சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

வசீகரிக்கும் வைரம்! Khan11

வசீகரிக்கும் வைரம்!

Go down

Sticky வசீகரிக்கும் வைரம்!

Post by ahmad78 on Sat 13 Sep 2014 - 10:22

வசீகரிக்கும் வைரம்! Ld2697
எங்கோ வெகு தொலைவில் - லண்டனில் இருந்தாலும், இன்றைக்கும் இந்தியாவின் செல்வச் சிறப்புக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது  கோஹினூர் வைரம்! வைரம் என்றால் உறுதி என்று பொருள். அத்தனை கடினத் தன்மை வாய்ந்தது. இந்தியாவில் நெடுங்காலமாக விலையுயர்ந்த  பொருட்களில் மிக முக்கியமான இடம் வைரத்துக்கு எப்போதும் உண்டு. தங்கத்துக்கு அடுத்தபடியாக, பளீரிடும் இதன் தன்மைக்கு மயங்கியே  ஆபரணங்களில் பயன்படுத்துகிறார்கள் பெண்கள்.  வைரத்தை பட்டை தீட்டும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்களே! வெள்ளை (நிறமற்றது),  மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர் பச்சை, வயலெட் என பல நிறங்களில் கிடைக்கிறது வைரம். ஜொலிக்கும் வைர  நகைகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. வைர நகைகளை செட்டாக அணிந்து கொள்வது பாந்தமாகவும் களையாகவும் இருக்கும். சில வைர  நகைகள் செட்டுகளாகவே கிடைக்கின்றன. அவற்றின் விலை, தன்மை, தரம் அத்தனையும் இங்கே!

வசீகரிக்கும் வசீகரம்!

இளம் பெண்களின் ஃபேவரைட் செட். கெட் டு கெதர், தோழிகளுடன் கலந்து கொள்ளும் விருந்துகள் ஆகியவற்றுக்குச் செல்லும் போது அணிந்து  செல்ல ஏற்ற அட்டகாசமான செட். எளிமையான தோற்றம்... அதே நேரம் மற்றவர்களின் கவனம் ஈர்க்கும் பளிச் நகைகள். காட்டன், பட்டுப்  புடவைகளுடன் அணிந்து செல்லப் பொருத்தமானது. பார்க்க ஆடம்பரமாகவே தெரியாது. இந்த நகைகள் 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்டவை.

நெக்லஸ் - 5 கேரட் வைரம், 30 கிராம் தங்கம்.
தோடு - 1.24 கேரட் வைரம், 10 கிராம் தங்கம்.
வளையல் - 3 கேரட் 61 சென்ட் வைரம், 16 கிராம் தங்கம்.
மோதிரம் - 145 சென்ட் வைரம், 5 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் 12 லட்சம்.


சுடர்விடும் சூப்பர் ஸ்டார்!

‘அன்றாட உபயோகத்துக்கு தங்கம் மட்டும்தானா? வேறு எதையும் அணிய முடியுமா?’ என தேடுகிறவர்களுக்கு ஏற்ற வெஸ்டர்ன் கலெக்ஷன் இது.  டிரெண்டியாகவும் எல்லா உடைகளுக்கும் பொருந்திப் போகக் கூடியதுமான செட். இளம் பெண்களுக்குப் பார்த்த உடனேயே பிடித்துப் போகும் டிசைன்.  பார்த்ததுமே ஈர்க்கும் எளிமையான பென்டன்டுடன் அமைந்த மெல்லிய கழுத்துச் சங்கிலி, மெல்லிய கரங்களுக்குப் பொருத்தமான பிரேஸ்லெட்,  காதோடு ஒட்டிக் கொண்டது போலத் தொங்கும் தோடு, விரல்களில் நளினமாக அமர்ந்திருக்கும் மோதிரம்... என்று பரவசம் தரும் செட். சிம்பிளாக  இருந்தாலும் க்யூட் என சொல்ல வைக்கும்.

செயின் ப்ளஸ் பென்டன்ட் - 1.94 கேரட் வைரம், 22 கிராம் தங்கம்.
காப்பு டைப் பிரேஸ்லெட் - 1.98 கேரட் வைரம், 62 கிராம் தங்கம்.
செயின் டைப் பிரேஸ்லெட் - 1.36 கேரட் வைரம், 26 கிராம் தங்கம்.
தோடு - 2 கேரட் வைரம், 9 கிராம் தங்கம்.
மோதிரம் - 1.29 கேரட் வைரம், 7 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் ரூ.14 லட்சம்.


நவீனம்... நுணுக்கம்... நளினம்!

மாடர்ன் உடைகளுக்குப் பொருத்தமான ரீகல் கலெக்ஷன் செட்! அடுக்கடுக்காக மணிகளைக் கோர்த்தது போல வைரங்களை அடுக்கி அழகுபடுத் தியிருக்கிறார்கள். அந்தத் தோற்றம் பார்ப்பவர்களை சொக்க வைக்கும். இளம் பெண்களின் ரசனைக்கேற்ற டிசைன் இது என்பது இதன்  சிறப்பம்சம். விருந்துகளுக்கு அணிந்து செல்ல ஏற்றது. 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட, ஒயிட் கோல்டில் உருவாக்கப்பட்ட ஜுவல் செட் இது.

நெக்லஸ் - 57 கேரட் வைரம், 170 கிராம் தங்கம்.
தோடு - 9 கேரட் வைரம், 28 கிராம் தங்கம்.
பிரேஸ்லெட் - 4 கேரட் வைரம், 29 கிராம் தங்கம்.
மோதிரம் - ஒரு மோதிரத்தில் 37 சென்ட் வைரம், 7 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் ரூ.76 லட்சம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வசீகரிக்கும் வைரம்!

Post by ahmad78 on Sat 13 Sep 2014 - 10:23

உள்ளம் கொள்ளை போகுதே!

வைரத்தில் உயரிய வகையான சாலிடயர் (ஷிஷீறீவீtணீவீக்ஷீமீ) வைரத்தால் உருவாக்கப்பட்ட செட்! பிரகாசமான, பெரிய சைஸ் கற்கள் கொண்டது...  ஒன்றை அணிந்தாலுமே அசத்தல் லுக் கிடைக்கும். டிரெண்டியாக அணிந்து கொள்ளலாம், வெஸ்டர்ன் உடைகளுக்கு பொருத்தமான சாய்ஸ்.  பார்ட்டிகளுக்குச் செல்லும் போது அணிந்து கொண்டால் அத்தனை பேரின் பார்வையும் உங்கள் மேல்தான் பதிந்திருக்கும். சாதாரண வைரத்தை விட  காஸ்ட்லி... அழகான அப்பியரன்ஸுக்கு கியாரண்டி.

நெக்லஸ் - 16 கேரட் வைரம், 32 கேரட் தங்கம்.
கம்மல் - ஒரு கேரட் வைரம்,  3 கிராம் தங்கம்.
பிரேஸ்லெட் - 6 கேரட் வைரம், 15 கிராம் தங்கம்.
மோதிரம் - ஒரு கேரட் வைரம்,  3 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் ரூ.86 லட்சம்.


பச்சை வண்ணத்தில் ஒரு புதுக் கவிதை!

கிரீன் ஆனிக்ஸ் (ளிஸீஹ்ஜ்) கற்கள் பதித்த டிரெடிஷனல் செட். விருந்து, விழாக்களுக்கு அணிந்து செல்வதற்குப் பொருத்தமானது. திருமண  வரவேற்புகளில் இதை அணிந்து கொண்டால் எடுப்பாகத் தெரியும். நெற்றிச்சுட்டி,  காதணி, வளையல் என இந்த செட்டில் உள்ள ஒவ்வொன்றையும்  பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள்... சுண்டி இழுக்க வைக்கும் விதத்தில் டிசைன் செய்யப்பட்டவை. பார்த்ததுமே அள்ளிக் கொள்ளத்  தூண்டும். லெஹங்கா உள்ளிட்ட வெஸ்டர்ன் உடைகளுக்கு  பெர்ஃபெக்ட் மேட்ச்! வேறு வண்ணக் கற்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில்  இருக்கிறது. 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட நகைகள் இவை.  

சோக்கர் நெக்லஸ் - 40.33 கேரட் வைரம், 168 கிராம் தங்கம்.
தோடு - 8 கேரட் வைரம், 70 கிராம் தங்கம்.
வளையல்கள் - ஒரு வளையலில் 4 கேரட் வைரம் முதல் 20 கிராம் தங்கம் வரை...
மோதிரங்கள் - ஒரு மோதிரத்தில் 1 கேரட் வைரம், 5 கிராம் தங்கம்.
சுட்டி - 5 கேரட் வைரம், 19 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் ரூ.60 லட்சம்.

மணப்பெண் ஸ்பெஷல்!

மணப்பெண்ணை அழகாக்கும் க்யூட் அண்ட் கிராண்ட் பிரைடல் செட்! பட்டு மற்றும் டிசைனர் புடவைகளுக்கு பொருத்தமான கலெக்ஷன்! ரூபி மற்றும்  முத்து சேர்த்து வடிவமைத்திருப்பது கூடுதல் அழகைத் தரும். வைர நகைகளுக்கே உரிய ஜொலி ஜொலிப்பு, தரமான கட் என எல்லாம் சேர்ந்து  நகைகளை மின்ன வைக்கின்றன. பிரைடல் செட் என்பதால் மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நெக்லஸ் - 20 கேரட் வைரம், 100 கிராம் தங்கம்.
ஆரம் - 18 கேரட் வைரம், 100 கிராம் தங்கம்.
தோடு - 2.41 கேரட் வைரம், 15 கிராம் தங்கம்.
சுட்டி - 1.45 கேரட் வைரம், 15 கிராம் தங்கம்.
வளையல்கள் - ஒரு வளையலில் 2.17 கேரட் வைரம், 14 கிராம் தங்கம்.
மோதிரங்கள் - ஒரு மோதிரத்தில் 2 கேரட் வைரம், 9 கிராம் தங்கம்.
பிரைடல் செட்டின் விலை சுமார் 60 லட்சம்.


ஃபேஷன் ப்ரியர்களுக்கு...

கிராண்டான சல்வார், காக்ரா போன்ற உடைகளுக்கு பொருந்திப் போகும் டிசைனர் செட். கோலம் போல வளைந்து, நெளிந்து செல்கிற சோக்கர் நெக்ல  ஸின் வடிவமைப்புதான் இந்த செட்டின் ப்ளஸ். அதே போல வளையலும் மோதிரமும் அசாதாரணமான வடிவமைப்பில்..! வெள்ளை மற்றும் கோல்டன்  நிறத் தங்கம் இரண்டும் சேர்ந்திருப்பது வித்தியாசமான அழகு. ஃபேஷனாக வெரைட்டியாக இருக்க வேண்டும் என விரும்புவோருக்கு ஏற்ற ரகம்.

சோக்கர் - 17 கேரட் வைரம், 105 கிராம் தங்கம்.
வளையல் - 7 கேரட் வைரம், 40 கிராம் தங்கம்.
தோடு - 9.7 கேரட் வைரம், 18 கிராம் தங்கம்.
மோதிரங்கள் - ஒரு மோதிரத்தில் 45 சென்ட் வைரம், 4 கிராம் தங்கம்.
செட்டின் விலை சுமார் ரூ.38 லட்சம்.


 
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=2699


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum