சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Khan11

எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

+4
பானுஷபானா
நண்பன்
Nisha
தினா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Fri 19 Sep 2014 - 22:38




இந்தப் பாடல் எனக்குப் பிடித்தப் பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் என்று சொல்ல வேண்டும். காரணம் பாடலின் வரிகளிலும், பாடலைப் பாடிய குரல்களிலும், அந்தக் குரல்களுக்கு திரையில் உடலசைவுகளைக் கொடுத்த நடிகர்களும், பாடலின் நோக்கமும் என சொல்லிக் கொண்டே போகலாம். எஞ்சியதை, உங்களுக்குப் பாடலின் வரிகள் தாமாக சொல்லித் தரும்.

பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பழனி. வெளியான ஆண்டு : 1965. குரல்கள் : சீர்காழி கோவிந்தராசன், டி எம் சௌந்தரராசன், பிபி சீனிவாசன். பாடலாசிரியர் - கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள். இயக்கம் - பீம்சிங் அவர்கள். இசை - விசுவநாதன், இராமமூர்த்தி. படத்தின் நாயகன் - நடிகர் திலகம். நாயகி - தேவிகா.

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்



மண்ணிலே தங்கம் உண்டு 
மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு 
பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி 
பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இன்று சேராதோ 
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்


பச்சை வண்ண சேலை கட்டி 
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ண சேலை கட்டி 
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணை போலே 
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா

அண்ணன் தம்பி நால்வர் உண்டு 
என்ன வேண்டும் கேளம்மா

அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா 

திருமண நாளம்மா

போராடும் வேலை இல்ல
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கை கட்டி சேவை செய்து 
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால் 
அன்னை பூமி கேலி செய்வாள்

தேர் கொண்ட மன்னன் ஏது 
பேர் சொல்லும் புலவன் ஏது
தேர் கொண்ட மன்னன் ஏது 
பேர் சொல்லும் புலவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றி 
போர் செய்யும் வீரன் ஏது

போர் செய்யும் வீரன் ஏது

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்


Last edited by தினா on Fri 19 Sep 2014 - 22:55; edited 2 times in total

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Fri 19 Sep 2014 - 22:45

அசை படம் கிடைக்குமா தினா! இந்த ப்பாடல் கேட்ட நினைவில் இல்லை. ஆனால் சீர்காழி கோவிந்த ராஜன் எனும் போது அந்த கணீர் குரல் இப்போதே காதில் ஒலிக்கின்றது.

இன்னும் தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Fri 19 Sep 2014 - 22:53

அசைபடம் சேர்த்து விட்டேன் அக்கா. பாடலைக் கண்டு, கேட்டு மகிழுங்கள்.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Fri 19 Sep 2014 - 22:55

நன்றி தினா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Fri 19 Sep 2014 - 23:08




அடுத்த படியாக எனக்குப் பிடித்தப் பாடல்கள் வரிசையில் பதிவு செய்யக் கூடிய பாடல் என்றால், அதுவும் அதே ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் பாடல் தான்.

அந்தக் காலத்தில் எழுதப்பட்ட, எடுக்கப்பட்டப் பாடல்கள் ஒன்றை மிகத் தெளிவாகத் தெரிவிக்கும் சக்தி வாய்ந்தவை. எனக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும் என நீங்கள், அந்தக் காலப் பாடல் ஒன்றைக் கூறினீர்கள் என்றால், அதற்கான காரணம் என்னவென்று, நீங்கள் மற்றவருக்கு எடுத்தியம்பும் அவசியத்தினை உங்களுக்கு அவை கட்டாயமாக்குவதில்லை. பாடலின் வரிகளே, நீங்கள் ஏன் அந்தப் பாடலை இரசிக்கிறீர்கள் என்பதைப் பெரும்பாலும் கூறிவிடும்.

இந்தக் காலப் பாடல்களிலும் மிக அரிதாக இந்த வகைப் பாடல்கள் வருவதுண்டு.

இந்தப் படத்தின் மிகப் பெரும் தூண், அப்போதைய குழந்தை நட்சத்திரமான, “குட்டி பத்மினி” இவர் வளர்ந்து பெரிய நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு, ஈடேறாது போனது.

திரைப்படம் ; குழந்தையும் தெய்வமும் வெளியான ஆண்டு : 1965  பாடலாசிரியர் : வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் இசை : எம் எஸ் விசுவநாதன். குரல் : பி. சுசீலா.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று


Last edited by தினா on Fri 19 Sep 2014 - 23:19; edited 1 time in total

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Fri 19 Sep 2014 - 23:14

அருமையான அசத்தலான பாடல் தெரிவு தினா!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று தானே என்றும். எனக்கும் அக்கால பாடல்கள் தாம் ரெம்ப பிடிக்கும்.

அர்த்தமும் இசையும் காதுக்கிசைவாய் ரசிக்க வைக்கும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Fri 19 Sep 2014 - 23:26

இந்தத் திரைப்படமே ஏனோ எனக்குப் பிடிக்கும் அக்கா. மேலும், இதே படத்தில் வரும், “அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்” என்கிற பாடலும், “கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே” என்கிற பாடலும், ”பழமுதிர்ச் சோலையிலே பார்த்தவன் வந்தானடி” என இந்தப் பாடல்களையும் எனக்குப் பிடிக்கும். ஆனால், முன்னணி வரிசையில் இடம் பிடிக்கத் தவறுகின்றன.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Fri 19 Sep 2014 - 23:31

படம் நினைவில் இல்லை தினா! ஆனால் அனைத்து பாடல்களும் நினைவில் உண்டு.

என் ரசனைக்கு முன்னனியில் இருக்கும் பாடல் எனில்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...
நீயே உனக்கு நிகரானவன்
மல்லிகை என் மன்னன் மயங்கும்
சொன்னது நீதானா
உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல என தொடரும்.

முன்னர் இப்பாடல்களைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.

அப்புறம் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வந்தது.... வாழ்க்கைத்தத்துவம் சொல்வதால் பிடிக்கும்.

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா.. நட்பின் நிமித்தம் நண்பனை தேற்றுவது போல் வருவதால் ரெம்ப பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by நண்பன் Sat 20 Sep 2014 - 10:11

பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் கொண்ட பெண்ணை போலே
நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா

அண்ணன் தம்பி நால்வர் உண்டு
என்ன வேண்டும் கேளம்மா

அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா

இது வரை கேட்டிராத அருமையான பாடல்
இப்படியான பாடல்களை கேட்கும் போது
உள்ளத்தில் ஒரு வகையான மகிழ்ச்சி சொல்லத்தெரிய வில்லை
மிக மிக அருமையான பாடல் வரிகள்
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by பானுஷபானா Sat 20 Sep 2014 - 11:15

இந்த இருபாடலுமே எனக்கு மிகவும் பிடிக்கும்...

கோழி ஒரு கூட்டிலே பாட்டை பாடித் தான் என் பிள்ளைகளை தூங்க வைப்பேன்.

குவா குவா பாப்பா இவ குளிக்கக் காசு கேப்பா இந்த பாடலும் பிள்ளைகள் தூங்க பாடுவேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by ahmad78 Sat 20 Sep 2014 - 11:31

பானுவிற்கு பாடத்தெரியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by நண்பன் Sat 20 Sep 2014 - 12:15

அருமையான பாடல் கருத்துக்கள் நிறம்பிய வரிகள்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by பானுஷபானா Sat 20 Sep 2014 - 12:27

ahmad78 wrote:பானுவிற்கு பாடத்தெரியுமா?

பேசுவதை இழுத்து பேசினால் பாட்டு இது தெரியாதா? i* ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sun 21 Sep 2014 - 14:39



இந்த பாடல் ஏனோ என் உணர்வில் கலந்து விட்ட ஒரு பாடல்..

அதிலும்,

“அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்..”

என்ன வரிகள்... அந்த இதயத்தின் துடிப்பு.. என்ன பரிதவிப்பு..

ஆண் குரல் ஒலிக்க, பெண்களின் நாடித் துடிப்பை வெளிக் கொணரும் அந்தப் படப் பதிவு.. முதல் படம் என்ற போதும், தன்மையான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகை நதியா.. அந்த உணர்வுகளை அப்படியே கொணர்ந்த நடிகை, நாட்டியத் திலகம் பத்மினி.. மனதை கனக்கச் செய்யும் பாடல்..

அடிக்கடி முணுமுணுக்கக் கூடிய, என்னுடைய ஒரு கைபேசியில், இதுதான் அழைப்புக் குரலாக எனக்கு ஒலிக்கும்.

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா




அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா



காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..

உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

படம்: பூவே பூச்சூடவா.

இசை: இளையராஜா

பாடியவர்:கே.ஜே. யேசுதாஸ்

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Sep 2014 - 14:44

{_ {_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sun 21 Sep 2014 - 14:52

இந்தப் பாடல்,

”வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்”

இந்த வரிகளுக்காகவே மிகவும் பிடிக்கும்.

என்ன ஒரு அன்பு.. வைரமுத்து அவர்களின் இந்த வரிகள் வைரமே தான். இளமையான கார்த்திக், ஜிக்கி ( ஜெமினி கணேசன் அவர்களின் மகள் ) இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே அருமைதான். ஆனாலும், ஏனோ எனது பட்டியலில் இது முன்னணிக்குத் தாவி நின்று கொண்டிருக்கிறது, குறிப்பாக இந்த வரிகளால்.


படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆஆ.. ஆஆ.. ஆஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்.. ஹாஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
...

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆ ஆஆ..
ஆ: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெ: மௌனமே சம்மதம் என்று
ஆ: ம்..
பெ: தீண்டுதே மன்மத வண்டு
ஆ: ம்..
பெ: மௌனமே சம்மதம் என்று.. தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ஆ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பெ: பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
...

பெ: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
ஆ: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ: ஹா..
ஆ: கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஹா..
ஆ: பூவிலே மெத்தைகள் தைப்பேன்.. கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்.. ஹா.. ஹா..

பெ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஆ: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெ: உன் வார்த்தை சங்கீதங்கள்.. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
ஆ&பெ: பொன் மேகம் நம் பந்தல்


தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 14:55

பூவே பூச்சூடவா எனக்கும் ரெம்ப பிடிக்கும் தினா!

நதியாவின் சுட்டித்தங்களும் பாடல் காட்சிகளும் மனதை அள்ளும். இந்தப்பாடல் சோகமாகவும் இருக்கின்றது தானே.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Sep 2014 - 14:56

Nisha wrote:பூவே பூச்சூடவா எனக்கும் ரெம்ப பிடிக்கும் தினா!

நதியாவின் சுட்டித்தங்களும் பாடல் காட்சிகளும் மனதை அள்ளும். இந்தப்பாடல் சோகமாகவும் இருக்கின்றது தானே.. !
இப்பாடலின் முதல் வரிக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் சொல்லுங்களேன்ன்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:01

யேசுதாஸில் குரலில் வரும் எல்லாப்பாட்டும் எனக்கு ரெம்ப பிடிக்கும்தினா!

அந்தக்குரலில் நான் அப்படியே அசந்து நிற்பேன்! என்னமோ ஒரு காந்தகுரலாய் இருக்கும். ஈரமான் ரோஜாவே பாட்டை அந்த குரலுக்காகவே பல முறை கேட்டிருப்பேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by தினா Sun 21 Sep 2014 - 15:01

நன்றி பானுஷாபானு அவர்கள், தம்பி நண்பன், நிஷா அக்கா, முனாஸ் கலைமான் அவர்கள்.

“பூவே பூச்சூடவா” - பூச்சுடி வர வேண்டும் என்பது தான் நான் கொண்ட அர்த்தம். பூவை, பூச்சூடி வந்தால் அழகு கூடும். அவ்வாறு அழகியலோடு  தன் பேத்தி வர வேண்டும் என்பது அந்த பாட்டியின் தவிப்பு.

பூச்சூட்டி விடுகிறேன் வா என்றழைப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:01

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:பூவே பூச்சூடவா எனக்கும் ரெம்ப பிடிக்கும் தினா!

நதியாவின் சுட்டித்தங்களும் பாடல் காட்சிகளும் மனதை அள்ளும். இந்தப்பாடல் சோகமாகவும் இருக்கின்றது தானே.. !
இப்பாடலின் முதல் வரிக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் சொல்லுங்களேன்ன்...

முதல் வரி எனில்..பூவே பூச்சூடவா ! என்பதுவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Sep 2014 - 15:03

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:பூவே பூச்சூடவா எனக்கும் ரெம்ப பிடிக்கும் தினா!

நதியாவின் சுட்டித்தங்களும் பாடல் காட்சிகளும் மனதை அள்ளும். இந்தப்பாடல் சோகமாகவும் இருக்கின்றது தானே.. !
இப்பாடலின் முதல் வரிக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் சொல்லுங்களேன்ன்...

முதல் வரி எனில்..பூவே பூச்சூடவா ! என்பதுவா?
ஆமா மேடம் பூவே பூச்சூடவா...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:06

பெண்களை பூவுக்கு ஒப்பிடுவார்கள். நதியா எனும் பூவைக்கு பூச்சூட்டினால் அழகாக இருக்கும் தானே.. அதுதான்.. பூவே உனக்கு பூச்சூடினால் என் நெஞ்சில் பால வார்த்தது போல் இருக்கும் எனும் அடுத்த வரி கொண்டு பார்த்தால் தலையில் பூவைத்தல் என்பது பெண்களுக்கான் மங்கலம்.. இந்த மங்கலத்தோடு நான் உன்னை என்றும் பார்க்கணும். எனவும் புரியலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Nisha Sun 21 Sep 2014 - 15:07

தினா wrote:நன்றி பானுஷாபானு அவர்கள், தம்பி நண்பன், நிஷா அக்கா, முனாஸ் கலைமான் அவர்கள்.

“பூவே பூச்சூடவா” - பூச்சுடி வர வேண்டும் என்பது தான் நான் கொண்ட அர்த்தம். பூவை, பூச்சூடி வந்தால் அழகு கூடும். அவ்வாறு அழகியலோடு  தன் பேத்தி வர வேண்டும் என்பது அந்த பாட்டியின் தவிப்பு.

பூச்சூட்டி விடுகிறேன் வா என்றழைப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அட தினாவின் அர்த்தமும் புரிதலும் அசத்தல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by முனாஸ் சுலைமான் Sun 21 Sep 2014 - 15:10

Nisha wrote:
தினா wrote:நன்றி பானுஷாபானு அவர்கள், தம்பி நண்பன், நிஷா அக்கா, முனாஸ் கலைமான் அவர்கள்.

“பூவே பூச்சூடவா” - பூச்சுடி வர வேண்டும் என்பது தான் நான் கொண்ட அர்த்தம். பூவை, பூச்சூடி வந்தால் அழகு கூடும். அவ்வாறு அழகியலோடு  தன் பேத்தி வர வேண்டும் என்பது அந்த பாட்டியின் தவிப்பு.

பூச்சூட்டி விடுகிறேன் வா என்றழைப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அட தினாவின் அர்த்தமும் புரிதலும் அசத்தல்!
!_ !_ !_ !_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எனக்குப் பிடித்த பாடல்கள்...!! Empty Re: எனக்குப் பிடித்த பாடல்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum