சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Khan11

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

2 posters

Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:32

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் C70d08b6-6e1b-4837-bab0-3e0b48869009_S_secvpf

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்.

நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்...

அப்படித்தான் சாதிக்குக்கும் போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.

படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.

உறவினர் ஒருவர் போலீஸ்காரராக இருப்பதால் காக்கி சட்டை அணிந்து அவர் மிடுக்குடன் நடந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அவரை அழைத்து நானும் ஒருநாள் இப்படி போலீஸ் அதிகாரியாக வருவேன் என்பான்.

அவரும் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். உன்னால் நிச்சயம் போலீஸ் அதிகாரியாக வரமுடியும். முதலில் நன்றாகபடி என்று பெற்றோரும் உற்சாக மூட்டினார்கள்.

மனதில் துளிர்விட்ட போலீஸ் அதிகாரி கனவுடன் அந்த இளந்தளிர் தனது பள்ளி பயணத்தை தொடர்ந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று உடல் நலம் பாதித்த சாதிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவனை ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் நொறுங்கி போனார்கள். தங்கள் அன்பு மகனை மரணம் நெருங்கி கொண்டிருப்பதை நினைத்து தவித்தார்கள்.

எத்தனை ஆசை...? எத்தனை கனவுகள்...? அத்தனையும் கானல் நீராகி விட்டதே என்று மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.

தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கிடம் அவனது கடைசி ஆசையை மருத்துவர்கள் கேட்டனர்.

அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ‘நான் போலீஸ் கமிஷனராக ஆசைப்பட்டேன். ஆனால்....’ என்று அவன் முடிப்பதற்குள் அருகில் நின்ற மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இவ்வளவு அற்ப ஆயுளில் அவன் வாழ்க்கை பயணம் முடியும் என்று யார் கண்டது? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று! அதுதானே உண்மை.

முடியப்போகும் சாதிக்கின் வாழ்க்கையில் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஐதராபாத்தில் இயங்கும் ‘மேக் ஏ விஷ்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக்கின் நிலைமையும், அவனது கடைசி ஆசையையும் விவரித்தனர்.

உடனே தொண்டு நிறுவனத்தினர் போலீஸ் கமிஷனரை அணுகி விவரத்தை கூறினார்கள்.

கல்லுக்குள் ஈரம் இருக்கும் போது காக்கிச் சட்டைக்குள் ஈரம் இல்லாமலா போகும்? அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி முன்வந்தார். சிறுவன் சாதிக்குக்கு போலீஸ் சீருடை, தொப்பி தயாரானது. நேற்று காலை 10 மணி... கமிஷனராக பதவி ஏற்க சீருடை அணிந்து வீட்டில் சாதிக் தயாராக இருந்தான்.

சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய போலீஸ் வாகனம் சாதிக் வீட்டு முன்பு வந்து நின்றது.

காவலர் ஒருவர் கார் கதவை திறந்து விட மிடுக்காக காரில் ஏறி அமர்ந்தான் சாதிக். ஐதராபாத் நகர வீதியில் கமிஷனராக... மனதுக்குள் கற்பனையில் மிதந்தபடி சாதிக் பயணித்தான்.

கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கியதும் காவலர் ஒருவர் ‘சல்யூட்’ அடித்து வரவேற்றதும் பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதையை ஏற்றுக் கொண்டான்.

போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி பூங்கொத்து கொடுத்து சாதிக்கை வரவேற்றார். பின்னர் கமிஷனரின் இருக்கையில் சாதிக்கை அமர வைத்தனர்.

அந்த அறையில் நிரம்பி இருந்த நிருபர்களும் புதிய கமிஷனரை மகிழ்விக்க புதிய கமிஷனர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரவுடியிசத்தை ஒழிப்பேன். சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படும். போக்குவரத்து சீராக இருக்கும். நாள் முழுவதும் காவலர்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஈவ்–டீசிங்க்கு இடம் கிடையாது என்று படபடவென்று பதிலளித்தான்.

அதோடு உதவி கமிஷனர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இந்த விசயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டான்.

பின்னர் தயாராக வைத்திருந்த சில கோப்புகளிலும் கையெத்திட்டான். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தை சுற்றி காட்டினார்கள்.

ஒரு நாள் கமிஷனராக வலம் வந்த சாதிக்கின் உள்ளத்தில் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான பூரிப்பு. சந்தோசத்தில் சிரித்து கொண்டே அனைவரிடமும் உரையாடினான்.

இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் இதயமும் கண்ணீர் வடித்தது. எத்தனை ஆசை கனவுகள்... இந்த சிறுவனுக்கு? அநியாயமாய் பாதியிலே கருகி போகிறதே...

வாழும் காலமாவது வசந்த காலமாக இருக்கட்டும் என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு ஒவ்வொருவரும் அவனை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வயதில் எவ்வளவு பெரிய கனவு கண்டுள்ளான். கடவுள் அவனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை. எங்களால் முடிந்த இந்த உதவியின் மூலம் அவனுடைய ஆசையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி எங்களுக்கு என்றார் கமிஷனர் மகேந்திர ரெட்டி.

-- மாலைமலர் 
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:41

அடுத்தவரை சந்தோஷபடுத்தி பார்ப்பது தான் உயர்வானது என்பதை நிருபித்திருக்கின்றார்கள். 

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி சுறா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:43

Nisha wrote:அடுத்தவரை சந்தோஷபடுத்தி பார்ப்பது தான் உயர்வானது என்பதை நிருபித்திருக்கின்றார்கள். 

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி சுறா சார்!

அடுத்தவரை மகிழ வைப்பது ஒன்றே இந்த உலகின் சிறந்த செயலாகும்.  )(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» ஒரு நாள் காவலில் எடுத்து சக்சேனா - அய்யப்பனிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum