Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
4 posters
Page 1 of 1
யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.
காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.
அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.
”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது”
எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.
எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.
எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின.
பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது
“நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”
அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர்.
நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.
ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.
பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.
”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது.
அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது
_____________________________
மரணப்படுக்கையில் பீஷ்மர் தர்மனுக்கு, அரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என சொன்ன கதை :-
மஹாபாரதம்
பேஸ்புக்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
எக்காலத்துக்கும் ஏற்ற அருமையான கதை....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
சிங்களன் தமிழன் என் இரு பூனை எலி போல இருக்கே. கதை நல்லாவே இருக்கு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
நிலைமைக்கு ஏற்ப நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது இந்த கதையின் கருத்து.அப்படி இல்லாமல் நல்ல எண்ணத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது என்று நான் நினைக்கிறேன் எதிர் பார்ப்பு அற்றது நட்பு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
*சம்ஸ் wrote:நிலைமைக்கு ஏற்ப நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது இந்த கதையின் கருத்து.அப்படி இல்லாமல் நல்ல எண்ணத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது என்று நான் நினைக்கிறேன் எதிர் பார்ப்பு அற்றது நட்பு.
நட்பு எதிர்பார்ப்பு அற்றது! இப்படி சொல்லி சொல்லி சொல்லியே நம்மை எத்தனை காலம் ஏமாற்றுவோம் என தெரியவில்லை.
அதிருக்க.. இக்கதையில் வரும் நீதி மிக மிக சரியானதும், தெளிவானதும் தான்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது,கங்கையில் குளித்தாலும் காகம் வெள்ளையாகாது என்பது போல் சிலரின் குணாதிசயங்கள் என்றுமே மாறாது. நட்பு எனும் போர்வையில் அந்த நேர சூழலுக்கு உதவிகளை பெற்றிட்டாலும் அவர் தம் இயல்பு இது என உணர்ந்து தம்மை தாம் ஜாக்கிரதையாக்கி சுதாகரித்து கொள்ளாமல் முழுதாய் நம்பி மூழ்கும் நிலைக்கு வராமல் இருக்க இம்மாதிரியான புரிதல்கள் அவசியம் தாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
Nisha wrote:*சம்ஸ் wrote:நிலைமைக்கு ஏற்ப நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது இந்த கதையின் கருத்து.அப்படி இல்லாமல் நல்ல எண்ணத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது என்று நான் நினைக்கிறேன் எதிர் பார்ப்பு அற்றது நட்பு.
நட்பு எதிர்பார்ப்பு அற்றது! இப்படி சொல்லி சொல்லி சொல்லியே நம்மை எத்தனை காலம் ஏமாற்றுவோம் என தெரியவில்லை.
அதிருக்க.. இக்கதையில் வரும் நீதி மிக மிக சரியானதும், தெளிவானதும் தான்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது,கங்கையில் குளித்தாலும் காகம் வெள்ளையாகாது என்பது போல் சிலரின் குணாதிசயங்கள் என்றுமே மாறாது. நட்பு எனும் போர்வையில் அந்த நேர சூழலுக்கு உதவிகளை பெற்றிட்டாலும் அவர் தம் இயல்பு இது என உணர்ந்து தம்மை தாம் ஜாக்கிரதையாக்கி சுதாகரித்து கொள்ளாமல் முழுதாய் நம்பி மூழ்கும் நிலைக்கு வராமல் இருக்க இம்மாதிரியான புரிதல்கள் அவசியம் தாம்.
தாங்கள் இதில் சொல்லும் பழமொழிகள் அனைத்தும் சரிதான்.பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் பழமொழியாகும்.எதுவாக இருந்தாலும் நட்பாக இருக்கட்டும் வேறு எதுவாக இருக்கட்டும் அனைத்தும் புரிதல் அவசியம் புரிதல் இல்லை என்றால் அங்கு எதுவும் சரியாகாது.எதிர் பார்ப்புக்காக மட்டும் உறவு கொள்வது நட்பாக இருக்க முடியாது.
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
எதிர்பார்ப்பில்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை எனும் நிஜம் எனக்கு புரிந்ததனால் நான் கான்ல் நீரை நம்புவதில்லை சம்ஸ் சார்.
உலகமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தான் இயங்கி கொண்டுள்ளது. இதில் நட்பு மட்டும் எப்படி விதி விலக்காகும் என்பது எனக்கு புரிவதில்லை.
உலகமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தான் இயங்கி கொண்டுள்ளது. இதில் நட்பு மட்டும் எப்படி விதி விலக்காகும் என்பது எனக்கு புரிவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
தாங்கள் எதைவைத்து இப்படி வாதம் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
*சம்ஸ் wrote:தாங்கள் எதைவைத்து இப்படி வாதம் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை?
எதை வைத்தும் வாத விவாதம் செய்யவில்லை சார். உலகின் பொதுவான நடைமுறையை சொன்னேன்.
உலகம் சுழல்வதும், இயங்குவதும் ஒன்றையொன்று சார்ந்து தான். கடவுள் நாம் அவனுக்கு கீழ்ப்படிந்து வணங்குவோம் என நம்மை படைக்க.. தன் வயோதிக காலத்தில் தன்னை காப்பான் எனும் நம்பிக்கையில் தாயின் கர்ப்பத்திலிருக்கும் போதே எதிர்பார்க்க வைத்து தான் இப்பூலகில் பிறக்கின்றோம்.
ஒரு தென்னபிள்ளையை நடும் போது அது வளர்ந்து இள நீர் தரும் தன் காலத்தில் இல்லாவிட்டாலும் தன் சந்ததிக்கு பயன் தரும் எனும் நம்பிக்கையில் எதிர்பார்ப்பில் தான் சுழல்கின்றோம்.
அப்படி இருக்க நட்பில் மட்டும் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என எப்படி சொல்லலாம்?
முக நக நூட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நூட்பதே நட்பு. இப்படி யாருண்டு என சொல்லுங்கள். பொய்மையும் பொறாமையும் இல்லாத உறவுகள் உண்டா என என்னிடம் கேட்டால் இல்லை என்பேன்.
அது இருக்க... இந்த திரியில் இருக்கும் பதிவு ஒருவர் தம் சுபாவம் அறிந்து அவருக்கேற்ப நாம் நம்மை பாதுகாக்கணும் எனும் எச்சரிக்கை பகிர்வாய் எடுக்கணும். ஏற்கனவே பழகிய நட்புக்களை குறித்ததல்ல..
சந்தர்ப்பத்துக்கேற்ப நட்பென நாடுவோரின் குணவியலை ஆராய்ந்தறிந்து பழகுதல் குறித்தது என்பதனால் இதில் இருக்கும் கருத்தினை நம் வாழ்வியல் பாடமாய் எடுப்பதில் தப்பே இல்லை! பழமொழிகள் வாழ்வில் அனுபவம் தான் என ஒப்புக்கொண்ட பின் சிறுத்தைதன் குணத்தினை மாற்றியதாய் எங்கேனும் கண்டதுண்டோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நல்ல மனிதருடைய நட்பு வேண்டும்
» எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
» மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
» உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum