சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

லிங்கா - திரை விமர்சனம் Khan11

லிங்கா - திரை விமர்சனம்

4 posters

Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 8:56

லிங்கா - திரை விமர்சனம் Lingaa_2243715f


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 8:57

தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்த ரஜினி இருட்டான சமையலறையில் அமர்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறார். புகை அவர் கண்களில் படுகிறது. ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன.

ரஜினி என்பது ஒரு மந்திரம் என்றால் அதை எப்படிப் பிரயோகிப்பது என்ற வித்தை தெரிந்தவர்களில் கே.எஸ். ரவிகுமாரும் ஒருவர்.

சென்னையில் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுகிறார் ராஜவம்சத்தின் வாரிசான லிங்கா (ரஜினி). அவரை ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைத்து சோலையூர் கிராமத்துக்கு அழைத்துவருகிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுஷ்கா. அந்த ஊரில் உள்ள அணைக்கு அருகில் அமைந்த கோயிலை இவர் கையால் திறக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர் மன்றாட, காரணம் புரியாமல் லிங்கா குழம்புகிறார்.

தன் அரண்மனை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று, வறட்சி, வெள்ளம் இரண்டாலும் பாதிக்கப்படும் சோலையூர் மக்களுக்காக பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியவர் லிங்காவின் தாத்தா ராஜா லிங்கேஸ்வரன். இதற்காகப் பெரும் கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்ட தியாகி.
தன் தாத்தாவின் அருமை பெருமையை உணர்ந்த லிங்கா, தற்போது ஒரு அரசியல்வாதியின் பேராசையால் அந்த அணைக்கு ஆபத்து வருவதை அறிந்து அதை முறியடிக்கத் தயாராகிறார். அனுஷ்காவின் ரகசிய கேமராவும் ரஜினி யின் சாகசங்களும் சேர்ந்து ஊரைக் காப்பாற்றுகின்றன.

லிங்கேஸ்வரன் ராஜாவாக ரஜினிதான் கதையைத் தன் தோள்களில் சுமக்கிறார். மூன்று மணிநேரப் படத்தில் இவர் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டும் இரண்டு மணிநேரம் விரிகிறது.
எல்லாச் சொத்துக்களையும் இழப்பது, எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவது ஆகியவை ரஜினியின் முந்தைய படங்களில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். ராஜா ரஜினிக்குக் குடைச்சல் தரும் வெள்ளைக்கார கலெக்டர், அவரது மனைவியின் மிரட்டலால் மனம் மாறுவது மிகப் பழைய ஃபார்முலா. வெள்ளையர்களை விமர்சிக்கும் வேகத்தில் தேசபக்தியைக் காட்டிலும் இன வெறுப்பு தூக்கலாக இருக்கிறது. ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பது தவறுதான் என்றாலும், கிளைமாக்ஸின் கோமாளித்தனம் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. படத்தின் நீளம் சோர்வடைய வைக்கிறது.

அறிமுகக் காட்சியிலேயே கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு சண்டையில் சிக்சர் அடிக்கிறார் லிங்கேஸ்வரன் ரஜினி. வெள்ளைக்கார அதிகாரிகளுடன் வாக்குவாதம், மக்களைத் திரட்டி அணை கட்டும் போராட்டம், அனைத்தையும் துறக்கும் தியாகம் என்று ரஜினிக்குச் செமத்தியான தீனி. அமர்த்தலாகவும் நக்கலாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார். சுதந்திரப் போராட்ட உணர்வை வெளிப் படுத்தும் வசனங்களும் உண்டு. சண்டை, பேச்சு, நடை, பார்வை என ஒவ்வொன்றிலும் ரஜினி ஸ்டைல் பத்திரமாகவும் புதுப் பொலிவுடனும் இருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ்.

‘தாத்தா ரஜினி’ ராஜ கம்பீரம் சேர்த்திருக்கிறார் என்றால், பேரன் ரஜினி கலகலப்பின் மொத்தக் குத்தகைத்தாரராக இருக்கிறார். இளம் ஹீரோக்களுக்குச் சவால்விடும் அளவுக்கு ரகளை செய்கிறார். சந்தானம் கோஷ்டியுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறை சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சலிக்கவும் வைக்கின்றன. ‘நண்பேன்...’ என்று சந்தானம் தொடங்கி வைக்க, ரஜினி ‘டா’ என்று முடித்துவைக்கிறார். ஆனால் ரஜினியின் இமேஜுக்கு வலு சேர்க்கும் பஞ்ச்களுக்குப் பஞ்சமில்லை.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஒளிப்பதி வாளர் ரத்னவேலு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக அணை கட்டும் காட்சிகள், வெள்ளத்தை அணை தாக்குப்பிடிக்கும் காட்சி ஆகியவை அற்புதம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஏமாற்று கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய
பட்ஜெட் படங்களில் கூடத் தரமான கிராஃபிக்ஸைத் தர முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

ரஹ்மானின் இசையில் பின்னணி இசை கவர்கிற அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை. ‘சின்னச் சின்ன நட்சத்திரம்’, ‘இந்தியா’ ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன.
சோனாக்‌ஷிக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாமனிதனை டைட்டிலில் கவுரவப்படுத்தியிருந்தால் பெருமையாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே.
ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ரஜினி ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், அவர் இமேஜைக் கூட்டும் காட்சிகள் என ‘ரஜினி மாசாலா’ அம்சங்கள் எல்லாம் இருந்தும் படம் முழுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி

யைத் தரவில்லை. ரஜினி மந்திரத்தைச் சரியாகப் பிரயோகித்திருக்கும் ரவிகுமார் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தி, இந்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 9:07

தமிழில் வெளிவந்த மிக மிக கேவலமான மகா மொக்கை படங்களில் ஒன்று லிங்கா. தமிழர்களை அடி முட்டாள்களாக நினைத்து தயாரிக்கப்பட்ட ஒரு அரைவேக்காட்டு படம்.

படத்தின் கதையும் மொக்கை, படமாக்கப்பட்ட விதமும் மொக்கை. ரஜினியின் நடிப்பு பற்றி சொல்ல தேவையில்லை...

இப்படிப்பட்ட மகா மொக்கை படத்தில் இருந்த மகா மகா மொக்கைகள் சில -

01. பெரும் ஸ்டார் ஹோட்டலில் பலத்த பாதுகாப்புடன் நடக்கும் நகை கண்காட்சியில் ரஜினி பலூனை விட்டு கண்காணிப்பு கமெராவை மறைத்து நெக்லசை திருடும் காட்சி போன்ற வரட்சியான முட்டாள்தனமான கற்பனை வேறு எந்த படத்திலும் வந்ததில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நாடகம் போல இருக்கிறது.

02. ரஜினியும் நண்பர்களும் 70 ஆண்டுகள் பூட்டி பாழடைந்து கிடக்கும் கோவிலில் கொள்ளையடிக்க போகிறார்கள். ஊர்மக்கள் வந்து சுற்றி வளைத்தவுடன் ரவுசர் சேர்ட்டில் போனவர்கள் திடீரென வேட்டி சட்டையில் பூஜை செய்கிறார்கள். ஏராளமான விளக்குகளும் எரிகின்றன.

03.ரயிலில் ஒரு சண்டை. இதைவிட மிக்கி மௌஸ் கார்டூன் கூட நன்றாக இருக்கும். அதுவும் நடக்கவே முடியாத ரஜினி ரயிலில் பறந்து பறந்து அடிக்கிறார், நாம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

04. பாரதியாரின் புதுமை பெண் என்று அவரின் அப்பா ராதாரவி சொனாக்ஷியை அறிமுகப்படுத்துகிறார். சொனாக்ஷியின் திறமை என்னவென்றால் நன்றாக பிட்டு செய்வாராம். கொய்யால இதில என்னய்யா புதுமைப்பெண்...

05. பென்னி குயிக் என்ற பிரித்தானியர் 1890 களில் லண்டனிலிருந்த தனது சொத்துக்களை விற்றும் கடன் வாங்கியும் ரூபாய் 45 லட்சம் கொண்டுவந்து முல்லை பெரியாறு அணையை கட்டினார்.இன்றும் அவரை கடவுளாக அந்த பகுதி மக்கள் வணங்குகிறார்கள்.
ஆனால் லிங்காவில் அணையை ராஜா ஒருவர் தனது சொத்துகளை விற்று கட்டுவதகாவும், வெள்ளைக்காரனை வில்லனாகவும் காட்டுகிறார்கள்.

நிஜத்தில் மக்களை சுரண்டி சொத்து சேர்க்கும் ரஜினி படத்தில் சொத்துகளை விற்று அணை கட்டுகிறார்.
நிஜத்தில் சொத்துகளை விற்று அணை கட்டியவர் படத்தில் சொத்தை அபகரிக்கும் வில்லனாகிறார். என்னங்கடா உங்க நீதி... 

06.ரஜினியின் வரைபடங்கள் சுழல் காற்றில் பறக்கின்றன. சுற்றி இருக்கும் எல்லோரும் பிடிக்க போகிறார்கள். ஆனால் 38 வரை படங்களையும் சொனாக்ஷி ஒருவரே ஒரே இடத்தில் நின்று பிடிக்கிறார். வட் எ மெடிகல் மிரக்கிள்...

07.அனுக்ஷா போன்ற ஒரு அழகியை, மயானத்திலிருந்து தோண்டி எடுத்த பிணம் போலிருக்கும் ரஜினியுடன் காதல் செய்ய வைக்கிறார்கள். இதில் சொனாக்க்ஷி வேறு. அந்த அருவருப்பான காதல் காட்சிகளை கண்ணை மூடாமல் பார்த்தால் வாந்தி எடுப்பது நிச்சயம். 

08.சுமார் 100 அடி கோபுரத்திலிருந்து ஒருவர் கீழே கல்லின் மீது விழுகிறார்.தலையில் காயம். பின்னர் தனக்கு ஒன்றுமில்லை என்று மீண்டும் வேலைக்கு போகிறார். மீண்டும் வட் எ மெடிகல் மிரக்கிள்...

09.காவிய தலைவன் என்ற அற்புதமான படத்திற்கு அற்புதமாக இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கேவலமான படத்திற்கு கேவலமாகவே இசையமைத்திருக்கிறார். 

10. எல்லாவற்றையும் விட கிளைமாக்சில் மலையிலிருந்து சூப்பர் மேன் மாதிரி பறந்து.. பறந்து வானில் பறக்கும் பலூன் மீது பாய்கிறார். இப்படியொரு காட்சி தெலுங்கு படங்களில் கூட வந்ததில்லை. அந்த சண்டை காட்சியை பார்த்தவர்கள் தற்கொலை செய்யாமல் இருப்பதே பெரிய விஷயம்.
 
ஜீவேந்திரன் பேஸ்புக் 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by பாயிஸ் Mon 15 Dec 2014 - 10:29

என்ன ஹாசிம் லிங்கா பார்க்கின்ற ஐடியா இன்னும் இருக்கா என்ன
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Dec 2014 - 12:33

70 QR மிச்சமாகிவிட்டது நன்றி அக்கா


லிங்கா - திரை விமர்சனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 13:32

இணையத்தில் இலவசமாக கிடைககின்றதாம்!

பிரபா சொன்னார்!  முதல் வெளிவந்த படம் அன்றே இணையத்தில்  உலா வந்து விட்டதாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by சுறா Mon 15 Dec 2014 - 13:37

அடபோப்பா எல்லா ரஜினி படத்திலும் இவருபெரிய பணக்கார வீட்டு பிள்ளையா வருவாரு. அவங்க அப்படி சொத்தை மக்களுக்கு எழுதி வச்சிருவாரு. இவரு ஏழ்மையில வளரவாரு பிறகு அதை கெட்டவங்க கிட்ட மீட்டு நல்லவங்களுக்கு கொடுப்பாரு ஹய்யோ ஹய்யோ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Dec 2014 - 13:40

சுறா wrote:அடபோப்பா எல்லா ரஜினி படத்திலும் இவருபெரிய பணக்கார வீட்டு பிள்ளையா வருவாரு. அவங்க அப்படி சொத்தை மக்களுக்கு எழுதி வச்சிருவாரு. இவரு ஏழ்மையில வளரவாரு பிறகு அதை கெட்டவங்க கிட்ட மீட்டு நல்லவங்களுக்கு கொடுப்பாரு ஹய்யோ ஹய்யோ

சினிமாவுக்கு மாத்திரம்தான் இவை நிஜவாழ்க்கையில் அவ்வாறு கொடுத்ததாக எந்த செய்திகளும் படித்ததில்லையே
முட்டாளாகிய ரசிகர்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்


லிங்கா - திரை விமர்சனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 13:58

சுறா wrote:அடபோப்பா எல்லா ரஜினி படத்திலும் இவருபெரிய பணக்கார வீட்டு பிள்ளையா வருவாரு. அவங்க அப்படி சொத்தை மக்களுக்கு எழுதி வச்சிருவாரு. இவரு ஏழ்மையில வளரவாரு பிறகு அதை கெட்டவங்க கிட்ட மீட்டு நல்லவங்களுக்கு கொடுப்பாரு ஹய்யோ ஹய்யோ

 நிஜ வாழ்க்கையில் அவர் செய்ய நினைத்தாலும் லதா ரஜனிகாந்த் விடுவதில்லை என படித்தேனே. அது  நிஜமான செய்தியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 15:44

லிங்கா - திரை விமர்சனம் 10367550_485987128208613_6242185409823976194_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Nisha Mon 15 Dec 2014 - 15:56

பஞ்சத்திலிருந்து தென்மாவட்டங்களைக்
காப்பாற்றுவதற்காக தன்
சொத்தை விற்று முல்லைப்பெரியாறு அணை கட்டினார்
பென்னிகுயிக்.
இன்றும்
அவரை நன்றியுடன்
வணங்கி வருகிறார்கள்
தமிழர்கள்.
ஆனால் 
ரசிகனுக்கு தன்
திருமண மண்டபத்தை கூட
குறைந்த
வாடகைக்கு விடாத
நடிகர்
ரஜினியை 'இரண்டாம்
பென்னிகுயிக்'
என்று ஒப்பிட்டு போஸ்டர்
அடித்துள்ளார்கள்
முட்டாள்கள்.
நீங்க எப்பட திருந்தப்
போறீங்க?
கொஞ்சம் கூட
சுயபுத்தி கிடையாதா?



லிங்கா - திரை விமர்சனம் 10847984_732680146816234_67374714378847336_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிங்கா - திரை விமர்சனம் Empty Re: லிங்கா - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum