சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தியாகம் Khan11

தியாகம்

Go down

தியாகம் Empty தியாகம்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:19

தியாகம் Ht2925
தியாகம் செய்வதும் தியாகிகளாக அறியப்படுவதும் நல்ல விஷயங்கள்தான். ஆனால், குடும்பத்தினுள், கணவன்-மனைவிக்குள் பரஸ்பரம்  செய்யப்படுகிற தியாகங்கள், உண்மையிலேயே அந்த உறவை நெருக்கமாக்கி, அன்பை அதிகரிக்கிறதா? நூற்றுக்கு 90 தம்பதியரிடம் கேட்டால்,  எதிர்மறையான பதிலே வரும். சந்தோஷத்தைக் கொடுக்காத அந்தத் தியாகம் பிறகு எதற்கு? தியாகம் செய்கிற வாழ்க்கை என்பது சிலருக்கு சூழல்  காரணமாகத் தானாக அமைகிறது. இன்னும் சிலரோ அதை வேண்டி, வருந்தி, ஏற்றுக் கொள்கிறார்கள்.

‘எப்படி வளர்ந்த பொண்ணு/ பையன்... இப்படி ஒருத்தன்/ஒருத்தி கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே...’ என எத்தனையோ பேரைப் பார்த்துப்  புலம்பியிருப்போம். அவர்களது வாழ்க்கையைப் பார்த்துப் பரிதாபப்பட்டிருப்போம். நல்ல குடும்பத்துச் சூழலில் வளர்ந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ  அவர்கள் வளர்ந்த விதத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு துணை அமையப் பெற்றிருப்பார். நன்றாக வாழ வேண்டும் என்கிற அவர்களது  ஆசைகளையும் கனவுகளையும் தாண்டி அவர்களுக்கு அப்படியொரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கும். துணையிடம் ஆயிரம் குறைகள், கோளாறுகள்  இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். 

உதாரணத்துக்கு தனது கணவன், பெண் பித்தனாகவோ, குழந்தைகளிடம் பாலியல் வன்முறையைப் பிரயோகித்தவனாகவோ இருந்திருக்கலாம்.  திருமணத்துக்குப் பிறகும் அந்த துர்குணங்களைத் தொடர்பவனாக இருக்கலாம். அவனுடனான வாழ்க்கை பிடிக்காவிட்டாலும் அதிலிருந்து வெளியே  வருவதைப் பற்றி யோசிக்காமல் வாழ்வது ஒருவகையான தியாகம். இன்னொரு ரகத்தினர், அப்படி வாழ்வதையே பெருமையாக நினைப்பவர்கள். ஒரு  ஏரியாவையே கதிகலங்கச் செய்கிற தாதாவாகவோ, ரவுடியாகவோ இருப்பார். வீட்டுக்குள் மனைவியிடமும் வன்முறையாகவே நடந்து கொள்வார். 

வீட்டுக்குள் கணவரை எதிர்க்கத் தைரியமில்லாத அந்தப் பெண், வெளி உலகத்தைப் பொறுத்தவரை தன்னை தைரியமானவளாகவும் தாதா அல்லது  ரவுடியின் மனைவி என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவளாகவும் காட்டிக் கொள்வார். இதன் பின்னணியில் இருப்பது ஒருவித மனநலக்  குறைபாடு. இது கவனிக்கப்பட, குணப்படுத்தப்பட வேண்டிய விஷயம். இத்தகைய மனநிலை, அவர்களது குழந்தைகளையும் பெரிதும் பாதிக்கும். அப்பா  என்பவர் அடிப்பவர் என்றும் அம்மா என்பவர் அடிவாங்குபவர் என்றும் புரிந்து கொள்வார்கள். வன்முறையை சகித்துக் கொண்டு வாழ்வதுதான் அன்பு  என்றும் அதைப் போன்றதொரு தியாகம் வேறில்லை என்றும் பிள்ளைகளுக்குப் பழக்கியிருப்பார்கள். 

இந்த ரகப் பெண்கள், தான் செய்கிற தியாகத்தின் காரணமாக தன் கணவரை விடவும் இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களைவிடவும் தன்னை  ஸ்பெஷலானவராகவும் நினைத்துக் கொள்வார்கள். நம்முடைய திறமை, நம்மை ஸ்பெஷலானவராக நினைக்கச் செய்தால் நன்று. மாறாக, ஒருவர்  தான் அனுபவிக்கிற சித்ரவதையை நினை த்து தன்னை அப்படி சிறப்பு மிக்கவராக நினைத்துக் கொள்வது மனநலக் கோளாறின் அறிகுறியே தவிர  வேறொன்றுமில்லை.வேறு யாரேனும் இவர்களை சிறப்பானவர்கள் எனப் பாராட்டும் போதும் உடனே நம்பி விடுவார்கள். பைசா பெறாத ஒரு  பொருளை, கொள்ளை விலை வைத்து, ‘நீங்க ரொம்ப ஸ்பெஷலானவங்க... அதான் யார் யாரோ ஆசைப்பட்டுக் கேட்டும் அவங்களுக்கெல்லாம்  கிடைக்காத இந்தப் பொருள் உங்களுக்கு வந்திருக்கு...’ என வார்த்தைகளில் ஜாலம் காட்டுவோரிடம் ஏமாந்து, தேவையற்ற பொருளை, அநியாய  விலைக்கு வாங்கி நிற்கிற ஆண்களும் பெண்களும் இந்த ரகம்தான்.

நல்லதங்காள், கண்ணகி எனப் பெண் குலத்துக்கேஅடையாளங்களாக காலங்காலமாக நாம் சுட்டிக் காட்டுகிற பல பெண்களும் பலிகடாக்களாக  வாழ்க்கையைத் தொலைத்தவர்களே... பத்தினி தெய்வங்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டுப்  போனவர்கள். இவர்களது வாழ்க்கையை உதாரணங்களாகக் கொண்டு,  இப்படியொரு தியாக வாழ்க்கையை தொடர்வதில் உடல் ரீதியாக, மன ரீதியாக,  பொருளாதார ரீதியாக அவர்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், புலம்பிக் கொண்டே... சகித்துக் கொண்டே... தியாகத்தைத்  தொடர்வார்கள். ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் இருக்கிறது. மனநல ஆலோசனையின் மூலம் இவர்களை முழுமையாக  வெளியில் கொண்டு வருவதும் சற்றே சிக்கலானதுதான்.

இவர்களது இந்த பலிகடா மனப்பான்மைக்கு, மத நம்பிக்கைகளும் ஒரு வகையில் தூண்டுதலாக இருப்பதுண்டு. அதாவது, கல்லானாலும் கணவன்,  புல்லானாலும் புருஷன் என்கிற மாதிரி போதனைகளும், கொடுமைக்கார துணையாக இருந்தாலும் அவரைவிட்டுப் பிரிவது குடும்பத்துக்கு ஆகாது  என்கிற மாதிரி பதிக்கப்பட்ட கருத்துகளும் பலிகடா மனநிலையை மேலும் மேலும் வளர்க்கவே செய்யும்.‘என்னை மாதிரி இந்த உலகத்துல யாருமே  கஷ்டம் அனுபவிச்சிருக்க மாட்டாங்க...’ எனப் புலம்புவார்கள். அந்தத் தியாகத்தி லிருந்து வெளியே வர வழியும் தேட மாட்டார்கள். அதில் நிற்பதுதான்  அவர்களுக்கு சுகம் தருகிற விஷயம். பலிகடா மனநிலை கொண்ட பல பெண்களுக்கும் அந்தத் தியாக மயக்கத்தில் அதனால் ஏற்படக்கூடிய பயங்கர  விளைவுகள் கூடப் புரிவதில்லை. கணவரின் வன்முறை அத்துமீறி, அந்தப் பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து வரலாம். 

அவளது உடைமைகளுக்கும் ஆபத்து வரலாம். ஆனாலும், தான் கற்றுக் கொண்ட, தனக்குள் பதிந்த ஆழமான நம்பிக்கைகளை கெட்டியாகப் பிடித்துக்  கொண்டிருக்கிற தியாகத்திலிருந்து ஒரு அடி கூட விலகி நிற்க நினைக்க மாட்டார்கள். தன்னைத் தானே தியாகி என நினைத்து வாழ்ந்து  கொண்டிருக்கிற இவர்கள் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான தியாகிகள் யாரும் தம் தியாகத்தை ஒரு கஷ்டமாக  நினைத்துப் புலம்ப மாட்டார்கள். மற்றவர்களை மோசமாகவும் தன்னை ஸ்பெஷலானவராகவும் கருத மாட்டார்கள். பலிகடா தியாகிகள் இதற்கு  நேரெதிர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தியாகம் Empty Re: தியாகம்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:19

ஒருவேளை உங்களில் ஒருவரும் இப்படி பலிகடா வாழ்க்கைக்குள் உழன்று கொண்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை...

உங்களுக்குப் பிரச்னை தருகிற மனிதர்களை மன்னித்து வாழப் பழகுங்கள். மன்னிப்பது என்றால் வன்மத்தை மறப்பது. தவறு செய்தவரின் மீதான  உங்கள் கோபத்தை உதறி விடுங்கள். அந்தக் கோபத்தை நீங்களே இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தால், அது உங்களைத்தான் வருத்தும். அதற்காக  அந்த நபர் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும் என அர்த்தமில்லை. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

உண்மையான சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு அன்னை தெரசா போன்றோர் தாம் செய்த சேவைகளை  என்றைக்கும் பிரகடனப்படுத்தவோ, பெருமையாகப் பேசவோ நினைத்ததில்லை. மற்றவரது பாராட்டுகளை எதிர்பார்த்ததில்லை. அப்படியொரு  மனநிலைக்கு நீங்களும் பழகுங்கள்.

நீங்கள் தியாகியா, பலிகடாவா என்கிற தெளிவைப் பெறுங்கள். அடக்கமானவர்களால்தான் தியாகங்களையும் சேவைகளையும் செய்ய முடியும்.  தற்பெருமை ஆசாமிகளுக்கு அது சாத்தியமே இல்லை. 

காதலிக்கவோ, திருமணம் செய்யவோ சரியான நபரைக் கண்டுபிடிப்பது சுலபம்தான். ஆனால், வாழ்நாள் முழுக்க அந்த நபருடன், அதே காதலுடன்  வாழக் கற்றுக் கொள்வதுதான் கஷ்டம். அந்த வித்தை உங்களுக்கும் கைவர...

சின்னச் சின்ன விஷயங்களை கவனிக்காமல் விடப் பழகுங்கள். எத்தனை முறை சொன்னாலும் கணவர், ஈரமான டவலை கண்ட இடத்தில்  வைப்பதும், பல் விளக்காமல் பெட் காபி குடிப்பதும் உங்களுக்கு கோபத்தையும், அருவெறுப்பையும் தரலாம். ஆனால், அவை பெரிய விஷயங்களாக  விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையா எனப் பாருங்கள். இது போன்ற சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தக் கற்றுக்  கொள்ளுங்கள்.

அற்ப விஷயங்களை விவாதிப்பதில் நேரத்தை வீணடிக்காமல், இரண்டு பேரும் சேர்ந்து செய்யக்கூடிய பெரிய திட்டங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அது  உங்கள் வளர்ச்சியை மட்டுமின்றி, காதலையும் வளர்க்கும். துணையை மாற்ற முயற்சிக்காதீர்கள். அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதும் காதலிப்பதும்  மட்டுமே போதுமானது.

உங்கள் துணையை உங்களது பெஸ்ட் ஃப்ரெண்ட் போல நடத்துங்கள். ஒரு நல்ல நட்பிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய அனைத்தையும் துணையிடம்  பகிர்ந்து கொள்ளுங்கள். திருமண உறவில் அடியெடுத்து வைக்கிற முதல் நாளே, ஆயுள் முழுக்க இருவரும் ஒன்றாக இருக்கப் போகிற தெளிவைப்  பெறுங்கள். உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் அந்த நினைப்பு பிரதிபலிக்க வேண்டும்.

புத்திசாலியான துணையாக இருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். துணைக்கு ஒரு ஆலோசனையோ, தீர்வோ தேவைப்படுகிற  விஷயங்களில் உங்களது வார்த்தைகள் பயனளிக்கும்படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். துணைக்குப் பிடித்த சின்னச் சின்ன ஆசைகளை  நிறைவேற்றுங்கள். 

துணை செய்கிற ஒவ்வொரு தவறுகளையும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்காதீர்கள். உங்களைக் காதலர்களாகவே கற்பனை செய்து கொண்டு  வாழுங்கள். ‘இதைப் போய் எப்படிச் சொல்றது’ எனத் தயங்காமல் உங்கள் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், போராட்டங்கள் என எல்லாவற்றையும்  துணையிடம் பகிருங்கள்.

உங்கள் துணையை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அது உங்களது காதலை சிதைத்து விடும். ஏதோ ஒரு  விஷயத்துக்காகத்தான் அந்த நபரை உங்கள் துணையாக ஏற்றிருப்பீர்கள். அதைப் போற்றக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில்  சின்னச் சின்ன தவறுகள் நடக்கும் போது உங்கள் அகங்காரமும் அகந்தையும் குறுக்கிடாமல், மன்னிப்பு கேட்டுப் பழகுங்கள். அதை மனதிலிருந்து  கேளுங்கள். 


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2935&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum