Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
+2
நேசமுடன் ஹாசிம்
ahmad78
6 posters
Page 1 of 1
பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றை 2 மணி நேரம் அதாவது சுமார் 120 நிமிடங்கள் நீந்தி கடந்த துணிச்சல் மிக்க ஏழை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் கணனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்ததாக நீச்சல் தெரியாத அப்பெண் கூறியுள்ளார். கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் சுராப்பூர் என்னுமிடத்தின் அருகே நீலகண்ட நாராயணகட்டி என்னும் கிராமம் உள்ளது. மாராத்தி மொழி பேசுவோர் வாழும் இக்கிராமத்தை சேர்ந்தவர் கட்டி பாலப்பா. இவரது இரண்டாவது 22 வயதான மனைவி எல்லவ்வா. மிகவும் பின் தங்கிய பகுதியான நீலகண்ட நாராயணகட்டியில் மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது. அவசர மருத்துவ தேவைக்கு அருகிலுள்ள கெக்ககேரா-விற்கு செல்ல வேண்டும்.இந்த இரு கிராமங்களுக்கும் இடையில் கிருஷ்ணா ஆறு ஓடுவதால் மழைக் காலத்தில் ஆற்றை கடப்பதென்பது மிகவும் கடினமாகும்.
கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையின் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடியது. இதனால் நீலகண்ட நாராயணகட்டி கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது. போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் 9 மாத கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வா-விற்கு பயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் குழந்தையை நல்லவிதமாக பெற்றெடுக்க முடியாது என கருதினார். எனவே அவர் ஆற்றை கடக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கோ நீச்சல் தெரியாது. நீச்சல் தெரியாமல் இந்த விபரீத முடிவு வேண்டாம் என குடும்பத்தாரும் கிராமத்தாரும் எதிர்த்தனர்.
ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் படகு ஓட்டுநர்களும் ஆற்றில் இறங்க மறுத்தனர். ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருந்த எல்லவ்வா, கடந்த ஜூலை 31-ம் தேதி தனது தம்பி லட்சுமண், தந்தை ஹனுமப்பா, உறவினர்கள் சிலரின் உதவியுடன் துணிந்து ஆற்றில் இறங்கினார். 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் கயிறு மற்றும் சுரைக்குடுவையை கட்டிக்கொட்டு துணிச்சலுடன் குதித்தார். 700 மீட்டர் நீளமுள்ள ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் மூச்சிறைக்க நீந்தி கடந்துள்ளார். குளிரிலும்,உடல் வலியிலும் துடித்த அவரைக் கண்டு மறுகரையில் நின்றவர்கள் கடுமையாக அதிர்ந்து போயினர்.
ஆண் குழந்தைக்கு தாயான துணிச்சல் பெண்:
அவருக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மிகவும் மெலிந்திருந்த அவருடைய உடலில் போதிய ரத்தம் இல்லாததால் மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எல்லவ்வாவை அவரது குடும்பத்தினர் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறுவை சிகிச்சையின் மூலம் 4 கிலோ எடையுள்ள ஆண்குழந்தை பிறந்தது.
இந்த சாகச முயற்சி குறித்து கூறிய எல்லாவ்வா தன் கணவர் பாலப்பாவுக்கு அவர் இரண்டாவது மனைவி என்றார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தான் என்னை திருமணம் செய்தார். எனக்கும் திருமணாகி 4 ஆண்டுகள் ஆயிற்று. எனவே தற்போது நான் கர்ப்பமானதும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நினைத்ததாக தெரிவித்தார்.
நீச்சல் தெரியாமலே நீந்திய சாகசம்:
தமக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது என்ற எல்லாவ்வா துணி துவைக்க மட்டுமே ஆற்றுக்கு போயிருப்பதாக கூறினார். ஆனாலும் கணவர் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்காக ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்ததாக கூறினார். ஆற்றில் குதிப்பதற்கு முன்னால் கடவுளையும் கணவரையும் மனதில் நினைத்து கொண்டதாக தெரிவித்தார்.
நீந்தும் போது மிக குளிராகவும் பயமாகவும் இருந்ததாக கூறிய அவர், தனது சகோதரனும், தந்தையும் நீந்துவதற்கு சொல்லி தந்தார்கள் என்றார். அவர்கள் சொற்படியே தாம் நீந்தி வந்ததாகவும் தெரிவித்தார். தடுமாறும் நேரங்களில் இருவரும் பிடித்து கொண்டதாகவும் கூறியுள்ளார். தமது மனதில் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
எல்லாவ்வாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிரசவத்தின் போது எல்லவ்வா மிகவும் சோர்வடைந்து இருந்ததாக கூறினார். அறுவை சிகிச்சையின் மூலமாகவே குழந்தையையும் தாயையும் உயிரோடு காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் கூறினார். இந்த பெண்ணின் துணிச்சலை கேட்டு பிரம்மித்ததாக கூறியுள்ள மருத்தவர், அவரது குடும்ப சூழ்நிலையை மற்றம் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அவரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என முடிவெடுத்திப்பதாக தெரிவித்தார்.
ஆற்றை கடக்கம் புகைப்படம் எடுத்தது எப்படி?
எல்லவ்வா 9 மாத கர்ப்பிணியாக ஆற்றில் நீந்தி வந்தபோது சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதனை மறுக்கரையில் இருந்து கவனித்த சிலர் அங்கிருந்த கன்னட நாளிதழின் நிருபருக்கு தகவல் கொடுதுள்ளனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துணிச்சல்மிக்க எல்லவ்வாவை படமெடுத்துள்ளார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=107864
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
ஆச்சரியம் தாயும் சேயும் நலம் வாழட்டும்
பகிர்வுக்கு மிக்க நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி
Re: பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
சாதனையில் பதியப்பட வேண்டும் தாயும் சேயும் நலமாய் வாழட்டும் கணவனும் சகோதரனும் உதவி இருக்கிறார்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
மிக மிக தைரியசாலி தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
தன் கணவனுக்காவும் தான் கருவில் சுமந்த அந்த ஜீவனைக் காண்பதற்காகவும் ஒரு தாய் இப்படி ரிஷ்க் எடுத்திருக்கிறார் இதற்கு என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை
ஒரு குழந்தை பிறப்பதென்பது அது தாயால் மட்டுமே முடியுமான காரியம் அப்படி இருக்கையில் அந்தத்தாய் செய்த இந்தகாரியம் என்னை மெய் மறக்கச் செய்து விட்டது
இந்தக் குழந்தை பிற்காலத்தில் இந்தத் தாய்க்கு ஆயுள் வரை கடமை செய்ய வேண்டும் அப்போதும் போதாது என்றுதான் சொல்லுவேன் ~/ ~/
ஒரு குழந்தை பிறப்பதென்பது அது தாயால் மட்டுமே முடியுமான காரியம் அப்படி இருக்கையில் அந்தத்தாய் செய்த இந்தகாரியம் என்னை மெய் மறக்கச் செய்து விட்டது
இந்தக் குழந்தை பிற்காலத்தில் இந்தத் தாய்க்கு ஆயுள் வரை கடமை செய்ய வேண்டும் அப்போதும் போதாது என்றுதான் சொல்லுவேன் ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரசவத்திற்காக '2 மணி நேரம்' நீந்தி ஆற்றை கடந்த துணிச்சல் பெண் ...
நினைக்கவே முடியாத செயல் இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
» ஒரு நாளைக்கு 23 மணி நேரம் உறங்கும் 21 வயது பெண்! காணொளி இணைப்பு
» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
» மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.
» ஆசை இருந்தால் நீந்தி வா..!
» ஒரு நாளைக்கு 23 மணி நேரம் உறங்கும் 21 வயது பெண்! காணொளி இணைப்பு
» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
» மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.
» ஆசை இருந்தால் நீந்தி வா..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum