சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 1 Oct 2022 - 10:37

» தன்னம்பிக்கையே உலகில் மிகச்சிறந்த ஆயுதம்.
by rammalar Sat 1 Oct 2022 - 6:54

» மகளெனப்படுபவள் ~கவிதை
by rammalar Fri 30 Sep 2022 - 19:14

» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் - ஒலி வடிவில்
by rammalar Fri 30 Sep 2022 - 14:20

» தர்மத்தில் சிறந்தது…(வள்ளலார்)
by rammalar Fri 30 Sep 2022 - 14:15

» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
by rammalar Fri 30 Sep 2022 - 14:14

» ஆண்டியார் பாடுகிறார்
by rammalar Fri 30 Sep 2022 - 8:56

» குழலி- பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:02

» ஆதார் – பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:01

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:59

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by rammalar Wed 28 Sep 2022 - 18:57

» சி..வி.2 -திரை விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 18:37

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:35

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by rammalar Wed 28 Sep 2022 - 18:34

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 28 Sep 2022 - 18:33

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by rammalar Wed 28 Sep 2022 - 18:32

» உள்ளத்தை அள்ளித் தா 2
by rammalar Wed 28 Sep 2022 - 18:31

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» உண்மையான பன்னின்னு!
by rammalar Thu 22 Sep 2022 - 11:50

» நூறு முத்தம் போதும்- கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» காதல்…காதல்…! – கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» ஸ்டஃப்டு சப்பாத்தி
by rammalar Thu 22 Sep 2022 - 11:40

» டாலருக்குப் பதில் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:37

» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
by rammalar Thu 22 Sep 2022 - 11:36

» சென்னா மசாலா
by rammalar Thu 22 Sep 2022 - 11:35

» ஆதார்- திரை விமர்சனம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
by rammalar Thu 22 Sep 2022 - 11:33

» அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
by rammalar Thu 22 Sep 2022 - 11:32

» அமைதியான கடல்.
by rammalar Tue 20 Sep 2022 - 16:04

» சொல்லியலாமை - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:58

» மலை விழுங்கும் மகாதேவன்கள் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:57

» சூப்பர் குடும்பம் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:56

» இது ஆவி படமா…!
by rammalar Sun 18 Sep 2022 - 12:53

அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ் Khan11

அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்

Go down

Sticky அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:20

அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ் Ht2734
 
நமது சமூகத்தில் பள்ளி வாழ்க்கை என்பது கடினமான ஒன்று என்ற அடிப்படையில் பள்ளி குழந்தைகளின் மனதில் உருவகப்படுத்தப்படுகிறது. இதற்கு பெற்றோரும், குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்களும் காரணம். வீட்டில் குறும்பு செய்கின்ற குழந்தைகளிடம் �இவ்வாறு குறும்பு செய்தால் நாளை உன்னை ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவேன் என்று மிரட்டுகின்ற பெற்றோர் உண்டு. இது அவர்கள் மனதில் பள்ளியை குறித்து ஒரு பயங்கரமான எண்ணத்தை தோற்று வித்துவிடும் என்பதை பெற்றோர் அறிவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

பள்ளி வாழ்க்கை எந்த ஒரு சூழ்நிலையிலும் கடினமான ஒன்று என்றோ, தண்டனைக்குரிய இடம் என்றோ குழந்தைகளின் மனதில் கருத்துகளை விதைக்க கூடாது. புதிய நண்பர்கள் கிடைக்கின்ற இடம் என்றும், புதிய விஷயங்களை அறிந்து கொள்கின்ற இடம் என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும். முதலில் பள்ளி செல்கின்ற குழந்தையிடம் அவன்/ அவள் பள்ளிக்கு செல்வது தொடர்பாகவும், பள்ளி தொடர்பாகவும், அங்கு கிடைக்கப்போகும் புதிய நண்பர்கள் தொடர்பாகவும் அவ்வப்போது பேசி புரிய வைக்க முயல வேண்டும். பள்ளி திறக்கும் முன்னர் ஓரிரு முறை வகுப்புகளுக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்து அவன்/அவள் பள்ளிக்கு செல்ல விரும்பும் நிலையை உருவாக்கலாம்.

வீட்டில் அதிக பாசத்துடனும், அன்புடன் வளர்க்கின்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அதிக அடம் பிடித்து பள்ளிக்கு செல்ல மறுக்கும். இதனால் பள்ளியில் சேர்க்கின்ற வயதுள்ள குழந்தைகளை அருகில் உள்ள மற்ற குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதுடன், வீட்டின் வெளிப்புறங்களில் சென்று விளையாடவும் அனுமதிக்க வேண்டும். மூன்று நான்கு வயது நிரம்பும் போது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிறிது நேரம் தனியே விட்டு பழக வேண்டும். இது பெற்றோரிடம் இருந்து அவர்கள் தனித்திருக்க பழகும் வாய்ப்பாக அமையும்.

முதல்நாளில் பள்ளிக்கு செல்லும்போதோ, பள்ளி விட்டுவரும் போதோ குழந்தை அழுகிறதே என்று அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை நிறுத்தக்கூடாது. ஒருமுறை அது போன்று பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் மீண்டும் அவர்கள் அதனையே விரும்ப தொடங்குவர். முதல் நாளிலேயே பள்ளியில், வகுப்பறையில் குழந்தைகளை அதிக நேரம் அமர வைக்கவேண்டாம். 

எனது குழந்தை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அழுது அடம்பிடிக்குமோ? அவ்வாறு செய்தால் என்னால் என்ன செய்ய முடியும்? பள்ளியின் சுற்றுச்சூழல் குழந்தைக்கு பிடிக்குமா? பள்ளியில் வைத்து சரியாக உணவு உண்ணுமா? டாய்லெட் போக என்ன செய்யும்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் பெற்றோர் மனதில் வந்து செல்லும். பொதுவாக பள்ளி செல்லும் முதல் நாளில் குழந்தைகள் அடம்பிடிப்பது வழக்கம். முதல்நாளில் ஹாயாக சென்று விட்டு மறுநாளோ, அதற்கு அடுத்தநாளோ நான் போகமாட்டேன் என்று புத்தக பையை தூக்கிப்போட்டு விட்டு ஓடுகின்ற குழந்தைகளையும் காணலாம். 

வீட்டில் அன்பும், சுதந்திரமும் நிறைந்த உலகில் இருந்து கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகுந்த இடத்திற்கு மாறும் போது குழந்தைகளுக்கு பள்ளி செல்வதற்கான விருப்பமின்மை உருவாகிறது. வீட்டில் தந்தையும் தாயும், இதர குடும்ப உறுப்பினர்களிடம் எந்த கட்டுப்பாடுமின்றி வளைய வந்து கொண்டிருக்கும் எந்த குழந்தையும் அந்த சூழலில் இருந்து மற்றொரு சூழலுக்கு திடீரென்று மாறும்போது எழுகின்ற பிரச்னைதான் இது.

இதனை அறிந்து கொண்டு எதிர்கொள்ள தயாராக வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ள குழந்தை அழாமல் பள்ளிக்கு செல்கிறது, இவன் மட்டும் ஏன் அழுது அடம் பிடிக்கிறான் அல்லது இவள் மட்டும் ஏன் அழுது புரளுகிறாள் என்று எண்ணுகின்ற பெற்றோர் உண்டு. முதன் முதலில் பள்ளிக்கு செல்லப்போகும் குழந்தைகளின் பெற்றோர் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே காணலாம்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:21

முதன் முதலாக பள்ளிக்கு செல்கிறதா?

படிப்படியாக நேரத்தை அதிகரிக்க செய்யலாம். பள்ளிக்கு சென்றால் சாக்லெட் வாங்கி தருவேன், விளையாட்டு பொம்மை வாங்கி தருவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதும் தவறு. பள்ளியை பற்றியும், வகுப்பறைகள் பற்றியும் பாசிட்டிவ் விஷயங்களை கூறி குழந்தைகளை புரிய வைக்க முயல வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கிறது என்றால் ஏன் குழந்தை பள்ளி செல்ல மாட்டேன் என்கிறது என்பதை ஆராய வேண்டும். ஆசிரியரிடம் பயம், அருகில் அமருகின்ற குழந்தைகளால் தொந்தரவு, தனியாக உணவு உண்ணுவதற்கு சிரமம், தனியாக டாய்லெட்டில் சென்று அமர பயம், வகுப்பில் ஆசிரியர்கள் சொல்கின்ற விஷயங்கள் புரியாமல் போகலாம் என பள்ளி செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கின்ற குழந்தைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். 

இவற்றில் எந்த காரணமும் இல்லாமலும் இருக்கலாம். அந்த காரணங்களை கண்டறிந்து அவற்றை போக்க முயற்சிக்க வேண்டும். இவ்விஷயத்தில் பெற்றோர் ஆசிரியரின் உதவியையும் நாடலாம். பள்ளி செல்ல புறப்படும்போது தலைவலி, வயிற்றுவலி, வாந்தி வருகிறது என்று பல்வேறு உடல்நல கோளாறுகளை சொல்லி குழந்தைகள் தப்பிக்க பார்க்கலாம். இது வீட்டில் உள்ளவர்களின் அன்பும், பாசமும், கவனமும் திசை திருப்ப செய்கின்ற முயற்சியாகும். அதே வேளையில் விடுமுறை நாட்களில் இதுபோன்ற உடல் நல கோளாறுகள் குழந்தைகளால் சொல்லப்படவில்லை எனில் அவர்கள் பள்ளிக்கு செல்ல மறுக்க சொல்லும் காரணங்கள் என்பதை அறியலாம். விடுமுறை நாட்களிலும் இதுபோன்ற உடல் நல கோளாறுகளை தெரிவித்தால் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

பொதுவாக குழந்தைகளை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் பள்ளிக்கு அனுப்பி வைப்பதை விட்டுவிட்டு அவர்களின் பிரச்னைகளை கரிசனையுடன் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காணும் வகையில் முயற்சிக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பும், அரவணைப்பும் பள்ளி செல்ல மறுக்கின்ற எந்த ஒரு குழந்தையையும் மாற்றும் வழியாகும். இருப்பினும் நீண்ட காலம் பள்ளி செல்ல மறுக்கின்ற குழந்தைகளால் அவர்களது கல்வியும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்ற நிலை ஏற்பட்டால் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum