைகள் பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் முட்டையிடும். 
* ஜப்பானில் காணப்படும் குயில்களின் முட்டை சிவப்பு நிறத்தில் இருக்கும். 
* ஆப்ரிக்க ஜிங் கோழி முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறமாய் கரும்புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
* கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

* பவழக்கால் நாரைகளின் முட்டைகளில் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும்.
* வரகு கோழிகள் மஞ்சள் நிற முட்டைகள் இடும்.
* கருடன் முட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
* செந்தலைக் கிளிகளின் முட்டை வெண்ணிறத்தில் வட்ட வடிவத்தில் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 13:12

நம்பிட்டேன்பா நம்பிட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:14

காலண்டர்: சில தகவல்கள்

* காலண்டர் என்பதற்கு லத்தீன் மொழியில் ‘கணக்குப் புத்தகம்’ என்று பொருள். ரோமானிய மொழியில் ‘மாதத்தின் முதல் நாள்’ என்று பொருள்.
* பழங்காலத்தில் ரோமானியர்கள் வீடுகளில் காலண்டர் மாட்டி வைப்பதில்லை. மாதப் பிறப்பன்று ஊர்ப் பணியாளர் வீதிகளில் வந்து, புது மாதப் பிறப்பை அறிவிப்பார்.
* நாம் கடைப்பிடிக்கும் தேசிய காலண்டரின் பெயர் விக்ர சகாப்தம். 22.3.1957 முதல் தேசிய நாட்குறிப்பு நடைமுறைக்கு வந்தது.
* 1582ல் பதிமூன்றாவது கிரிகோரி என்கிற பாதிரியார் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். 
* பாபுவா நியூ கினியா நாட்டு மக்களுக்கு காலண்டர் முறை தெரியாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்து தங்கள் வயதைக் கணக்கிடுகின்றனர்.
* திபெத்தியர் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது. 12, 14, 14, 15 என்றே அமைந்திருக்கும்.
* பழங்காலத்தில் கிரேக்க நாட்டவர்கள் ஒரு வாரத்திற்கு பத்து நாட்களென்றும், ஒரு மாதத்திற்கு மூன்று வாரங்களென்றும் கணக்கிட்டு வந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:14

A to Z

* ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.
* வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.
* ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.
* அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.
* ‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.
* ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.
* சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.
* ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியை உருவாக்கியவர் லவாய்சியர்.
* ‘I’யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.
* ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.
* வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.
* ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.
* M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.
* ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.
* ‘O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.
* P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.
* எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘  Q  ’வைப் பின்பற்றி   U   வரும்.
* ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.
* ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.
* புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.
* ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
* V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.
* முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து   W  .
* பெருக்கலுக்கு  X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.
* Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.
* Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:15

கண்களே... கண்களே..!

* தேளுக்கு பத்து கண்கள். இருப்பினும் பார்வை தெளி விருக்காது.
* கருடனுக்கு மனிதனை விட இரண்டு மடங்கு அதிகமான பார்வைத்திறன் உண்டு.
* அமிட்லாஸ் என்ற மீனுக்கு 4 கண்களுண்டு. இதனால் ஒரே சமயத்தில் நீர்மட்டத்துக்கு மேலும் கீழும் பார்க்க முடியும்.
* பிளாட் மீனின் கண்கள் வயதாக வயதாக நகரும் தன்மை கொண்டவை.
* ஸ்காலிப் என்ற கடற் சிப்பிக்கு மொத்தம் நூறு கண்கள் உண்டு. ஒவ்வொரு கண்ணிலும் லென்சும், பார்வை நரம்புகளும் உள்ளன.
* கண்கள் இருந்தும் பார்வை இல்லாத உயிரினம் வௌவால்.
* தேனீயின் கண்களால் புறஊதாக் கதிர்களைப் பார்க்க முடியும்.
* கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு கண்கள்தான்.
* மரவட்டைக்கு ஏழு கண்கள் உண்டு.
* டால்பின்கள் கண்களைத் திறந்தபடியே தூங்கும்.
* பறவைகள் எப்போதும் ஒரு கண்ணை மட்டுமே மூடித் தூங்குகின்றன.
* வண்டுகளுக்கும், முயலுக்கும் கண் இமைகள் கிடையாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 15:21

நீங்களும் நம்புங்க் .. நம்புங்க என்கிறிங்க!  நானும் நம்பிட்டேன் நம்பிட்டேன்  என சொல்லிட்டேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா Tue 28 Oct 2014 - 19:35

நிறைய தகவல்கள் இருக்கின்றது. நம்பும்படியாக தான் இல்லை. சரி நம்புறேன் :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்! - Page 4 Empty Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum