Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்
Page 1 of 1
மனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்
'இந்த எழுத்தால் என்ன சாதித்தாய்..?' என்ற கேள்வியை எனக்குள் எப்போது எழுப்பினாலும் கிடைக்கும் விடையானது ஒன்றுதான்... அது நல்ல நட்புக்களை முகம் தெரிந்தோ... தெரியாமலோ... குடும்ப உறவாகவோ... இணைய உறவாகவோ... பெற்றிருக்கிறேன் என்பது மட்டும்தான். என் எழுத்து சமூகத்தை சீர்திருத்த வந்த எழுத்தோ அல்லது ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்த எழுத்தோ அல்ல... சாதாரண கிராமத்தானின் எழுத்து இது அவ்வளவே. கல்லூரிக் காலத்தில் 'நீங்களும் எழுதலாமே' என்ற இரண்டு வார்த்தை என் பேராசானிடமிருந்து வந்தபோது அடுத்த நாளே விளையாட்டாய் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதைதான் எழுத்துக்கான முதல் சுழி. 'என்னய்யா காதல் கதை... வயசு அப்படி'ன்னு சொல்லாம அதையும் திருத்தி... 'நல்லாயிருக்கு' என்ற ஒற்றை வார்த்தை அவரின் வாயில் இருந்து உதிர்ந்ததில் கனிந்ததுதான் இந்த எழுத்து... அந்த வார்த்தை கொடுத்த தெம்புதான் 'பெரிய எழுத்தாளன்' என்ற கனவில் எழுத வைத்தது. கல்லூரியில் படிக்கும் போது முதல் கவிதை 'தாமரை'யில் வெளிவர. பொன்னீலன் அண்ணாச்சியின் வாழ்த்து ஒன்று ஐயா முகவரிக்கு தாமரை இதழுடன் வந்தது. அப்படி ஆரம்பித்த எழுத்தில் எங்கள் மண்ணின் மக்களையும் வாழ்க்கையையும் வைத்து எழுத ஆரம்பித்தது என்னோட மூணாவது இன்னிங்க்ஸில்தான்... ஆம் முதல் இன்னிங்க்ஸ் கல்லூரிக் காலத்தில் கவிதை, ஹைக்கூ என அதில்தான் அதிகம் பயணித்தது. கதைகளும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் எல்லாமே ஆஹா... ஒஹோவெல்லாம் இல்லை. இரண்டாவது இன்னிங்க்ஸ் திருமணத்திற்குப் பின்னர், ஸ்ருதி பிறந்த பின்தான்... சென்னையில் பத்திரிக்கையில் இருந்தபோது கவிதைகளும் ஹைக்கூவும் எழுதினாலும் கதைகளின் பின்னே அதிகமாய் நகர்ந்தது... மூன்றாவது இன்னிங்க்ஸில்தான் சொல்லிக் கொள்ளும்படியான வட்டார வழக்கிலான கதைகள் அதிகம் எழுத ஆரம்பித்தது... எழுதவும் நேரம் கிடைத்தது... மனசு என்ற வலைப்பூவும் வசமானது. தற்போது பத்திரிக்கைகளில் வெளி வருவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியாத சூழல் என்றாலும் இணைய இதழ்களில் அதிகம் எழுத முடிகிறது.
இப்ப எதுக்கு பழைய புராணம் அப்படின்னுதானே கேக்குறீங்க...? என்னைக்குமே பழைய குப்பைகளைக் கிளறினால் நிறைய விஷயங்களை அறிய முடியும்... அதைப் பற்றித்தான் பேசப்போறோம்... அதுக்கு முன்னால நான் முதல் பாராவில் சொன்னது போல் ஒவ்வொருத்தருக்குமான எழுத்து ஏதோ ஒரு வகையில் ஆரம்பித்திருக்கும். சிலர் தொடர்ந்து எழுதலாம் பலர் என்னைப் போல் மூணு நாலு இன்னிங்க்ஸாக எழுதி வரலாம். சில நல்ல எழுத்தாளர்கள் காலத்தின் பிடியில் காணாமலும் போயிருக்கலாம்... எப்படியிருந்தாலும் ஒவ்வொருவருக்குமான எழுத்து வித்தியாசனமானது. அந்த வகையில் திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்கள் பாடல்கள், விளக்கங்கள், திருக்குறள், தொழில் நுட்பம் எனக் கலக்கினால் ஜெயக்குமார் ஐயா அவர்கள் சொல்ல வந்ததை மிக அழகாக வார்த்தைக் கோர்வையில் வித்தியாசமாய் நகர்த்துவார். கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சிவசம்போவை வைத்து சிரிப்பாகவும் சீரியஸாகவும் எழுதினால் தமிழும் அழகுமாய் முத்து நிலவன் ஐயா எழுதுவார். வாழ்க்கைக் கதைகளில் நம்மை வசப்படுத்துவது நிஷா அக்கா என்றால் முத்துக்களில் சிரிப்பார் மனோ அம்மா, எழுத்தையும் காதலிக்க வைப்பது தேவா அண்ணன் என்றால் நிறைவாய் எழுவார்கள் தில்லையகத்து துளசி சாரும் கீதா மேடமும்... எல்லாரையும் கவரும் பதிவுகளால் நம்மை எங்கள் பிளாக் ஈர்க்கும் என்றால் திரைக்கதையாய் விரிப்பார் குடந்தை சரவணன் அண்ணன். நண்பன் தமிழ்க்காதலன் கவிதைகளில் கலக்கினால் தம்பி தினேஷ் அதே கவிதைகளால் வார்த்தையில் விளையாடுவான். இப்படி ஒவ்வொருத்தரையும் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் பல பதிவுகள் எழுத வேண்டும். எனவே இங்கு சொன்னவர்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் நான் விரும்பி வாசிக்கும் என்னை வாசிக்கும் அனைவரின் எழுத்துக்களுமே மிகச் சிறப்பானவைதான்...
எழுத்து வரமாய் அமைந்த பலரில் எந்தப் பதிவு என்றாலும் விரிவாய்... புள்ளி விபரங்களை வைத்து அது ஆன்மீகமாய் இருந்தாலும் அரசியலாய் இருந்தாலும் வாழ்வியலாய் இருந்தாலும் அசத்தலான மிக நீண்ட பகிர்வைக் கொடுக்கக் கூடியவர் ஜோதிஜி அண்ணன் அவர்கள்... இவரின் எழுத்துக்கள் எல்லாரையும் வசீகரிக்கும். நீண்ட பதிவாய் நிறைவாய் எழுதுவார்... எதையும் ஊறுகாயாக தொடமாட்டார்... ஆதி முதல் அந்தம் வரை அலசி விடுவார். இவர் எங்க பக்கத்து ஊர்க்காரர் என்பதில் எனக்குச் சந்தோஷம்... வட்டார வழக்கில் எழுதுகிறானே இவன் என என்னை நேசிப்பதில் அவருக்குச் சந்தோசம். இப்ப என்ன ஜோதிஜி அண்ணனுக்கு ஐஸ் அப்படின்னு நினைக்காதீங்க... பழைய குப்பைகளை கிளற வைத்தவர் அவர்தான்... அதைக் கிளறக் கிளற ஆஹா... என்ன சுவை... என்ன ரசனையான எழுத்து.
எப்பவுமே குப்பைகளைக் கிளறினால் கோமேதகம் கிடைக்கும் என்பார்கள்... கிராமங்களில் குப்பை குழி, குப்பை மேடு என ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் வீட்டுக் குப்பைகள். மாட்டு ஆட்டு சாணிகள் என கொட்டி வைத்து விவசாய நேரத்தில் வயலில் அள்ளிக் கொண்டு போய் தூவிவிட்டு உரமாக்குவார்கள். சிலர் வயலில் ஒரு ஒரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள். அந்தக் குப்பைகளைக் கிளறித்தான் கோழிகள் தங்களுக்கான இரைகளைப் பொறுக்கும். ஏன் நானெல்லாம் கோழி குஞ்சி பொறித்ததும் கரையான் அள்ளப் போகும்பொது குப்பைக் குழிகளைத்தான் தேடிச் செல்வேன். அங்குதான் அதிகம் கரையான் இருக்கும்.. அதுவும் மாட்டெருவுக்குள்ளும், கதிர் அறுத்து நெல் தூற்றியது போக கருக்காய் என்று சொல்லப்படுகிற குப்பைக்குள்ளும் குவிந்து கிடக்கும். அதை வாளி நிறைய அள்ளி வந்து கோழிக் குஞ்சிக்கு போடுவதுண்டு. பள்ளியின் அருகில் இருக்கும் வாரச் சந்தையில் திங்கள்கிழமை மதியம் சுற்றிச் சுற்றி தேடி சில்லறைக்காசு பொறுக்கிய அனுபவம் நிறைய உண்டு. எனவே பழைய குப்பை என்று ஒதுக்கித் தள்ளாமல் அதையும் ஆராய்ந்தால் நிறையப் பெற முடியும்... நிறைவாகவும் பெற முடியும். அப்படியான ஒரு தொகுப்புத்தான் ஜோதிஜி அண்ணனின் 'பழைய குப்பைகள்'.
சின்ன வயதில் நிறைய பேப்பர்களையும் நடிகர், நடிகையர் படங்களையும் வெட்டி எடுத்து சேர்த்து வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு. பிடித்த கதைகள் என்றால் கூட வெட்டி சேர்த்து வைப்பேன்... ஆனால் அரசியல் விவகாரங்களை எல்லாம் சேர்த்து வைப்பதில்லை... அரசியலுக்கும் நமக்கும் வெகுதூரமாய் இருந்த காலம் அது. கல்லூரியில் படிக்கும் போது கூட என் பங்காளி திருநாவுக்கரசையும் முத்தரசு பாண்டியனையும் கோர்த்து விட்டு விட்டு அவர்களின் விவாதத்தை ரசித்தபடி நானும் ராம்கியும் சைக்கிளிலும் நவநீ, அண்ணாத்துரை, ஆதி என மற்ற பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் எங்கள் தோளில் கைபோட்டபடி நடந்தும் பயணிப்பதுண்டு.... மூன்றாண்டுகள் தினமும் காலை மாலை என காரசார விவாதம் நிகழ்ந்தும் முடிவில்லாமலேயே முடிந்து போனது கல்லூரி வாழ்க்கை... ஜோதி அண்ணா அரசியலையும் கரைத்துக் குடித்தவர் என்பதை அவரின் அரசியல் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். அவரும் நம்மைப் போல குப்பை சேர்ப்பவர்தான்... அதுவும் அரசியல் குப்பைகள்... அந்தத் தலைவர் அன்று பேசியதில் ஆச்சர்யப்பட்டும் வெட்டி வைத்ததை, இன்று எடுத்துப் பார்க்கும் போது இவரா இப்படிப் பேசியிருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்... அதிர்ச்சி அடைந்திருக்கிறேன் என்று ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆக மொத்தம் நாம் சேர்த்த குப்பைகளை மீண்டும் கிளறும் சந்தர்ப்பம் வாய்த்தால் ஆச்சர்யப்பட... ஆனந்தப்பட... அதிசயப்பட வைக்கின்றன அல்லவா?
என்னோட வட்டார வழக்கில் இருந்து எழுத்து வழக்குக்கு மாறி... இருங்க இங்க என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிக்கிறேனே... நானெல்லாம் வட்டாரத்தில் இருந்து மாறவே இல்லை இன்னும் காட்டானாய்த்தான் என்பது வேறு விஷயம்... எனக்கெல்லாம் ரத்தம், நாடி, நரம்பு எல்லாத்துலயும் பரியன் வயல் கிராமத்து மண்ணு மொத்தமாப் பாஞ்சிருச்சு... இன்னும் கிராமத்தானாய்த்தான்... அதுதான் சுகமாவும் சந்தோஷமாவும் இருக்கு... ஜோதி அண்ணனிடம் முதல்முறை பேசும்போதே அந்த சுகத்தை அடைந்தேன்... சரி விஷயத்து வருவோம்... அதாவது எழுத்து வழக்குக்கு மாறி, இணைய எழுத்தாளனாய் பரிணமிக்க அவருக்கு 40 பதிவு தேவைப்பட்டது என்று சொல்லும் முதல் கட்டுரையான 'நான்'னில் ஆரம்பிக்கும் எழுத்து கல்லூரிக்காலம், இரயில்வே நிலையத்தில் படித்தது, பால்ய நண்பன் இன்று எப்படி நடக்கிறான், சாதீயத்தின் விளைவு, ஆன்மீகம், அரசியல் என இருபது கிளைகளில் அற்புதமாய் பயணிக்கிறது. அதுவும் தன் காதலியின் பெயரோடு தன் பெயரையும் எழுதிய ரயில்வே நிலையத்து மரம் இன்னும் நிற்கிறது என்றாலும் அவள் பெயர் மறைந்து தன் பெயர் மட்டும் இருக்க, அதற்குக் கீழே குழந்தைகள் தங்களது பெயரைப் பதித்தார்கள் என்று சொல்லும் போது எத்தனை அன்போடு பிரிந்து போன காதலியைச் சுமந்தாலும் நமக்கென குட்டித் தேவதைகள்... அவர் பாணியில் தேவியர் வந்துவிட்டால் காதலி மறைந்து தேவியரைச் சுமக்க ஆரம்பித்து விடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. அதே போல் ஐடிஐ படித்த நண்பனை இந்த வேலைக்கு நீங்களெல்லாம் சரி வரமாட்டீங்க என அவரின் பூணூலைப் பார்த்து ஒதுக்கும் சமூகத்தால் அவன் இறந்தவர்களுக்கு காரியம் பார்க்கிறான் என்று சொல்லும் போது இன்று அவனின் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு யார் சாவார் என்று காத்திருக்கிறான் என்பதாய் முடிப்பதில் சாதிப் பொங்கலில் சமத்துவ சக்கரை எப்படி தூக்கலாய் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
பழைய குப்பைகளை இரண்டு முறை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி வாசித்தபோது நிறைய அறிய முடிந்தது... எல்லாமே வாழ்வியலைப் பேசும் கட்டுரைகள்... அவை அவர் கடந்து சென்ற போது நிகழ்ந்தவை என்பதைவிட, நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்பவைதான்.. இந்தப் புத்தாண்டின் முதல் நாளில் 'பழைய குப்பைகள்' மின்னூலாய் வந்திருக்கிறது. புத்தகம் போடணும்.. அதுவும் கவிதைக்கு ஒன்று... கதைக்கு ஒன்று... நாவலுக்கு ஒன்று.. கட்டுரைக்கு ஒன்று... என நாமெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது 2013 ஆம் ஆண்டில் 'ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்' என்ற முதல் மின்னூலை வெளியிட்டவர் இந்த மூன்றாண்டுகளில் இன்று வெளியான 'பழைய குப்பைகள்' வரை எட்டு மின்னூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்த மின்னூலுக்கு முந்தைய மின்னூல் வரை 1,64,000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஆச்சர்யம் என்பதைவிட அவரின் எழுத்துக்கான் அத்தாட்சி என்றே சொல்லலாம். அவரின் அனைத்து மின்னூல்களுக்கான இணைப்பு அவரின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாசித்தால் அந்த எழுத்து உங்களை அடித்துச் சென்று ஆச்சர்யப்பட வைக்கும்.
ஜோதி அண்ணாவின் வலைப்பூ : தேவியர் இல்லம்
பழைய குப்பைகள் மின்னூல் வாசிக்க : பழைய குப்பைகள்
பழைய குப்பைகள் வசீகரிக்குமா என்றால் ஆம் வசீகரிக்கும் என்பதுடன் வாசிப்பவரை வசமிழக்க வைக்கும் என்றும் சொல்லலாம்.
கடைசியாக ஒன்று அவரின் டாலர் நகரம் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... ஊருக்குப் போகும் போது திருப்பூர் செல்வது என்பது கடினமே... இந்த முறை எப்படியும் வாங்கி வாசிக்கணும். ஆனாலும் அது குறித்து திண்டுக்கல் தனபாலன் அண்ணா பேசும்போது சொன்னது 'என் மாமனார் டாலர் நகரம் புத்தகத்தில் இருந்து குறிப்புக்கள் எடுத்து மேடைகளில் பேசியதாய் ஜோதிஜி அவர்களிடம் சொன்னார் என்றார். அப்ப அது எப்படியான பொக்கிஷமாய் இருக்கணும்.. அதேபோல்தான் எல்லா மின்னூல்களும்... அவசியம் வாசிங்க...
என்னங்க... பதிவு ரொம்பப் பெரிசா இருக்கா? மூணு நாலு பதிவு ஒண்ணு சேர்ந்தாத்தான் அவரோட ஒரு பதிவு... அதனால அவரைப் பற்றி அவருக்கான பகிர்வு என்பதால் நீளமாத்தான் எழுதணும் இல்லையா...
இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் அண்ணா...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» மனசு பேசுகிறது : பழைய பன்னீரு
» மனசு பேசுகிறது : அ...ம்...மா..!
» மனசு பேசுகிறது : கடிதங்கள்
» மனசு பேசுகிறது : பஞ்சாயத்து
» மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
» மனசு பேசுகிறது : அ...ம்...மா..!
» மனசு பேசுகிறது : கடிதங்கள்
» மனசு பேசுகிறது : பஞ்சாயத்து
» மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum