சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Today at 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Khan11

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

+5
Nisha
சுறா
சே.குமார்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 22 Jan 2015 - 6:32

First topic message reminder :

காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 9:08

ந.க.துறைவன் wrote:அழுதவள் சிரித்தாள்…!!
*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.


*

அருமை அருமை
என்னவாக இருக்கும் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 9:14

ந.க.துறைவன் wrote:பூவழகி…!!
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*

*

வாவ் சூப்பர் அழகு மலருக்கு அழகான வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:52

அருமை அருமை அருமை 
கவிதை எழுதுவது ஒரு கடவுள் கொடை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 7 Apr 2016 - 6:36

அக்கா…!!
 
பல்லியின் வாலசைவில்
படத்திலிருந்தப் பூ சரிந்து
கீழே விழுந்தது நல்ல சகுணமென
உணர்ந்து அப்பூவை எடுத்து
கண்களில் ஒற்றித் தலையில்
சொருகி வைத்துக் கொண்டாள்
அக்கா
வெளியூரிலிருந்து கணவன் வரப் போகும்  
நேரத்தை நினைத்துக் கொண்டிருப்பாளோ?

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri 8 Apr 2016 - 4:06

புள்ளி்..!!
*.
புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது முதலில்
எந்தக் கோடும் அடுத்தப் புள்ளி. அதற்கடுத்தப்
புள்ளியென எந்தப் புள்ளியை இணைத்து விட்டாலும்
இன்னொரு புள்ளியை இணக்கின்றது மற்றொரு கோடு.
புள்ளியை இணைப்பது கோடுகள் எள்றாலும்
கோட்டிற்குப் புள்ளி தான் மையப் பிறப்பிடம்


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Mon 9 May 2016 - 3:50

ஒற்றை வரி முரண்…!!
*
சலித்துப் போகிறான் சூரியன்.
காற்றில் உதிர்ந்தன இலைகள்.
அதிர்ந்து ஒலிக்காத முரசு.
தாமரைப் பூக்காத குளம்.
வண்டு புழுத்த மாம்பழம்.
உடைந்துப் போன பம்பரம்.
முற்றாத கதிர்மணிகள்.
பழுதான டி.வி
ஏற முடியாத ஏணி
வீதியை பெருக்காத துடைப்பம்.
என்னய்யா இது?
ஒத்த வரியிலே முரண்.
கண்டு பிடித்து யோசிப்பது தான்
உங்கள் அறிவுத் திறன்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Wed 13 Jul 2016 - 3:46

பூவும் வண்டும்…!!
 
என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 14 Jul 2016 - 4:06

இரண்டு கவிதைகள்.
 
1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 18 Aug 2016 - 4:05

பொருத்தம்…!!
*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Mon 24 Oct 2016 - 13:49

ஆறுசுவை…!!
 
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Wed 28 Dec 2016 - 3:58

மண்சோறு.
 
இன்று வங்கியில் 
பணம்
பத்தாயிரம் கிடைத்தால்
மண்சோறு சாப்பிடுவதாக
பிரார்த்தித்துக் கொண்டாள்.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri 30 Dec 2016 - 3:56

மரம் வளர்ப்பு.
 
வீட்டில் பிள்ளைகளை
வளர்த்தார்கள்.
வெளியில் மரங்களை
வளர்த்தார்கள்
மூன்று
தலைமுறைகளைக் கண்ட
முதிய மரங்களெலாம்
வாரிச் சுருட்டிப் போட்டு
சென்னையை மொட்டை
நகரமாக்கியது வார்தா புயல்
 

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri 3 Mar 2017 - 7:43

மௌன மொழி…!!
*
அவனை எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத் தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது பேசுவதில்லை
தெரியாதிருப்பதால் இவன்
யாரிடமும் பேசுவதில்லை.
எப்பொழுதும் நிலவுகிறது
இடைவெளிகளில் ஆழ்ந்த
மௌன மொழி.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

சம்பந்தம்….!!
 
சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்  
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Wed 10 May 2017 - 7:37

1. பரிசோதனை…!!
 
மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.             
*
2. முடிச்சு…!!
 
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Mon 22 May 2017 - 6:48

கூழாங்கற்கள்….!!
*
1. சாதுர்யம்…!!
 
வளைந்து கொடுப்பவள்
வாழ்ந்து சாதிக்கிறாள்
வம்பு செய்கிறாள்
பிரச்னையால்
வெந்து சாகிறாள்
வளைந்து கொடுப்பது வாழ்க்கை
வம்பு செய்து தற்கொலை.
*
2. சேவல்
 
தெருவில்
ஒரு வீட்டில்
காணாமல் போனது
சேவல்
பக்கத்துத் தெருவில்
ஒரு வீட்டில் சமைக்கும்
கோழிக்கறி
குழம்பு வாசனை.
*
3. துணிச்சல்…
 
சைக்கிள் ஓட்டத் தெரியாது?
பைக் ஓட்டத் தெரியாது? நடை
பயணமாகவே காலம் கடத்தும்
தாத்தாவைத் தன் இருசக்கர
வாகனத்தில் உட்காரச் சொல்லி
மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்கிறாள் துணிச்சலாய் பேத்தி!
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Tue 11 Jul 2017 - 3:58

சருகு இலைகள்.
 
 
1.
இதயத்தில்
இடம் கேட்டவளுக்கு
கிடைத்தது
கல்லறை.
 
2.
வருவோர் போவோர்
சிலநாள்
தங்குமிடம்
இந்த உலகம்.
 
3.
சுவையாய் இருந்தது
சைவம் இல்லாத
நகைச்சுவை
விருந்து.
 
4.
காதலுக்கும் உண்டு
அடைக்கும் தாழ்.
 
5.
மரணத்திற்கு
தெரியுமா?
மனிதனை…!
 
6.
உயிருக்கு ஆபத்தென்று
கயிலை மலைவிட்டு
வெளியேறினார் சிவன்.
7.
உயர் அதிகாரி மரணம்
எரிந்தப் பிணத்தின்
கை நீண்டது
சில்லறை வைத்தார்கள்
தாழ்ந்தது கை.
 
ந.க. துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

வளைந்து கொடுத்தல்…!!
 
 
ஆதார் எண் இணைத்து
திருமணப் பொருத்தம்
பார்க்கப்படும்.
 சோதிடர் சொக்கு.
 
*
வளைந்து கொடுத்துப் போவது
மனிதர்களின் சுபாவம்.
மலைகளின் பாதைகளையும்
அப்படியே
வளைய வைத்து விட்டார்கள்.
*
சட்டென இடிந்து விழுவதில்லை
மூங்கில் பாலங்கள்.
திடீரென
சரிந்து விழுகின்றன
சிமெண்ட் மேம்பாலங்கள்.
 
ந.க. துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Sat 29 Jul 2017 - 12:41

நீ… நான்…காதல்…!!
 
1.
அவள் நீ என்றாள்
அவன் நீ என்றான்
நாம் என்ற வார்த்தை
இன்னும்
உருப்பெறவில்லை.
2.
மழை பெய்து வருகிறது
அவள் இன்னும்
வீடு திரும்பவில்லை
வீட்டிலேயே இருக்கிறது
குடை.
3.
இப்பொழுது
பெய்து வருகிறது
தவளைகள்
வேண்டிய மழை.
4.
மழை நின்றது
சலசலப்பு நின்றது
பேச்சு மட்டும்
ஓயவில்லை.
5.
அக்காவும்
மழையும்
ஒன்று என்றான்
தம்பி
இருவருமே
நீர் பொழிபவர்கள்.

ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Sun 30 Jul 2017 - 6:53

சிவப்பு – குறியீடு…!!
 
 
1.
ஆடிவெள்ளியில்
அழகாய் அம்மன் சிரிக்கிறாள்               
பக்தைகள் மனசுக்குள்ளே
ஆயிரம்
பிரார்த்தனைகள்.
2.
சிவப்பு தான்
அவளின் குறியீடு.
3.
நெற்றியில் தானிருக்கிறது
அவளின் வெற்றித் திலகம்.
4.
அவள் என்
மானசீக
சௌந்தர்ய லஹரி.
5.
ஆடி தள்ளுபடியில்
வாங்கிய
பட்டுப்புடவையைச்
சாத்தினால்
கன்னிப்பெண்.

ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 3 Aug 2017 - 7:47

ஈக்கள் பத்து…!!
 
1.
காலியான
தேனீர்க் கோப்பையில்
மிச்சம் குடிக்க
வந்து அமர்ந்தன
ஈக்கள்.
2.
குழந்தைக்கு
விளையாட்டுக் காட்டி
பறந்து அமர்ந்து
திரிகின்றன ஈக்கள்.
3.
விரட்ட விரட்ட
அருகில் வந்து
தொலைக்கின்றன
ஈ  க்  க  ள்.
4.
நீர்த் தேங்கிய
குட்டைகள்

கொசுக்களின்
பெருங்கடல்.
5.
கடல் நீரின் மேல்
ஈக்கள் தங்க
இடமில்லை
விரட்டுகின்றன
அலைகள்.
6.
உயர்ந்தக் குப்பை
மேட்டில்
குடியிருக்கின்றன
ஈக்கள்.
7.
கால்வாய்கள்
நீரோடைகள்
நீர்த்தேக்கங்கள்
ஈக்கள்
குளிக்கும்
படித்துறைகள்.
8.
கொசு ஒழிப்பு
மாநாட்டு
சாப்பாட்டு அறையில்
ஈக்கள்
ஆக்ரமிப்பு.
9.
யாருக்கு நோய்
வந்தாலும்
என்னைத் திட்டுகிறார்கள்
என்று
குறைப்படுகின்றன
ஈக்கள்.
10.
மனிதரோடு உறைந்து
வாழ்ந்தே
கழிகின்றன
ஈக்களின் காலம்.
ந.க. துறைவன். .

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Wed 9 Aug 2017 - 11:52

அம்மாவின் அழகு…!!
 
1.
வாழ்க்கை தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில் மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு பிடித்தது
அந்த ஒரு
பெயர் மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

மலர்ச்சி…!!
 
1.
இலைகள்
மரத்தில் ஒற்றுமையாக
இருந்தாலும்
தனித்து
சண்டைப்
போடுவதில்லை.
2.
பெரியது கடல்
எப்போதும்
கரையை மோதி
பார்க்கிறது
அலைகள்.
3.
வெளிச்சத்தைத்
திரைப் போட்டு
மறைக்கிறார்கள்.
அம்பலமாகின்றன
இரகசியங்கள்.
4.
நீளக் கோவணமாய் இருக்கிறது
மால்களில் GST வரியுடன்
சேர்த்து கொடுக்கும்
கம்ப்யூட்டர் பில்.
5.
வடை சுடப் போனான்
கை
சுட்டுக்கிட்டு
நிக்கிறான்.
6.
பச்சை பச்சையாய்
தட்டினான்
கலகப் பேச்சு
அடுத்தவனும்
அதே கலரில்
திட்டினான்.
7.
இரவில் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
விழித்திருக்கவே
செய்கின்றன
யாருக்காகவே?
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Thu 24 Aug 2017 - 9:10

கண்ணாமூச்சி…!!
 
1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க  வி  தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Sat 26 Aug 2017 - 7:50

மழை
 
1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! - Page 3 Empty Re: ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum