சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Khan11

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:30

பாரதியார் எவ்வளவோ சொன்னாரு. பெரியார் என்னென்னவோ சொன்னாரு.

ஏனோ இந்த பெண்ணின் மரணம் என்னை ரொம்பவே துக்கமாக்கிடுச்சி - சுறா

ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம்பெண் தூக்கிலிடப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மரண தண்டனையை நிறைவேற்ற உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் ஈரான் அரசு அவரை தூக்கிலிட்டது.
ரேஹானே ஜபாரி என்ற அந்த பெண் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூக்கிலிருந்து ரேஹானேவை காப்பாற்றுவதற்காக இயங்கி வந்த பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தூக்கிலிடப்பட்ட தகவல் உறுதியாகி உள்ளது. வீடுகளின் உள் அலங்கார நிபுணரான ரேஹானே கடந்த 2007 ம் மோர்தெஸா அப்து லாலி சர்பண்டி என்ற உளவுத்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் ரேஹானோவை பாலியல் பலாத்காரம் செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப்புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானோவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. ஈரானின் திரைப்பட நடிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் ரேஹானோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். குத்தி கொல்லப்பட்ட அப்துலாலியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியிருந்தால் ஈரான் நாட்டு இஸ்லாமிய சட்டப்படி ரேஹானோ தூக்கிலிருந்து தப்பியிருப்பார். எனினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபரை பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும் வரை ரேஹானோவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என்றும் கூறி அப்துலாலி குடும்பத்தினர் அதற்கும் மறுத்து விட்டனர். இந்த சூழலில் ரேஹானோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஈரானில் இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Last edited by சுறா on Sun 26 Oct 2014 - 22:41; edited 3 times in total
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:39

1100 பதிவுக்கு வாழ்த்துகள்! 

பதிவின் படத்தினை கொஞ்சம் கவனியுங்கள்.  திருத்தணுமா என பாருங்கள் சார்!

மிக மிக வருந்தத்தக்க நிகழ்வு இது.  தனக்கு தீங்கு செய்ய வந்தால் மிருகம் கூட  எதிராய் தாக்குதல் செய்யும். இங்கே  தன்னை காத்து கொள்ள  கொலை செய்ததற்காக தூக்காம்.. கறிபழிக்கப்பட்டிருந்தாலும் கல்லெறிந்து கொன்றிலிருப்பார்கள். 

கற்பழிக்க முயன்றது தப்பில்லையாம்.. தன்னை காத்துகொள்ல தற்பாதுகாப்பு செய்தது தப்பாம்! என்ன உலகம்பா இது!!*!*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:42

Nisha wrote:1100 பதிவுக்கு வாழ்த்துகள்! 

பதிவின் படத்தினை கொஞ்சம் கவனியுங்கள்.  திருத்தணுமா என பாருங்கள் சார்!

மிக மிக வருந்தத்தக்க நிகழ்வு இது.  தனக்கு தீங்கு செய்ய வந்தால் மிருகம் கூட  எதிராய் தாக்குதல் செய்யும். இங்கே  தன்னை காத்து கொள்ள  கொலை செய்ததற்காக தூக்காம்.. கறிபழிக்கப்பட்டிருந்தாலும் கல்லெறிந்து கொன்றிலிருப்பார்கள். 

கற்பழிக்க முயன்றது தப்பில்லையாம்.. தன்னை காத்துகொள்ல தற்பாதுகாப்பு செய்தது தப்பாம்! என்ன உலகம்பா இது!!*!*

படத்தை எடுத்தாச்சி.

எனக்கும் இந்த சட்டம் பிடிக்கல

கடவுள் இதை எப்படி பார்த்திருப்பாரு :(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:44

அது தானே! 

எப்படிப்பார்த்திருப்பாரு.. அவர் மன்னிக்க சொல்லித்தானே சொல்கின்றார். இப்படி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் ,, உயிருக்கு உயிர் எனில் நாம் என்ன கற்காலத்திலா வாழ்கின்றோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:46

Nisha wrote:அது தானே! 

எப்படிப்பார்த்திருப்பாரு.. அவர் மன்னிக்க சொல்லித்தானே சொல்கின்றார். இப்படி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் ,, உயிருக்கு உயிர் எனில் நாம் என்ன கற்காலத்திலா வாழ்கின்றோம்!

இது கொடுமையான சட்டம்.  மனிதன் சட்டப்படி நடந்துக்கொள்வது தவறில்லை. ஆனால் தர்மப்படியும் தானே நடக்கவேன்டும்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:49

சட்டமும் திட்டமும் கூட மனிதன் இட்டது தானே ஜானி! 

வெளியிலிருந்து பேசும் போது எல்லாம் இலகுதான். அனுபவிக்கும் போது தான் அதன் வலி வேதனை புரியும்.  இம்மாதிரியான நிகழ்வுகளும் அப்படித்தான்! 

இதை விட மோசமான சூழல்கள் , சம்பவங்களை நாம் இனி கேள்விப்பட கண்டுணர தயாராக இருக்க வேண்டும். 

இனிவரும் காலம் கொடிதிலும் கொடியதாய்.. அன்பு வற்றி அட்டூழியமும் அக்கிரமும் அதிகரித்த காலமாயிருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:51

உண்மை தான். இறுதிக்காலம் என்பது இதுதானோ?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:53

இல்லை. பார்டரில் இருக்கோம். இன்னும் இன்னும் இன்னும் கண்டுணர முடியா கொடுமை  உண்டே.. 

நம் பிள்ளைகள் அக்காலத்தில்  தப்பித்துகொள்ளும் படி இறைவனை பற்றிகொண்டவர்களாய் வளர்ப்போம். 

அது ஒன்று மட்டும் தான் வழி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 13:03

ஈரானின் மனுநீதிச் சோழர்கள்!!

எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள்,
ஐ லவ் யூ அம்மா 
தூக்கிலிடப்பட்ட பெண்ணின் உருக்கமான கடிதம்!

--------------------------------------------------
ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட பெண் தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு ஈரானை சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி (Reyhaneh Jabbari Age-26) என்ற பெண்ணை, ஈரானிய உளவுத்துறை அதிகாரி மற்றும் மருத்துவரான மொர்டிஜா அப்டோலாலி சர்பாண்டி(Mortega abtolaali sarbanthi) கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது தன்னை காத்துக்கொள்ள ஜாப்ரி, மொர்டிஜாவை கொலை செய்ததால் இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இவர், கடைசியாக தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், என்னுடைய உடலை மண்ணில் புதைக்க வேண்டாம், ஏனெனில் எனது கல்லறையில் வந்து தாயார் அழுவதை நான் விரும்பவில்லை.

மேலும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள், ஐ லவ் யூ அம்மா என்று எழுதியுள்ளார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 13:05

கடந்த 2007ம் ஆண்டு ஈரானை சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி(Reyhaneh Jabbari Age-26) என்ற பெண்ணை, ஈரானிய உளவுத்துறை அதிகாரி மற்றும் மருத்துவரான மொர்டிஜா அப்டோலாலி சர்பாண்டி(Mortega abtolaali sarbanthi) கற்பழிக்க முயன்றுள்ளார்.
அப்போது தன்னை காத்துக்கொள்ள ஜாப்ரி, மொர்டிஜாவை கொலை செய்ததால் பொலிசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தார்.
சுமார் 7 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த வழக்கில், ஜாப்ரிரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு மரண தண்டினை விதித்து டெஹ்ரான் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், அதை எல்லாம் மீறி ஜாப்ரி தூக்கிலிடப்பட்டு துடிதுடித்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 13:05

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Women_executed_002எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Women_executed_004

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Mon 27 Oct 2014 - 23:00

ஜெனி டொலி (JENYDOLLY)
தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு.
http://www.oodaru.com/?p=8028#more-8028

அன்புள்ள ஷோலே,
கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?

இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.

ஆயினும், சபிக்கப்பட்ட அந்த தாக்குதலால் கதை மாறிப்போனது. என் உடல் சாலையில் தூக்கியெறியப்படவில்லை மாறாக, எவின் சிறைச்சாலையின் தனிமை அறைகளிலும் இப்போது ஷாஹர்- ஈ- ரேயின் கல்லறை போன்ற சிறைச்சாலைகளிலும் எறியப்பட்டிருக்கிறது. ஆனால் விதிக்கு வழிவிட்டு, புலம்புவதை நிறுத்து. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்கு அறிந்தவள் நீ.

ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையும் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.

பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா? உன்னுடைய அனுபவம் தவறானது நான் கற்றுக் கொண்டவை எவையும், . இந்த நிகழ்வின் போது எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.

ஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. 
கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

நீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. 

விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.,

அன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.

என் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.

என்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். 

என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.

இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்.

இந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.

மென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.
ரேஹானே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by பானுஷபானா Tue 28 Oct 2014 - 13:44

மிகவும் கொடுமையான சட்டம் :( ஆபத்து வரும்போது தன்னை தற்க்காத்துக் கொள்வது மிகப் பெரிய குற்றமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty இறுதி விருப்பம் - தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ரெஹானா ஜப்பாரி

Post by சுறா Tue 28 Oct 2014 - 19:51

கடவுளிடம் பதில்
 எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Rehana2_2174865h

இறுதி விருப்பம்
இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
 
இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Tue 28 Oct 2014 - 19:55

நிறைய சொல்லியிருந்தார். ஆனால் என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை.

கடவுளிடம் முறையிடுவேன்னு சொல்வதால் இவர் மரணம் ஈரான் தேசத்தையே பாதிக்கும் என்றே நினைக்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 19:59

இந்தப்பதிவை உங்கள் 1100 பதிவோடு பாருங்கள் ஜானி. 

அதில் இன்னும் நிரமப் விபரம் சேர்த்துள்ளேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 20:01

பானுஷபானா wrote:மிகவும் கொடுமையான சட்டம் :( ஆபத்து வரும்போது தன்னை தற்க்காத்துக் கொள்வது மிகப் பெரிய குற்றமா?

குற்றம் என்பதாகத்தானே சொல்கின்றார்கள். கற்பழிக்கப்ட்டிருந்தாலும் அப்பெண்ணுக்கு தண்டனை தானே வழங்கி இருப்பார்கள். 

தூக்குக்கு பதில் கல் எறிந்திருக்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Tue 28 Oct 2014 - 20:01

இது என்னை மிகவும் பாதித்ததால் இங்கு பதிந்தேன். பார்க்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 20:03

நிச்சயமாய் ஜானி! ஒரே தொகுப்பாக இப்பதிவுகள் வரட்டும் என சொன்னேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Tue 28 Oct 2014 - 20:06

கல் யார் மீது எறியவேன்டும். குற்றம் செய்தவர்கள் மீது தானே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Tue 28 Oct 2014 - 20:09

Nisha wrote:நிச்சயமாய் ஜானி! ஒரே தொகுப்பாக இப்பதிவுகள் வரட்டும் என சொன்னேன்பா!
இதை அத்துடன் இணைத்துவிடுங்கள்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 20:11

சுறா wrote:கல் யார் மீது எறியவேன்டும். குற்றம் செய்தவர்கள் மீது தானே

அப்படித்தான் நமக்கு தெரிகின்றது! ஆனால் சில இடங்களில் அப்படி இல்லையே கற்பழிக்கப்பட்டால் ஏதோ அந்த பெண் தான் விரும்பி எல்லாம் நடந்தது போல்  தண்டனையும் அவளுக்குத்தானே!

வாழ்த்தாலும் வாழும் காலம் முழுக்க வதை தானே! 

 அட்டூழியங்களும்  அஜாராகங்களும் அதிகரித்து விட்டதால் சட்டங்களை தம் இஷ்டத்துக்கு இயற்றிக்கொண்டார்கள்.:oops: :oops: :oops::oops:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by rammalar Wed 29 Oct 2014 - 6:04

இந்த ஓராண்டில் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை வழங்கி இருக்கிறது ஈரான்.
-
அந்த நாட்டு சட்டப்படி கண்ணுக்கு கண்
என்பதாக தண்டனை வழங்கி உள்ளனர்.
-
ஐந்து ஆண்டுகள் வழக்கு நடைபெற்றுள்ளது...
-
நமக்கு ஒரு பக்க நியாயம் மட்டுமே தெரிவதால்
உணர்ச்சி வசப்படுகிறோம்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Wed 29 Oct 2014 - 8:56

நியாயம் என்பது இருபக்கமும் இருக்காதே :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 9:11

எனக்குத் தெரிந்த ஒரேயொரு விடயம் தண்டனைகள் அதிகமாகும் போது குற்றங்கள் குறையும் என்பதுதான்..
ஆனால் இடம் பொருள் ஏவல் நோக்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum