சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Khan11

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

4 posters

Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by சுறா Wed 10 Dec 2014 - 19:32

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக MotherTheresa+2

ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.

கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ.

யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.

1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், சொந்த ஊரில் பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் எனக் கடவுள் தனக்குக் கட்டளையிட்டதாக குறிப்பிடும் தெரசா, மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார். தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, இந்தியாவின் கல்கத்தா நகரில் யுகோஸ்லோவியக் கிறித்துவ மிஷினர்கள் தொண்டாற்றுவதைக் கேள்விப்பட்டுத் தானும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு தனது கனவில் கடவுள் அழைப்பதாக குறிப்பிடும் தெரசா, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக MotherTheresa

இதற்குக் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பாண்டவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார்.

தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.

சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது. இதனால், தொண்டின் மறு உருவமான தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, 1973-இல் டெம்லெடொன் விருது, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது, 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார். கடவுள் இருப்பதாக கூறி வணங்குபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by Nisha Thu 11 Dec 2014 - 11:49

அருமையான பகிர்வு ஜானி!

மதர் தெரேசா குறித்து பகிர்ந்ததற்கு நன்றி.

உங்கள் 2000 பதிவுக்கும் வாழ்த்துகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Dec 2014 - 12:15

இந்தப்பதிவினைப் படித்துவிட்டுத்தான் 2000மாவது வாழ்த்தினை தேடிப்பிடித்து வாழ்த்தியிருந்தேன் இதற்கான பின்னூட்டம் விடுபட்டுப்போனது 

அருமையான பகிர்வு அண்ணா நன்றிகள் 
அன்னை தெரேசா பற்றிய ஒரு கருத்தாடலில் அவரது பிறப்பிடம் சம்பந்தமாக சந்தேகம் இருந்தது இந்தப்பதிவில் தெளிவு பெற்றுக்கொண்டேன்


தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by சுறா Thu 11 Dec 2014 - 12:40

நன்றி நிஷா மற்றும் ஹாசிம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by பானுஷபானா Thu 11 Dec 2014 - 12:47

அருமையான தகவல் நன்றி அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by சுறா Thu 11 Dec 2014 - 12:50

பானுஷபானா wrote:அருமையான தகவல் நன்றி அண்ணா
மிக்க நன்றி அக்கா  சூப்பர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக Empty Re: தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா - எனது 1999 பதிவாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum